ஒன்றிய அரசு தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறதா?

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறுவிதமான கல்விச் சூழல் உள்ளது. எனவே, கல்வி என்பது மாநில பட்டியலில் மட்டுமே இருக்க வேண்டும்.அப்போதுதான் அந்த மாநிலத்தின் கல்வித்தரம் உயரும். ஆனால், ஒன்றிய அரசு கல்வி விஷயத்திலும் மூக்கை நுழைத்து, தேசிய கல்விக் கொள்கை எனும் மும்மொழி கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது.

இருமொழிக் கொள்கை மூலம், மாநிலத்தில் கல்வித் தரத்தை உயர்த்தியிருக்கும் தமிழ்நாடு அரசு இதனை ஏற்கவில்லை. இதனால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியான ரூ.2,152 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் ஒன்றிய பாஜ அரசு புறக்கணித்து வருகிறது.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியிருந்தார், ஆனாலும், மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதைச் சுட்டிக் காட்டி, தொடர்ந்து கல்வி நிநியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சூழலில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெறவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பில், ‘கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். தேசிய கல்விக் கொள்கையுடன் கட்டாயக் கல்விச் சட்டத்தை இணைக்க வேண்டியதில்லை. 2021 முதல் ஒன்றிய அரசு இந்த நிதியை அரசியல் காரணங்களுக்காக மாநில அரசுக்கு வழங்கவில்லை என தமிழ்நாடு அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

Tn Govt’s Kalvi Suttrula initiative

சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் கட்டாயக் கல்வித் திட்டத்திற்கான நிதியை மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதேன்பது, ஏழை மாணவர்களுக்கான நல்வாய்ப்பு. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாகவே இதற்கான 60 சதவீத தொகையை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கவில்லை.

இந்தியாவில் 2009-ம் ஆண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஏழை மாணவர்கள் கல்விபெறும் வாய்ப்பை உறுதிசெய்யும் இந்தத் திட்டத்தை இல்லாமல் ஆக்கிவிடும் மறைமுக நோக்கத்தில், ஒன்றிய அரசு செயல்படுகிறதா என தமிழக மக்கள் சந்தேகிக்கின்றனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வியில் அரசியல் செய்வது மிகவும் தவறானது. இதை உணர்ந்தாவது தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யும் என நம்புவோம்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top