மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்ட மாநில கல்விக் கொள்கை – 2025 குறித்த, திமுக மாணவர் அணி நடத்திய உரையாடல் நிகழ்ச்சி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. நூற்றுக் கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். தேசிய கல்விக் கொள்கை – 2020-ன் பாதகங்கள் மற்றும் மாநில கல்விக் கொள்கை – 2025 சிறப்புகள் குறித்து விரிவாக மாணவர்களிடையே உரையாடினர்.

மாநில கல்விக் கொள்கை – Save Education Policy!

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை – 2025 குறித்த உரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, “எந்த மேடையில் தேசிய கல்விக் கொள்கை- 2020 எனும் மதயானை புத்தகத்தையும் மதயானையை அடக்கும் அங்குசத்தையும் மாண்புமிகு முதலமைச்சரின் கைகளில் கொடுத்தேனோ அதே மேடையில் பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை என் கையில் கொடுத்தார். இது மாநில கல்விக் கொள்கை மட்டுமல்ல மாணவர்களைக் காக்கும் கல்விக் கொள்கை.” என தன் உரையைத் தொடங்கினார்.
சமூகநீதி காக்கும் மாநில கல்விக் கொள்கை!

மாணவர்களின் எதிர்காலத்திற்கு என்ன தேவை என்பதைச் சிந்தித்து, அனைவரையும் உள்ளடக்கி, சமத்துவமும் சமூகநீதியும் கொண்டதாக கல்வி இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே நம் மாநில கல்விக் கொள்கை. தாய்மொழிக் கல்வியின் வழியாக நமது அடையாளத்தைப் பேணுவதுடன் உலக மொழி ஆங்கிலம், நவீன தொழில்நுட்பம், அறிவியல் கண்டுபிடிப்புகள் என உலகளாவிய பார்வையை நம் மாணவர்களிடையே விதைப்பதுதான் மாநிலக் கல்விக் கொள்கையின் நோக்கம்.
சமத்துவத்தை உருவாக்கும் திராவிட மாடல் அரசு!
சத்ரபதி சிவாஜியும் ஜான்சிராணி மட்டுமல்ல… இந்திய விடுதலைப் போரில் இன்னுயிரைத் தியாகம் செய்த தமிழ்நாட்டு விடுதலை வீரர்களின் வாழ்க்கை வரலாறும் நம் பிள்ளைகள் படிக்கும் பாடங்களில் இடம்பெற வேண்டும். நாம் எதையும் கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லை. கல்வியில் பாகுபாட்டை எதிர்த்து சமத்துவத்தை உருவாக்குவதே திராவிட மாடல் அரசின் நோக்கம். தமிழர்களாகிய நமது அடையாளங்களை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ‘கீழடி’ அகழ்வாராய்ச்சி முடிவுகளை மூடி மறைக்க முயற்சி செய்யும் ஒன்றிய பாஜக அரசு, தேசிய கல்விக் கொள்கையின் மூலம் காவி மயத்தைத் திணிக்கப் பார்க்கிறது.



தேசிய கல்விக் கொள்கையில் புராணங்களைப் பாடமாக்குகிறார்கள். காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்கும் திறன் இல்லை. நம்முடைய மாநில கல்விக் கொள்கையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்படும். புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்போது அதற்கேற்றபடி திறன் மேம்பாட்டிற்காக TN SPARK போன்ற நவீனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கருப்பு சிவப்புக் காவல்காரர்கள்!
தமிழ்நாட்டிலுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நாளை சிறப்பான எதிர்காலம் கிடைக்கும் என நிம்மதியாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் வீட்டுக்கு முன்பாக இரண்டு பேர் காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருப்புச் சட்டைக்காரர் இன்னொருவர் கருப்பு சிவப்புச் சட்டைக்காரர்.” எனக் கொள்கை வீரராக மேடையில் முழங்கினார்.
என் அன்புத் தம்பி அன்பில்!


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கமல்ஹாசன் பேசும்போது,
”If it is possible it must be done, If it is impossible it can be done என்பது ரஷ்ய நாட்டின் பழமொழி.
அந்த மண்ணில் பிறந்த மாவீரனின் பெயர் கொண்டவர் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். It is possible so let it be done என்று இலக்கை அடையப் புறப்பட்ட வீரர் என் அன்புத் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
என் தம்பிகளெல்லாம் தலைவர்களாக உயர்ந்து இருப்பதைப் பார்த்து எனக்கே இவ்வளவு மகிழ்ச்சி என்றால், தந்தை நிலையில் நின்றுகொண்டிருக்கும் முதலமைச்சருக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்.
நாளை நாம் குறிக்கும் தேதி!
தாய்ப்பாலோடு சேர்த்து தமிழும் நம்மை வந்தடைந்ததுபோல பள்ளியில் படிக்கும் குழந்தை கல்வியோடு அறிவியலையும் கற்று எந்தக் குழப்பமும் இல்லாமல் முன்னேற வேண்டும். போருக்கு நாள் குறிக்கும் பழைய பஞ்சாங்கத்தை தூக்கிப்போட்டுவிட்டு, புதிய பாதையில் செல்வோம். நாளை நாம் குறிக்கும் தேதி நல்லது நடந்தே தீரும் என்பதற்காகக் குறிக்கப்படும் தேதியாகட்டும். எவ்வரங்கிலும் ஒலிக்கும் மய்யத்தின் குரல் இது. இவ்வரங்கிலும் உங்களுக்காக ஒலிக்கும்!
மீன் எங்கள் கொடியில் இருக்கும், புலி எங்கள் நெஞ்சில் இருக்கும், வில் எங்கள் கையில் இருக்கும். Where there is a will, there is a way. எனவே will இருந்தால் வழி உண்டு. I belong to the Dravidian stock
இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் ‘ஓ மலையாளியானோ…’ என்கிறார்கள். தமிழர்கள் சந்தித்துக்கொண்டாலும் ‘தமிழர்களா நீங்கள்…’ என்று கேட்பதுண்டு. என் கனவெல்லாம், ‘ஓ நீயும் திராவிடனா…’ என்று கேட்கவேண்டும். நாடெல்லாம் சென்று நம் உறவைத் தேட வேண்டும் என்பதுதான்!” உணர்வுப் பூர்வமாகப் என்றார்.
உரிமை, உணர்வு, உயிர் – மாநில கல்விக் கொள்கை- 2025!
நிகழ்வை ஒருங்கிணைத்த கழக மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு.இரா.ராஜீவ் காந்தி, “கல்வி எங்கள் உரிமை, கல்வி எங்கள் உணர்வு, கல்வி எங்கள் அன்னை, கல்வி எங்கள் உயிர் என்ற அறைகூவலோடு NEP – 2020-ஐ எதிர்த்து SEP – 2025-ஐ கொண்டுவந்து மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரனமாகத் திகழ்பவர் நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

தெற்கின் குரல்!
பள்ளிகள் என்பது குருகுலக் கல்வியையும், பிற்போக்குத்தனத்தையும் புகுத்தும் இடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்தது ஒன்றிய பாஜக அரசு.
ஆனால், நமக்கென தனி அடையாளம் இருக்கிறது என மாநில கல்விக் கொள்கையை உருவாக்கி தெற்கில் இருந்து ஒரு குரல் ஒலிக்கிறது. அதுவே நம் மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் உரிமைக் குரல்.
ஆருயிர் அண்ணன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மாணவர்கள் நலனைச் சிதைக்கும் ஒன்றிய அரசின் NEP – No Education Policy-க்கு எதிராக எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரல், திராவிட இயக்கத்தின் போர்ப்படை வீரர் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் குரல்.
மாண்புமிகு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு குழுவை அமைத்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துகேட்டு SEP – Save Education Policy- யை உருவாக்கி இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ, துணை நின்றவர் ஆருயிர் அண்ணன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.” எனப் பேசினார்.
உரையாடல்களைத் தொடர்ந்து எளிமையான உள்ளீடுகளுடன் கூடிய மாநில கல்விக் கொள்கை குறித்த கையேடு வெளியிடப்பட்டது.











