2026-ல் திராவிட மாடல் 2.0 ஆட்சியுடன் தமிழ்நாட்டின் மண்–மொழி–மானம் காக்க உறுதி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
01, ஜனவரி 2026 : 2025ஆம் ஆண்டில் பெற்ற அனுபவங்களை மனதில் நிறுத்தி, 2026ஆம் ஆண்டில் புதிய உற்சாகத்துடன் அடியெடுத்து வைக்கிறோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் உருவாகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி மூலம் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் ஆகியவை தொடர்ந்து காக்கப்படும் வகையில் தீரத்தோடு உழைக்க உறுதியேற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனுடன், அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது இந்த கருத்துகளை சமூக வலைதளமான எக்ஸ் (X) பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
சென்னை 01, ஜனவரி 2026 : தன்னுடைய அரசியல் ஆசான், கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை நேரில் பகிர்ந்து கொண்டார்.

இந்த சந்திப்பின்போது, திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கவுள்ள 2026ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வரவேற்போம் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூக நீதி மற்றும் கல்வி முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு புதிய ஆண்டிலும் உறுதியுடன் பயணிப்போம் என்ற நம்பிக்கையும் அளிப்பதாக இந்த வாழ்த்துச் சந்திப்பு நிகழ்ந்தது.
2026 முதல் நாளில் துறைசார் பணிகள் தொடக்கம் – CIBF2026 அழைப்பிதழ்களைப் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
சென்னை 01, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துகளோடு, 2026ஆம் ஆண்டின் முதல் நாளில் தலைமைச் செயலகத்தில் துறைசார் பணிகளைத் தொடங்கும் விதமாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்களுக்கு வழங்கப்படவுள்ள CIBF2026 அழைப்பிதழ்களை அமைச்சர் பார்வையிட்டு, அதன் உள்ளடக்கம், வடிவமைப்பு மற்றும் நிகழ்ச்சி சார்ந்த அம்சங்கள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கல்வித் துறையில் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் அறிவுப் பரிமாற்றத்தையும் வலுப்படுத்தும் வகையில் இந்த மாநாடு அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை கன்னிமாரா நூலகத்தில் புதிய கட்டமைப்புகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்க்கொண்டார்
சென்னை 01, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை கன்னிமாரா நூலகத்தில் புதிதாக குழந்தைகள் பிரிவு, அறிவியல் பூங்கா மற்றும் மாநாட்டுக் கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய கட்டமைப்புகளை மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விரைவில் திறந்து வைக்க உள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதைக் குறித்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
புத்தாண்டை முன்னிட்டு அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி 01, ஜனவரி 2026 : புத்தாண்டை முன்னிட்டு, கழக முதன்மைச் செயலாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அவர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சியில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த சந்திப்பின்போது, புதிய ஆண்டில் கழகத்தின் செயல்பாடுகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழகத்தின் தலைமையில் தமிழ்நாட்டின் முன்னேற்றப் பயணம் மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கையையும் இந்த புத்தாண்டு வாழ்த்துச் சந்திப்பு வெளிப்படுத்தியது.
‘நான் முதல்வன்’ திட்டம் இளைஞர்களின் கனவுக்கு சிறகுகள் – பிரேமாவின் வாழ்க்கை மாற்றம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதிவு
01, ஜனவரி 2026 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படுத்தி வரும் ‘நான் முதல்வன்’ திட்டம், இளைஞர்களுக்கு ஏற்றமிகு எதிர்காலத்தை உருவாக்கி, உலகத் தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கி வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மற்றும் அரசுக் கல்லூரியில் பயின்ற பிரேமா, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பெற்ற திறன் பயிற்சியால், ஐடி நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்து, தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வாழ்ந்து வருகிறார். ஒழுகும் வீட்டில் குடியிருக்கும் தன் பெற்றோருக்கு ஒரு நல்ல வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற அவரது பெரும் கனவை, தந்தை ஸ்தானத்தில் இருந்து நம் முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
படிப்புக்கு ஊக்கமும், வாழ்விற்கு நம்பிக்கையும் தந்து எளிய மக்களின் மகிழ்ச்சியில் தழைத்தோங்குகிறது நம் திராவிட மாடல் அரசு என தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இது தொடர்பான ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக் காணொலியை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
‘புதுமைப்பெண்’ திட்டம் பெண் கல்வியில் மாபெரும் புரட்சி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிவு
02, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்த ‘புதுமைப்பெண்’ திட்டம், பெண் கல்வியை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், கல்வி இடைநிற்றலைத் தகர்த்து, பெண்களின் சுயமரியாதையைக் காக்கும் இரும்புக் கேடயமாகத் திகழ்கிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் பயனாக, உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை விகிதம் 29 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்ந்து, தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சியை திராவிட மாடல் அரசு நிகழ்த்திக் காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பொருளாதாரச் சூழலால் என் படிப்பு பாதியிலேயே நின்றுவிடுமோ என்று அஞ்சிய நேரத்தில், திராவிட மாடல் அரசு வழங்கிய ரூ.1000 ஊக்கத்தொகையே என் கல்விப் பயணத்தைத் தொடரத் துணையாக நிற்கிறது” என தங்கை சந்தியா பகிர்ந்துகொண்ட வார்த்தைகள் நெஞ்சை நெகிழச் செய்வதாக அமைச்சர் தெரிவித்தார். அவரது கல்விப் பயணம் தொடர்ந்து வெற்றிகள் குவிய வேண்டும் என்ற வாழ்த்துகளுடன், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக் காணொலியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திருச்சியில் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ அவர்களின் சமத்துவப்பயணத்தை தொடங்கி வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள்
திருச்சி 02, ஜனவரி 2026 : போதையின் தீமைகளுக்கும், மனிதர்களைப் பிரிக்கும் சாதி–மத வெறிக்கும் எதிராக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ அவர்கள் தொடங்கிய சமத்துவப்பயணத்தை திருச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் அவர்களுக்கு விமர்சையாகவும் உற்சாகமாகவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சமத்துவப்பயணம் மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி, தீர்வுகளை நோக்கி நம் சமூகம் முன்னோக்கி நகர அடித்தளமாக அமைய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த வைகோ அவர்களின் சமத்துவப்பயணம் வெற்றிபெற துணை நிற்போம் என்றும், பிரிவினைவாத எண்ணங்களுக்கு தமிழ்நாட்டில் எந்நாளும் இடமில்லை என்பதை இந்தப் பயணம் உறுதியாகப் பறைசாற்றும் என தெரிவித்தார்.
Champion’s Development திட்டம் இளம் விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்கு வலுச்சேர்க்கும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதிவு
03, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பிலும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் திட்டமிடுதல்களுடனும் செயல்படுத்தப்பட்டு வரும் Champion’s Development திட்டம், இளம் விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்கு வலுச்சேர்க்கும் முக்கிய வாய்ப்பாக திகழ்கிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் தன்னம்பிக்கையுடன் நீச்சல் போட்டிகளில் களமிறங்கிய தங்கை தீக்ஷா போல பல இளம் விளையாட்டு வீரர்கள், இன்று தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, திராவிட மாடல் அரசின் நிதி உதவியுடன் பதக்கங்களை வென்று குவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“முதன்முறையாக அரசு உதவியால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் என்பதை உணர்ந்த நிமிடம், என் கனவுகளுக்குப் புத்துயிர் கிடைத்தது” என மாணவி தீக்ஷா பகிர்ந்த வார்த்தைகள், விளையாட்டுத் தலைநகரமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்பதற்கான சாட்சியாக விளங்குகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார். வெற்றிப் பயணங்கள் தொடர்ந்து, விதைக்கப்படும் கனவுகள் எல்லாம் மலர வேண்டும் என்ற வாழ்த்துகளுடன், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக் காணொலியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சாவித்திரிபாய் புலே அவர்களின் 195-வது பிறந்தநாளில் அவரது கனவை தொடர்ந்து முன்னெடுப்போம் – அமைச்சர் அன்பில் மகேஸ்
03, ஜனவரி 2026 : “போ, கல்வி பெறு, புத்தகத்தைக் கையில் எடு, அறிவும் சிந்தனையும் வளரும்போது அனைத்தும் மாறிவிடும், வாசிப்பே விடுதலை!” என தனது கவிதையின் மூலம் கல்வியின் அவசியத்தை உலகிற்கு உணர்த்திய இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும், புரட்சியாளருமான சாவித்திரிபாய் புலே அவர்களின் 195-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், கைம்பெண்களுக்கும் கல்வி கற்பித்ததற்காக ஆரியவாதிகளின் வெறுப்புக்கும் தாக்குதலுக்கும் உள்ளான சாவித்திரிபாய் புலே மீது அன்றாடம் அவமதிப்புகள் நிகழ்ந்த போதிலும், சமூக மாற்றத்திற்காக அவர் தன் வாழ்வை அர்ப்பணித்தார். “அவர் மீது மலம் வீசப்பட்ட காலத்தில், இன்று நாம் மலர் தூவி போற்றுவோம்” என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், கவிஞராகவும் விளங்கிய சாவித்திரிபாய் புலே அவர்களின் கனவுகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும், கல்வியே சமத்துவத்திற்கும் விடுதலைக்கும் அடிப்படை என்ற அவரது தத்துவம் இன்றும் வழிகாட்டியாக உள்ளது என்றும் அமைச்சர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வேலுநாச்சியார்–கட்டபொம்மன் தியாகம் என்றும் நிலைத்திருக்கும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதிவு
03, ஜனவரி 2026 : ஆதிக்கத்திற்கு எதிராக “தமிழ்நாடு போராடும்” என வரலாற்றில் உணர்த்திய இராணி வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாளில், அவர்களின் தியாகங்களை நினைவுகூர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நாட்டின் விடுதலைக்காக அயராது போராடிய இவ்விரு வீரர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்றும், அவர்கள் தந்த வீரத்தின் வழி தலைமுறைகள் தொடர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நமது தமிழ் மண்ணின் பேராளுமைகளைப் போற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழியில், “தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்ற உறுதியை மீண்டும் வலியுறுத்தி, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) பக்கத்தில் இந்த கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் இருபதாண்டுக் கோரிக்கைக்கு திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்
சென்னை 03, ஜனவரி 2026 : தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுக் காலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, திராவிட மாடல் அரசின் சமூக நீதி நோக்கை வெளிப்படுத்துகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஆசிரியப் பெருமக்களின் சார்பில், கல்வியைக் காக்கும் கேடயங்களான ஆசிரியர்களின் நலனை உறுதி செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என அமைச்சர் தெரிவித்தார். மேலும், ஆசிரியப் பெருமக்களை போற்றுவோம்; அவர்களின் சேவையை மதிப்போம் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAPS அமலுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சரை சந்தித்த அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
சென்னை 03, ஜனவரி 2026 : தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” அமல்படுத்த ஆணையிட்டதற்காக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ஜாக்டோ–ஜியோ, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள், முதலமைச்சருக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
இந்த மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் காரணம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும்தான் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். அமைச்சர் பெருமக்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
ஒவ்வொரு நாள் பேச்சுவார்த்தை முடிவிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனைகளை வழங்கியதாகவும், அந்த வழிகாட்டுதல்களை ஏற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளே இன்று வெற்றியை கண்டதாகவும் அமைச்சர் விளக்கினார்.
“இது தோல்வியில் முடியும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தையும், நமக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
முதல் பெண் ஆசிரியரும் சமூக சீர்திருத்தவாதியுமான சாவித்திரிபாய் புலே அவர்கள் பெயரில் பெண் ஆசிரியர்களுக்கு விருது வழங்க நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உறுதி
சென்னை/திருச்சி 03, ஜனவரி 2026 : இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் சமூக சீர்திருத்தவாதியுமான சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்தநாள் விழா, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக உரையாற்றிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “பெண் ஆசிரியர்களுக்கு சாவித்திரிபாய் புலே அவர்களின் பெயரில் விருது வழங்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என உறுதியளித்தார்.
தொடர்ந்து திருச்சிக்கு சென்ற அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து, சாவித்திரிபாய் புலே அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பெண் கல்வி, சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சாவித்திரிபாய் புலே அவர்களின் கனவுகளை முன்னெடுக்கும் வகையில் இந்த விழா அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம் குழந்தைகளின் கல்வி உயர்வுக்கான உரம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதிவு
04, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளின் வயிற்றுப் பசியைப் போக்கி, அவர்களின் வாழ்வில் கல்வி ஒளியை ஏற்றிக் கொண்டிருக்கிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
“அரசு வழங்கும் காலை உணவால் என் மகன் ஊட்டச்சத்தைப் பெறுவதோடு, பள்ளியிலேயே முதல் மாணவனாகவும் சாதனை படைக்கிறான். கணவனை இழந்த நான் தனியொரு பெண்ணாக போராடும் நிலையில், என் துயரத்தைத் துடைத்து துணை நிற்கிறது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” என சகோதரி ராஜேஸ்வரி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளதை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோரின் உணர்வுகளைப் புரிந்து, மாணவர்களின் தேவைகளை அறிந்து தொடங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், உணவு வழங்கும் திட்டமாக மட்டுமல்லாமல், ஒவ்வொரு குழந்தையின் உயர்வுக்கான உரமாக திகழ்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பான ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக் காணொலியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திருவெறும்பூரில் வாக்காளர் சிறப்பு முகாம் ஆய்வு; புதுப்பிக்கப்பட்ட பயணியர் நிழற்குடைகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்ப்பு
திருவெறும்பூர் 04, ஜனவரி 2026 : திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சி, பூலாங்குடி கிராமம் – பாகம் எண் 250க்கான வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருவதை கவனித்த அமைச்சர், துறை அலுவலர்களிடம் தேவையான அறிவுரைகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி நகராட்சி நிர்வாகம் சார்பில் புதுப்பிக்கப்பட்ட அரசுக் கல்லூரி பயணியர் நிழற்குடை மற்றும் அண்ணா வளைவு பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடை ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார். பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டை மேம்படுத்தும் இவ்வசதிகள், பயணிகளுக்கு பாதுகாப்பும் வசதியும் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழிப்போர் முன்னோடி எல். கணேசன் மறைவுக்கு தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஸ் மரியாதை
தஞ்சாவூர் 04, ஜனவரி 2026 : மொழிப்போர் களத்தில் முன்னணியில் நின்றவரும், அறிவாலயத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான அய்யா எல். கணேசன் அவர்களின் மறைவை அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அய்யா எல். கணேசன் அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் என்றும், அவரது இழப்பு திராவிட இயக்கத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவரது மொழிப்பற்று, சமூக உணர்வு மற்றும் இயக்கப் பங்களிப்புகள் தலைமுறைகள் தாண்டியும் நினைவில் நிலைக்கும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தைப் பொங்கலை முன்னிட்டு 2.22 கோடி குடும்பங்களுக்கு ரூ.3000 – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பொங்கல் வாழ்த்து
04, ஜனவரி 2026 : ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லமெங்கும் கொண்டாட்டமாக நிறைய, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 வழங்கப்படுகிறது.

திராவிட மாடல் அரசின் இந்த மக்கள் நல நடவடிக்கை, அனைத்து குடும்பங்களும் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட உறுதுணையாக இருக்கும் என்றும், மக்களின் நலனே அரசின் முதன்மை நோக்கம் என்பதை இது வெளிப்படுத்துகிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். தைப் பொங்கல் திருநாளை அனைவரும் மகிழ்ச்சியுடனும், நலனுடனும் கொண்டாட வேண்டும் என தனது பொங்கல் வாழ்த்துகளை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி குண்டூர் 100 அடி சாலையில் முதலாம் ஆண்டு குதிரை பந்தயம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
திருச்சி 04, ஜனவரி 2026 : திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் 100 அடி சாலையில், தமிழ்நாடு மாநில குதிரை உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் நலச்சங்கத்தின் சார்பில் முதலாம் ஆண்டு குதிரை பந்தயம் சிறப்பாக நடைபெற்றது. இந்த குதிரை பந்தயப் போட்டியினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் ஆறு பிரிவுகளாக குதிரை பந்தயங்கள் நடைபெற்றன. போட்டிகளில் சீறிப்பாய்ந்து வெற்றி பெற்ற குதிரைகளுக்கும், அவற்றின் சாரதிகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கோப்பைகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கி வாழ்த்தினார்.இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள், குதிரை உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு போட்டிகளை உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.
‘நான் முதல்வன்’ திட்டம் இளைஞர்களை உலகத் தர தொழில்நுட்ப வல்லுநர்களாக உருவாக்குகிறது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதிவு
05, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’, இன்று தமிழக இளைஞர்களை உலகளாவிய தொழில்நுட்பச் சாதனையாளர்களாக உருமாற்றி, வெற்றியாளர்களாக வளம் வரச் செய்திருக்கிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

டிப்ளமோ இரண்டாம் ஆண்டு பயிலும்போதே, முன்னணி நிறுவனங்களின் பயிற்சிச் சான்றிதழ்களைப் பெற்றுள்ள மாணவி ஹனியா, கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்ற உயரிய இலக்குடன் தனது கல்விப் பயணத்தைத் தொடர்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பல லட்சங்கள் செலவாகும் உயர் தொழில்நுட்பப் பயிற்சிகளை, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமின்றி வழங்கி, அவர்களின் திறனை மெருகேற்றுகிறது நம் திராவிட மாடல் அரசு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவியின் பேச்சில் வெளிப்படும் தன்னம்பிக்கை, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மகத்தான வெற்றிக்குச் சான்றாக விளங்குகிறது. பல லட்சம் இளைஞர்களின் கனவுகளுக்குச் சிறகு கொடுத்து, அவர்கள் இலக்கை அடைய இந்தத் திட்டம் துணை நிற்கும் என குறிப்பிட்ட அமைச்சர், இது தொடர்பான ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக் காணொலியை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
லிட் ஃபார் லைஃப் விழாவில் நடமாடும் நூலகத் திட்டம் தொடக்கம் – அறிவுத் தேடலுக்கு புதிய பாதை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு

சென்னை 05, ஜனவரி 2026 : The Hindu நடத்தும் Lit For Life விழாவின் ஒரு பகுதியாக நடமாடும் நூலகத்தை (Mobile Library) தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில், அரசு நூலகங்கள் அறிவின் உயிரோட்டம் நிறைந்த புனித தளங்களாக தொடர்ந்து திகழ்ந்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடமாடும் நூலகங்கள், வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டி, அறிவை நாடும் எண்ணற்ற “தேடல் பறவைகள்” அண்ணா, கலைஞர், பெரியார், காமராஜர் போன்ற தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அடையாள நூலகங்களில் தங்கள் அறிவு இல்லத்தை அடைய வழிகாட்டட்டும் என குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் அவர்கள்.
TAPS அறிவிப்புக்கு துணை நின்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆசிரியர்கள் சார்பில் நன்றி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
சென்னை 05, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)” மற்றும் ஆசிரியப் பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற உறுதுணையாக விளங்கியதற்காக, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக் குழுவில் பங்கேற்று, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்ட துணை முதலமைச்சர் அவர்களுக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பரிசு வழங்கி நன்றியை வெளிப்படுத்தினார். இந்த சந்திப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் திராவிட மாடல் அரசின் உறுதியையும், சமூக நீதிக்கான அரசின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழகத் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. அவர்கள் பிறந்தநாள் – புத்தகப் பரிசுடன் நேரில் வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

சென்னை 05, ஜனவரி 2026 : கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான திருமிகு கனிமொழி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அவரை நேரில் சந்தித்து, புத்தகப் பரிசுடன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பு, கல்வி, இலக்கியம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றில் கனிமொழி அவர்களின் பங்களிப்பை மதிக்கும் வகையில் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் தொடக்கம்: கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை 05, ஜனவரி 2026 : தமிழக அரசின் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் தொடக்க விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இத்திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், மாணவர்களின் திறன், பகுத்தறிவு மற்றும் அறிவியல் பார்வை ஊக்குவிக்கப்படும்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் என வலியுறுத்தினார். மாணவர்களை வளர்த்தெடுத்தால்தான் மாநிலம் வளரும்; நாடும் வளரும் என்றும், அதற்காகவே ‘நான் முதல்வன்’, மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற கல்வி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள், “பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றில் எவரும் சொல்லாததை திராவிட இயக்கம்தான் சொன்னது. ‘எல்லாரும் படிங்க’ என்று சொன்னதும் திராவிட இயக்கம்தான்” என்ற எழுத்தாளர் இமையம் அவர்களின் வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது எனக் குறிப்பிட்டார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடுத்த தேர்தலை நினைத்து கனவு காண்பவர் அல்ல; அடுத்த தலைமுறையை நினைத்து கனவு காண்பவர் என்றும், ‘படிங்க, படிங்க, படிங்க’ என்பதே அவரது தொடர்ச்சியான செய்தி என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, மா.சுப்ரமணியன் ஆகியோர், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தலைமைச் செயலர் முருகானந்தம், நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், தமிழக அரசின் நலத்திட்டங்களின் பயனாளிகளாக இருந்து, தற்போது உயர்ந்த நிலைகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டு, இத்திட்டங்கள் இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களை எடுத்துரைத்தனர்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: பெரம்பூரில் சிலம்பம் போட்டி பரிசளிப்பு விழா – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்
பெரம்பூர் 05, ஜனவரி 2026 : மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி அவர்களின் ஏற்பாட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட சிலம்பம் விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு விழா, பெரம்பூர் எவர்வின் பள்ளி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில், மாண்புமிகு அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்களுடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் திரு. கலாநிதி அவர்களும், சென்னை மாநகர மேயர் திரு. பிரியாராஜன் அவர்களும் கலந்து கொண்டு, மாணவர்களின் விளையாட்டு திறமைகளையும் பாரம்பரியக் கலைவடிவமான சிலம்பத்தின் முக்கியத்துவத்தையும் பாராட்டினர். நிகழ்வில் உள்ளூர் பிரதிநிதிகள், பயிற்றுநர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
திராவிட மாடல் அரசின் அரவணைப்பு: மாற்றுத் திறன் வீரர்களின் கனவுகளை நனவாக்கும் விளையாட்டு வளர்ச்சி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதிவு
06, ஜனவரி 2026 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, விளையாட்டுக் களத்தில் வியர்வை சிந்தி போராடும் வீரர், வீராங்கனைகளின் கனவுகளை நனவாக்கும் நோக்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) வாயிலாக உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகளையும், தாராளமான ஊக்கத்தொகைகளையும் வழங்கி, சர்வதேச அளவிலான சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது.

விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் மாற்றுத் திறன் இளைஞர்களுக்குப் பொருளாதாரத் தடைகள் ஒருபோதும் இடையூறாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், “உங்களுக்குத் துணையாக நான் இருக்கிறேன்” என்ற சகோதர உணர்வுடன் ஒவ்வொரு வீரரையும் அன்போடு அரவணைத்து வழிநடத்தி வருகிறார்.
சகோதரர் மனோஜ் அவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும் ‘உதய் அண்ணா’ என்ற ஒற்றைச் சொல், வெறும் வார்த்தையல்ல; அது உண்மையான பாசத்தின் வெளிப்பாடாகும். இத்தகைய சகோதரத்துவப் பிணைப்பும், மனிதநேய அரவணைப்புமே திராவிட மாடல் அரசின் மாபெரும் பலம் என, “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சிக் காணொலியை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு குழந்தைகளுக்குச் சிறப்பான கல்வி: புழல் பொப்பிலிராஜா பள்ளியில் பல்வகை திறன் பூங்கா திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
சென்னை 06, ஜனவரி 2026 : நமது சிறப்பு குழந்தைகளுக்கும் சிறப்பான கல்வியே இலக்கு என்ற உறுதியுடன், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2024–25 மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்தும் வகையில், “பல்வகை திறன் பூங்கா” (Multi-Sensory Park) ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்து, மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.

புழல் பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பல்வகை திறன் பூங்கா, 410 சிறப்பு குழந்தைகள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உணர்வுத் திறன், கவனம், ஒருங்கிணைப்பு மற்றும் கற்றல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இப்பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரூ.2.6 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 20 பல்வகை திறன் பூங்காக்கள் அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார். “எல்லாப் பூக்களும் ஒரே நேரத்தில் மலர்ந்து விடாது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரை நம்பிக்கையுடன் காத்திருப்பதைப் போல, நமது சிறப்பு குழந்தைகளையும் அன்பும் நம்பிக்கையும் கொண்டு வழிநடத்த இந்தப் பூங்காக்களை முழுமையாகப் பயன்படுத்துவோம்” என அமைச்சர் அவர்கள் கூறினார். உடன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, கூடுதல் இயக்குநர் உமா, இணை இயக்குநர் குமார், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம், பள்ளிக் கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன்,சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
“உங்க கனவ சொல்லுங்க” UKS திட்டம் அறிமுகம்: ஜனவரி 9ல் பொன்னேரியில் முதல்லமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்படவுள்ளது
சென்னை 06, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, “உங்க கனவ சொல்லுங்க” (UKS) என்ற புதிய திட்டத்தின் அறிமுகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார். இத்திட்டத்தை வரும் ஜனவரி 9ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், நீங்கள் வசிக்கும் தெரு, உங்கள் ஊர் எப்படிப் படி வளர வேண்டும், எந்த வகையான புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும், தற்போதுள்ள திட்டங்களை மேலும் செழுமையாக்க வேண்டிய உங்கள் ஆலோசனைகள் என்ன, மாவட்ட வளர்ச்சி குறித்த கனவுகள், அயலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட அனைத்து கனவுகளையும் பொதுமக்கள் நேரடியாக பகிர்ந்து கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
“மக்களின் கனவுகளே ஆட்சியின் திசைகாட்டி” என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த UKS திட்டத்தின் வாயிலாக, மக்களின் எண்ணங்களை கேட்டு அவற்றை நடைமுறைப்படுத்த திராவிட மாடல் அரசு முழுமையாகத் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி
சென்னை 06, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் பெருமிதத்துடன் வழங்கிய “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு” தமிழ்நாடு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டது.

இந்த முக்கியமான முடிவை எடுக்க உறுதுணையாக திகழ்ந்த மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. எ.வ. வேலு அவர்கள், திரு. தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த முடிவு, திராவிட மாடல் அரசின் சமூக நீதியும் மனிதநேய அரசியலின் இன்னொரு முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.
ஆவடியில் ‘MAHA EXPO–2026’ அறிவியல் கண்காட்சி – மாணவச் செல்வங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பாராட்டு
சென்னை 06, ஜனவரி 2026 : ஆவடியில் செயல்பட்டுவரும் மகாலட்சுமி மகளிர் கல்லூரி மற்றும் மகாலட்சுமி வித்யா மந்திர் பள்ளி இணைந்து ‘MAHA EXPO–2026’ எனும் அறிவியல் கண்காட்சியை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தன.

இக்கண்காட்சியில் மாண்புமிகு அமைச்சர் ஆவடி நாசர் அவர்களுடன் இணைந்து கலந்துகொண்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாணவர்களின் அறிவியல் சிந்தனை, புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை நேரில் பார்வையிட்டார்.
அறிவியல் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய மாணவச் செல்வங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இத்தகைய அறிவியல் கண்காட்சிகள் மாணவர்களின் படைப்பாற்றலையும் எதிர்கால வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் என பாராட்டினார்.
பூந்தமல்லி அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா – மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து
சென்னை 06, ஜனவரி 2026 : பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெருந்தலைவர்களின் வருகையால் பெருமை பெற்ற பூந்தமல்லி அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி, நூற்றாண்டு சாதனையை எட்டியுள்ளது.

தங்கள் வீட்டு விழாவைப் போலவே உற்சாகமும் மகிழ்ச்சியும் குறையாமல், நூற்றாண்டு விழாவை மாணவர்களும் ஆசிரியப் பெருமக்களும் சிறப்பாகக் கொண்டாடினர். அப்பகுதியின் அடையாளமாகத் திகழும் இப்பள்ளி, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றி வருவதாக விழாவில் பேசப்பட்டது.
நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், இப்பள்ளியின் மாணவர்கள் பல்துறை அறிஞர்களாக உருவாகி சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் – இளம் தலைமுறையின் கல்விக் கனவுக்கு ஒளியேற்றும் திராவிட மாடல் அரசு
07, ஜனவரி 2026 : “எனக்குக் கிடைக்கும் இந்த ரூ.1,000 உதவித்தொகை, என்னுடைய படிப்புக்கும் எனது தம்பியின் கல்விக்கும் பேருதவியாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, என் தாயின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கிறது” என மாணவர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த உணர்வுகள், இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட உயரிய நோக்கம் முழுமையாக நிறைவேறியதை உணர்த்துகிறது.

லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் கல்வியின் ஒளியை ஏற்றி, அவர்களின் உயர் கல்விக் கனவை நனவாக்கும் வகையில் திராவிட மாடல் அரசின் இத்தகைய முன்னோடி திட்டங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இளம் தலைமுறைக்கு உறுதியான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில், “எந்தத் தடை வந்தாலும் உங்கள் முன்னேற்றத்திற்குத் துணையாக நான் நிற்கிறேன்; நீங்கள் படித்தால் மட்டும் போதும்” என்ற ஒரு தந்தையின் அக்கறையோடு ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை வழங்கியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் பயன்களையும் மாணவர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக் காணொலியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை எழும்பூரில் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திடீர் ஆய்வு
சென்னை 07, ஜனவரி 2026 : சென்னை எழும்பூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னறிவிப்பில்லா ஆய்வை மேற்கொண்டார்.

ஆய்வின் போது மாணவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுடன் நேரடியாக கலந்துரையாடிய அமைச்சர், அரசின் கல்வித் திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்குச் சரியாக வந்தடைகிறதா என்பதையும் கேட்டறிந்தார். பள்ளியின் கல்வித் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் கவனம் செலுத்தினார்.
மேலும், பள்ளியின் வளர்ச்சிக்காக ஆசிரியப் பெருமக்கள் முன்வைத்த கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர், அவற்றை பரிசீலித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
எழும்பூர் கன்னிமாரா நூலகம் ரூ.4.58 கோடி மதிப்பீட்டில் புதுப்பிப்பு – மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்
சென்னை 07, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்ததை செயல்படுத்தும் வகையில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள கன்னிமாரா நூலகம் ரூ.4.58 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இந்நூலகத்தில் அறிவியல் மையம், மின்தூக்கி வசதி, சொந்த நூல் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டு கூடம், நவீன சிறுவர் நூலகம், குடிமையியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தினை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதன் தொடர்ச்சியாக சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு நிதியில் இருந்து ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் சிந்தாதிரிபேட்டையில் புதுப்பிக்கப்பட்ட கோஷன் நூலகத்தைத் திறந்துவைத்து சிறப்பித்தார் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். நூற்றாண்டு கண்ட இந்நூலகம் பழமை மாறாமல் புதிய பொலிவுடன் வாசகர்களுக்கு சேவையாற்ற உள்ளது.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் aன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன், பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், பொது நூலகத்துறை இயக்குநர் திருமதி ச. ஜெயந்தி, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர் கவிஞர் மனுஷ்ய புத்திரன், பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ. நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருக்குறள் முற்றோதல் தேர்வில் வெற்றி – அரும்பாக்கம் அரசு மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து
சென்னை 07, ஜனவரி 2026 : தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பட்ட திருக்குறள் முற்றோதல் தேர்வில் வெற்றி பெற்று, தலா ரூ.15,000 ரொக்கப் பரிசு பெற்ற அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவச் செல்வங்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் சந்தித்து மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து, திருக்குறள் போன்ற உலகப் பொதுமறையை முழுமையாகக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் உழைப்பையும் அறிவுத் திறனையும் அமைச்சர் பாராட்டியதுடன், தமிழ்ச் சிந்தனையும் அறநெறியும் இளம் தலைமுறையிடம் வலுப்பெற இத்தகைய முயற்சிகள் முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
“எங்கள் மயிலாப்பூர்” அறிவுசார், கலைத்திறன் போட்டிகள் – வெற்றியாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டு
சென்னை 07, ஜனவரி 2026 : சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாணவச் செல்வங்களின் அறிவாற்றல் மற்றும் கலைத்திறனை வளர்க்கும் நோக்கில், 5வது ஆண்டாக அறிவுசார் மற்றும் கலைத்திறன் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. “எங்கள் மயிலாப்பூர்” முன்னெடுப்பின் மூலம் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா, மாவட்டச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசுகளை வழங்கி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் திறன் வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்கும் ஆசிரியப் பெருமக்களை பாராட்டி, அவர்களுக்கு ‘நல்லாசிரியர் விருது’ வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்வு, மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் முயற்சியாகவும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை மதிக்கும் ஒரு சிறப்பான தருணமாகவும் அமைந்தது.
“நான் முதல்வன்” திட்டத்தின் வெற்றிக்குச் சான்றாக மாணவரின் குரல் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதிவு
08, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கல்வியையும் வேலைவாய்ப்பையும் இணைக்கும் உறுதியான பாலமாக “நான் முதல்வன்” திட்டத்தை உருவாக்கினார். இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், தமிழ்நாட்டு இளைஞர்களிடத்தில் “நம்மால் வெல்ல முடியும்” என்ற தன்னம்பிக்கையை விதைத்து, திராவிட மாடல் அரசின் உயரிய நோக்கத்தை நடைமுறையில் நிறைவேற்றியுள்ளன.

பைந்தமிழுடன் தகவல் தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொடுத்து, நவீன உலகிற்கு ஏற்ப இளைஞர்களின் திறன்களை மெருகேற்றும் இத்திட்டம், கல்வியெனும் ஆயுதத்தைப் பட்டைத்தீட்டுவதோடு மட்டுமல்லாமல், ஒழுக்கம், அறம், சமூகப் பொறுப்பு ஆகிய மதிப்புகளையும் வலியுறுத்தி, அந்தக் கல்வியைச் சரியான வழியில் பயன்படுத்துவது எப்படி என்பதையும் கற்றுத்தருகிறது.
“கல்வியுடன் தொழில்நுட்பம் இணைந்தால், வாழ்க்கையே மாறும்” என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில், “நான் முதல்வன்” திட்டம் குறித்த காமேஷின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகளே, இத்திட்டத்தின் மாபெரும் வெற்றிக்குச் சான்றாக விளங்குகின்றன.
இந்த உணர்வுபூர்வமான அனுபவத்தை வெளிப்படுத்தும் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சிக் காணொலியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்து, “நான் முதல்வன்” திட்டத்தின் சமூக மாற்றுத் திறனை மீண்டும் ஒரு முறை எடுத்துக்காட்டியுள்ளார்.
‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் – 1,977 மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருவெறும்பூர் 08, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாணவர்களின் அறிவுத் தேடலையும் கல்வி முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தைத் தொடங்கிவைத்து, இளைஞர்களின் எதிர்காலத்துக்கு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லூரிகளில் நடைபெற்ற விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக, SIT கல்லூரி – 230 மாணவர்கள், உருமு தனலட்சுமி கல்லூரி – 580 மாணவர்கள், துவாக்குடி அரசு கலைக் கல்லூரி – 712 மாணவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி – 455 மாணவர்கள் என மொத்தம் 1,977 மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் மூலம், தொழில்நுட்ப அறிவையும் டிஜிட்டல் திறன்களையும் மாணவர்கள் எளிதில் பெறும் வாய்ப்பு உருவாகி, அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கு பெரும் துணையாக அமைந்துள்ளது.
திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகுப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கல்
திருவெறும்பூர் 08, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கிய ரூ.3,000 கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கி, பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி, திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் வழங்கப்பட்ட இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு, திராவிட மாடல் அரசின் மக்கள் நல அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. இந்நிகழ்வின்போது, பொங்கல் திருநாள் அனைவருக்கும் வளமும் நலனும் நிறைந்ததாக அமைய வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
சென்னை புத்தகக்கண்காட்சி 2026 தொடக்கம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பித்து, கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கினார்
சென்னை 08, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னை புத்தகக்கண்காட்சி 2026-ஐ தொடங்கிவைத்து, விழாவை சிறப்பித்தார். இந்நிகழ்வில் இலக்கிய உலகில் சிறப்பாக பங்களித்த எழுத்தாளர்களுக்கு “கலைஞர் பொற்கிழி விருதுகள்” வழங்கி அவர்களை கௌரவித்தார்.

சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் இச்சிறப்புமிக்க புத்தகக்கண்காட்சியில் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை உருவாக்கி, நூல்களின் உலகத்தை அறிமுகப்படுத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். இவ்விழா தமிழ்நாட்டின் இலக்கிய வளர்ச்சிக்கும், வாசிப்பு பண்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிக்கும் முக்கியமானதாக அமைந்துள்ளது.
“உங்க கனவ சொல்லுங்க” திட்டம் தொடக்கம் – திருச்சியில் தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்புகள் வழங்கல்
திருச்சி 09, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தைத் தொடங்கி வைத்ததை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இணைந்து தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்புகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மக்களின் கனவுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை நேரடியாக அறிந்து, அரசின் திட்டங்கள் மூலம் நிறைவேற்றும் நோக்கில் “உங்க கனவ சொல்லுங்க” திட்டம் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டது. தன்னார்வலர்கள் மூலம் மக்கள் கருத்துகளைச் சேகரித்து, அரசின் சேவைகளை மேலும் பயனுள்ளதாக்கும் முயற்சியாக இத்திட்டம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
திருவெறும்பூரில் புதிய பேருந்து நிலையம் – விழா இடத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு
திருவெறும்பூர் 09, ஜனவரி 2026 : மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அவர்கள் திருவெறும்பூரில் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி சிறப்பிக்கவுள்ளதை முன்னிட்டு, விழா நடைபெறவுள்ள இடத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, விழா ஏற்பாடுகள், பொதுமக்கள் வசதி, போக்குவரத்து ஒழுங்குமுறை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் திருவெறும்பூர் பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
‘நான் முதல்வன்’ – தமிழ்நாட்டு இளைஞர்களை உலகை வெல்லத் தயார்படுத்தும் உன்னதத் திட்டம்
09, ஜனவரி 2026 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில், மாணவர்களின் கல்வி வளர்ச்சியும் இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலமும் அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உன்னதத் திட்டம் தான் ‘நான் முதல்வன்’.
மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் கீழ், இந்தத் திட்டம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் பல லட்சம் மாணவர்களுக்கு உலகத் தரத்திலான உயர்தரத் திறன் பயிற்சிகளை வழங்கி, அவர்களின் கனவுகளை நனவாக்கும் ஒரு பெரும் கல்விப் புரட்சியை திராவிட மாடல் அரசு முன்னெடுத்து வருகிறது.

வெறும் பட்டங்கள் பெறுவது மட்டும் கல்வியல்ல; திறன்களால் உலகை வெல்வதே மாபெரும் சாதனை என்ற தத்துவத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டு இளைஞர்களை சாதனைப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது ‘நான் முதல்வன்’ திட்டம்.
இந்தப் பெருமைமிக்க முயற்சியை வெளிப்படுத்தும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக் காணொலியை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்து, இத்திட்டத்தின் தாக்கத்தையும், கல்வித் துறையில் தமிழ்நாடு எட்டியுள்ள முன்னேற்றத்தையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.
இசைமுரசு நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா கருத்தரங்கம்: அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று புகழாரம்
திருச்சி 09, ஜனவரி 2026 : இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சியில் உள்ள கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் சிறப்பான கருத்தரங்கம் நடைபெற்றது. கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, கலை–இலக்கிய பெருமன்றம் மற்றும் யாவரும் கேளீர் இதழ் ஆகியவை இணைந்து இவ்விழாவை ஒருங்கிணைத்தன.

இக்கருத்தரங்கில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் இசைப் பணிகள், சமூக ஒற்றுமைக்கான அவரது பங்களிப்பு மற்றும் தமிழிசை வளர்ச்சியில் அவர் ஆற்றிய தொண்டுகளை நினைவுகூர்ந்து உரையாற்றினார். இசையும் கருத்தும் இணைந்த அவரது குரல், பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது என அமைச்சர் புகழாரம் சூட்டினார்.
இதனைத் தொடர்ந்து, அங்குசம் இதழின் முதல் பதிப்பாக திரு. பாஸ்டின் ராஜ் அவர்கள் எழுதிய “இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபாவின் இசைப் பணிகள்” என்ற நூலை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டு சிறப்பித்தார். கலை, இலக்கியம் மற்றும் இசை ஆர்வலர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்ட இந்த விழா, இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் நினைவையும் அவரது இசை மரபையும் புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்த்த முக்கிய நிகழ்வாக அமைந்தது.
டெல்டா மண்டல ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு – நடைபெறவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி 09, ஜனவரி 2026 : கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெறவுள்ள டெல்டா மண்டல ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில், மாநாடு நடைபெறவுள்ள இடத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு, தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வுப் பார்வையின் போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் துறை சந்திரசேகர் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்கள் உடனிருந்தனர். மாநாட்டை சிறப்பாகவும், பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கும் வகையிலும் நடத்த தேவையான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஒரத்தநாடு பின்னையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பிலான புதிய வகுப்பறை–ஆய்வகக் கட்டடங்கள் திறப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தஞ்சாவூர் 09, ஜனவரி 2026 : தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பின்னையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் திரு. நவநீதகிருஷ்ணன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆய்வக வசதியுடன் கூடிய 4 புதிய வகுப்பறைக் கட்டடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, பள்ளி மாணவச் செல்வங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி, அவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த திறப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் துறை சந்திரசேகர் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்கள் ஆகியோர் உடன் கலந்து கொண்டு, புதிய கட்டடங்களை பார்வையிட்டனர்.
“வயதும் சூழலும் கல்விக்குத் தடையல்ல” – புதுமைப் பெண் திட்டத்தின் உயிர்ப்பான சாட்சியாக சகோதரி சத்யா
10, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் சமத்துவச் சிந்தனையின் பலனாக, “வயதும் சூழலும் கல்விக்குத் தடையல்ல” என்பதைக் களத்தில் நிரூபிக்கும் இன்னொரு உயிர்ப்பான சாட்சியாக நம் சகோதரி சத்யா அவர்கள் திகழ்கிறார்.
பள்ளிப் படிப்புடன் நிறுத்தப்பட்டிருந்த சகோதரி சத்யாவின் கல்விப் பயணம், தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டத்தின் ஆதரவுடன் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இன்று அவர், தனது மகனுடன் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் கல்வியைத் தொடரும் வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருவது அனைவருக்கும் ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

இளமையில் கல்வி முடிந்துவிட்டது என்ற எண்ணத்தை உடைத்து, எந்த வயதிலும் கல்வியை மீண்டும் தொடர அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பதை திராவிட மாடல் அரசு நிரூபித்து வருகிறது. வயதிற்கு மட்டுமல்ல, சாதனைகளுக்கும் இனி எல்லை இல்லை என்பதை எடுத்துரைக்கும் இந்த நிகழ்வு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த உணர்வுபூர்வமான நிகழ்வை விளக்கும் காணொலியை, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, திராவிட மாடல் அரசின் கல்விச் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்றுள்ளார்.
புதிய அடையாளம் பெறும் திருவெறும்பூர் – ரூ.6.10 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
திருவெறும்பூர் 10, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் கீழ், திருவெறும்பூர் தொகுதி புதிய அடையாளம் பெறும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில், மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அவர்களுடன் இணைந்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருவெறும்பூர் தொகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 6-வது மாநில நிதி ஆணையம் 2025–26 திட்டத்தின் கீழ் ரூ.6.10 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டம் நிறைவேறுவதன் மூலம் பொதுமக்களுக்கு மேம்பட்ட போக்குவரத்து வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், துறைசார் அமைச்சர் அவர்களுக்கும் திருவெறும்பூர் தொகுதி மக்களின் சார்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இவ்விழாவில் இந்திய மக்களவை உறுப்பினர் திரு. துறை வைகோ அவர்கள் உடனிருந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கான புதிய அலுவலகம் திறப்பு- அமைச்சர் கே.என் நேரு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
திருச்சி 10, ஜனவரி 2026 : மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அவர்களுடன் இணைந்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கான புதிய அலுவலகத்தை இன்று திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு. கிருஷ்ணபிரியா அவர்களுக்கும், அவருடன் பணியாற்றும் துணை நிற்கும் கல்வி அலுவலர்களுக்கும் அமைச்சர்கள் இருவரும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர். புதிய அலுவலகம் திறக்கப்பட்டதன் மூலம் கல்வித் துறை நிர்வாகப் பணிகள் மேலும் திறம்பட நடைபெறவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான சேவைகள் விரைவாக வழங்கப்படவும் வழிவகுக்கும் என தெரிவித்தனர்.
டெல்டா மண்டல “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு – மகளிரணி நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை
திருச்சி 10, ஜனவரி 2026 : டெல்டா மண்டல “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாட்டை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகர மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது, மாநாட்டை மாபெரும் வெற்றியாக்குவதற்காக மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், மகளிர் பங்கேற்பை அதிகரிக்கும் வழிமுறைகள், நிர்வாக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரிவாக எடுத்துரைத்தார்.
பெண்களின் முன்னேற்றம், சுயமரியாதை மற்றும் சமத்துவத்தை மையமாகக் கொண்ட இந்த மாநாடு, திராவிட மாடல் அரசின் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றும், ஒவ்வொரு நிர்வாகியும் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
திருவெறும்பூர் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானம் – விழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருவெறும்பூர் 10, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரிய சூரியூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை வரும் ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் திருநாளன்று திறந்து வைக்க உள்ளார்.

இதனை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் ஆய்வு செய்து, நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற தேவையான ஆலோசனைகளை வழங்கினார். விழா ஏற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள், பொதுமக்கள் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விவாதித்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மரபும் பாதுகாப்பும் காக்கும் வகையில் சிறப்பாக நடைபெற வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.
“உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கல் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி 10, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணிகளை வழங்கி, வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, மாணவர்கள் உலகத் தரத்திலான திறன்களைப் பெற்று தொழில்வாய்ப்புகளில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில், திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதை அமைச்சர் குறிப்பிட்டார். கல்வியுடன் தொழில்நுட்ப வசதிகளை இணைக்கும் இந்தத் திட்டம், மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
“வறுமை கல்விக்கு தடையல்ல” — தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் வெற்றியை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சி சம்பவம்
11, ஜனவரி 2026 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் உயர்கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற உன்னத நோக்கில் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
குடும்பச் சூழல் காரணமாக 12-ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்ற மாணவன் தங்க சொக்கலிங்கம், இத்திட்டத்தின் உதவியால் இன்று மீண்டும் கல்லூரிப் படிப்பைத் தொடரும் நிலையை அடைந்துள்ளார்.
“ரூ.1000 ஊக்கத்தொகை மட்டும் இல்லையென்றால் என் படிப்பு பாதியிலேயே நின்றிருக்கும்” என அவர் நெகிழ்ச்சியுடன் கூறுவது, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மகத்தான வெற்றியை வெளிப்படுத்துகிறது.
வறுமை எவரின் கல்விக்கும் தடையாக இருக்கக் கூடாது என்பதே திராவிட மாடல் அரசின் இலக்கு. அந்த இலக்கை நோக்கி தமிழ்ப்புதல்வன் திட்டம் வெற்றிகரமாக நடைபோடுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டாக, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியின் காணொலியை தனது எக்ஸ் (X) தளத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்துள்ளார்.
திருச்சி பெல் வளாகத்தில் அரசியலமைப்பு மகத்துவம் குறித்து கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
திருச்சி 11, ஜனவரி 2026 : அரசியலமைப்பு தினம் 2025 மற்றும் குடியரசு தினம் 2026 ஆகியவற்றை முன்னிட்டு, திருச்சி பெல் வளாகத்தில் NURTURE BHEL, MMT, SCUS, EWC & EDA – BHEL ஆகிய அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை இணைந்து கல்லூரி மாணவர்களுக்காக இந்திய அரசியலமைப்பின் மகத்துவத்தை விளக்கும் கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளன.

இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழாவில் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம், இறையாண்மை ஆகிய ஒவ்வொரு கூறையும் பாதுகாப்பது நம்முடைய கடமை” என வலியுறுத்தினார். இக்கருத்தரங்கு, இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அரசியலமைப்பு விழுமியங்களைப் பரப்பி, ஜனநாயகப் பொறுப்புணர்வை வளர்க்கும் முக்கியமான முயற்சியாக அமைந்துள்ளது.
மாதிரிப் பள்ளி மாணவன் அய்யப்பன் – அரசுப் பள்ளியில் இருந்து தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வரை சாதனைப் பயணம்
12, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறைகளில் சாதனைச் சிகரங்களை எட்ட வேண்டும் என்ற உன்னத நோக்கில், மாவட்டந்தோறும் ‘மாதிரிப் பள்ளிகள்’ திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.

இந்தத் திட்டத்தின் பயனாக, விழுப்புரம் அரசு மாதிரிப் பள்ளியில் கல்வி பயின்ற மாணவன் அய்யப்பன், அங்குள்ள ஆசிரியர்கள் அளித்த உயர்தரப் பயிற்சியின் துணையுடன் CLAT நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வருகிறார்.
“அரசுப் பள்ளி மாணவனாகிய நான், வருங்காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற உயரிய பொறுப்பை அடைந்து, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்” என்ற அய்யப்பனின் லட்சியக் கனவு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்தச் சாதனையைப் பாராட்டியும், அய்யப்பனின் கனவு நனவாக வாழ்த்தியும், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியின் காணொலியை தனது எக்ஸ் (X) பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்துள்ளார்.
மாதிரிப் பள்ளிகள் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்து, உயர்கல்வி மற்றும் உயரிய இலக்குகளை அடைய வழிகாட்டும் முன்னோடி முயற்சியாக திகழ்கிறது.
புதுதில்லி பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு – 12 அரங்குகளுடன் அறிவுப் பரவலுக்கு முன்னெடுப்பு
புதுதில்லி 12, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில், அறிவை விரிவுபடுத்தும் நோக்குடன் புதுதில்லி பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக 12 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டார். அங்கு அவர் உரையாற்றும்போது, இலக்கிய வளர்ச்சிக்கும் வாசிப்பு பண்பாட்டை ஊக்குவிக்கவும் திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், புதுதில்லி பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்றுள்ள 10 பதிப்பாளர்களுக்கும் அமைச்சர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அரசியல் முதல் இலக்கியம் வரை பல்வேறு துறைகளில் மாணவர்கள் பகிர்ந்த கருத்துகள் ஆழ்ந்த சிந்தனையையும் அறிவுத் தெளிவையும் வெளிப்படுத்தின. அவர்களின் கேள்விகளும் பார்வைகளும் அனைவரையும் ஈர்த்தன. இந்த சிந்தனைத் தேடல் என்றென்றும் தொடரட்டும். தேடிக்கொண்டே இருங்கள், வளர்ந்து கொண்டே இருங்கள் என மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த முயற்சி, தமிழ்நாட்டின் கல்வி, இலக்கியம் மற்றும் வாசிப்பு பண்பாட்டை தேசிய, பன்னாட்டு அளவில் முன்னிறுத்தும் முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளது.
‘நான் முதல்வன்’ திட்டம் – 40 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் வாழ்வில் விடியல் – கல்வியில் சிறந்த தமிழ்நாடு
13, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் உருவான ‘நான் முதல்வன்’ திட்டம், இன்று 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்வில் புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளது.

பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதல் ஐடிஐ வரை கல்வியின் அனைத்துத் தளங்களிலும் இத்திட்டம் விரிவடைந்து, ஆண்டுதோறும் 14 லட்சம் மாணவர்களுக்கு உயர்தரத் திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது. எல்லையற்ற கடல்களைக் கடந்து, உலகளாவிய நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்று வருவது, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றிக்கு மாபெரும் மகுடமாக அமைந்துள்ளது.
இந்தச் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியின் காணொலியை தனது எக்ஸ் (X) பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்துள்ளார். ‘நான் முதல்வன்’ திட்டம், இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் முன்னோடி முயற்சியாக தொடர்ந்து பயணித்து வருகிறது.
திருச்சி தெற்கு மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா – கால்பந்து போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன
திருச்சி 13, ஜனவரி 2026 : திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாக்களின் ஒரு பகுதியாக, திருச்சி கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் திரு. மு. மதிவாணன் அவர்களின் முன்னிலையில், மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் திரு. R. மோகன் அவர்களின் தலைமையில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியை பொதுக்குழு உறுப்பினர் திரு. U. ராஜேஸ்வரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

அதேபோல், பொன்மலை பகுதி கழகச் செயலாளர் திரு. இ.எம். தர்மராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கால்பந்து போட்டியை, பொதுக்குழு உறுப்பினர் திரு. KC. பழனிசாமி அவர்களும், திரு. K. முருகானந்தம் (SRMU) அவர்களும், திரு. R. விஜயகுமார் (SRMU) அவர்களும் தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள்.
சமத்துவம், ஒற்றுமை மற்றும் விளையாட்டு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளுக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) பக்கத்தின் மூலம் வாழ்த்துகளை தெரிவித்தார்.
திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் ரூ.21.57 கோடி மதிப்பீட்டில் ஐஸ்கிரீம் – நொதியூட்டப்பட்ட பால் உற்பத்தித் தொழிற்சாலை தொடக்கம்
திருச்சி 13, ஜனவரி 2026 ; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில், திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் ரூ.21.57 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தார். இத்தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீமும், 10 ஆயிரம் லிட்டர் நொதியூட்டப்பட்ட பால் உபபொருட்களும் தயாரிக்கப்பட உள்ளன.

மேலும், தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் புதிய திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த நிகழ்விலும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்றார். தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் விவசாய – பால் உற்பத்தியாளர்களின் நலனை முன்னிறுத்தும் வகையில் இத்திட்டங்கள் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னை அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் பொங்கல் விழா – 915 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
சென்னை 13, ஜனவரி 2026 : சென்னை அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் துணைச் செயலாளர் திரு. கார்த்திக் மோகன் அவர்களின் ஏற்பாட்டில், தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகள் 915 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரையாற்றி, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. நே. சிற்றரசு, திரு. தயாநிதிமாறன் ஆகியோர் உடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சமத்துவ பொங்கல் விழா – 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சென்னை 13, ஜனவரி 2026 : சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா, சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜே. ஜே. எபினேசர் அவர்களின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, 2000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஆர்.டி. சேகர் மற்றும் திரு. ஐட்ரீம் இரா. மூர்த்தி ஆகியோர் உடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
“புதுமைப்பெண்” திட்டம் உருவாக்கும் மாற்றம் – கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் நெகிழ வைத்த ரம்யாவின் அவர்களின் பதில்
14, ஜனவரி 2026 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கான திட்டங்கள், இனி வரும் ஏழு தலைமுறைகளுக்குமான நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன. “புதுமைப்பெண்” திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ரூ.1000 ஊக்கத்தொகை ஒருவரது வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்? என்ற கேள்வி எழுப்பப்பட்ட வேளையில், தங்கை ரம்யா அளித்த நெகிழ்ச்சியான பதில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கையே அதிர வைத்தது.

இத்திட்டத்தின் கீழ் கிடைத்த உதவித்தொகையைப் பயன்படுத்தி, கூலித் தொழிலாளியான தனது தந்தையின் பொருளாதாரச் சுமையைக் குறைத்ததுடன், காது கேளாத தனது தாய்க்கு காது கேட்கும் கருவியை வாங்கித் தந்து அவரது குறையைப் போக்கியுள்ளார் ரம்யா. கல்வியால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை மாணவர்களிடையே ஆழமாக விதைக்கும் வகையில், திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதை இந்த நிகழ்வு வெளிப்படுத்துகிறது.
“இனி எல்லாம் மாறும்; நல்லா மாறும்” என்ற நம்பிக்கையூட்டும் செய்தியுடன், கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியின் காணொலியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தலைமைச் செயலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

சென்னை 14, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தலைமைச் செயலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் அமைச்சர்கள் பெருமக்களோடு இணைந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். சமத்துவம், ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இவ்விழா, திராவிட மாடல் அரசின் சமூகநலக் கோட்பாடுகளை பிரதிபலிப்பதாக அமைந்தது.
திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க சார்பில் களைகட்டிய சமத்துவப் பொங்கல் விழா
திருச்சி 15, ஜனவரி 2026 : தமிழினத்தின் முதன்மைத் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உடன்பிறப்புகளுடன் இணைந்து நேர்த்தியான உறியடி, வலுக்காட்டிய கயிறு இழுத்தல், வண்ணமயமான கோலப்போட்டி, கலகலப்பான மியூசிக்கல் சேர், விறுவிறுப்பான ஓட்டப்போட்டி உள்ளிட்ட பல்வேறு உற்சாகமிகு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மணைவி ஜனனி அவர்களுடன் இணைந்து கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி மகிழ்ந்தார். மேலும், மாவட்டக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட வாலிபால், கோ-கோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
நாட்டுப்புறக் கலைகளோடு கூடிய பாரம்பரிய இசை நிகழ்ச்சி விழாவிற்கு தனிச்சிறப்பு சேர்த்தது. துள்ளலும் மகிழ்ச்சியும் பொங்க, மனதிற்கு இனிய நிகழ்வாக விழா அமைந்தது. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, புத்தரிசியில் பொங்கலிட்டு, “பொங்கலோ… பொங்கல்” என முழங்கி தைத்திங்களை உற்சாகமாக வரவேற்றனர். விழாவில் உரையாற்றிய அமைச்சர், “தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம். அனைவரும் ஒன்றாக வெல்வோம்”
எனும் நம் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் எண்ணத்தை 2026-லும் ஈடேற்ற உறுதியாக உழைப்போம் என உறுதியெடுத்தார்.
4வது ஆண்டாக சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா (CIBF 2026) – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு
சென்னை 15 , ஜனவரி 2026 : 4வது ஆண்டாக நடைபெறவுள்ள சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா – CIBF 2026, வரும் ஜனவரி 16 அன்று தொடங்கவுள்ளது. இத்திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். விழா சிறப்பாகவும், ஒழுங்குமுறையுடனும் நடைபெற தேவையான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.
தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் அறிவு பரிமாற்றத்தை உலகளவில் எடுத்துச் செல்லும் நோக்குடன் நடைபெறும் இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழா, வாசகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தைப்பொங்கல் திருநாளில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரிடம் வாழ்த்துப் பெற்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
சென்னை 15, ஜனவரி 2026 : பூமிக்கு நம்பிக்கை தரும் உதயசூரியனையும், உயிர்களுக்கு நம்பிக்கை தரும் உழவையும், இரண்டுக்கும் அடிப்படையான இயற்கையையும் போற்றி வணங்கும் தமிழினத்தின் தனிப்பெரும் விழாவான தைப்பொங்கல் திருநாள் முன்னிட்டு, தமிழ்நாட்டின் மண்–மொழி–மானம் காத்து, மகிழ்ச்சி என்றும் தொடர திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

தமிழ் சமூகம் இயற்கையுடன் இணைந்து வாழும் பண்பாட்டை உலகிற்கு எடுத்துரைக்கும் இத்திருநாள், உழைப்பின் மேன்மையையும் மனித நேயத்தையும் நினைவூட்டும் திருநாளாக விளங்குகிறது. இந்த நன்னாளில் முதலமைச்சரிடம் வாழ்த்துகளைப் பெற்றது, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் தொடரும் உறுதியை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது என்றார்.
அதன் தொடர்ச்சியாக திராவிட இயக்கத்தின் புதிய அத்தியாயமாய், தமிழ்நாட்டின் எதிர்கால ஆற்றலுக்கான எழுஞாயிறாய் திகழும் கழக இளைஞரணிச் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடமும் தைப்பொங்கல் – தமிழர் திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி அவ்ர்கள்.
அரசு மாதிரிப் பள்ளிகள் திட்டம் – எளிய குடும்ப மாணவனின் கனவுக்கு சிறகு கல்வியில் சிறந்த தமிழ்நாடு
15, ஜனவரி 2026 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் உருவான அரசு மாதிரிப் பள்ளிகள் திட்டம், இன்று எளிய வீட்டுப் பிள்ளைகளின் கனவுகளுக்கு சிறகு முளைக்கச் செய்து, அவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்து வருகிறது. இதன் சிறந்த எடுத்துக்காட்டாக, திருப்பத்தூர் அரசு மாதிரிப் பள்ளியில் கல்வி கற்ற, கூலித் தொழிலாளியின் மகனான மாணவன் வினோத், Rajiv Gandhi National Aviation University-யில் இடம்பிடித்து தனது கல்விப் பயணத்தில் புதிய தடம் பதித்துள்ளார்.
வியர்வை சிந்தி உழைக்கும் ஒரு தந்தை, தனது மகனின் வெற்றியால் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் மைய நோக்கம் என்பதை இந்த வெற்றி மேலும் உறுதிப்படுத்துகிறது. மாணவன் வினோத் மென்மேலும் உயர்ந்து, தனது கனவுகளை முழுமையாக நனவாக்க வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்து, “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சிக் காணொலியை தனது எக்ஸ் (X) பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்தார்.
சூரியூர் ஜல்லிக்கட்டு இனி நிரந்தர மைதானத்தில் – திருச்சி மாவட்டத்தின் புதிய அடையாளம் மாண்புமிகு துணைமுதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்
திருவெறும்பூர் 15, ஜனவரி 2026 : திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி, திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வாக விளங்கி வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தர மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடமும், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடமும் எடுத்துச் சென்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

இதன் பயனாக, “முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம்” அமைக்கும் திட்டத்தின் கீழ், ரூ.3 கோடி மதிப்பீட்டில் சூரியூரில் ஜல்லிக்கட்டு நிரந்தர மைதானம் அமைக்க கட்டுமானப் பணிகளைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு, தேவையான அனைத்து உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் மைதானம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 2025 பிப்ரவரி 19 அன்று சூரியூருக்கு வருகை தந்த மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மைதானத்திற்கு அடிக்கல் நாட்டியதோடு, பாரம்பரிய முறைப்படி தை இரண்டாம் நாள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு ஏதுவாக நிரந்தர மைதானத்தைத் திறந்து வைத்து சிறப்பித்தார். மேலும், மைதானத்தைத் திறந்து வைத்தமைக்கு நன்றியினை வெளிப்படுத்தும் வகையில், ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துணை முதலமைச்சருக்கு வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தின் புதிய அடையாளமாக சூரியூர் ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர மைதானம் உருவெடுத்துள்ள நிலையில், இதனைச் சாத்தியப்படுத்திய திராவிட மாடல் அரசின் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும், தமது தொகுதி மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் உலகளாவிய வெற்றி – ஜப்பான் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் ஊதியத்தில் பணிநியமனம் பெற்ற மாணவி ஜாலேஷா ஜோன்ஸ்
16, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’, மாணவர்களின் திறன்களை உலகத் தரத்திற்கு உயர்த்தி, சர்வதேச வேலைவாய்ப்புகளைச் சாத்தியமாக்கி வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ‘Next Gen’-இல் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்ற மாணவி ஜாலேஷா ஜோன்ஸ், அதே நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் ஊதியத்தில் பணிநியமனம் பெற்று சாதனை படைத்துள்ளார். தனது அசாத்திய திறமையால் ஜப்பானிய மொழியைச் சரளமாகப் பேசிக் காட்டி, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி அரங்கையே அவர் அசரவைத்தார்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் நினைத்தால் உலகத்தரம் வாய்ந்த எந்தவொரு தொழில்நுட்பத்தையும், மொழியையும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு ஜாலேஷா ஜோன்ஸ் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். அவரது வாழ்வின் அடுத்தகட்டப் பயணம் சிறக்கட்டும், உலகை வெல்லட்டும் என்ற வாழ்த்துகளுடன், இந்தச் சாதனையை கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக் காணொலியாக தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.
திருவள்ளுவர் நாளில் தொடங்கிய 4வது சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா – CIBF 2026
சென்னை 16, ஜனவரி 2026 : உலகப்பொதுமறை தந்த அய்யனைப் போற்றும் திருவள்ளுவர் நாளை முன்னிட்டு, 4வது சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா – CIBF 2026 சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கர்நாடக மாநில தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் திரு. மது பங்காரப்பா அவர்களுடன் இணைந்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்களும் விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளை விட இவ்வாண்டு கூடுதல் சிறப்புடன், 102 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘Frankfurt Book Fair’ ஒருங்கிணைப்புக் குழுவினர் மதிப்புறு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர். அறிவுப் பரவலாக்கத்தில் “உலகை தமிழுக்கும், தமிழை உலகுக்கும்” என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசின் CIBF எனும் தொடர் முயற்சி, இந்த ஆண்டும் புதிய தடங்களைப் பதிக்கும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.
CIBF_2026 தொடக்க விழாவிற்கு வருகை தந்திருந்த கர்நாடகா மாநில அமைச்சர் அண்ணன் மது பங்காரப்பா அவர்கள், தங்களுடைய மாநிலத்தில் புதிய நூலகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட விரும்புவதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து அவரையும், உடன் வந்திருந்த அவர்களது மாநில பொது நூலகத்துறை உயர் அலுவலர்களையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள சிறப்பம்சங்களை விளக்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.
திருவள்ளுவர் நாளில் திருச்சி பெல் வளாகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மரியாதை
திருச்சி 16, ஜனவரி 2026 : திருவள்ளுவர் நாளை முன்னிட்டு, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருச்சி பெல் வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினார்.

இந்த நிகழ்வின் போது, தமிழ்ப் பேரறிவின் அடையாளமாக விளங்கும் அய்யன் திருவள்ளுவர் உரைத்த குறள் நெறிகளை வாழ்க்கை நடைமுறையில் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். திருவள்ளுவரின் சிந்தனைகள் மனிதநேயமும் ஒழுக்கமும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க வழிகாட்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நிரந்தர மைதானத்தில் நடைபெற்ற சூரியூர் ஜல்லிக்கட்டு – வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருவெறும்பூர் 16, ஜனவரி 2026 : வரலாற்றுச் சிறப்புமிக்க சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியை, நிரந்தர மைதானத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் கண்டுகளித்தார்.

சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரருக்கு தன்னுடைய சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார் அமைச்சர் அன்பில் அவர்கள். மைதானம் திறப்பு விழாவின்போது மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைத்திருந்ததை தொடர்ந்து 668 காளைகள் – 334 வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 12 காளைகளை பிடித்து முதலிடம் பெற்றுள்ள சூரியூரைச் சேர்ந்த மூர்த்திக்கு என்பவர்க்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும், இந்தப் போட்டியில், தீரத்தோடும் திறமையோடும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், திமிறிக் கொண்டு பிடிபடாமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின் பெருமையும், தமிழர் வீர மரபும் இந்நிகழ்வின் மூலம் மீண்டும் ஒளிவிட்டது.
மேலும், சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நிரந்தர மைதானத்தில் நடைபெற வழிவகுத்த திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது நன்றியை மீண்டும் உரித்தாக்கிக் கொண்டார்.
‘புதுமைப்பெண்’ திட்டம் – மாணவிகளின் கல்விக் கனவுக்கு துணை நிற்கும் திராவிட மாடல் அரசு கல்வியில் சிறந்த தமிழ்நாடு
17 ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், பெண் பிள்ளைகள் பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை எந்தத் தடையும் இன்றி தொடர்ந்து கல்வி கற்று, வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற உன்னத நோக்கில் மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

கூலி வேலைக்குச் சென்று சேர்த்த பணத்தில் கல்லூரியில் சேர்ந்த மாணவி சுபலட்சுமி, இன்று புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஊக்கத்தொகையைக் கொண்டு தனது கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் புத்தகங்களுக்கான செலவுகளைத் தானே கவனித்துக் கொண்டு கல்விப் பயணத்தைத் தன்னம்பிக்கையுடன் தொடர்கிறார்.
தமிழ்நாட்டுப் பெண் பிள்ளைகளை தனது சொந்த மகள்களாகக் கருதி, அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, ‘தாயுமானவராக’ திகழ்கிறார் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இந்தப் பெருமைமிகு நிகழ்வை ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக் காணொலியாக தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.
49வது சென்னை புத்தகத் திருவிழாவில் மணிமேகலை பிரசுரம் – 49 நூல்கள் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
சென்னை 17, ஜனவரி 2026 : 49வது சென்னை புத்தகத் திருவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக, மணிமேகலை பிரசுரம் நிறுவனத்தின் சார்பில் 49 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், நூல் வெளியீட்டில் பங்கேற்ற எழுத்தாளர்களையும், பதிப்பாளரையும் வாழ்த்தினார்.

மேலும், “தமிழ்வாணன் நினைவு விருது” உள்ளிட்ட 9 விருதுகளை மணிமேகலை பிரசுரம் நிறுவனத்தின் சார்பில் விருதாளர்களுக்கு அமைச்சர் வழங்கி, சிறப்புரையாற்றினார். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், அறிவுப் பரவலுக்கும் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் ஆற்றிவரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற LEGSGO Premier League கிரிக்கெட் போட்டி – தொடக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
சென்னை 17, ஜனவரி 2026 : LEGGO நிறுவனத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் LEGSGO Premier League எனும் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில், போட்டியின் இலட்சினையை வெளியிட்டு, வெற்றிக்கோப்பையை அறிமுகம் செய்து வைத்த அமைச்சர், போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இவ்வகை விளையாட்டு நிகழ்வுகள் இளைஞர்களின் திறமையை வளர்க்கவும், ஒற்றுமை மற்றும் விளையாட்டு மனப்பான்மையை ஊக்குவிக்கவும் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் உலகளாவிய சாதனை – தென் கொரியாவில் முதுநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கு வாய்ப்பு பெற்ற மாணவர்
18, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான “நான் முதல்வன்”, லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் புதியதொரு திறன் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் International Internship Programme மூலம், திருவண்ணாமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர் சுமித்குமார், தென் கொரியாவில் புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தில் தனது முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பைத் தொடரும் உயரிய வாய்ப்பை பெற்றுள்ளார். இது ‘நான் முதல்வன்’ திட்டம் மாணவர்களை சர்வதேச அளவில் உயர்த்தி நிறுத்தும் திறனை வெளிப்படுத்துகிறது.
இந்தச் சிறப்பான சாதனையை ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக் காணொலியாக தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்து, மாணவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.
4வது சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா (CIBF) – நிறைவு விழாவில் அறிவுப் பரவலுக்கான முக்கிய அறிவிப்புகள்
சென்னை 18, ஜனவரி 2026 : 4வது சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா (CIBF) நிறைவு விழா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 44 நூல்கள் மற்றும் பொது நூலகத் துறை சார்பில் வெளியிடப்பட்ட 40 நூல்கள் என மொத்தம் 84 நூல்களை மாண்புமிகு முதலமைச்சர் வெளியிட்டார். இதனுடன், தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியத் திட்டத்தின் நூல் பட்டியலையும் (Catalogue) அவர் வெளியிட்டார்.

சர்வதேச புக்கர் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளர் திருமிகு பானு முஷ்தாக் அவர்கள் ஆற்றிய பாராட்டுரை, அறிவைப் பரப்பும் முயற்சிகளை மேலும் விரிவுபடுத்த ஊக்கமளிப்பதாக அமைந்தது. முக்கிய உரையில், தமிழ்நாடு தொழில்துறை முதலீடுகளுக்கான விருப்ப மாநிலமாக மட்டுமல்லாமல், அறிவைப் பகிர்வதில் முன்னணி மாநிலமாகவும் திகழ்கிறது என்பதை முதலமைச்சர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
மேலும், இலக்கிய உலகிற்கு பெரும் மகிழ்ச்சியளிக்கும் வகையில், தமிழில் வெளியிடப்படும் சிறந்த படைப்புகளுக்காக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு வழங்கப்படும் ‘செம்மொழி இலக்கிய விருது’ என்ற புதிய ஆண்டு விருதை அறிவித்தார். இந்த விருதுக்கு ஒவ்வொரு மொழிக்கும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ – தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
தஞ்சாவூர் 18, ஜனவரி 2026 : ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ எனும் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் மாநாடு வரும் ஜனவரி 26 அன்று நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கும் கூட்டம் தஞ்சை செங்கிப்பட்டியில் உள்ள மாநாட்டுத் திடலில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டம், மண்டலப் பொறுப்பாளரான கழக முதன்மைச் செயலாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
மகளிர் சக்தியை ஒருங்கிணைத்து, சமூக முன்னேற்றத்தை வலுப்படுத்தும் நோக்குடன் நடைபெறவுள்ள இந்த மாநாடு, டெல்டா மண்டலத்தில் புதிய உற்சாகத்தை உருவாக்கும் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
CIBF–2026 வரலாற்றுச் சாதனை – 1,830 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், உலக கவனத்தை ஈர்த்த சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா
சென்னை 18, ஜனவரி 2026 : சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா – CIBF 2026 நிறைவு விழாவை வெற்றிகரமாகக் கண்டுள்ள நிலையில், இவ்வாண்டு மொத்தம் 1,830 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 1,273 ஒப்பந்தங்கள் தமிழ் நூல்களைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்வதற்காகவும், 260 ஒப்பந்தங்கள் பிற மொழிகளில் உள்ள நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்காகவும் முடிவடைந்துள்ளன. மேலும், ஒரு தனித்துவமான அம்சமாக, 297 ஒப்பந்தங்கள் பிற மொழிகளுக்கிடையிலான நூல் பரிமாற்றத்திற்காக கையெழுத்தாகியுள்ளன.

ஒட்டுமொத்தமாக, 102 நாடுகளில் இருந்து 150க்கும் அதிகமான பதிப்பாளர்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்றனர். உலகளவில் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகள் மற்றும் இந்திய அளவில் சிறந்த எழுத்தாளுமைகள் கலந்து கொண்ட 17 அமர்வுகளில், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
“திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இதைவிட பெரிய அளவில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை நடத்துவோம். தமிழ்நாடு முழுவதும் மேலும் பல பிரமாண்ட நூலகங்களை அறிவுக் கோவில்களாக எழுப்புவோம். அறிவுத்தீ வளர்ப்போம்; வெல்வோம் ஒன்றாக!” என்ற மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் உற்சாகம் மேலோங்குவதாக தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். இந்தச் சிறப்பான வெற்றிக்கு உறுதுணையாக இருந்து உழைத்த அனைவருக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அரசு மாதிரிப் பள்ளிகள் திட்டம் – சமூக மாற்றத்தின் அடையாளமாக மருத்துவராக உயர்ந்த மாணவன் மாணிக்கவாசகன்
19, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை மேலும் வலுவாகக் கட்டமைக்க முன்னெடுத்துவரும் திட்டங்களில், ‘அரசு மாதிரிப் பள்ளிகள்’ திட்டம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
அரியலூர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் கல்வி பயின்ற மாணவன் மாணிக்கவாசகன், அங்கு வழங்கப்பட்ட தரமான பயிற்சியின் மூலம் இன்று மருத்துவக் கல்வி பயின்று வருகிறார். “எப்படியாவது தன் மகனை ஒரு மருத்துவராக்க வேண்டும்” என்ற அவரது தாயின் உயரிய கனவை நனவாக்க, அரசு மாதிரிப் பள்ளி வழங்கிய கல்வி மற்றும் வழிகாட்டுதலே உறுதியான அடித்தளமாக அமைந்தது என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்துள்ளார்.
ஒரு காலத்தில் “தூய்மைப் பணியாளரின் மகன்” என அழைக்கப்பட்ட மாணவன், இன்று தனது அன்னையை “மருத்துவரின் தாய்” என தலைநிமிரச் செய்துள்ளார். இதுவே திராவிட மாடல் அரசு உருவாக்க விரும்பும் உண்மையான சமூக மாற்றத்தின் வெளிப்பாடாகும்.
கல்வியால் மட்டுமே இத்தகைய மாற்றம் சாத்தியம் என்பதை தொடர்ந்து செயல்பாட்டில் நிரூபித்து வருகிறார், சமூகநீதிக் காவலர் மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். இந்த உணர்வுபூர்வமான நிகழ்வை ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக் காணொலியாக தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.
காலநிலைக் கல்வி மற்றும் குளுமைப் பள்ளிகள் திட்டம் தொடக்கம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மற்றும் தங்கம் தென்னரசு அவர்கள் இணைந்து துவக்கி வைப்பு
சென்னை 19, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் காலநிலைக் கல்வி மற்றும் குளுமைப் பள்ளிகள் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களுடன் இணைந்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

இதன் மூலம், சென்னையில் உள்ள சென்னைப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவான்மியூரில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் குளுமைப் பள்ளிகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அம்பத்தூரில் செயல்படும் பெருந்தலைவர் காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கொல்லுமேடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பசுமைப் பள்ளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மூலம் உருவாக்கப்பட்ட “பசுமையான எதிர்காலத்திற்கு குளுமையான வகுப்பறைகள்” மற்றும் “பசுமைப் பள்ளிகளில் அமைவான குளிரூட்ட உத்திகளை ஒருங்கிணைத்தல்” ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. மேலும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் செட்டில்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பசுமைப் பள்ளிகள் தாக்க அறிக்கையும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்தத் திட்டம், பள்ளி மாணவர்களிடையே காலநிலை உணர்வை வளர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாகவும் அமையும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
49-வது சென்னை புத்தகக் காட்சி 2026 – துணை முதலமைச்சர் தலைமையில் பபாசி விருதளிப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
சென்னை 19, ஜனவரி 2026 : மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற 49-வது சென்னை புத்தகக் காட்சி – 2026 நிகழ்வின் ஒரு பகுதியாக அமைந்த விருதளிப்பு விழாவில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த விழாவில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் வழங்கப்படும் “பபாசி விருதுகள்”, படைப்பு மற்றும் பதிப்பு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டன. விருதுகளை வழங்கி, விழாப் பேருரையாற்றிய மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் அறிவுப் பரவலுக்கும் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் ஆற்றும் பங்களிப்பை பாராட்டினார்.
‘நான் முதல்வன்’ திட்டம் – பெண் கல்வியின் வலிமையை வெளிப்படுத்தும் மாணவி தீபஸ்ரீ
20, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், “ஒரு பெண் படித்தால் அந்த வீடே ஒளிபெறும்; அந்த நாடே நலம் பெறும். ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும்” எனக் கூறிய கருத்தை, மாணவி தீபஸ்ரீ அவர்கள் தனது வாழ்வின் மூலம் மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக திறன் பயிற்சி பெற்று, டிப்ளமோ கல்வி பயிலும் நிலையிலேயே பகுதிநேரப் பணி வாய்ப்பைப் பெற்றுள்ள தீபஸ்ரீ, அந்த வருமானத்தின் மூலம் தனது தங்கையின் கல்லூரிக் கல்விக் கனவையும் நனவாக்கி வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கல்வியெனும் ஆயுதத்தால் தமிழ்நாட்டு பெண் பிள்ளைகள் சரித்திரம் படைக்க வேண்டும் என்றும், அவர்களின் கனவுகளுக்கு உரமூட்ட திராவிட மாடல் அரசு என்றும் உறுதுணையாக நிற்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார். இந்த உணர்வுபூர்வமான நிகழ்வை ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக் காணொலியாக தனது எக்ஸ் (X) பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாநில எழுத்தறிவு விருது வழங்கும் விழா – 342 கற்போர் மையங்களுக்கு விருது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
சென்னை 20, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் சார்பில் ‘மாநில எழுத்தறிவு விருது’ வழங்கும் விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், மாநிலம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் கற்போர் எழுத்தறிவு மையங்களில், ஆண்டுக்கு 114 மையங்கள் வீதம் 2023–24, 2024–25, 2025–26 ஆகிய மூன்று ஆண்டுகளுக்காக மொத்தம் 342 மையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், அந்த மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பாராட்டினார்.
விழாவில் உரையாற்றிய அமைச்சர், “100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துவதற்காக தொடர்ந்து உழைப்போம்” என உறுதிபட தெரிவித்தார். கல்வி மூலம் சமூக மாற்றத்தை உருவாக்கும் திராவிட மாடல் அரசின் இலக்கை எட்ட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு இயக்ககங்களின் இயக்குநர்களுடன் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமயில்
சென்னை 20, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு இயக்ககங்களின் இயக்குநர்களுடன் ஆய்வுக்கூட்டம், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் சென்னை கன்னிமாரா நூலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், பள்ளிக்கல்வித் துறையின் திட்டங்கள், கல்வித் தர மேம்பாடு, நிர்வாக செயல்திறன், மாணவர்களின் கற்றல் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், அரசின் கல்வி சீர்திருத்த முயற்சிகள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
திருச்சியில் நடைபெறும் திராவிட மாடல் 2.0 மாநில மாநாட்டுக்கு முதல்வருக்கு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொண்ட அமைச்சர் பெருமக்க்கள்
சென்னை 20, ஜனவரி 2026 : தீரர்களின் கோட்டமாம் திருச்சியில், 10 லட்சம் கழக உடன்பிறப்புகள் பங்கேற்பில் திராவிட மாடல் 2.0 அரசு அமைவதற்கான வெற்றியை பறைசாற்றும் வகையில், “ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற முழக்கத்துடன் மாபெரும் கழக மாநில மாநாட்டை நடத்துவதென அறிவித்துள்ள கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், கழக முதன்மைச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான கே.என். நேரு அவர்கள் மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ந. தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு, திருச்சி மண்ணில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநில மாநாடு நடைபெற இருப்பது கழகத்திற்கும் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் எனக் குறிப்பிட்டனர். மேலும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், எதிர்கால இலக்குகள் மற்றும் தமிழ்நாடு வெற்றிப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவதற்கான உறுதிப்பாட்டை இந்த மாநாடு வெளிப்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முதல்வரின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தென்மேற்கு மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சென்னை 20, ஜனவரி 2026 : கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தென்மேற்கு மாவட்ட கழக இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தம்பி உமா சங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கழக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் அண்ணன் ஆ. ராசா அவர்களுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். தொடர்ந்து, ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் மயிலை த. வேலு அவர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், மாணவர் அணிச் செயலாளர் ரஜீவ் காந்தி அவர்கள் மற்றும் சென்னை தென்மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா அன்பழகன் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
திராவிட மாடல் ஆட்சியின் கல்வித் திட்டங்களின் வெற்றிக்குச் சாட்சியாக மாணவி ராஜேஸ்வரி
21, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும் கல்வித் திட்டங்களின் வெற்றிக்குச் சாட்சியாக மாணவி ராஜேஸ்வரி திகழ்கிறார். தன் தந்தை மறைந்த பின்னரும், அவரது கனவுக்கு உயிர் கொடுப்பதற்கான அடியை உறுதியுடன் எடுத்து வைத்துள்ள அன்பு மகளின் முயற்சி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாணவி ராஜேஸ்வரிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்ததுடன், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சிக்காணொலியை தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, மாணவியின் சாதனையை பெருமையுடன் வெளிப்படுத்தினார். திராவிட மாடல் ஆட்சியின் கல்வி முன்னேற்றப் பயணத்தில், மாணவி ராஜேஸ்வரியின் வெற்றி பல மாணவர்களுக்கு ஊக்கமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பள்ளிக்கல்வித் துறையில் நவீன கற்றல் முயற்சி: மாநில வள மையத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
சென்னை 21, ஜனவரி 2026 : நவீன உத்திகளை பயன்படுத்தி கற்றல் – கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை வழங்கும் வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில வள மையம் (State Resource Centre) உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (SCERT) உருவாக்கப்பட்ட இந்த மாநில வள மையத்தை இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, அந்த வள மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மொழிகள் ஆய்வகம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான சிறப்பு அரங்குகள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான தனி அறை, கணக்கீட்டு சார் சிந்தனையை மேம்படுத்தும் அரங்கு, “கற்க கசடற” என்ற சிறப்பு அரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மாநில வள மையம், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை புதுமையான முறையில் செழுமைப்படுத்தவும் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. சந்தரமோகன். பி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் மரு. மா.ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர். ச.கண்ணப்பன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் திருமதி. ந.லதா, தனியார் பள்ளிகள் இயக்குநர் -முனைவர். ச.சுகன்யா, இணை இயக்குநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் – காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை
21, ஜனவரி 2026 : திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன், அந்தத் தீர்மானங்களை செயல்படுத்துவதற்காக மாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நிர்வாக ஒழுங்குகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார். கழகத்தின் கொள்கைகள் மற்றும் தலைமையின் அறிவுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டத்தில் ஒருங்கிணைந்த முறையில் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு
சென்னை 21, ஜனவரி 2026 : தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், சாரண–சாரணியர் இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

உரையில், ஒழுக்கம், தன்னம்பிக்கை, சமூக பொறுப்பு, தலைமைத் திறன் ஆகியவற்றை வளர்க்கும் சாரண சாரணியர் இயக்கம், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிவதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், பள்ளிக் கல்வியுடன் இணைந்து மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்காக இவ்வியக்கம் தொடர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மாநிலம் முழுவதும் சாரண–சாரணியர் இயக்கத்தை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
திராவிடமாடல் ஆட்சியில் திறன்மிகு இளைஞர்கள் – ‘நான் முதல்வன்’ திட்டத்தின் சாதனைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பாராட்டு
22, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிடமாடல் அரசு, திறன்மிகு இளைஞர் சக்தியை உருவாக்கும் பாசறையாக தமிழ்நாட்டை மாற்றியமைத்து வருகிறது. அந்த தொலைநோக்கு முயற்சியின் முக்கிய அங்கமாக செயல்பட்டு வரும் ‘நான் முதல்வன்’ திட்டம், மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பயிற்சிகளும், வழிகாட்டுதல்களும் வழங்கி அவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் கிடைத்த பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களின் பயனாக, முன்னணி நிறுவனத்தில் பணி வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவி சரண்யா போன்ற சாதனையாளர்களே, திராவிட இளைஞர் திரளின் வெற்றிக்கான புன்னகைமிகு அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிக் காணொலியை, தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, இளைஞர்களின் வளர்ச்சிக்காக அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இடைநிலை ஆசிரியர் கோரிக்கைகள்: துணை முதலமைச்சரிடம் டிட்டோஜாக் அமைப்பினர் மனு அளித்தனர்
சென்னை 22, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை, தலைமைச் செயலகத்தில் டிட்டோஜாக் அமைப்பினரோடு அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்திடுதல், டெட் ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வை விரைந்து நடத்திடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை டிட்டோஜாக் அமைப்பினர் துணை முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினர்.
மனுவில் இடம்பெற்ற கோரிக்கைகள் அனைத்தையும் கனிவோடும் கவனத்துடனும் கேட்டுக்கொண்ட மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள், இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
ஶ்ரீஐயப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 30வது ஆண்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
சென்னை 22, ஜனவரி 2026 : சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் இயங்கிவரும் ஶ்ரீஐயப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 30வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவரது உரையில், “மாணவச் செல்வங்கள் கல்வியின் மூலம் எதிர்காலத்தில் தாங்கள் அடைய விரும்பும் இலக்கை நோக்கிய பயணத்தை Pressure-உடன் அல்ல, Passion-னோடு மேற்கொள்ள வேண்டும். கல்வி என்பது மதிப்பெண் மட்டும் அல்ல; மனிதநேயமும் திறனும் வளர்க்கும் அடிப்படை” எனக் கூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும், கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து வளர்க்க வேண்டும் என்றும், ஆசிரியர்களின் பங்கு மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 30 ஆண்டுகளாக கல்விச் சேவை வழங்கி வரும் பள்ளி நிர்வாகத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
ஊடகவியலாளர் மகிழ்நன் அவர்களின் தாயார் மறைவுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் அஞ்சலி
சென்னை 22, ஜனவரி 2026 : சென்னையில் ஊடகவியலாளர் மகிழ்நன் அவர்களின் தாயார் திருமதி மல்லிகா அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர் அவர்கள் மறைந்த மல்லிகா அம்மையாரின் திருவுடலுக்கு மலரஞ்சலி செலுத்தி, அவரது மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊடகத் துறையினரும் உடனிருந்தனர்.
சட்ட பேரவை கூட்டத்தொடரில் அரசு ஊழியர், ஆசிரியர் கோரிக்கைகள் மற்றும் பள்ளிக்கல்வி முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
சென்னை 22, ஜனவரி 2026 : சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் முன்வைத்த கருத்துகளுக்கு, மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதிலளித்தார்.

அதேபோல், கேள்வி நேரத்தின் போது திராவிடமாடல் அரசால் நமது அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கடந்த நான்கரை ஆண்டுகளில் 15 முறை அரசு ஊழியர்களை அழைத்துப் பேசிய முதலமைச்சர் நம் மாண்புமிகு முதலமைச்சர் மட்டுமே எனக் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சிக் காலத்தில், தங்களை அழைத்துப் பேச வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர்கள் போராடிய நிலை இருந்தது என்றும், எஸ்மா–டெஸ்மா சட்டத்தை கொண்டு ஒரே கையெழுத்தில் 1,78,000 பேரை வீட்டுக்கு அனுப்பியது அதிமுக அரசு என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு மாறாக, ஒரே கையெழுத்தில் 53,000 பேருக்கு பணி நிரந்தரம் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என நினைவூட்டினார். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், 22 ஆண்டுகால ஓய்வூதிய கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்து, கோபத்துடன் அல்ல நம்பிக்கையோடு தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் இதுவரை 9,416 புதிய அரசுப் பள்ளிக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 7,898 பள்ளிக் கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம் வெளிப்படையாகவும், நியாயமாகவும் அமைய வேண்டியதோடு, பெற்றோருக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாத வகையில் பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில், தமிழ்நாடு பள்ளிகள் கட்டண திருத்தச் சட்ட முன்வடிவை சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.
காலை உணவுத் திட்டம் கல்வியிலும் ஆரோக்கியத்திலும் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்கியுள்ளது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
23, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தாயுள்ளத்தோடு அறிமுகப்படுத்திய பள்ளி காலை உணவுத் திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் பள்ளிகளில் பசியாறி வருகின்றனர்.

இந்தத் திட்டம் மாணவர்களின் வயிற்றுப் பசியையும் அறிவுப் பசியையும் ஒருங்கே தீர்த்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆரோக்கியத்திலும் கல்வியிலும் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. இதனை எடுத்துரைக்கும் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சிக் காணொலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்கள் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கும் உடல்நல மேம்பாட்டிற்கும் அடித்தளமாக அமைந்துள்ளன என்றும், சமத்துவமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்ய அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுக்கு திராவிட மாடல் அரசின் 5 முக்கிய அறிவிப்புகள் – முதல்வருக்கு நன்றி தெரிவித்த விளையாட்டுப் பேரவையினர்
சென்னை 23, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சார்பில், ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூர் காளைகளும், உள்ளூர் வீரர்களும் பங்கேற்பதை உறுதி செய்ய ஏதுவாக, இதுவரை நடைமுறையில் இருந்த ஆன்-லைன் பதிவு முறையில் மாற்றம் செய்து, அந்தந்த மாவட்ட அளவில் முடிவு செய்து செயல்படுத்த வழிவகை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களிடமிருந்து முத்திரைத் தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழிப் பத்திரம் இனி நடைமுறை ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான காளைகளை அடக்கி சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறையில் உரிய அரசுப் பணியிடங்களில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்க அறிவிப்பாகும்.
இந்த 5 அறிவிப்புகளுக்காக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு பேரவையினர், தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் ஆகியோருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார்.
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா CIBF 2026 – துணை முதலமைச்சருக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நினைவுப் பரிசு
சென்னை 23, ஜனவரி 2026 : சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா CIBF 2026 சிறப்பான முறையில் வெற்றிபெற ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, நம்முடைய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், துணை முதலமைச்சர் அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார். மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் பண்பாட்டு பெருமைகளை உலகளவில் எடுத்துச் செல்லும் வகையிலும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா CIBF 2026 முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் இந்தச் சந்திப்பின் போது குறிப்பிடப்பட்டது.
நெல்லை நாடார் மெட்ரிக் பள்ளி 41வது ஆண்டு விழா – மாணவர்களுக்கு தைரியமும் தெளிவும் அவசியம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்ப்பு
சென்னை 23, ஜனவரி 2026 : சென்னை கொட்டிவாக்கத்தில் இயங்கிவரும் நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 41வது ஆண்டு விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார். விழாவில், மாணவச் செல்வங்கள் வழங்கிய கலை நிகழ்ச்சிகளை அமைச்சர் அவர்கள் கண்டுகளித்து பாராட்டினார். தொடர்ந்து, கல்வி, விளையாட்டு, சாரண இயக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்குவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் ஆற்றிய சிறப்புரையில், “மாணவர்கள் தங்களுக்கு பாடங்களில் எழும் சந்தேகங்களை எவ்வித மனத்தடையும் இன்றி வகுப்பறையிலேயே கேள்விகளாக எழுப்ப வேண்டும். கேள்வி கேட்கும் பழக்கமே அறிவை வளர்க்கும்; அதுவே எதிர்காலத்தில் சமூகத்தை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதற்கான ஆற்றலை அளிக்கும்” எனத் தெரிவித்தார். இந்த ஆண்டு விழா நிகழ்வு, மாணவர்களின் திறமைகளையும், அவர்களின் எதிர்கால இலக்குகளையும் ஊக்குவிக்கும் விதமாக சிறப்பாக நடைபெற்றது.
News Tamil TV 24×7 – “THE COURT” விவாத நிகழ்ச்சி துவக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
சென்னை 23, ஜனவரி 2026 : News Tamil TV 24×7 தொலைக்காட்சி சார்பில் புதிதாக தொடங்கப்படும் “THE COURT” என்ற விவாத நிகழ்ச்சியின் துவக்க விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார்.
5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் News Tamil TV 24×7 தொலைக்காட்சியின் புதிய முயற்சியாக தொடங்கப்படும் இந்த விவாத நிகழ்ச்சி, பொதுமக்களிடையே கருத்து பரிமாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமையும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், இந்த புதிய நிகழ்ச்சியும், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் News Tamil TV 24×7 தொலைக்காட்சியும் சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் என தனது வாழ்த்துகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.
‘நான் முதல்வன்’ திட்டம் – உலகளாவிய மென்பொருள் நிறுவனத்தில் பணி பெற்ற குயின் மேரிஸ் கல்லூரி மாணவி
24, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம், உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் பணியமர வாய்ப்பினைப் பெற்றுள்ளார் சென்னை குயின் மேரிஸ் அரசினர் மகளிர் கல்லூரியில் பயின்ற மாணவி ஷமிதா.
திராவிட மாடல் அரசின் துணையுடன், கல்வியின் வலிமையால் பெண் பிள்ளைகள் தலைநிமிர்ந்து முன்னேறி வருவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நோக்கை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிக்காணொலியை தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘நான் முதல்வன்’ திட்டம், தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை உலகளவில் அங்கீகரிக்கச் செய்து, வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் ஒரு முக்கிய முயற்சியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
திருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சட்டமன்ற பார்வை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து
சென்னை 24, ஜனவரி 2026 : தன்னுடைய திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியின் அரசியல் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிகழ்வுகளை நேரில் பார்வையிடுவதற்காக வந்திருந்தனர்.

இந்த வாய்ப்பின் போது மாணவர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், ஜனநாயகத்தின் செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்வது அரசியல் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் எனக் குறிப்பிட்டு, கல்வி மற்றும் பொது வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என ஊக்கமளித்தார்.
பகுதிநேர ஆசிரியர் நியமனம் – முதல்வருக்கு நன்றி தெரிவித்த சங்கங்களின் பிரதிநிதிகள்
சென்னை 24, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தலைமைச் செயலகத்தில் பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நியமனம் செய்திட ஏதுவாக, அவர்களது பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்தமைக்காக, சங்கங்களின் சார்பில் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மரு. பி. சந்தர மோகன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் முதலமைச்சரைச் சந்தித்து நன்றி – கல்வித் துறையில் புதிய அறிவிப்புகள்
சென்னை 24, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் திரு. தியாகராஜன், தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. தாஸ், தமிழ்நாடு தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்.

பகுதிநேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்திற்கு உதவிடும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காகவும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்காக பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காகவும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உடனிருந்தார்.
இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி 25, ஜனவரி 2026 : இந்திய ஒன்றியம் முழுவதும் இந்தித் திணிப்பிற்கு எதிராக இன்று குரல்கள் எழுகின்றன என்றால், அதற்கு அடித்தளமிட்டவர்கள் நமது மொழிப்போர்த் தியாகிகள் தான் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.

தாய்மொழி காக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவை வீரவணக்க நாளில் போற்றிய அமைச்சர், திருச்சி திமுக கட்சி அலுவலகத்தில் மொழிப்போர்த் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
“தியாகத்தின் நினைவு இருக்கும் வரை, நம்மிடம் மொழி உணர்வு இருக்கும் வரை, இந்தித் திணிப்பு என்ற பேச்சுக்கே இங்கே இடமிருக்காது. மொழி உரிமையை காக்கும் இந்தப் போராட்டத்தின் தீ இன்று இந்தியா முழுவதும் பரவி வருகிறது” என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உரையாற்றினார். தமிழ்த் தாய்மொழியின் மரியாதையையும், மொழி சுயமரியாதையையும் காக்க உயிர் நீத்த தியாகிகளின் வரலாறு என்றும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதுமைப்பெண் திட்டம் பெண் பிள்ளைகளின் கல்விக் கனவுக்கு உறுதுணை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
25, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பெண் பிள்ளைகளின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் வகையில் மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் காரணமாக 12ஆம் வகுப்புடன் கல்வியை நிறுத்த வேண்டிய நிலை இருந்தபோதும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கிடைக்கும் ரூ.1000 ஊக்கத்தொகையின் உதவியால் “என் செலவுகளை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்ற தன்னம்பிக்கையுடன் தனது உயர்கல்வியைத் தொடர்ந்து வருகிறார் மாணவி இந்துமதி.
பெண் பிள்ளைகளின் கல்வி தொடர்ச்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் இந்தத் திட்டம் பெரும் துணையாக இருப்பதை எடுத்துக்காட்டும் வகையில், “கல்வியில் சிறக்கட்டும், வாழ்வில் உயரட்டும்” என்ற வாழ்த்துகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக் காணொலியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திராவிட மாடல் அரசின் இத்தகைய முன்னெடுப்புகள், சமூக நீதி மற்றும் கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: திருச்சியில் அமைதிப் பேரணி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
திருச்சி 25, ஜனவரி 2026 : திருச்சி மாவட்டக் கழகங்களின் சார்பாக மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு அமைதிப் பேரணி நடைபெற்றது. கழக முதன்மைச் செயலாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் கே.என். நேரு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். ஊர்வலமாகச் சென்று மொழிப்போர்த் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் மற்றும் கழகத்திற்காக உயிர்நீத்த தியாகி மாரப்பன் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “Press Sewa Portal இணையதளத்தில் பத்திரிகை தலைப்புகளைப் பதிவு செய்யும்போது அவற்றை இந்தியில் மொழிபெயர்க்கும் முறையை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கை போல இந்தித் திணிப்பு எந்த வடிவத்தில் வந்தாலும், கழகத் தலைவர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அதற்கு என்றும் உறுதியான எதிர்ப்பு தொடரும்” எனத் தெரிவித்தார். மொழி உரிமையை காக்க உயிர் தியாகம் செய்த மாவீரர்களின் நினைவை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த அமைதிப் பேரணி, திருச்சியில் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது.
திருவெறும்பூரில் மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு
திருவெறும்பூர் 25, ஜனவரி 2026 : மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் தாய்வீடான திருவெறும்பூர் தொகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கழக கல்வியாளர் அணி தலைவர் புலவர் திரு. ந. செந்தலை கவுதமன் அவர்களுடன் இணைந்து கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

மேலும், தலைமைக் கழகப் பேச்சாளர் சிறுவானூர் திரு. பரசுராமன் அவர்கள் மற்றும் இளம் பேச்சாளர் திரு. பாலகணபதி அவர்கள் ஆகியோருக்கு சிறப்பான உரைக்காக அமைச்சர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் திரு. இனிகோ இருதயராஜ் அவர்களும் கலந்து கொண்டு மொழிப்போர்த் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்.
டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு: முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தஞ்சாவூர் 25, ஜனவரி 2026 : தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் ஜனவரி 26 அன்று நடைபெற உள்ள டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநாடு சிறப்பாகவும், ஒழுங்காகவும் நடைபெற தேவையான மேடை அமைப்பு, வருகை ஏற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் அமைச்சர் வழிகாட்டுதல்களை வழங்கினார். மகளிர் சக்தியை ஒருங்கிணைத்து, சமூக முன்னேற்றத்தில் அவர்களின் பங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என அவர் தெரிவித்தார்.
‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் மாணவர்களின் கனவுக்கு துணை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
26, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், “மாணவர்கள் பருவம் தவறாமல் கல்வி பயில வேண்டிய வயதில், தம் கைகளில் ஏந்த வேண்டியது புத்தகங்களைத்தானே தவிர, வறுமை எனும் குடும்பச் சுமைகளை அல்ல” என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் எதிர்காலத்திற்குத் தோள் கொடுக்கும் வகையில் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார்.
தன் கல்லூரிப் படிப்பிற்காக தினமும் பகுதிநேர வேலைக்குச் சென்று களைப்போடு திரும்பிய மாணவன் சரவணனின் கல்விப் பாரத்தை, ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் தன் தோளில் ஏற்றிக்கொண்டுள்ளது. இதன் மூலம் எவ்விதப் பொருளாதார நெருக்கடியும் இன்றி, சரவணன் முழு மூச்சாகத் தனது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
எதிர்காலத்தில் காவல் துறையில் இணைந்து, காக்கிச் சட்டை அணிந்து மிடுக்கான அரசு அதிகாரியாக வலம் வர வேண்டும் என்ற சரவணனின் லட்சியக் கனவு நனவாகட்டும் என்ற வாழ்த்துகளுடன், கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக் காணொலியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
77வது குடியரசு தினம்: அரசியலமைப்பும் பன்முகத்தன்மையும் காக்க உறுதி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
26, ஜனவரி 2026 : இந்திய ஒன்றியத்தின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பையும் நாட்டின் பன்முகத்தன்மையையும் காப்பாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், குடியரசு தின வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டு, இந்தியாவின் ஜனநாயக மரபுகளையும், அரசியலமைப்பு மதிப்புகளையும் பாதுகாப்பதே இன்றைய தலைமுறையின் கடமை என வலியுறுத்தி, தனது எக்ஸ் (X) பக்கத்தில் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.
வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு: திருச்சி விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
திருச்சி 26, ஜனவரி 2026 : கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், வெல்லும் தமிழ்ப் பெண்கள் தி.மு.க டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்க தஞ்சாவூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

அவரை, திருச்சி தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பெண்சாதனை அதிகரிக்கும் அரசியல் முன்னெடுப்புகளை முன்னிலைப் படுத்தும் இந்த மாநாடு, பெண்களின் சக்தியை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என இந்த வரவேற்பு நிகழ்வு அமைந்தது.
77வது குடியரசு நாள் அணிவகுப்பு: பள்ளிக்கல்வித்துறை முன்னோடித் திட்டங்கள் அலங்கார ஊர்தியில் வெளிப்பாடு
சென்னை 26, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில், சென்னை காமராசர் சாலையில் 77வது குடியரசு நாள் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த அணிவகுப்பில், திராவிட மாடல் அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னோடித் திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்தி பங்கேற்று, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

பள்ளிக்கல்வியில் சமத்துவம், தரம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களை எடுத்துரைக்கும் இந்த அலங்கார ஊர்தியின் காணொலியை, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2026 தேர்தல் வெற்றியை எட்டுத்திக்கும் பறைசாற்றிய “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு
திருச்சி 26, ஜனவரி 2026 : கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் பேருரையோடு, 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியை எட்டுத்திக்கும் பறைசாற்றும் வகையில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” – டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சிறப்புரையும், கழக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் திருமதி கனிமொழி அவர்களின் தலைமையும் நிகழ்வுக்கு பெருமை சேர்த்தன.
மகளிர் முன்னேற்றம், சமூக நீதி, சமத்துவ அரசியல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த மாநாட்டில், திருச்சி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தாய்மார்கள், சகோதரிகளுடன் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, மகளிர் சக்தியை ஒருங்கிணைக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்து உரையாற்றினார். பெண்களின் அரசியல் பங்களிப்பை வலுப்படுத்தி, 2026 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் உற்சாக மேடையாக இந்த மாநாடு அமைந்தது
வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு நினைவுப் பரிசு
திருச்சி 26., ஜனவரி 2026 : வெல்லும் தமிழ்ப் பெண்கள் – டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பெருந்திரளான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளோடு பங்கேற்றதற்காக, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு மாநாட்டின் தலைவர், கழக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் கனிமொழி அவர்கள் நினைவுப் பரிசினை வழங்கினார்.

மகளிர் முன்னேற்றம், சமூக நீதியும் சமத்துவமும் குறித்த திராவிட மாடல் அரசின் கொள்கைகளை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மாநாடு, பெண்களின் அரசியல் பங்கேற்பையும் சமூக அதிகாரமளிப்பையும் வலுப்படுத்தும் மேடையாக அமைந்தது.
திருநங்கையருக்கும் கல்வி சமவாய்ப்பு – ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் சமூகநீதி அடையாளம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
27, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், திருநங்கையருக்கும் பயனளிக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடன் ‘புதுமைப்பெண்’ திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாக அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

“பள்ளிப் படிப்பை வீட்டிலிருந்தே முடித்தேன். கல்லூரியில் சேர்ந்தபோது, எனக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கிறது. எங்களுக்கான முழுக் கல்லூரிக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக்கொள்வதால், எவ்விதப் பொருளாதாரச் சுமையும் இல்லாமல் கல்வியில் மட்டுமே முழுக்கவனம் செலுத்துகிறேன்” என்ற மாணவி மாயாவின் வார்த்தைகள், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் அரசின் சமூகநீதி அடையாளத்தை வெளிப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்துகளை எடுத்துரைக்கும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக் காணொலியை, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்து, அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பை உறுதிசெய்யும் அரசின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினார்.
திருச்சி மாநகரில் தி.மு.க-வில் இணைந்த அ.ம.மு.க நிர்வாகிகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் இணைப்பு
திருச்சி 27, ஜனவரி 2026 : கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையை ஏற்று, திருச்சி மாநகர 50வது வட்டத்தைச் சேர்ந்த அ.ம.மு.க வட்டச் செயலாளர் திரு. பிரான்சிஸ் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி இன்று தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்த இணைப்பு நிகழ்வு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. புதிதாக கழகத்தில் இணைந்த அனைவரையும், அமைச்சர் அவர்கள் கருப்பு–சிவப்பு கரைவேட்டி அணிவித்து உற்சாகமாக வரவேற்றார். திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு நடைபெற்ற இந்த இணைப்பு, திருச்சி மாநகரில் கழகத்தின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
திருவெறும்பூர் தொகுதியில் ரூ.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்
திருவெறும்பூர் 27, ஜனவரி 2026 : திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழக்குறிச்சி ஊராட்சி, தென்றல் நகரில் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இதனைத் தொடர்ந்து, நவல்பட்டு ஊராட்சி சிலோன் குடியிருப்பு பகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதி 2025–2026-இல் இருந்து ரூ.9.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

மேலும், அசூர் ஊராட்சி – பொய்கைக்குடி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தொகுதி மேம்பாட்டு நிதி 2025–2026-இல் இருந்து ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார். நிகழ்வின்போது, மழலையர்களுக்கு இனிப்பு வழங்கி அமைச்சர் அவர்கள் அன்புடன் வரவேற்றார்.
அதேபோல், திருச்சி மாநகர வார்டு 38-க்கு உட்பட்ட கே.வி.கே.சாமி தெருவில், தொகுதி மேம்பாட்டு நிதி 2025–2026-இல் இருந்து ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மக்கள் நலனை மையமாகக் கொண்டு, குடிநீர், உணவுப் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த வளர்ச்சித் திட்டங்கள், திராவிட மாடல் அரசின் மக்கள் சார்ந்த நிர்வாகத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது.
உலகம் உங்கள் கையில்: திருச்சி மாவட்ட மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கும் விழா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
திருச்சி 27, ஜனவரி 2026 : உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணிகள் வழங்கும் விழா கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களோடு இணைந்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணிகளை வழங்கி வாழ்த்தினார்.

மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் போட்டித் திறனை அதிகரிக்கவும் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என அமைச்சர்கள் உரையாற்றினர். கல்வி வழியாக சமூக முன்னேற்றத்தை உறுதி செய்யும் திராவிட மாடல் அரசின் உறுதிப்பாட்டையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கலந்தாய்வு: திருச்சியில் முக்கிய கூட்டம்
திருச்சி 27, ஜனவரி 2026 : தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் சார்பில், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர், மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களோடு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் பங்கேற்றனர். திருச்சி மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சி தேவைகள், மக்கள் நலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் கல்வி சார்ந்த முன்னேற்றங்கள் அடங்கிய விரிவான பட்டியலை, குழுவின் தலைவர், கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி அவர்களிடம் அவர்கள் முன்வைத்தனர்.
மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, திராவிட மாடல் அரசின் வளர்ச்சி நோக்கத்தை பிரதிபலிக்கும் தேர்தல் அறிக்கை தயாரிக்க இக்கலந்தாய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
அரசு மாதிரிப்பள்ளிகள் திட்டம்: IIT மெட்ராஸில் தடம் பதிக்கும் அரசுப்பள்ளி மாணவர்
28, ஜனவரி 2026 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் அரசு மாதிரிப்பள்ளிகள் திட்டம் மூலம், இரண்டாயிரத்திற்கும் அதிகமான அரசுப்பள்ளி மாணவச் செல்வங்கள் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இணைந்துள்ளனர்.

அவர்களில் ஒருவராக, திருச்சி அரசு மாதிரிப்பள்ளியில் பயின்று தற்போது IIT Madras-ல் கல்வி பயிலும் மாணவர் முகில்ராஜ் குறிப்பிடத்தக்கவர். அரசு மாதிரிப்பள்ளியில் வழங்கப்பட்ட தரமான பயிற்சி மற்றும் தொடர்ச்சியான வழிகாட்டுதல் அவரின் உயர்கல்விப் பயணத்திற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது.
கல்வி மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பதை உணர்த்தி, எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களைச் சிகரம் தொட வைக்கும் திராவிட மாடல் அரசின் கல்விக் கொள்கைகளை எடுத்துரைக்கும் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சிக் காணொலியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கம்பரசம்பேட்டை காவிரி குடிநீர் திட்டம்: நீரேற்று நிலையத்தை நேரில் பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருவெறும்பூர் 28, ஜனவரி 2026 : திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகர வார்டுகள் 38, 39, 40, 41, 42, 43 ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.63.70 கோடி மதிப்பீட்டில் கம்பரசம்பேட்டை பகுதியில் காவிரி ஆற்றுப்படுகையில் பிரதான நீர் சேகரிப்பு மற்றும் நீரேற்று நிலையம் – II அமைக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 7 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ள இத்திட்டத்தின் மூலம், அங்கிருந்து 19,343 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு, 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தொடர்புடைய வார்டுகளுக்கு உட்பட்ட கழக பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கம்பரசம்பேட்டை சென்று நீரேற்று நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மக்களின் அடிப்படை தேவையான குடிநீரை உறுதி செய்யும் வகையில், திராவிட மாடல் அரசின் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது.
முதலமைச்சரிடம் முனைவர் பட்டச் சான்றிதழ் காண்பித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
சென்னை 28, ஜனவரி 2026 : “PHYSICAL ACTIVITIES FOR SKILL DEVELOPMENT AMONG SCHOOL CHILDREN USING MACHINE LEARNING TECHNOLOGY” என்ற தலைப்பில் ஆய்வினை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட “முனைவர்” பட்டச் சான்றிதழை, வாழ்வியலின் வழிகாட்டி – அரசியல் ஆசான், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் காண்பித்து, அவரது வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது, “எத்தனை தடைகள் வந்தாலும், படிப்பை மட்டும் கைவிடக் கூடாது. படிப்பு மட்டும்தான் யாராலும் திருட முடியாத நிலையான சொத்து!” என்ற முதலமைச்சரின் சொற்களுக்கு இனங்க, கல்வியை அடிப்படையாகக் கொண்டு சமூக முன்னேற்றத்தை நோக்கி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்டு வரும் முன்னெடுப்புகள் அமைந்துள்ளன. கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பள்ளிக் கல்வியில் தர மேம்பாட்டை நோக்கி செயல்படும் அவரது கல்விசார் பயணம், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி மதிப்பெண்கள் குறைப்பு: சமூகநீதியை உறுதிப்படுத்திய திராவிடமாடல் அரசு
28, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆசிரியர்களின் நலனைக் காக்கும் அரசாகச் செயல்பட்டு வரும் திராவிடமாடல் அரசு, வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அரசாணையொன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் கனவுகளோடு காத்திருக்கும் தேர்வர்களுக்கும் நேரடி பலன் கிடைக்கவுள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற ‘டெட்’ (Teacher Eligibility Test) தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுவதுடன், தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 60 சதவீதமும், இடஒதுக்கீட்டு பிரிவினர் 55 சதவீதமும் பெற வேண்டியது கட்டாயமாக இருந்தது.

இந்த நிலையில், பிற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் தேர்ச்சி சதவீதத்தை 5 சதவீதம் குறைக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, பள்ளிக் கல்வித் துறை தேர்ச்சி மதிப்பெண்களில் 5 சதவீதம் குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணை, ஆசிரியர்களின் நீண்டநாள் நியாயமான கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் என்றுமே உறுதுணையாக இருப்பார் என்பதையும், சமூகநீதியை காக்கும் அரசு திராவிடமாடல் அரசு என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த முக்கிய அறிவிப்பை, தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
தஞ்சாவூர் 28, ஜனவரி 2026 : கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சிறப்புரையோடு, தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்றார்.

இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதிலிருந்தும் வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள், கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சமூக நல்லிணக்கம், சமூகநீதி மற்றும் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த கருத்துக்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு, ஒருங்கிணைந்த செயல்பாட்டின் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் தமிழர் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் கே.கே. செல்வகுமார்
திருச்சிராப்பள்ளி 28, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, தமிழர் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் கே.கே. செல்வகுமார் அவர்கள், அண்மையில் திருச்சியில் நடைபெற்ற தமிழர் தேசம் கட்சி மாநாட்டையொட்டி திருச்சிராப்பள்ளியில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரும் உடன் கலந்து கொண்டனர். சந்திப்பில், மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துகள், சமூக வளர்ச்சி, மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் மாணவர்களின் கல்வித் தடைகளை உடைத்த மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
29, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்த ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம், லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வித் தடைகளை உடைத்து, அவர்களின் எதிர்காலத்திற்கான உறுதியான பாதையை அமைத்துத் தந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்கள் தங்களின் அடிப்படை கல்வி தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பெற்றோரை மட்டுமே எதிர்பார்த்து இருந்த நிலை மாறி, தன்னம்பிக்கையுடன் முன்னேறும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திராவிட மாடல் அரசின் தொலைநோக்குத் திட்டங்கள், ஏற்றமிகு மாணவச் சமுதாயத்தையும், திறன்மிகு தமிழ்நாட்டையும் கட்டமைத்துள்ளதாக வலியுறுத்திய அமைச்சர், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற தலைப்பிலான நிகழ்ச்சிக் காணொளியையும் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ச்சியை தெரிவித்தார்.
திருவளர்ச்சிப்பட்டியில் நெல் கொள்முதல் நிலையப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருவெறும்பூர் 29, ஜனவரி 2026 : திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவளர்ச்சிப்பட்டி பகுதியில், விவசாயப் பெருங்குடி மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்படும் நெல் கொள்முதல் நிலையத்தின் பணிகளை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எளிதாகவும் நேர்மையாகவும் விற்பனை செய்யும் வசதியை உறுதிப்படுத்தும் இந்த நெல் கொள்முதல் நிலையம், அந்தப் பகுதி விவசாயிகளுக்கு பெரும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
குண்டூர் ஊராட்சியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடக்கம்
திருவெறும்பூர் 29, ஜனவரி 2026 : திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாமை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமின் போது, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கி மகிழ்ந்தார். பொதுமக்களின் உடல்நல பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த முகாம், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் தாமரைக்குளத்தில் பொழுதுபோக்கு படகு சவாரி சேவை: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடக்கம்
நாகப்பட்டினம் 29, ஜனவரி 2026 : நாகப்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிக்காக படகு சவாரி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையை மக்களின் பயன்பாட்டிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

நகர அழகுபடுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதாரமான பொழுதுபோக்கு சூழல் உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, நாகப்பட்டினம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பொன்னி கலையகத்தில் நிகழ்த்துக் கலை பயிற்சிப்பள்ளி: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடக்கம்
நாகப்பட்டினம் 29, ஜனவரி 2026 : நாகை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்டக் கல்வி தன்முனைப்புத் திட்டத்தின் கீழ், பொன்னி கலையகத்தில் நிகழ்த்துக் கலை பயிற்சிப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிப் பள்ளிக்கான சிறப்பு மையங்களை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த மையத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களது விருப்பத்திற்கேற்ப இசை, நடனம், நாடகம், இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்த்துக் கலைப் பயிற்சிகள் கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது.

மாணவர்களின் படைப்பாற்றல், திறமைகள் மற்றும் கலை ஆர்வங்களை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, கல்வியுடன் கலையை இணைக்கும் சிறப்பான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. நிகழ்வில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் திறப்பு
நாகப்பட்டினம் 29, ஜனவரி 2026 : நாகை நகரின் வெளிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்து, அங்குள்ள கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டார்.

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை, பாதுகாப்பு மற்றும் மீள்நல சேவைகள் வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த மையம், சமூக நலனுக்கான முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, மருத்துவத் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
சிக்கல் ஊராட்சியில் புதிய நியாய விலைக்கடை, பள்ளி வகுப்பறைகள் திறப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
நாகப்பட்டினம் 29, ஜனவரி 2026 : நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையை மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2024–2025ன் கீழ் ரூ.34.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகளையும் அமைச்சர் திறந்து வைத்து, மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் திரு. கவுதமன், சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆளூர் ஷாநவாஸ், மாவட்ட ஆட்சியர் திரு. ஆகாஷ் இ.ஆ.ப உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நரிமணம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்

நாகப்பட்டினம் 29, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் ரூ.15.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் வருகை தந்த மழலையரை அன்புடன் வரவேற்று, அவர்களுடன் கலந்துரையாடி, குழந்தைநேய சூழலில் வழங்கப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார்.
நாகை மாவட்டத்தில் ரூ.84.53 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
நாகப்பட்டினம் 29, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து திறந்து வைத்தார்.

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் 2,102 பயனாளிகளுக்கு ரூ.84.53 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் வழங்கினார். இதன் மூலம் 2025–2026ஆம் ஆண்டில் மட்டும் நாகை மாவட்டத்தில் மொத்தம் 10,903 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “பட்டா வாங்கிச் செல்லும் மக்களின் முகத்தில் உருவாகியுள்ள மகிழ்ச்சியை, திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் அதிகமாக்கும் வகையில் மேலும் பல்வேறு திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்துவார்” என கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 37 பயனாளிகளுக்கு சிறப்பு இருசக்கர வாகனம், 8 பயனாளிகளுக்கு திறன்பேசி, 3 பயனாளிகளுக்கு மின்கல சக்கர நாற்காலி, 3 பயனாளிகளுக்கு மின்மோட்டாரில் இயங்கும் தையல் எந்திரம் என மொத்தம் ரூ.42.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.
மேலும், நாகை மாவட்டத்தில் சுற்றுலாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ள http://nagapattinamtourism.com என்ற இணையதளத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் திரு. கவுதமன், சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆளூர் ஷாநவாஸ், மாவட்ட ஆட்சியர் திரு. ஆகாஷ் இ.ஆ.ப உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
‘நான் முதல்வன்’ திட்டம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்குகிறது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதிவு
30, ஜனவரி 2026 : உலகளவில் தொழில் துறையில் உருவாகும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அத்தகைய ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பெற்ற திறன் பயிற்சியினாலேயே தனக்கு விருப்பமான துறையில் வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும், அதனால் தன் குடும்பமே தலை நிமிர்ந்துள்ளதாகவும் அகம் மலரச் சொல்லும் தங்கை விநோதாவின் முகத்தில், லட்சக்கணக்கான இளைஞர்களின் மகிழ்ச்சியைக் காண முடிகிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உணர்வுபூர்வமான அனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியின் காணொலியை அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்து, இளைஞர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் அரசின் முயற்சிகளை எடுத்துரைத்துள்ளார்.
அசோக் நகர் பெண்கள் பள்ளியில் ரூ.11.90 கோடி மதிப்பிலான 40 கூடுதல் வகுப்பறைகள் திறப்பு
சென்னை 30, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 40 கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளித் தூதுவர்களாக தங்களை இணைத்துக் கொண்டு பல துறைகளில் வல்லுநர்களாகத் திகழும் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை துணை முதலமைச்சர் சந்தித்து, அவர்களின் பங்களிப்புக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
சென்னை அசோக் நகர் பள்ளியில் ‘அரசுப் பள்ளித் தூதுவர்கள்’ திட்டம் தொடக்கம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
சென்னை 30, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2025–2026 பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட ‘அரசுப் பள்ளித் தூதுவர்கள்’ திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர், அரசுப் பள்ளித் தூதுவர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டு, தொடர்ந்து ‘விழுதுகள்’ செயலியையும் தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளிகளில் பயின்று இன்று பல துறைகளில் அறிஞர்களாக விளங்கும் அரசுப் பள்ளித் தூதுவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதாகவும், அரசுப் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் திரு. சந்திரமோகன் இ.ஆ.ப., மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவர் முனைவர் திரு. ஜெ. ஜெயரஞ்சன், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் முனைவர் திரு. மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் முனைவர் திரு. வி. நாராயணன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் திரு. கண்ணப்பன், தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் திரு. இரா. சுதன் இ.ஆ.ப., எழுத்தாளர் திரு. இமையம், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் திருமிகு. அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
அரசுப் பள்ளித் தூதுவர்களுக்கு ஆளுமைகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டார்
சென்னை 30, ஜனவரி 2026 : அரசுப் பள்ளித் தூதுவர்களாக வருகை தந்து, அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக தங்களின் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவித்த அனைத்து ஆளுமைகளுக்கும் சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட மதிப்புமிக்க கருத்துகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவற்றை செயல்படுத்த உறுதியேற்றுள்ளோம் என்பதையும் அவர் மகிழ்வுடன் தெரிவித்தார்.
கல்வியும் வேலைவாய்ப்பும்: தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம் – NDTV TN Summit-ல் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உரை
சென்னை 30, ஜனவரி 2026 : NDTV TN Summit-ல் நடைபெற்ற “Education and Job Creation: Tamil Nadu as a Role Model State” என்ற தலைப்பிலான ஃபயர்சைடு உரையாடலில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் கல்வி–வேலைவாய்ப்பு அணுகுமுறைகள் குறித்து தமது பார்வைகளை பகிர்ந்தார். இந்த உரையாடலில் மூத்த தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் சாம் டேனியல் ஸ்டாலின் மற்றும் ஊடகவியலாளர் வசுதா வேணுகோபால் ஆகியோரும் பங்கேற்றனர்.

திராவிட மாடல் அரசின் கீழ் இளம் தலைமுறையை வளர்த்து, கல்வியை நேரடியாக வேலைவாய்ப்பாக மாற்றும் வகையில் செயல்படும் திட்டங்கள் குறித்து அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கிய பல்வேறு முன்னோடி திட்டங்கள் இதற்கு சான்றாக உள்ளன என அவர் குறிப்பிட்டார்.
‘நான் முதல்வன்’ திட்டம் மாணவர்களுக்கு தொழில்துறைக்கு ஏற்ற திறன்களையும், தெளிவான தொழில் பாதைகளையும் உருவாக்குகிறது. ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ் புதல்வன்’ திட்டங்கள் பெண் மாணவிகளுக்கும் முதல் தலைமுறை கற்றலாளர்களுக்கும் கல்வித் தொடர்ச்சியை உறுதி செய்கின்றன. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குழந்தைகளின் ஊட்டச்சத்தைக் கவனித்து, அடிப்படை கற்றலை வலுப்படுத்தி, பள்ளி விலகலை குறைக்க உதவுகிறது.
மேலும், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை (Two Language Policy) கல்வி கட்டமைப்பின் அடித்தளமாக இருப்பதாக அமைச்சர் தெளிவாக வலியுறுத்தினார். “தமிழ் எங்கள் அடையாளம்; ஆங்கிலம் எங்கள் வாய்ப்பு” என்ற கோட்பாடு தான் தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை வழிநடத்துகிறது என்றும், தேசிய கல்விக் கொள்கை (NEP) மற்றும் PM SHRI பள்ளிகள் வழியாக நடைபெறும் இந்தித் திணிப்புக்கு எதிரான நிலைப்பாட்டுக்கும் இதுவே அடிப்படையாகும் என்றும் கூறினார்.
கல்வி என்பது ஒரே மாதிரித் தன்மையை கட்டாயப்படுத்துவதற்கல்ல; அதிகாரமளிக்கவும், வாய்ப்புகளை உருவாக்கவும், மனித மரியாதையை காக்கவும் இருக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் உறுதியான நம்பிக்கை என அமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார்.
கலைத் திருவிழா வெற்றியாளர்களுக்கு “கலையரசன்–கலையரசி” பட்டம் – அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர்கள் வழங்கல்
சென்னை 30, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2025–26ஆம் கல்வியாண்டிற்கான கலைத் திருவிழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பான பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்களுடன் இணைந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, கலைத் திருவிழாவில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு “கலையரசன்” மற்றும் “கலையரசி” பட்டங்களை வழங்கி கௌரவித்தனர்.
மேலும், வானவில், சிறார் திரைப்படம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு, அவர்களின் கலைத் திறமைக்கும் படைப்பாற்றலுக்கும் அமைச்சர்கள் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நிகழ்வின் மூலம் மாணவர்களின் கலை மற்றும் பண்பாட்டு திறன்களை ஊக்குவித்து, முழுமையான கல்வி வளர்ச்சியை உறுதி செய்யும் திராவிட மாடல் அரசின் உறுதியான நோக்கம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
சர்வதேச விளையாட்டுப் போட்டி சாதனையாளர்களுக்கு ஊக்கத்தொகை – India Organization நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பாராட்டு
சென்னை 30, ஜனவரி 2026 : India Organization ஒருங்கிணைப்பில் நடைபெற்ற International Sporting Competition Achievers நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்வின் போது, விளையாட்டுத் துறையில் தொடர்ந்து சாதிக்க இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பது மிக முக்கியம் என்றும், அரசு விளையாட்டு வீரர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை ஆதரித்து வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கல்வியுடன் விளையாட்டிலும் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் திராவிட மாடல் அரசின் அணுகுமுறையையும் அவர் எடுத்துரைத்தார். சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்தும் வகையில் சாதனை படைக்கும் வீரர்களை கௌரவிக்கும் இத்தகைய நிகழ்வுகள், எதிர்கால தலைமுறைக்கு ஊக்கமாக அமையும் என்றும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
‘நான் முதல்வன்’ இளைஞர்களின் அரசுப் பணி கனவை நனவாக்குகிறது – கல்வியில் சிறந்த தமிழ்நாடு காணொலியை பகிர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
31, ஜனவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் அரசுப் பணி என்ற லட்சியக் கனவை இன்று நனவாக்கி வருகிறது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தங்கும் வசதியுடன் கூடிய, உயர்தரமான கட்டணமில்லாப் போட்டித் தேர்வுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியைப் பெற்ற தமிழ்நாட்டு இளைஞர்கள், அரசுப் பணிகளில் கம்பீரமாகத் தடம் பதித்து, தொடர்ந்து சாதனைகள் படைத்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.
இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு இரு கண்களாகக் கல்வியும் வேலைவாய்ப்பும் திகழும் வகையில், இரண்டையும் ஒருசேர உறுதிசெய்து அவர்களின் எதிர்காலம் வளம்பெறச் சிறந்த வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும் ஒளிர்கிறார் திராவிட மாடல் அரசின் நாயகர், மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்துகளை வலியுறுத்தும் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சிக்காணொலியை, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார்.
திருவெறும்பூர் தொகுதியில் ரூ.64.95 கோடி மெகா குடிநீர்த் திட்டம் – மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் கே.என்.நேருவுக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருவெறும்பூர் 31, ஜனவரி 2026 : திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகள் 38 முதல் 43 வரை உள்ள 6 வார்டு மக்களின் குடிநீர்த் தேவையைத் தணிக்கும் வகையில், ரூ.64.95 கோடி மதிப்பீட்டில் மெகா குடிநீர்த் திட்டம் செயல்முறைக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிலையான தீர்வு கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. பொதுமக்களின் அடிப்படைத் தேவையான தூய்மையான குடிநீரை உறுதிப்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இந்தத் திட்டம் முக்கியமானதாக அமைந்துள்ளது.

மக்களின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ததற்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களுக்கும், திருவெறும்பூர் தொகுதி மக்கள் சார்பில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். திராவிட மாடல் அரசின் மக்கள் நல அணுகுமுறைக்கு சான்றாக, இம்மெகா குடிநீர்த் திட்டம் திருவெறும்பூர் தொகுதியில் நடைமுறைக்கு வந்துள்ளது.
திருவெறும்பூரில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம் – அமைச்சர்கள் பங்கேற்பு
திருவெறும்பூர் 31, ஜனவரி 2026 : திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு. இருதய மேல்நிலைப் பள்ளியில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் அவர்களுடன் இணைந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தனர்.

முகாமின் போது பொதுமக்களுக்கு பல்வேறு உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதனுடன், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர்கள் வழங்கி, அவர்களுடன் உரையாடி நலன்களை கேட்டறிந்தனர்.
பொதுமக்களின் உடல்நல பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் திராவிட மாடல் அரசின் அணுகுமுறைக்கு சான்றாக, “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் செயல்பட்டு வருவதாகவும், மக்கள் பயன்பெறும் வகையில் இத்தகைய முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் இந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
கொரடாச்சேரியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஐந்தினிய விழா – ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கௌரவிப்பு
திருவாரூர் 31, ஜனவரி 2026 : தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஐந்தினிய விழா, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, ஓய்வுபெற்ற ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களை கௌரவித்தார்.

நிகழ்வின் போது, தலைமுறைகளை உருவாக்கிய ஆசிரியர்களின் சேவைகள் நினைவுகூரப்பட்டு, கல்வித் துறையின் வளர்ச்சிக்கு அவர்கள் செய்த அர்ப்பணிப்பு பாராட்டப்பட்டது. ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் அனுபவமும் பண்பாட்டும் இன்றைய கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கும் என அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். திராவிட மாடல் அரசின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர்களின் பங்களிப்பை மதித்து கௌரவிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், ஆசிரியர் சமுதாயத்தின் நலன் மற்றும் மரியாதை பாதுகாக்கப்படும் என்றும் இந்த விழாவில் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி மாவட்ட விளையாட்டுப் போட்டி வெற்றியாளர்களுக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் பரிசளிப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
திருச்சி 31, ஜனவரி 2026 : மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் திருச்சி மாவட்ட அளவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களின் திறமைக்கும் முயற்சிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்வின் போது, விளையாட்டின் மூலம் ஒழுக்கம், உடல் ஆரோக்கியம் மற்றும் தலைமைத் திறன் வளர்கிறது என்றும், மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டிலும் சிறந்து விளங்க அரசின் முழுமையான ஆதரவு தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். விளையாட்டு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் திராவிட மாடல் அரசின் அணுகுமுறைக்கு சான்றாக, இத்தகைய போட்டிகள் மாவட்ட அளவில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
