
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் ஒரு மைல்கல்! திருச்சியில் 56.47 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரிப் பள்ளியை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் திறந்து வைத்திருக்கிறார்.
மே மாதம் திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து துவாக்குடி வரை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள், முதல்வருக்கு நெகிழ்ச்சியான வரவேற்பை அளித்தனர்.
SLAS meeting : Click
மாதிரிப் பள்ளி திறப்பு விழா

துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ. 19.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டடத்தையும், ரூ. 18.91 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான தனித்தனி விடுதிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார். முன்னதாக மாதிரிப் பள்ளியின் புதிய கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, வகுப்பறைகளைப் பார்வையிட்ட அவர், மாணவர்களுடன் கலந்துரையாடி, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மாதிரிப் பள்ளி சிறப்பு அம்சங்கள்:

- நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள்
- அதிநவீன ஆய்வகங்கள்
- விளையாட்டு மைதானங்கள்
- நூலகம் மற்றும் பிற கற்றல் வளங்கள்
- திறமையான ஆசிரியர்கள்
இந்த மாதிரிப் பள்ளிகள், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், தமிழக மாணவர்கள் தேசிய அளவில் உள்ள பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

இந்த நிகழ்வு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், “டெல்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகி இருக்கிறது. 2022-ல் டெல்லி சென்றபோது அங்குள்ள மாதிரிப் பள்ளிபோல தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என்றேன். சொன்னபடி மாவட்டத்திற்கு ஒன்று என 38 மாதிரிப் பள்ளிகளை உருவாக்கினோம். இப்போது அதற்கான நிரந்தர உட்கட்டமைப்பை உருவாக்கி, முதல் கட்டடத்தைத் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் திறந்து வைத்திருக்கிறேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், “நமது மாதிரிப் பள்ளிகளில் பயின்ற 977 பேர் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர்” என்ற தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார். இந்த சாதனை, மாதிரிப் பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் திறமையையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்பு, பள்ளிக்கல்வித் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. டெல்லியைத் திரும்பிப் பார்க்க வைத்த இந்த மாதிரிப் பள்ளி, தமிழகத்தின் கல்வி வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயமாக அமைந்துள்ளது.

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr
Pingback: பள்ளிக் கல்வித் துறை விருதுகள்