தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நம திராவிட மாடல் அரசு ஒரு லட்சியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் “நான் முதல்வன் திட்டம்”.

நான் முதல்வன் திட்டத்தால் தலைநிமிரும் தமிழ்நாடு!
தொலைநோக்குச் சிந்தனையுடன், இளைஞர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் விதமாக பல்வேறு புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
தனிச்சிறப்பு வாய்ந்த திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டம், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகள்!
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 41.39 லட்சம் மாணவர்களும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விரிவுரையாளர்களும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 29 அரசு பொறியியல் கல்லூரிகளில் ரூ. 30.17 கோடி மதிப்பீட்டில் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றிருக்கிறார்கள். “உயர்வுக்குப் படி” எனும் திட்டத்தின் வாயிலாக 77,752 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். மேலும், “கல்லூரிக் கனவு-24” திட்டத்தின் மூலம் நடப்புக் கல்வியாண்டு வரை 1.87 லட்சம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள்.
குடிமைப் பணித் தேர்வு!
“நான் முதல்வன்” திட்டம், குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்குப் புதிய வெளிச்சத்தைத் தந்துவருகிறது. 2022-ம் ஆண்டில் 36 பேர் இத்திட்டம் வாயிலாகக் குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 47 பேராகவும் 2024-ம் ஆண்டில் 57 பேராகவும் உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக, 2024-ம் ஆண்டில் குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற 57 பேரில் 50 பேர் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்பது இமாலய சாதனை.
Tamil Nadu Government Scheme
நான் முதல்வன் திறன் பயிற்சிகள்!
அதுமட்டுமல்ல, கடந்த நான்கு ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட துறைகளின் கீழ் 2,59,072 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த குறுகியகால திறன் பயிற்சிகளை வழங்கியிருக்கிறது இத்திட்டம்.
கட்டுமானம், தளவாடம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தோல் மற்றும் நூற்புத் தொழில்துறைகளில் பணிபுரியும் 1,13,940 தொழிலாளர்களுக்கு முன் கற்றல் அங்கீகாரச் (Recognition of Prior Learning – RPL) சான்றிதழ்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கின்றன.
சமூக நல இல்லங்களில் வசிப்பவர்களுக்கான திறன் பயிற்சிகள்:
சென்னை, தாம்பரம், கடலூர், சிவகங்கை, சேலம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சமூக நல இல்லங்களில் வசிப்பவர்களுக்கு தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அலுவலக வரவேற்பாளர் உள்ளிட்ட பாடநெறிகளில் பயிற்சிகளை அளித்து அவர்கள் வாழ்விலும் விளக்கேற்றியிருக்கிறது ‘இத்திட்டம்!
அதோடு, பழங்குடியினர், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் என 15,890 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்து, அவர்களைப் பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக இந்தத் திட்டம் உருவாக்கியிருக்கிறது.
நம்பிக்கைப் பாலம்!
இத்திட்டம் என்பது தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறது. கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கி, இளைஞர்களைத் திறன்மிக்கவர்களாக மாற்றுகிறது.
நாளை தமிழ்நாடு நம்பிக்கை வெளிச்சத்தால் சூழ்ந்திருப்பதை ‘நான் முதல்வன்’ போன்ற மிகச் சிறந்த திட்டங்களால் திராவிட மாடல் அரசு உறுதி செய்துவருகிறது!
கனவுகள் வெல்லட்டும்!

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr