ஜூலை 7, 2025 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1,200 தனியார் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.

எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவப் பார்வையுடனும் அனைவருக்கும் கல்வி கிடைக்க பல கல்விசார்ந்த நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு. அந்தவகையில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில்
“தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்”
என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
புத்தாக்கப் பயிற்சி முகாமும் பயிற்சியின் நோக்கமும்

இந்தத் திட்டத்தின்படி சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ, மற்றும் ஐபி பள்ளிகளைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட தமிழாசிரியர்களுக்குப் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக கடந்த ஜூலை 7, 2025 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1,200 தனியார் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.
தாய்மொழிக் கல்வியின் அவசியம்!



அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என நாம் அனைவரும் ஒரே குடும்பம். நாம் எத்தனை மொழிகளைக் கற்றாலும், தாய்மொழியாம் தமிழ் மொழியைக் கற்பது அவசியம். அதுவே நம் வரலாற்றையும், நம் பெருமைகளையும் அறிந்துகொள்ள உதவும்.” என்று தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
செம்மொழித் தமிழ் இருக்க, மும்மொழி எதற்கு?



முத்தாய்ப்பாக, ‘செம்மொழித் தமிழ் இருக்க, மும்மொழி எதற்கு?” என்று முழங்கி, ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கை-2020 மூலம் தமிழ்நாட்டின் மீது மூன்றாவது மொழியாக இந்தியைத் திணிக்க முயல்வதற்கு எதிராக தமிழ்நாட்டின் தார்மீக மொழியுரிமை முழக்கத்தை முன்வைத்தார்.
தமிழ் மொழியின் பெருமையைப் பரப்பும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு!


தொடர்ந்து பேசிய அவர், “உலகை மாற்றும் தொழில்நுட்பங்கள் வந்தாலும், வகுப்பறையில் ஆசிரியர்கள் அளிக்கும் அன்பு கலந்த அறிவைப் பெற முடியாது. தமிழ் மொழியின் பெருமையைப் பரப்பும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு” என்றார்.
தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் இந்தத் திட்டம் திராவிட மாடல் அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு நல்ல சான்று. அரசுப் பள்ளிகளைத் தாண்டி தனியார் பள்ளிகளுக்குமான அரசாகத் திராவிட மாடல் அரசு தலைநிமிர்ந்து நிற்கிறது.


Read about the banter between the Union and State of Tamil Nadu on Education fund

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr