தமிழ்நாடு அரசுப் பள்ளியில் படித்த ஒரு முகம் குறித்த அறிமுகம் இது.
போராடுவதற்கும் வெற்றிபெறுவதற்கும் வசிக்கும் இடம், பொருளாதாரம் எதுவுமே தடை இல்லை என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அரசுப் பள்ளி மாணவி `எக்ஸ்பிரஸ் கார்த்திகா’.
படிப்பைத் தாண்டி விளையாட்டுத் துறையில் மாணவர்கள் சிறந்து விளங்க தமிழ்நாடு அரசு பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்குவதோடு வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் மாணவர்கள் பங்கு பெறுவதற்கான செலவுகளையும் அரசே ஏற்கிறது. வெற்றி பெறும் மாணவர்களைக் கௌரவித்து பொருளாதாரரீதியாக அவர்களை உயர்த்தும் வகையில் ஊக்கத்தொகைப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
ஒரு முகம் அறிமுகம் 1: ஒரு முகம் அறிமுகம்: அரசுப் பள்ளி யின் பெருமிதம் – ஹர்ஷினி நேத்ரா!
நம் அரசுப் பள்ளியின் பெருமிதம் கார்த்திகா!
சென்னை கண்ணகி நகரில் வசித்து வரும் இவர், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கார்த்திகா கபடிக் களத்தில் இறங்கினாலே கைத்தட்டலும் விசிலும் பறக்கும். கார்த்திகா என்றால் கபடி’,
கபடி என்றால் கார்த்திகா’ என்று மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
“கபடி தான் என்னுடைய உயிர். நான் ஒரு நேஷனல் பிளேயர். முன்பெல்லாம் கண்ணகி நகர் என்றாலே க்ரைம் ஏரியா என்று சொல்வார்கள். இப்போது கண்ணகி நகர் என்றால் கல்வி, விளையாட்டு என்று பாசிட்டிவாக மாறியிருக்கிறது. கண்ணகி நகரில் பிறந்ததை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். இந்த இடத்தில் இருக்கும்போதுதான் முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
படிப்பிற்குப் பள்ளி முக்கியம். என்னை முன்னேற்றுவதற்குப் பள்ளி நிறைய உதவி செய்திருக்கிறது. நான் அரசுப் பள்ளி மாணவி என்று சொல்வதில் பெருமையடைகிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரிடமிருந்து விருது வாங்கும்போது மிகவும் சந்தோஷப்பட்டேன். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் CM trophy, Khelo India National-ல் வெற்றி பெற்றதற்கு காசோலை வழங்கிக் கௌரவித்தார். அது எனது குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிங்கப்பூருக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றார். இந்த ஊக்கங்கள்தான் என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு தயார்செய்கிறது! என்கிறார் கார்த்திகா.

விடாமுயற்சியும் நம்பிக்கையும் இருந்தாலே எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் வெற்றி பெற்றுவிடலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கிறீர்கள் என்று நினைக்கவேண்டாம். உங்களை உயர்த்திட இங்கு அரசே இருக்கிறது
என் உறுதியாக கூறுகிறார் கார்த்திகா.
உலக அளவிலான விளையாடுப் போட்டிகளில் தமிழர்கள் தடம் பதிக்க வேண்டும் என்று மாணவப் பருவத்திலிருந்தே சிறப்பான திட்டங்களை வகுத்து வருகிறது தமிழ்நாடு அரசு. தடைகள் உடைத்து தடம் பதித்த மாணவி கார்த்திகா அரசுப் பள்ளியின் ஒரு முகம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையே!.

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr