பெற்றோர்கள் கொண்டாடும் ‘வாட்டர் பெல்’ திட்டம்!

‘ட்ரிங்ங்ங்ங்ங்…’ இந்த ‘பெல்’ சத்தம் மாணவர்களுக்குத் தரும் உற்சாகம் அளவில்லாதது. பள்ளிக்கூடம் தொடங்கும் நேரம், பாடவேளை முடியும் நேரம், ஒப்பனை நேரம், மதிய உணவு இடைவேளை, பள்ளிக்கூடம் முடியும் நேரம் என இந்த ‘பெல்’ சத்தம் கேட்டால் குதுகலம் அடையாத மாணவர்களே இல்லை! அந்த வரிசையில் இப்பொது வாட்டர் பெல் !

சரியான நேரங்களில் தண்ணீர் அருந்துவதை ஊக்குவிக்கும் வாட்டர் பெல் திட்டம்!

சமீபத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த நடைமுறை மாணவச் செல்வங்களிடையே புது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

மாணவச் செல்வங்களின் உடல்நலன், ஆரோக்கியத்தைக் கவனத்தில்கொண்டு, அவர்கள் சரியான நேரங்களில் தண்ணீர் அருந்துவதை ஊக்குவிக்கும்விதமாக இந்த திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கிறார் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். 

சபாஷ் வாங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது இத்திட்டம். அதனை தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்தி பொது மக்களிடையே சபாஷ் வாங்கியிருக்கிறார் அமைச்சர் அவர்கள். 

கடந்த ஜூன் 28, 2025 அன்று முதல் இத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. `காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணி என நாளைக்கு மூன்று வேளை இந்த ‘வாட்டர் பெல்’ எனப்படும் ‘நீர்வேளை மணி’ பள்ளிகளில் ஒலிக்கப்படுகிறது. 

நீர்ச்சத்து குறைபாடு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது!

இது குறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பேசும்போது, “வழக்கத்துக்கு மாறாக பெல் அடிக்கும் சத்தத்தை சற்று வித்தியாசமாக இடைவெளிவிட்டு ஒலிக்கப்படுகிறது. பெல் அடிக்கப்படும் நேரங்களில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை மாணவர்களை தண்ணீர் குடிக்க அனுமதிக்கிறோம். வாட்டர் பெல் திட்டம் குறித்து பள்ளிக் கல்வித் துறை வழங்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கிறார்கள். வெயிலின் தாக்கத்தால் மாணவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது இதனால் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது” என்றனர் மகிழ்ச்சியாக.

தனியார் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம்!

அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘வாட்டர் பெல்’ திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுத் தனியார் பள்ளிக்களிலும் இந்த மணி இப்போது ஒலிக்கப்படுகின்றன. அதற்கான சுற்றறிக்கையை கல்வி இயக்குநர் வெளியிட்டிருந்தார். 

திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மைல்கல் திட்டம்! 

இதுபோல சிறப்பான திட்டங்களை எங்கிருந்தாலும், தேடிப் பிடித்து நடைமுறைப்படுத்தி, அதன் சாதகமான அம்சங்களைக் கொண்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு பெற்றோர் மத்தியில் பாராட்டுக்கள் குவிகிறது. 

திராவிட மாடல் அரசின் இத்திட்டம் மற்றுமொரு மைல்கல் என்றால் மிகையல்ல!  

Increasing TN Government School Admission : Click here to know why.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top