களம் காணும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

மாணவர்களின் முன்னேற்றத்திற்காகப் பல சீர்மிகு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. அதில் இந்த ஆய்வுக் கூட்டம் ஒன்று. மாணவர்கள் கற்பதில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து கற்றல் கற்பித்தலில் சிறக்க, கல்வி அலுவலர்களுடனும், பள்ளித் தலைமை ஆசிரியர்களுடனும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 

கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்!

பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக மாநாட்டுக் கூட்ட அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஜூன் 23, 24 ஆகிய இரண்டு நாள்களில் நடைபெற்றது. 

மாவட்டம் தோறும் கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட சாதனைப் பணிகள், மாணவர்களின் இடைநிற்றல், 14417 உதவி எண்ணிற்கு அம்மாவட்டங்களில் வந்துள்ள கருத்துகள் அவற்றுக்கு கல்வி அலுவலர்களின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அதோடு, மாண்புமிகு முதலமைச்சரின் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கடைக்கோடி கிராமப் பள்ளிக் கூடங்கள் வரையிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றனவா? மாவட்டங்கள் வாரியாக மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் என்னென்ன? சிறப்பு கவனம் தேவைப்படும் மாவட்டங்கள் எவை? உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளும் வகையில் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

மேலும் மாநில திட்டக் குழுவால் வெளியிடப்பட்ட கற்றல் அடைவுக்கான ஆய்வறிக்கையை (SLAS) மாவட்டங்கள் வாரியாக வகைப்படுத்தி, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் வழங்கி, அறிக்கையின் அடிப்படையில் மாவட்டத்தில் தேவையான முன்னெடுப்புகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்!

கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தினை தொடர்ந்து மாவட்டங்கள்தோறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அதன்படி, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான முதல் ஆய்வுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. 463 தலைமையாசிரியர்கள் கலந்து கொண்ட அந்த ஆய்வுக் கூட்டத்தில், SLAS அறிக்கையில் தரப்பட்டுள்ள புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆசிரியர்களின் கருத்துக்கள் கேட்டறிந்து, தக்க ஆலோசனைகளை வழங்கினார் அமைச்சர்.

170 தலைமை ஆசிரியர்களுடன் நாகை மாவட்டத்தில் இரண்டாவது ஆய்வுக் கூட்டமும், ஓசூரில், தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இதுவரை ஏழு  ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாட்டங்களிலும் பயணித்து, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைச் சந்தித்து, SLAS அறிக்கையை முன்வைத்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இந்த புயல்வேக பயணங்களும் அடுத்தடுத்த ஆய்வுக் கூட்டங்களும் கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.  

இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையைச் சீர்மிகு துறையாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வளர்த்தெடுக்கிறார். 

கல்வியையே சமூகநீதிக்கான படிக்கட்டாக உயர்த்திப்பிடக்கிறது திராவிட மாடல் அரசு.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top