
ஒன்றிய பாஜக அரசின் நாசகார நடவடிக்கையை முன்கூட்டியே தமிழ்நாடு அரசு கணித்தி்ருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த ஒரு முன்னெடுப்பு, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாடு பெரும் சேதாரத்தைச் சந்திக்கும். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பாசிச பாஜக அரசு ஏன் இந்தத் தொகுதி மறுவரையறையைச் செய்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

கூட்டு நடவடிக்கைக்குழுக் கூட்டம்
நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னையில் மார்ச் 22, 2025-ல் கூட்டு நடவடிக்கைக்குழுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

இந்தியா முழுவதிலுமிருந்து இருபதுக்கும் மேற்பட்ட மாநிலக் கட்சித் தலைவர்கள் வந்திருந்தனர். தமிழ்நாட்டு முதலமைச்சரின் முன்னெடுப்பைக் கண்டு நாடே பாராட்டுகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கான பேராபத்தாக முடியும் :

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறையை எதிர்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள். அதில் தொகுதி மறுவரையறை குறித்து ஆணித்தரமாக தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் சில வட மாநிலங்களுக்கும் தொகுதி மறுவரையறை எனும் பெயரில் மிகப்பெரிய துரோகத்தை, செய்யத் துணிந்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. நமது மாநிலத்திற்கான மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது என்பதை அன்பில் மகேஸ் பொய்யாமொழி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தற்போதே பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில்தான் 39 மக்களவை உறுப்பினர்களும், நமது மாநிலத்திற்கான உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்கள். உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தால் அது தமிழ்நாட்டிற்கான பேராபத்தாக முடியும் என்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சுட்டிக்காட்டியுள்ளார். தொகுதிகள் 31 ஆக குறையும்போது, நமக்கான 8 உறுப்பினர்களை இழக்க நேரிடும்.மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டதால் நமக்கு இந்த தண்டனையா என அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறையை எதிர்த்துப் பேசி இருக்கிறார்.
பாசிச பாஜக அரசுக்கு என்ன பயன்?

உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மட்டும் பாஜகவுக்குப் போதும். இந்தி பேசும் மாநிலங்களில் மட்டும் அரசியல் செய்தால் போதும் என்று நினைக்கிறது பாசிச பாஜக அரசு என அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியிருக்கிறார்.இந்தி பேசும் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிக்க திட்டம் போடுகிறார்கள். அங்கு மட்டுமே வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையோடு ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கலாம் என்று கணக்குப் போடுகிறது பாஜக என அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். இந்தக் கணக்கை அவர்கள் இப்போது போடவில்லை, புதிய நாடாளுமன்றத்தை கட்டும்போதே 888 இருக்கைகளோடு கட்டினார்கள் என அன்பில் மகேஸ் பேசியுள்ளார்.
Find Anbil updates : அன்பில் அப்டேட்ஸ் | Anbil Updates
என்ன செய்ய வேண்டும்?
1999 பிப்ரவரி 22-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டிற்கு 1971-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளின் என்ணிக்கை குறையாமல் எல்லைகளை மட்டும் மறுவரையறை செய்ய வேண்டும் என முத்தமிழறிஞர் கலைஞர் கூறியதையே அன்பில் மகேஸ் வலியுறுத்தியிருக்கிறார்.மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாமல், எல்லைகளை மட்டும் மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே சிறந்த தீர்வாக இருக்கும் என அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். கல்விநிதி மறுப்பு, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு, மும்மொழிக்கொள்கை, இந்தித் திணிப்பு என ஒன்றிய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சித்து வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையின் என்ணிக்கை குறைந்தால் நம் தமிழ்நாட்டின் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அன்பில் மகேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
என்னதான் தீர்வு?
எனவே, முத்தமிழறிஞர் கலைஞர் வலியுறுத்தியதை ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும் என அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முன்கூட்டியே சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். உரிமைகளை விட்டுத்தரக் கூடாது, தொடர்ந்து போராட வேண்டும், முதலமைச்சரின் வழியில் தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடக் கூறியுள்ளார்.

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr