அறிவில் சிறந்த தமிழ்நாடு! நூலகப் புரட்சியின் விரிவான பார்வை!

தமிழ் மொழியின் தன்னிகரற்ற பெருமைக்கு நம் மொழியில் எழுதப்பட்ட பண்டைய நூல்கள் தொடங்கி சுவடிகள் வரை சேகரித்துப் பாதுகாத்து, அவற்றை இன்றைய தலைமுறையின் கைகளிலும் ஒரே சொடுக்கில் கிடைக்கச் செய்திருப்பதுதான்.

தமிழ்நாடு – அறிவுப் புரட்சியின் மையம்

தமிழ்நாட்டில் அறிவுப் புரட்சியை ஏற்படுத்திய திராவிட இயக்கம் அதற்கான ஆயுதங்களாக மேடைப் பேச்சுக்களோடு புத்தகங்களைப் பிரதானமாகக் கொண்டது. தந்தை பெரியார் எழுதிக் குவித்த நூல்கள் தலைச் சுமையாக கிராமங்களுக்குள் கொண்டு சேர்க்கப்பட்டன. அண்ணா பத்திரிகைகள் வழியாக தம்பிகளைத் திரட்டினார். தமிழைத் தன் மூச்சாகக் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர், எழுத்து, பேச்சு, சினிமா போலவே வாசிப்பும் முக்கியத்துவமானது என்று உணர்ந்தவர். 1972-ம் ஆண்டிலேயே ‘பொது நூலக இயக்ககம்’ எனும் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கி தமிழகமெங்கும் நூலகங்களை எழுப்பினார்.

கலைஞரின் சிந்தையில் உதித்த அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலமாகத் தமிழ்நாட்டில் 12,618 கிராமப்புற நூலகங்களை நிறுவப்பட்டன. மாவட்ட மைய நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டு, மேலும் பல புதிய நூலகங்கள் உருவாகின. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தொடங்கி நவீனத் தொழில்நுட்ப அறிமுக நூல்கள் வரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்த நூலகங்களில் அடுக்கப்பட்டன. இளைஞர்கள் புத்தகங்களைத் தேடி அலைந்த நிலைமை மாறி, புத்தகங்கள் அவர்கள் கையில் எளிதாகச் சேர்ந்தன. 

அனைத்திலும் சிறப்பாக அவர் உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ்நாட்டு இளைஞர்களின் அறிவு வெளிச்சத்துக்கான மாபெரும் அடித்தளமாக அமைந்தது. ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக, சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில், 3.75 லட்சம் சதுர அடி பரப்புடன் 8 தளங்களில் லட்சக் கணக்கான நூல்கள் கொண்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ்நாட்டின் அறிவு வளர்ச்சிக்கும், வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியமான மைல்கல்லாகத் திகழ்கிறது. 

திராவிட மாடலின் அறிவுப் புரட்சி!

கலைஞர் உருவாக்கிய அந்த நூலகக் கட்டமைப்பை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது திராவிட மாடல் ஆட்சியில் பல மடங்கு பெருக்கி, தமிழ்நாட்டை  ‘நூலகங்களின் தலைநகரமாகவே’ மாற்றி வருகிறார். 

Kalaignar Centenary Library Madurai

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், ரூ.218.19 கோடி செலவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’, 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன், மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்களின் அறிவுப் பசிக்கு விருந்தளித்து வருகிறது. 2024-25ல் மட்டும் 16.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் பயனடைந்துள்ளனர். 

Kalaignar Library inside pic Madurai

இந்திய நூலகவியலின் தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதன் பெயரில் சீர்காழியிலும்  செந்நாப்புலவர் கார்மேகனார் பெயரில் இராமநாதபுரத்திலும் கிளை நூலகங்கள் திறந்துவைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல திருச்சியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரிலும், கோயம்புத்தூரில் தந்தை பெரியார் பெயரிலும் நூலகங்கள் உருவாகும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, சேலம், கடலூர், திருநெல்வேலி என தமிழகமெங்கும் பிரம்மாண்ட நூலகங்கள் உருவாகி வருகின்றன.

நூலகங்களில் நவீன மாற்றம்!

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.40 லட்சம் செலவில் ‘செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்’ நிறுவப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் உள்ள 76 நூலகங்களில் 152 மெய்நிகர் நூலகக் கருவிகள் ரூ.57.20 லட்சத்தில் வழங்கப்பட்டு, குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாடு - வாசிப்பு தலைநகரம்

தமிழ்நாட்டிலுள்ள 3,878 நூலகங்களில் முதற்கட்டமாக 1,469 நூலகங்களுக்கு Wi-Fi வசதியுடன் மின் நூலக சேவைகள் வழங்கப்பட்டு, கிண்டில் செயலியில் உள்ள 10 லட்சம் நூல்களைப் படிக்க முடிகிறது. இதன்மூலம் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் பயனடைந்துள்ளனர்.

உலகம் தழுவிய தமிழ் வாசிப்புக் களம்!

வாசிப்பை ஓர் இயக்கமாக முன்னெடுக்கும் திராவிட மாடல் அரசு, தமிழ் இலக்கியங்களை உலகறியச் செய்யவும், உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வரவும், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் நடத்திவருகிறது. 2023-ம் ஆண்டில் 24 நாடுகள் பங்கேற்புடன், 365 மொழிபெயர்ப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

தமிழ்நாடு - புத்தக கண்காட்சிகள்

2024-ல் 40 நாடுகள் பங்கேற்புடன் 752 ஒப்பந்தங்களும், 2025-ல் 64 நாடுகள் பங்கேற்ற பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 1,354 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியிருக்கின்றன. இதன் மூலம் தமிழர் படைப்புகள் கடல் கடந்து பயணித்து, உலக மொழிகளில் தமிழின் பெருமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் வீசும் அறிவுச் சுடர்கள்!

இவை மட்டுமின்றி மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது. 2022-23ல் 37 மாவட்டங்களில் ரூ.4.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 52 லட்சம் வாசகர்கள் பங்கேற்புடன் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றன. இவற்றில் சுமார் ரூ.34.40 கோடிக்கு 45 லட்சம் நூல்கள் விற்பனையாகியிருக்கின்றன. தொடர்ந்து 2023-24, 2024-25 ஆண்டுகளிலும் இலட்சக்கணக்கான வாசகர்கள் பங்கேற்று, கோடிக்கணக்கில் புத்தக விற்பனை நடைபெற்றது. மிகப் பிரமாண்டமாக நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கென ஆண்டுதோறும் ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு. 

நூலகக் கட்டமைப்பை உருவாக்குவதோடு, அதன் பணியாளர்கள் நலனிலும் அக்கறைகொண்ட தமிழ்நாடு அரசு, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு முறையான ஊதியத்துடன் மூன்றாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு, 25 மாவட்ட நூலக அலுவலர், நூலகர் உள்ளிட்ட 25 நேரடி நியமனங்கள், 32 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமனங்களை வழங்கிச் சிறப்பித்திருக்கிறார் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

அறிவில் சிறக்கும் தமிழ்நாட்டை உருவாக்கிடும் திராவிட மாடல் அரசின் நான்காண்டுச் சாதனைகளின் மணிமகுடமாக பள்ளிக்கல்வித் துறையின் இந்த நூலகப் புரட்சி விளங்குகிறது!

Also Read : Tamil Nadu government education -related schemes

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top