பள்ளி மாணவர்களுக்காகத் தொடர்ச்சியாகப் பள்ளிகள், நிகழ்ச்சிகள் எனக் களம் காணும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவ்வப்போது வீடியோக்கள் மூலமாகவும் மாணவர்களுக்கான அறிவுரைகளை வழங்கி வருகிறார். அந்தவகையில் `என் பள்ளி என் பெருமை’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை ஜூலை 10-ஆம் தேதியன்று வெளியிட்டிருந்தார்.
மறக்க முடியாதது… மாணவப் பருவம்!
அந்த வீடியோவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்,
பள்ளிகளில் மகிழ்ச்சி பொங்கப் பல நண்பர்களோடும் ஆசிரியர்களோடும் நாம் பழகி இருப்போம். அவர்களைப் பிரிந்தபோது நாம் மனம் கலங்கி இருப்போம். வெகுகாலத்திற்கு பின் மீண்டும் அவர்களைப் பார்க்கையில் பள்ளி மாணவர்களாகவே மாறிப்போவோம்.
Anbil Mahesh
வழிகாட்டி!
என் பள்ளி நண்பர்களோடு தனிப்பட்ட முறையில் இப்போதும், நான் தொடர்பில் இருக்கிறேன். எனது பள்ளி ஆசிரியர்களைப் பற்றி மகிழ்ச்சியாகப் பெருமையாகப் பல நேர்காணல்களில் கூறி உள்ளேன். அவர்கள் இப்போதும் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள்.

என் பள்ளி என் பெருமை!
எனவே நமது பள்ளி நாட்களின் நினைவுகளை மீட்பதற்காகத் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை `என் பள்ளி என் பெருமை’ என்ற ஆன்லைன் போட்டியை நடத்த உள்ளது. இதில் பள்ளி மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்காக மாண்புமிகு முதலமைச்சர் செயல்படுத்திவரும் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், பள்ளி மேலாண்மைக் குழு, ஸ்மார்ட் வகுப்பறைகள், கலைத் திருவிழா, வெளிநாடு கல்விச் சுற்றுலா போன்ற பலத் திட்டங்களைத் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டங்கள் எந்தளவு பயனுள்ளதாக உள்ளது என்பதை இந்த ஆன்லைன் போட்டியின் வழியாக மாணவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி நாட்கள் பற்றியோ, விழுதுகள் போன்ற திட்ட அனுபவங்கள் குறித்தோ பகிர்ந்து கொள்ளலாம்.
State Education Policy: A Blueprint for Tomorrow’s Tamil Nadu!




ஒன்பது தலைப்புகளில் இப்போட்டியில் கட்டுரை, கவிதை, புகைப்படங்கள், செல்ஃபி, ரீல்ஸ் என தங்களது தனித்திறமைகளை மாணவர்கள் காட்டலாம். போட்டியில் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டு பெருந்தலைவர் காமராஜர் புகழையும் நமது பள்ளியையும் மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடுங்கள்!” என்றார்.

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr