ஓரணியில் தமிழ்நாடு – ஒன்றிணையும் மக்கள்!

Oraniyil Tamilnadu logo

`ஓரணியில் தமிழ்நாடு’ என்பது பாசிச பாஜகவுக்கும், அடிமை துரோகிகளுக்கும் எதிராகத் தமிழ்நாட்டின் மக்களைத் திரட்ட இந்த மகத்தான முன்னெடுப்பைத் தொடங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உரிமைகளை மீட்கும் ஓரணியில் தமிழ்நாடு !

ஒருபுறம் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகப் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது திராவிட மாடல் அரசு. மறுபுறம் தமிழ்நாட்டின் வளர்ச்சியைச் சீர்குலைக்கச் சதித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது ஒன்றிய பாஜக. இதனை எதிர்த்து தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது ஓரணியில் தமிழ்நாடு. 

Ooraniyil Tamilnadu poster

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கத் தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களையும் ஒன்றிணைக்கும் இந்த உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பு ஜூலை 1ம் தேதி தொடங்கப்பட்டது. 

தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு!

இந்தி மொழித் திணிப்பு, கீழடியில் தமிழர் தொன்மை மறைப்பு, தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய கல்வி நிதி, பேரிடர் நிதி மறுப்பு, நீட் எனும் பலிபீடம் கொண்டு மாணவர்கள் உயிர் பறிப்பு, தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டின் அரசியல் வலிமை குறைப்பு எனத் தமிழ்நாடு தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசால் வஞ்சிக்கப்படுகிறது. 

இப்படி தமிழர்களைத் தொடர்ந்து சீண்டிப் பார்க்கும் தமிழினப் பகைவர்களுக்கும், துணைபோகும் அதிமுக துரோகிகளுக்கும் எதிராக ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் பெரும் திரளான மக்கள் திமுக-வில் இணைந்து வருகின்றனர்.

ஓரணியில் தமிழ்நாடு வெற்றி நமதே!

தமிழ்நாடு முழுவதும் உள்ள சொல்லாற்றல் செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் இந்த முன்னெடுப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்கள். அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று, மக்களைச் சந்தித்து இயக்கம் குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறார்கள். இந்நிலையில், 2 கோடி உறுப்பினர்களைக் கடந்து, இவ்வியக்க்ம் மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஓரணியில் தமிழ்நாடு நிலவரம்

அமைச்சர் அன்பில் மகேஸ் பொறுப்பு வகிக்கும், திருச்சி தெற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 2.5 லட்சம் உறுப்பினர் சேர்க்கை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை வெகு சில நாட்களிலேயே 1.72 லட்சம் உறுப்பினர்களைக் கடந்தது. விரைந்து இலக்கை நிறைவு செய்யும் பணியில் திருச்சி தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சீரிய பணிகளை ஆற்றிவருகிறார்கள். 

ஓரணியில் தமிழ்நாடு குறித்து அன்பில் மகேஸ் பொய்யாமொழி

உரிமைகளுக்கான ஒன்றுதிரட்டல்!

தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் எதிராக ஒன்று திரண்டிருக்கிறது ஓரணியில் தமிழ்நாடு. இது வெறுமனே உறுப்பினர் சேர்க்கைப் பணி மட்டுமல்ல, நம் உரிமைகளுக்கான ஒன்றுதிரட்டல். 

2026-ல் மகத்தான வெற்றியைப் பெற்று திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும். 
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்!

Read about Water Bell initiative here

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top