ஒரு முகம் அறிமுகம்: அரசுப் பள்ளி யின் பெருமிதம் – ஹர்ஷினி நேத்ரா!

தமிழர்களின் மண்ணோடும் மரபோடும் ஒன்றியிருப்பது கலை. தமிழர்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்திருப்பது கலை. இந்தக் கலைகள் உயிர்ப்போடு இருக்கவும், பாரம்பரிய மண்ணின் கலைகள் அழிந்துவிடாமல் காக்கவும், குழந்தைப் பருவம் முதலே மாணவர்களிடையே கலைகளைப் பயிற்றுவித்து ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட மாணவக் கொண்டாட்டமே கலைத் திருவிழா.

மாணவர்களின் தனித்திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் இந்த கலைத் திருவிழா அரசுப் பள்ளிகள் சூடிய அழகிய மணிமகுடம்.

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் ஹர்ஷினி நேத்ராவின் வாழ்க்கையை மாற்றியது தமிழ்நாடு அரசின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான `கலைத் திருவிழா’. லட்சக்கணக்கான மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் கலைத் திருவிழாவில் இம்மாணவியின் திறனும் அங்கீகரிக்கப்பட்டது.

பெற்றோர், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என மாணவியின் திறமைக்கு உறுதுணையாக நிற்க விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர்' மேடையில் ஏறிய ஹர்ஷினியின் குரல் ‘எல்லாம் உன்னுள்ளே… அதைத் தேடு கண்ணம்மா’ என்று நெகிழ்வும் மகிழ்வுமாக உலகெங்கும் ஒலித்தது!

Anbil Mahesh Poyyamozhi interacting with school students

ஹர்ஷினி நேத்ரா.

மாணவர்கள் கல்வியிலும் தனித்திறமையிலும் சிறந்து விளங்கத் தமிழ்நாடு அரசு பல சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்தைப் போலச் சிறந்து விளங்கும் ஹர்ஷினி நேத்ரா, அரசுப் பள்ளியின் பெருமிதம்.

1 thought on “ஒரு முகம் அறிமுகம்: அரசுப் பள்ளி யின் பெருமிதம் – ஹர்ஷினி நேத்ரா!”

  1. Pingback: ஒரு முகம் அறிமுகம்! : `எக்ஸ்பிரஸ் கார்த்திகா' - Anbil Mahesh Forever

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top