கழகத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எக்ஸ் பக்கதில் வாழ்த்து
01, மார்ச் 2026 : கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கும் கழகத் தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள். கொள்கை எதிரிகளுக்கு தந்தை பெரியாராக! நம் உரிமைக்குரலாக முழங்குவதில் அண்ணாவாக! உரிமைகளை நிலைநாட்டுவதில் கலைஞராக! மொத்தத்தில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக திராவிட மாடல் 2.0 அத்தியாயத்தைத் தொடங்கவிருக்கும் நமது கழகத் தலைவர் அவர்களை வணங்கி களத்தில் இறங்குவோம். நமது உயிரினும் மேலான தலைவர் அவர்களுக்கு வெற்றியை மட்டுமே பரிசளிப்போம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பிறந்தநாளில் 11 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்
சென்னை 01, மார்ச் 2026 : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 11 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்.

தொடக்கக் கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள குறைவு பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் இந்நிகழ்வில் நியமன ஆணைகளை பெற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தவும், சமூக நீதி அடிப்படையில் அனைத்து பிரிவினருக்கும் சம வாய்ப்பை வழங்கவும் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். புதிதாக பணியில் இணையும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயல்பட்டு மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டும் என்றும், அவர்களின் சேவை சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆரம்பம் : மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து
02, மார்ச் 2026 : இன்று பொதுத் தேர்வு எழுதவுள்ள 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் அன்பும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “இன்று பொதுத் தேர்வு எழுதவுள்ள 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும். அன்பு மாணவர்களே, பதற்றம் இல்லாமல் சந்தோஷமாக Exam Hall-க்கு வாருங்கள். மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் தேர்வு எழுதுங்கள். உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க சார்பில் விருப்பமனுக்கள்: கொளத்தூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் திருவெறும்பூர் தொகுதிகள்
சென்னை 02, மார்ச் 2026 : கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கும், கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கும் திருச்சி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) சார்பில் விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், கழகத் தலைவர் மற்றும் கழக இளைஞரணிச் செயலாளர் ஆகியோரின் வாழ்த்துகளுடனும், கழக நிர்வாகிகளின் அன்பு ஆதரவுடனும், திருவெறும்பூர் தொகுதி மக்களின் துணையோடும் தனது தாய் வீடான திருவெறும்பூர் தொகுதியில் தி.மு.க சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் போட்டியிடுவதற்காகவும் விருப்பமனு அளித்துள்ளார். இவ்விருப்பமனுக்கள், வரும் தேர்தலை முன்னிட்டு கட்சித் தலைமையிடம் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: தியாகராயநகர் தேர்வு மையத்தை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
சென்னை 02, மார்ச் 2026 : 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில், சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேர்வு நடைபெறும் வகுப்பறைகள், மாணவிகளுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களை அமைச்சர் ஆய்வு செய்தார். தேர்வு முறைகள் சீராக நடைபெறுகின்றனவா என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பிறந்தநாளில் 2026–27 அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை தொடக்கம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
சென்னை 02, மார்ச் 2026 : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 2026–27ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கிவைத்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள C.S.I. நடுநிலைப் பள்ளி, சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் புதிய மாணவர்களை அமைச்சர் வரவேற்று, கல்வி பயணத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி, சிறந்த உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மாணவர்கள் முழுமையான வளர்ச்சியை அடைய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்வு நாளில் ஏற்பட்ட துயரம் – மாணவி, ஆசிரியர் மறைவுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆழ்ந்த இரங்கல்
02, மார்ச் 2026 : மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள நிர்மலா மகளிர் நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற மாணவி எம். துர்காதேவி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் செல்லும் வழியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் ஆயங்குடி பள்ளம் பகுதியில் உள்ள தமிழ் வெங்கடேசா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் திரு. எஸ். சரவணன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த செய்தியும் கல்வி வட்டாரங்களில் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இரு சம்பவங்களையும் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஆயிரம் கனவுகளுடன் எதிர்காலத்தை நோக்கிப் பயணித்த மாணவியின் குடும்பத்தினருக்கும், கடமையைத் தவறாமல் செய்து வந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் தனது மனமார்ந்த ஆறுதலை தெரிவித்தார்.
TN Leadership Summit 2026 : கருத்துப் பரிமாற்றத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கமல்ஹாசன் எம்.பியுடன் கலந்துகொண்டார்
சென்னை 02, மார்ச் 2026 : TheWeekLive ஏற்பாடு செய்த TN Leadership Summit 2026 நிகழ்ச்சியில் பங்கேற்று தமது கருத்துகளை பகிர்ந்துகொண்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். இந்த நிகழ்வில், மக்காள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன் அவர்களும் இணைந்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தமிழகத்தின் முன்னேற்றம், தலைமைத்துவத்தின் அவசியம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புதிய சிந்தனைகள் குறித்து இருவரும் விரிவாக கருத்துப் பரிமாற்றம் செய்தனர். பல்வேறு துறைகளில் இருந்து வந்திருந்த முக்கிய நபர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த கலந்துரையாடலை ஆர்வத்துடன் கவனித்தனர். அர்த்தமுள்ள சிந்தனைகள் பரிமாறிக்கொள்ளும் இந்த மேடையை வழங்கிய The Week இதழுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
திருச்சி இரயில்வே அலுவலகத்தில் இந்தி திணிப்பு: கடும் கண்டனம் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
04, மார்ச் 2026 : “தமிழ் வாழ்க, இந்தித் திணிப்பு ஒழிக” என்று முழக்கமிட்டு மொழிக்காக தனது இன்னுயிரை ஈந்த மொழிப்போர்த் தியாகி கீழப்பளுவூர் சின்னசாமி உயிர்நீத்த இடமான திருச்சி இரயில் நிலையம் தமிழர் வரலாற்றில் முக்கியமான நினைவிடமாக உள்ளது. இந்நிலையில், அதே திருச்சியில் உள்ள மண்டல இரயில்வே அலுவலகத்தின் முகப்பில் இந்தி மொழி திணிக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மொழிப்போர்த் தியாகிகள் செய்த தியாகத்திற்கும் தமிழர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல் இவ்வாறு இந்தி திணிப்பு நடைபெறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார். மொழித் திணிப்பிற்கு எதிராக தியாகி சின்னசாமி ஏற்ற தீ இன்னும் தமிழர்களின் மனதில் எரிந்து கொண்டே இருக்கிறது என்பதை ஒன்றிய அரசுக்கு உரக்கச் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
திருவெறும்பூர் தொகுதியில் 164 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருவெறும்பூர் 04, மார்ச் 2026 : திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி வார்டுகள் 42, 45 மற்றும் 46 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பொன்மலை, மலை அடிவாரம், பொன்னேரிபுரம், காந்திநகர் மற்றும் ஆலத்தூர் ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்கட்டமாக 164 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்.
நீண்ட காலமாக வீட்டு மனைப் பட்டா எதிர்பார்த்து வந்த மக்களுக்கு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டதால் பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அன்பில் குடும்ப திருமண விழா: மணமக்களை வாழ்த்திய மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
தஞ்சாவூர் 05, மார்ச் 2026 : கழக குடும்பத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அன்பில் குடும்ப இல்லத் திருமண விழாவை தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்கள் பி.எஸ். ஓவியா – எச். மனோஜ் இணையரை வாழ்த்தினார்.
இந்த விழாவில் கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும், கழக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே. என். நேரு அவர்கள் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் பல அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
அன்பில் தர்மலிங்கம் நினைவு நாள்: திருச்சியில் மரியாதை செலுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி 05, மார்ச் 2026 : திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், தந்தை பெரியார் ஈ.வி. ராமசாமி அவர்களின் தொண்டருமான, பேரறிஞர் சி. என். அண்ணாதுரை அவர்களின் தம்பியாகவும், முத்தமிழறிஞர் மு. கருணாநிதி அவர்களின் உற்ற நண்பராகவும் விளங்கிய அன்பில் தர்மலிங்கம் அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, திருச்சியில் அமைந்துள்ள அய்யா அன்பில் தர்மலிங்கம் அவர்களின் சிலைக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அய்யா அன்பில் தர்மலிங்கம் அவர்களின் பணிகளை நினைவுகூர்ந்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் தொடர் தெருமுனைக் கூட்டங்கள்
திருச்சி 05, மார்ச் 2026 : கழகத் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி தெற்கு ஒன்றியத்தின் காரைப்பட்டியில் ஒன்றிய அவைத்தலைவர் திரு. அ. வேலு அவர்களின் தலைமையில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் திரு. தமிழ் சாதிக் அவர்கள் உரையாற்றினார். அதேபோல், பொன்னம்பட்டி பேரூரில் உள்ள துவரங்குறிச்சியில் பேரூர் கழகச் செயலாளர் திரு. கே.ஏ. நாகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மற்றொரு தெருமுனைக் கூட்டத்திலும் தமிழ் சாதிக் அவர்கள் கலந்து கொண்டு பேசினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த தொடர் தெருமுனைக் கூட்டங்கள் மூலம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டன. இந்த நிகழ்வுகள் குறித்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்ற தினம்: “Stalin Statement” வெளியிட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதிவு
06, மார்ச் 2026 : பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தினமான இன்று, தமிழகத்தின் வரலாறு புதிய பாதையில் திருத்தி எழுதப்படத் தொடங்கிய நாள் என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சுயமரியாதைக்கும் அடித்தளம் அமைக்கப்பட்ட முக்கிய நாளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முக்கிய நாளை முன்னிட்டு, கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் “Stalin Statement” எனும் அறிக்கையை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் வழியில் நடைபெற்று வரும் திராவிட மாடல் 2.0 ஆட்சியின் இலக்குகளும் நோக்கங்களும் தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும், இந்த நாள் அதன் நினைவாக கொண்டாடப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மகளிர் முன்னேற்றத்திற்கான திராவிட மாடல் திட்டங்களை புரிந்துகொள்ள வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி 06, மார்ச் 2026 : திருச்சியில் உள்ள MIET பொறியியல் கல்லூரி ஒருங்கிணைத்திருந்த மகளிர் தின விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கும் பெண்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு திராவிட மாடல் அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு முற்போக்குத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். அந்தத் திட்டங்களின் நோக்கம் குறித்து அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பெண்களை அடக்கி வைத்திருக்க நினைக்கும் பிற்போக்குவாதிகளின் நோக்கங்களை பெண்களே உணர்ந்து அதனை எதிர்த்து முன்னேற வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகம், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சோழமாநகரில் புதுப்பிக்கப்பட்ட நியாய விலைக்கடையை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்
திருவெறும்பூர் 06, மார்ச் 2026 : திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட சோழமாநகர் பகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நியாய விலைக்கடை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து இந்தப் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்தார்.

புதுப்பிக்கப்பட்ட நியாய விலைக்கடையை அமைச்சர் இன்று திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். சோழமாநகர் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு நியாய விலைக்கடை புதுப்பிக்கப்பட்டது மக்களுக்கு பெரும் வசதியாக அமையும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
மத நல்லிணக்க இப்தார் நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
திருச்சி 06, மார்ச் 2026 : திருச்சி தெற்கு உக்கடை பகுதியில் உள்ள ரஹ்மத் பள்ளிவாசல் மற்றும் மதரஸா சுன்னத் ஜமாத் நிர்வாகக் கமிட்டி சார்பில் “மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழா” நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்ற மக்களிடம் ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் அவர்களை வரவேற்று நன்றியைத் தெரிவித்தனர்.
Tamil Nadu 2030 Vision : கல்வியில் பெரிய மாற்றங்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதிவு
07, மார்ச் 2026 : தமிழ்நாட்டை வளர்ச்சியின் புதிய உச்சிக்கு கொண்டு செல்லும் நோக்கில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் Tamil Nadu 2030 Vision திட்டம் பல்வேறு முக்கிய இலக்குகளை முன்வைத்து செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 100 சதவீதம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். மேலும் 300-க்கும் மேற்பட்ட நவீன ‘Library 5.0’ அறிவுக் கோட்டைகள், 1000 ‘வெற்றிப் பள்ளிகள்’ உருவாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு கல்வி மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

அதோடு விளையாட்டு, உளவியல் மற்றும் வாழ்க்கைத் திறன் கல்வியை வலுப்படுத்தி, மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயிலும் சூழலை உருவாக்கும் கனவை திராவிட மாடல் 2.0 ஆட்சி நிறைவேற்றும் என்றும், மக்களின் கனவுகளே முதலமைச்சரின் பெருங்கனவு என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சிக் காணொலியை அமைச்சர் அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இனமானப் பேராசிரியர் அவர்களின் நினைவு நாள்: திராவிடக் கருத்தியலை நிலைநிறுத்த உறுதி ஏற்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
07, மார்ச் 2026 : திராவிட இயக்கத்தின் முக்கிய சிந்தனையாளர் மற்றும் இனமானப் பேராசிரியர் எனப் போற்றப்படும் க. அன்பழகன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தன்னுடைய வாழ்வாலும் மக்கள் பணியாலும் கழக உடன்பிறப்புகளுக்கு கொள்கைப் பாடம் கற்பித்த பெருமைமிகு தலைவர் இனமானப் பேராசிரியர் என்றும், திராவிடக் கருத்தியலை இறுதி மூச்சுவரை சுவாசித்து அடுத்த தலைமுறைக்குப் போதித்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது புகழை போற்றி, கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி மேலும் வலுப்பெற இந்நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அமைச்சர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
திருச்சி சிறுகனூரில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு
திருச்சி 07, மார்ச் 2026 : கழக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என் நேரு அவர்களின் ஏற்பாட்டில் திருச்சி சிறுகனூரில் நடைபெறவுள்ள “ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்” எனும் கழக மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த மாநாட்டை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநாடு சிறப்பாக நடைபெற தேவையான ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
அரியமங்கலம் காமராஜ் நகரில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
திருவெறும்பூர் 07, மார்ச் 2026 : திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் பகுதியில் உள்ள காமராஜ் நகர் வர்த்தகர் நலச்சங்கம் சார்பில் 17வது ஆண்டாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்றார்.

மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வர்த்தகர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் அவர்களை வரவேற்று நன்றியைத் தெரிவித்தனர்.
இனமானப் பேராசிரியர் அவர்கள் நினைவு நாள்: திருச்சி தெற்கு தி.மு.க அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மரியாதை

திருச்சி 07, மார்ச் 2026 : இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு பேராசிரியர் அவர்களின் அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர்.
மகளிர் தினம்: மாவட்டக் கழக மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி 08, மார்ச் 2026 : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்டக் கழக மகளிர் அணி நிர்வாகிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், உலகின் இயக்கத்திற்கு காரணிகளாகத் திகழும் பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். திராவிட மாடல் அரசில் தமிழ்ப் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார விடுதலையை பெற்று சாதனைகளால் முன்னேறி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திட்டங்கள் பெண்களின் வளர்ச்சிக்கு என்றும் துணை நிற்கும் என தெரிவித்தார்.
அரியமங்கலத்தில் ஆண்கள் கபாடி போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருவெறும்பூர் 08, மார்ச் 2026 : கருடன் குரூப்ஸ் சார்பில் தினேஷ் நினைவாக திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் காந்திஜி தெருவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்கள் கபாடி போட்டியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து போட்டியில் பங்கேற்ற இளைஞர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மூலம் இளைஞர்கள் ஆரோக்கியமாகவும் ஒற்றுமையுடனும் முன்னேற வேண்டும் என்று அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில் உள்ளூர் கழக நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மகளிர் உரிமைத்தொகை சேமிப்பின் மூலம் பயனடைந்த்த அய்யம்மாள் அவர்களை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
08, மார்ச் 2026 : மகளிர் உரிமைத்தொகை சேமிப்பின் மூலம் தனது பேரக்குழந்தைக்கு நகை வாங்கிய அய்யம்மாள் என்பவர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து அதை காண்பித்து வாழ்த்துகளை பெற்றார்.
அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “பெண்கள் பொருளாதார விடுதலை அடைய வேண்டும்” என தந்தை பெரியார் ஆணையிட்டார். அந்தக் கனவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வருகிறார். அதற்கு அம்மா அய்யம்மாள் அவர்களே ஒரு சிறந்த சாட்சியாக திகழ்கிறார் என்று தெரிவித்தார்.
மகளிர் தின விழாவில் பங்கேற்று வாழ்த்துகள் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி 08, மார்ச் 2026 : திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகரம் திருவெறும்பூர் 39அ வட்ட மகளிர் அணி மற்றும் சுய உதவிக்குழுக்கள் இணைந்து ஒருங்கிணைத்த உலக மகளிர் தின விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படும் சுய உதவிக்குழுக்களின் பங்களிப்பை அமைச்சர் பாராட்டியதுடன், மகளிர் சமூக முன்னேற்றத்தில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பல பெண்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கீழக்குறிச்சியில் கலைஞர் நூற்றாண்டு கொடிக்கம்பத்தில் இருவண்ணக் கொடி ஏற்றினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி 08, மார்ச் 2026 : திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கீழக்குறிச்சி ஊராட்சிக் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு கொடிக்கம்பத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இருவண்ணக் கொடியை ஏற்றிவைத்தார்.

மேலும், கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியிலும் அமைச்சர் பங்கேற்று, மக்களுக்கு உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவெறும்பூர் தொகுதியில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வரவேற்பு
திருவெறும்பூர் 08, மார்ச் 2026 : திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, தங்களை கழகத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.

அவர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வரவேற்று, கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் உற்சாகமாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
அரியமங்கலத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருவெறும்பூர் 08, மார்ச் 2026 : திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய அமைச்சர், நோன்பு நோற்று வரும் முஸ்லிம் சகோதரர்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு இஃப்தார் நோன்பு திறப்பில் பங்கேற்றனர்.
திருச்சி மலைக்கோட்டை மாநகரில் மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி 08, மார்ச் 2026 : திருச்சி மலைக்கோட்டை மாநகரில் நடைபெறவுள்ள கழக மாநில மாநாடு மற்றுமொரு மகத்தான வெற்றியைப் பெறும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த மாநாடு உடன்பிறப்புகளுக்கு புதிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் எனவும், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழியில் “வெல்வோம் 200, படைப்போம் புது வரலாறு” என்ற இலக்குடன் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
துவாக்குடியில் உயர்மின் கோபுர விளக்குகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைப்பு
திருவெறும்பூர் 09, மார்ச் 2026 : மாநிலங்களவை உறுப்பினர் திருமதி ராஜாத்தி சல்மா அவர்களின் பாராளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சியின் 12 மற்றும் 20 ஆகிய வார்டுகளில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்குகளின் செயல்பாட்டினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் இரவு நேரப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் மாநில மாநாட்டிற்காக வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி 09, மார்ச் 2026 : திருச்சியில் நடைபெறவுள்ள தி.மு.கழகத்தின் மாநில மாநாட்டில் எழுச்சியுரையாற்ற வருகை தந்த கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் வரவேற்றார்.

தொண்டர்களின் உற்சாகம் கரைபுரண்டோடும் காவிரி பாயும் திருச்சி மண்ணில் நடைபெறவுள்ள இந்த மாநில மாநாட்டில், பெரும் திரளான கழகத் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” – திருச்சி மாநாடு வெற்றி: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி 09, மார்ச் 2026 : தி.மு.கழகத்தின் 12வது மாநில மாநாடு திருச்சி அருகே சிறுகனூரில் மாபெரும் திரளான கழகத் தொண்டர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தீரர் கோட்டமாம் திருச்சி மண்ணில் நடைபெற்ற இந்த மாநாடு, கழகம் 7வது முறையாக ஆட்சி அமைக்க அடித்தளமிட்ட மாநாடாக அமைந்துள்ளது.
திருச்சியில் நடைபெற்ற தீரர் கோட்டம் மாநாட்டில் “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற முழக்கம் தேர்தல் முடிவு வரும் வரை எதிரொலிக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956ஆம் ஆண்டு திருச்சி மண்ணில் நடைபெற்ற மாநாட்டில் “கழகம் தேர்தலில் போட்டியிடலாம்” என்று தொண்டர்கள் தீர்மானித்ததைப் போல, இன்றைய மாநாட்டிலும் “ஸ்டாலின் தொடரட்டும்” என தொண்டர்கள் உரக்கக் குரல் கொடுத்து தமிழ்நாட்டு மக்களின் மனதை பிரதிபலித்துள்ளனர் என்று கூறினார்.
மேலும், இந்த மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த திருச்சி மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார். கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கழக இளைஞரணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்த கழக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேரு ஆகியோரின் வழிகாட்டுதலில் மாபெரும் வெற்றிக்காக தொடர்ந்து உழைப்போம், வெல்வோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் “கற்றனைத் தூறும் அறிவு” சிலையை திறந்து வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
சென்னை 10, மார்ச் 2026 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் 1 கோடியே 43 ஆயிரம் ரூபாய் செலவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் அமைக்கப்பட்ட “கற்றனைத் தூறும் அறிவு” சிலையை திறந்து வைத்தார். முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கல்வித் துறையில் பல்வேறு புதுமைகளை முன்னெடுத்து வரும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் , பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் பி. சந்திர மோகன் அவர்கள், மேலாண்மை இயக்குநர் மருத்துவர் மா. ஆர்த்தி அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே. சிற்றரசு அவர்கள், பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன் அவர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திராவிட மாடல் அரசின் கல்வித் திட்டங்களையும் கொண்டாடும் ‘கற்றனைத் தூறும் அறிவு’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
சென்னை 10, மார்ச் 2026 : திராவிட மாடல் அரசில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் சாதனைகள் அடங்கிய ‘கற்றனைத் தூறும் அறிவு’ எனும் நூலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் , பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் பி. சந்திர மோகன் அவர்கள், மேலாண்மை இயக்குநர் மருத்துவர் மா. ஆர்த்தி அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே. சிற்றரசு அவர்கள், பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன் அவர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை வென்லக் பூங்காவில் சாரணர் இயக்கத் தலைமையக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
சென்னை 10, மார்ச் 2026 : சென்னை வென்லக் பூங்காவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, கட்டுமானப் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பதையும், பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், கட்டிடத்தில் ஏற்படுத்தப்படும் வசதிகள் மற்றும் சாரணர் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார். தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய தலைமை அலுவலகம் அமைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து
11, மார்ச் 2026 : தமிழ்நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் அமைச்சர் பதிவிட்டுள்ளதாவது:

“10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். முதல் பொதுத் தேர்வை எழுதவுள்ளீர்கள். அந்த excitement இருக்க வேண்டுமே தவிர, பயமோ பதற்றமோ இருக்கக் கூடாது. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் என்றெண்ணி மகிழ்ச்சியுடன் தேர்வறைக்குள் செல்லுங்கள். All the Best!” என அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் – தேர்வு மையத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
சென்னை 11, மார்ச் 2026 : தமிழ்நாடு முழுவதும் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் அமைதியான சூழலில் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தேர்வு மையங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் ஒரு பகுதியாக, சென்னை இராயபுரத்தில் உள்ள புனித பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் தேர்வு மையத்தை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். தேர்வு மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நாகப்பட்டினத்தில் ரூ.43.78 கோடியில் TIDEL NEO பூங்கா – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
சென்னை 11, மார்ச் 2026 : தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய TIDEL NEO பூங்காக்கள் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பொறுப்பு அமைச்சராக உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.43.78 கோடி மதிப்பீட்டில் புதிய TIDEL NEO பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக மாவட்ட மக்கள் மற்றும் இளைஞர்களின் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
பண்ருட்டி சிறுவர்கள் தேவா, ஜீவாவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு – ரீல்ஸ் எடுத்து மகிழ்ந்த தருணம்
சென்னை 14, மார்ச் 2026 : இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தின் மூலம் பிரபலமான பண்ருட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, சிறுவர்கள் இருவரையும் பாராட்டிய முதலமைச்சர், அவர்களுக்கு வாழ்த்துகளையும் சில பயனுள்ள ஆலோசனைகளையும் வழங்கினார். சமூக வலைத்தளங்களில் திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ள தேவா மற்றும் ஜீவாவுடன் முதலமைச்சர் அன்புடன் உரையாடிய தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதன்பின், சிறுவர்கள் இருவரும் முதலமைச்சருடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோவும் எடுத்துக்கொண்டனர். இந்த சந்திப்பு மகிழ்ச்சியான மற்றும் நகைச்சுவை கலந்த தருணங்களாக அமைந்தது. இச்சந்திப்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் கலந்து கொண்டார். இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்த சந்திப்பை பற்றிய பதிவுடன் கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்து
சென்னை 14, மார்ச் 2026 : இந்திய அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான “ஞானபீட விருது” கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்ச் சமூகத்திற்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாக திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் தமிழ்ச் சமூகத்தின் உள்ளார்ந்த உணர்வுகளை நுட்பமாக பிரதிபலிக்கும் பல்வேறு இலக்கியப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ஆகப்பெரும் கவிஞரான கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் வரவேற்புக்குரியது என்றும் அது தமிழருக்கு பெருமை சேர்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், “தமிழ் வாழ வைக்கும்” என்பதற்கே உதாரணமாக திகழும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் இலக்கியப் பணிகள் தமிழ் மொழியின் செழுமையையும் உலகளாவிய பெருமையையும் உயர்த்தி நிறுத்துகின்றன என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளன என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மகத்தான விருதைப் பெற்றுள்ள கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன், அவருடைய இலக்கியப் பணிகளை தமிழ்ச் சமூகமெங்கும் கொண்டாட வேண்டும் என்றும் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து திருச்சியில் தி.மு.க சார்பில் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி 15, மார்ச் 2026 : தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களையும் வழங்காமல், பொதுமக்கள் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான அடுப்பு எரிக்க பயன்படும் கேஸ் சிலிண்டர்களிலும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளதாக குற்றம்சாட்டி, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்று ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
தமிழ்நாட்டிற்கு தேவையான நலத்திட்டங்களையும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அத்தியாவசிய பொருட்களையும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்றும், கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உடனடியாக சரிசெய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம்: புதிய வகுப்பறைகள் திறந்து வைத்தார் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி 15, மார்ச் 2026 : மாண்புமிகு கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாணவச் செல்வங்களின் கற்றலை இனிமையாக்கி அதற்கான சிறந்த சூழலை பள்ளிகளில் உருவாக்கும் நோக்கில், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் திராவிட மாடல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தின் ஒரு பகுதியாக திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் ஊராட்சி, சின்னசூரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் கீழமுல்லைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் தலா 3 வகுப்பறைகள் வீதம் ரூ.52.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த புதிய வகுப்பறைகளை திறந்து வைத்து பார்வையிட்டார் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். புதிய வகுப்பறைகள் மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்துவதோடு, பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கும் உதவும் என அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் உள்ளூர் நிர்வாகிகள், கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்களின் நலனுக்கான முன்னெடுப்புகள் தொடரும்: முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
15, மார்ச் 2026 : மாண்புமிகு கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசில், ஆசிரியர் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு முக்கியமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆசிரியர்களின் நலன் மற்றும் கல்வித் துறையின் முன்னேற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சியாக உருவாகும் “திராவிட மாடல் 2.0” ஆட்சியிலும் ஆசிரியர் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான சாதனைத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆலத்தூரில் புதிய நியாய விலைக்கடை திறப்பு: முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்
திருவெறும்பூர் 15, மார்ச் 2026 : திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் பகுதியில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துறை வைகோ அவர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025–2026ன் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நியாய விலைக்கடையை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சீரான முறையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நியாய விலைக்கடை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் உள்ளூர் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
அன்பில் கிராமத்தில் ஜல்லிக்கட்டு: வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளித்தார் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி 15, மார்ச் 2026 ; திருச்சி மாவட்டம் அன்பில் கிராமத்தில் 52வது ஆண்டாக நடைபெற்ற பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டார். போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும், பிடிபடாமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் அமைச்சர் பரிசுகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்வை காண பொதுமக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். நிகழ்ச்சியில் உள்ளூர் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டு உற்சாகமாக பார்வையிட்டனர்.
காட்டூரில் ‘கலை இரவு’ நிகழ்வு தொடக்கம்: முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
திருவெறும்பூர் 15, மார்ச் 2026 : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் “வெறுப்பின் கொற்றம் வீழ்க! அன்பே அறமென எழுக!” என்ற முழக்கத்துடன் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூரில் ‘கலை இரவு’ நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

சமூக நல்லிணக்கம், மனிதநேயம் மற்றும் முன்னேற்ற சிந்தனைகளை மக்களிடையே பரப்பும் நோக்கில் இந்த ‘கலை இரவு’ நிகழ்வு நடத்தப்பட்டதாக அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கலாச்சார நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.
ரமலான் நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்டகழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
திருச்சி 15, மார்ச் 2026 : திருச்சியில் செயல்பட்டு வரும்ராஜியா அரபிக் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட “இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான்” நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்டகழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், கல்லூரி சார்பில் கல்விப் பணிக்காக வழங்கப்பட்ட விருதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட பிற விருதாளர்களுக்கும் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் விருதுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
சென்னை 16, மார்ச் 2026 : மாண்புமிகு கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார்.

கழகத்தின் அமைப்புச் செயல்பாடுகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களின் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது – முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து
17, மார்ச் 2026 : சாமானிய மக்களின் வாழ்வை தமிழில் செம்மையாக பதிவு செய்து வரும் எழுத்தாளர்களில் ஒருவரான ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாசிச மற்றும் ஆரிய ஆதிக்க எண்ணங்களுக்கு எதிராக எழுத்தின் மூலம் குரல் கொடுத்து வரும் எழுத்தாளருக்கு இந்த விருது வழங்கப்படுவது மிகவும் பொருத்தமானதாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தாமதமாக இருந்தாலும் தற்போது இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய அவர், தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் எழுத்துப் பயணம் தொடர்ந்து சிறப்புடன் நீடிக்க வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் வகுப்பறைகளில் முன்னிலை – தமிழ்நாடு கல்வியில் புதிய சாதனை: முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதிவு
19, மார்ச் 2026 : தமிழ்நாட்டில் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் மூலம் மாணவர்களுக்கு எதிர்காலத்திற்கான கல்வியை வழங்கும் முயற்சியில் அரசு முன்னிலை வகித்து வருவதாக முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், தமிழ்நாட்டில் தற்போது 82.5% வகுப்பறைகள் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) வசதிகளுடன் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இந்தியாவில் இதுவே சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2021-22ஆம் ஆண்டில் 43.5% ஆக இருந்த ICT வசதியுள்ள வகுப்பறைகள், 2024-25ஆம் ஆண்டில் 82.5% ஆக உயர்த்தப்பட்டிருப்பது திராவிட மாடல் அரசின் மிகப்பெரிய சாதனையாகும் என்றும் அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்த முன்னேற்றம், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதோடு, அவர்களை எதிர்கால தொழில்நுட்ப உலகிற்குத் தயார்படுத்தும் முக்கியமான படியாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தித் திணிப்பு எதிர்ப்பில் உயிரிழப்பு: “இனி ஒரு உயிரும் போகக்கூடாது” – முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உருக்கமான பதிவு
19, மார்ச் 2026 : இந்தித் திணிப்பு எதிர்ப்பில் மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளமை பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மொழித் திணிப்புக்கு எதிராக போராடிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள், இரயில் முன் பாய்ந்து கடுமையாக காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து, அவரை இழந்த துயரத்தில் வாடும் மே 17 இயக்கத் தோழர்கள், குடும்பத்தினர் மற்றும் மொழி உணர்வாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், “இனி ஒரு உயிரும் போக வேண்டாம்” எனக் கழகத் தலைவர் வலியுறுத்தியதை குறிப்பிட்டு, உயிரிழப்புகள் இல்லாமல் உழைப்பின் மூலம் மொழியை காப்போம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மொழி உரிமைக்கான போராட்டம் தொடர வேண்டியது அவசியமெனினும், அது உயிரிழப்புகளுக்கு வழிவகுக்காமல் இருக்க வேண்டும் என்பதே அவரது பதிவின் மையக் கருத்தாகும்.
ரம்ஜான் வாழ்த்துகள்: சமத்துவமும் ஒற்றுமையும் பேணுவோம் – முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிஅ அவர்கள் வாழ்த்து
21, மார்ச் 2026 : அன்பு, சகோதரத்துவம் மற்றும் ஈகையை வாழ்வியலாக கற்பிக்கும் நபிகளாரின் வழியில் நடக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் தின வாழ்த்துகளை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், நாட்டில் பாசிச எண்ணங்களுக்கு எப்போதும் இடமளிக்காமல், சமத்துவத்தையும் ஒற்றுமையையும் பேணி காக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் அனைவரும் குடும்ப உறவுகளாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே சமூக முன்னேற்றத்திற்கான அடிப்படை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ரம்ஜான் திருநாளில் சமாதானமும் சகோதரத்துவமும் நிலவட்டும் என்ற நம்பிக்கையுடன் அவரது வாழ்த்து பதிவு இடம்பெற்றுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல்: திருச்சியில் தி.மு.க பாக முகவர்கள் கூட்டம் – பெருவெற்றிக்கு உறுதியேற்றார் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி 21, மார்ச் 2026 : “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற முழக்கம் மாநிலம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, திருச்சி (தெற்கு) மாவட்ட தி.மு.க சார்பில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் பாக முகவர்கள் கூட்டம் மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதிருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என உறுதியேற்றார்.
மேலும், தேர்தலை முன்னிட்டு பாக முகவர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து அயராது உழைக்க வேண்டும் என்றும், மக்கள் நலப் பணிகளை முன்வைத்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
