அன்பிலிருந்து..
அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடுபள்ளிக் கல்வித்துறை அமைச்சர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைய தலைமுறைத் தலைவர்களில் முக்கியமானவர். திருச்சி அருகே உள்ள அன்பில் என்கிற கிராமம் இவரது பூர்வீகம். 1977 டிசம்பர் 2-ம் தேதி அன்பில் பொய்யாமொழி – மாலதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். எம்.சி.ஏ முதுகலை பட்டம் பெற்றவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி – ஜனனி தம்பதிக்கு இனியன், கவின் என இரு மகன்கள் உள்ளனர்.

தொடரும் தேர்தல் வெற்றிகள்
முழு நேரமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். 2014-ல் திமுக இளைஞர் அணிச் செயலாளர் ஆனார். 2016-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு 46.98% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 53.48% வாக்குகளுடன் அதிக வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி. 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் புதிய பொறுப்பேற்றார்.

அரசியல் செயல்பாடுகள்
இரு தசாப்தங்களுக்கும் மேலாக அரசியலில் தீவிரமாக இயங்கி வரும் அன்பில் மகேஸ், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இவரின் மேற்பார்வையில் நிர்வகிக்கப்படுகின்றன. தஞ்சை மாவட்டப் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட அன்பில் மகேஸ் பொய்யாமொழி தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் செயல்படுகிறார்.
பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம்
பள்ளிக்கல்வித் துறையில், எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் எனப் பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த 50-க்கும் மேற்பட்ட பல்வேறு புதிய நலத் திட்டங்களைச் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். மாணவர்களின் நலனை முன்னிலைப்படுத்தி, புதிய திட்டங்களை தீட்டுவதிலும் அவற்றை செயல்படுத்துவதிலும் அதிக முனைப்புடன் செயலாற்றி வருகிறார்.







கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டில் ‘அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் காலம் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம்’ என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

அன்பில் தர்மலிங்கம்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தாத்தா அன்பில் தர்மலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர், காயிதேமில்லத் போன்ற தலைவர்களுடன் நல்ல அறிமுகம் கொண்டவர். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நெருங்கிய நண்பர்.
ஊராட்சி மன்றத்தலைவராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அன்பில் தர்மலிங்கம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் வேளாண்மை, உள்ளாட்சி, வருவாய், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு ஆகிய துறைகளின் அமைச்சராகப் பல பொறுப்புகளை வகித்தவர்.

அன்பில் பொய்யாமொழி
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் அப்பா, அன்பில் பொய்யாமொழி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நெருங்கிய நண்பர். 1989 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திமுக வேட்பாளராக வெற்றி பெற்று, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக திறம்படச் செயலாற்றியவர். இவர் 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி அன்பில் பொய்யாமொழி மறைந்தார்.
அன்பில் பொய்யாமொழி முதல்வர் ஸ்டாலின் நட்பு




மூன்று தலைமுறையாக தொடரும் நட்பு
கலைஞர் குடும்பத்துடனான இரு தலைமுறை நட்பு, மூன்றாவது தலைமுறையாக தொடர்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் சிறுவயது முதலே இணைபிரியாத நண்பர்களாகத் தொடர்கிறார்கள். அவர் துணை முதல்வராகவும் இவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் செயலாற்றுவது சமகாலத்தின் தமிழக அரசியலில் ஒரு புதிய பாதை!

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr
Pingback: “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” ஏழாவது மண்டல மாநாடு
Pingback: Tamil Nadu’s Trailblazing Reforms in Education Under Anbil Mahesh Poyyamozhi
Pingback: தளபதியின் தளபதி அன்பில் பொய்யாமொழி! - Anbil Mahesh Forever
Pingback: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் 234/77 பள்ளி விசிட்! - Anbil Mahesh Forever