திருச்சியில் முழங்கிய “ ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும் ” கோஷம்: தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் மாண்புமிகு கழகத்தலைவர்
திருச்சி 01, ஏப்ரல் 2026 : கழகத்தின் திருப்புமுனை நகரமான திருச்சியில், “ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற முழக்கம் எட்டுத்திக்கும் ஒலித்தது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

திராவிட மாடல் அரசின் மூலம் பல சாதனைத் திட்டங்களை வழங்கி, தலைநகர் சென்னைக்கே சவால்விடும் வகையில் திருச்சி மாவட்டத்தை தரம் உயர்த்தி வரும் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை பரிசளிப்போம் என திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சாரம், திருச்சி மாவட்டம் முழுவதும் தேர்தல் சூழலை தீவிரப்படுத்தி, கூட்டணிக் கட்சித் தொண்டர்களில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
திருச்சி 01, ஏப்ரல் 2026 : கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக முதன்மைச் செயலாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அவர்களின் தலைமையில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி (தெ) மாவட்ட தி.மு.க சார்பில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்றார். கூட்டத்தில், தேர்தல் பணிகள், கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வெற்றிக்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்: மாபெரும் வெற்றிக்கான உறுதி மொழி!
திருச்சி 02, ஏப்ரல் 2026 : திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு அவர்கள் கலந்து கொண்டு, தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.

கூட்டத்தில் உரையாற்றிய முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்,
“எப்போதும் மக்களுடன் களத்தில் இருந்து சேவையாற்றும் நம் கூட்டணியின் செயல்வீரர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால், வரவிருக்கும் தேர்தலில் மாபெரும் வெற்றியை மீண்டும் பதிவு செய்வோம்” என உறுதியுடன் தெரிவித்தார். இந்தக் கூட்டம், செயல்வீரர்களிடையே உற்சாகத்தையும், தேர்தல் பணிக்கான ஒருங்கிணைப்பையும் அதிகரித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
மணப்பாறை தொகுதியில் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்: மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமது அவர்கள் வெற்றி பெற ஒருங்கிணைப்பு அழைப்பு!
மணப்பாறை 02, ஏப்ரல் 2026 : திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அப்துல் சமது அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய தேவையான தேர்தல் பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கழக முதன்மைச் செயலாளர் திரு. கே.என். நேரு அவர்கள், கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மாவட்டச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. ஜோதிமணி, வெற்றி வேட்பாளர் திரு. அப்துல் சமது மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
