திருச்சியில் கழக மாநில மாநாட்டுப் பணிகளை அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைத்தனர்
திருச்சி 01, பிப்ரவரி 2025 : கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சியில் நடைபெறவுள்ள கழக மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாட்டு பணிகளை, கழக முதன்மைச் செயலாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களின் தலைமையில் இன்று அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில், மாநாட்டை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்த அனைத்து பணிகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. கழகத்தின் கொள்கைகள், சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும் என்பதே அனைவரின் இலக்காக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கூறினார்.
Also, “மாநாட்டின் வெற்றி கழகத்தின் வெற்றியாக அமைய வேண்டும்; அதற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம்” என அவர் உறுதியளித்தார். கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் மாநாட்டுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் சல்மா, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர்முன்னிலை வகிக்க உள்ளார்கள்.
திருச்சியில் மாநில அளவிலான யோகா போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி 01, பிப்ரவரி 2026 : திருச்சி மாவட்ட யோகா அமைப்பின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட மாநில அளவிலான யோகா போட்டியினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து, இதில் பங்கேற்ற யோகா வீரர், வீராங்கனைகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஆர்வத்தையும் திறமையையும் பாராட்டிய அமைச்சர், யோகா வளர்ச்சிக்காக இதுபோன்ற போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும் என்றும், அரசின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மனிதநேய மக்கள் கட்சியின் 18ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி தொடக்கம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
திருச்சி 01, பிப்ரவரி 2026 : மனிதநேய மக்கள் கட்சியின் 18ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, திருச்சி கிழக்கு மாவட்டம் மற்றும் காமராஜ் நகர் விளையாட்டு அணிகள் இணைந்து ஒருங்கிணைத்த 2ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை, SIT கல்லூரி மைதானத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து, போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், இளைஞர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் கட்டுப்பாடு, குழுப்பணி மற்றும் தலைமைத் திறன் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார் . இத்தகைய விளையாட்டு போட்டிகள் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதோடு, இளம் தலைமுறையினரை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார். போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர், வீரர்களின் திறமைகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.
திருவெறும்பூரில் Bothidharmar கோப்பை கராத்தே போட்டி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்
திருவெறும்பூர் 01, பிப்ரவரி 2026 : திருவெறும்பூர் தொகுதியில் Bothidharmar Martial Arts Academy சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட Bothidharmar கோப்பைக்கான கராத்தே போட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார். போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, பங்கேற்ற அனைத்து குழந்தைகளையும் பாராட்டினார்.

நிகழ்வில் பேசிய அமைச்சர், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகள் குழந்தைகளின் உடல் வலிமை, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் பயிற்சிகளாக உள்ளன எனக் குறிப்பிட்டார். இளம் வயதிலேயே விளையாட்டு மற்றும் தற்காப்புக் கலைகளில் ஈடுபடுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருவெறும்பூர் தொகுதி நவல்பட்டு அண்ணா நகர் மைதானத்தில் சீரணி அரங்கம் திறப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருவெறும்பூர் 01, பிப்ரவரி 2026 : திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு அண்ணா நகர் மைதானத்தில், ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.9 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சீரணி அரங்கத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் ஊராட்சி பகுதிகளில் விளையாட்டு மற்றும் பொதுப் பயன்பாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துவது இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்கும் சமூக ஒற்றுமைக்கும் உதவும் எனக் குறிப்பிட்டார். இத்தகைய அடிப்படை வசதிகள் மக்களின் தினசரி பயன்பாட்டை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய சீரணி அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டதையடுத்து, உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
திருவெறும்பூர் தொகுதி பாலாஜி நகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு

திருவெறும்பூர் 01, பிப்ரவரி 2026 : திருவெறும்பூர் தொகுதி பாலாஜி நகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்றார். 21வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்ற இந்த விழாவில், தங்களின் திறமைகளை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு அவர் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். சமூக ஒற்றுமையும் பாரம்பரிய பண்பாடும் இத்தகைய விழாக்களால் மேலும் வலுப்பெறும் என அவர் குறிப்பிட்டார்.
திருவெறும்பூரில் நடைபெற்ற விளையாட்டு தெரு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு
திருவெறும்பூர் 01, பிப்ரவரி 2026 : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து திருவெறும்பூரில் நடத்திய விளையாட்டு தெரு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், அன்போடு வரவேற்ற குழந்தைகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இத்தகைய நிகழ்வுகள் குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தையும் சமூக ஒற்றுமையையும் வளர்க்கும் என தெரிவிக்கப்பட்டது.
முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு
திருச்சி 02, பிப்ரவரி 2026 : திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அவர்களுடன் இணைந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, முன்னாள் மாணவர்களையும் நன்கொடையாளர்களையும் கௌரவித்தார். நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாணவர்களை மையமாகக் கொண்டு செயல்படும் இந்தப் பள்ளியின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்கால முன்னேற்றத்திற்கும் அரசு தொடர்ந்து துணை நிற்கும் என உறுதியளித்தார்.

விழாவில் தியாகராஜன் எம்.எல்.ஏ., முசிறி சப் கலெக்டர் திருமதி சுவாங்கி குந்தியா, முசிறி நகர்மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார், முன்னாள் மாணவரான வழக்கறிஞர் கலைச்செல்வன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
“ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்” நூல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீடு அமைச்சர் பெருமக்கள் பங்கேற்ப்பு
திருச்சி 02, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் திசைதோறும் திராவிடம் திட்டத்தின் கீழ், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு. சுப. வீரபாண்டியன் அவர்களின் “ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்” என்ற நூல், “Sociopolitical Movements of a Century in Tamil Nadu” எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலை பேராசிரியர் முனைவர் திருமிகு. குர்ஷித் பேகம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.

இந்நூல் புனித வளனார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் வெளியிட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், சமத்துவமின்மையை எதிர்த்து உரிமைகளுக்காக போராட வேண்டுமென்றால், நமது போராட்டங்களின் வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம் என்றும், அந்த வகையில் இந்த நூல் ஒரு சிறந்த ஆவணமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், நூலை வாசிக்கும் போது “பெரியார் முன்பை விடவும் இன்று அதிகம் தேவைப்படுகிறார்” என்ற உணர்வு மேலோங்கும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் தன்மான அடையாளத்திற்கு அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் Dravidian Model ஆட்சிக்கான உறுதியேற்பு
03, பிப்ரவரி 2026 : தமிழ்நாட்டின் தனித்த தன்மான அடையாளத்திற்கு அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் திருச்சி தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளுடன் ஊர்வலமாகச் சென்று திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாவட்டக் கழகச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

மொழித் திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை, ஒன்றிய அரசின் ஆதிக்கம் போன்ற இன்றைய சிக்கல்களை அன்றே உணர்ந்து, அதற்கான கொள்கை வழிகாட்டுதல்களை வகுத்துச் சென்ற பெருந்தகையாக பேரறிஞர் அண்ணா நினைவுகூரப்பட்டார்.
அவர் அமைத்த அடித்தளத்தின் பேரில்தான் தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து போராடி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார். மேலும், கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் Dravidian Model ஆட்சி மீண்டும் அமைய, பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் உறுதியேற்றார்.
திண்டுக்கல்லில் மாபெரும் அறிவியல் கண்காட்சி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வை
திண்டுக்கல் 03, பிப்ரவரி 2026 : திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் S.S. நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை இணைந்து Science, Technology & Startup Innovation Fest என்ற பெயரில் மாபெரும் அறிவியல் கண்காட்சியை ஒருங்கிணைத்துள்ளனர். திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் இந்த அறிவியல் கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவச் செல்வங்களும், பொது மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு, மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் மாதிரிகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசுகையில், “அறிவியல் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். மாணவச் செல்வங்களும் இளைஞர்களும் எளிய மக்களுக்கு பயன்படும் வகையிலான அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு, மாணவர்களை ஊக்குவித்து சிறப்பித்தார். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை சிந்தனைகளை வளர்க்கும் வகையில் அமைந்த இந்த கண்காட்சி மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த கல்வியாளர் முனைவர் ச.சீ. இராசகோபாலன் மறைவு – கல்வித்துறைக்கு பேரிழப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் புகழஞ்சலி
04, பிப்ரவரி 2026 : மூத்த கல்வியாளரும் கல்விச் சிந்தனையாளருமான முனைவர் திரு. ச.சீ. இராசகோபாலன் அவர்களின் மறைவு தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி குழுவின் உறுப்பினராக இருந்து, கல்விச் சீர்திருத்தங்களுக்கு முக்கிய பங்காற்றியவர் அவர்.

“தேர்வு என்பது கற்றலை மட்டுமே மதிப்பிடுவது இல்லை; கற்பித்தலையும் மதிப்பிடுவது” என்ற அவரது கருத்து, கல்வித்துறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு வழிகாட்டும் சிந்தனையாக திகழ்கிறது. மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மையமாகக் கொண்டு, கற்றல்–கற்பித்தல் முறைகள் மேம்பட வேண்டும் என்பதில் அவர் எப்போதும் உறுதியாக இருந்தார்.
முன்னோடித் திட்டங்களுக்கு வழிகாட்டும் அதே வேளையில், மாணவர்களின் நலனை முன்னிலைப்படுத்தி தேவையான இடங்களில் விமர்சிக்கவும் தயங்காத கல்வியாளர் அய்யா ச.சீ. இராசகோபாலன் அவர்களின் மறைவுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆழ்ந்த புகழஞ்சலி செலுத்தினார். அவரது கல்விச் சேவையும் சிந்தனைகளும் தலைமுறைகள் தோறும் கல்வித்துறைக்கு வழிகாட்டியாக நிலைத்திருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கல் – ‘என் கனவு என் எதிர்காலம்’ இணையதளம் தொடக்கம்
திருச்சி 04, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தீர்வு காணப்பட்ட மனுக்களின் அடிப்படையில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய பயனாளிகளுக்கு “சமூக பாதுகாப்புத் திட்ட” பயன்களையும் வழங்கினார். இதனுடன், இளைஞர்களின் கனவுகளையும் எதிர்கால இலக்குகளையும் வழிநடத்தும் வகையில் உருவாக்கப்பட்ட “என் கனவு என் எதிர்காலம்” என்ற இணையதளத்தினை திண்டிவனத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அவர்களுடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
மக்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் நிர்வாகம், சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டங்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை நோக்கி வழிகாட்டும் முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் மக்கள் நல அரசின் உறுதிப்பாட்டை இந்நிகழ்வுகள் வெளிப்படுத்தின.
சூரியூர் சல்லிக்கட்டு மைதானம் அமைப்பு – முதல்வர், துணை முதல்வருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நன்றி
05, பிப்ரவரி 2026 : திருவெறும்பூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றித் தந்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சூரியூர் பகுதியில் சிறப்பான முறையில் சல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்கம் முதலே இந்த திட்டத்திற்கு உறுதுணையாக இருந்து, தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் நிரந்தர சல்லிக்கட்டு மைதானம் அமைத்துக் கொடுத்த மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, தனது தொகுதி மக்களின் சார்பாகவும், சல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த மைதானம், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டைக் காக்கும் வகையிலும், பாதுகாப்பான சூழலில் வீரர்கள் பங்கேற்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளதெனவும், இது எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு ஊக்கமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு – திராவிட மாடல் 2.0 மூலம் தமிழ்நாட்டை தொடர்ந்த வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றுவோம்” என உறுதியேற்றனர்
தஞ்சாவூர் 05, பிப்ரவரி 2026 : முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை, கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்த நிகழ்வில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தஞ்சை (ம) மாவட்டம், பூதலூர் (தெ) ஒன்றிய கழகத்தின் சார்பில் சானுரப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையின் முன்பு, “திராவிட மாடல் 2.0 அமைவதற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம். தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்” என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உறுதியேற்றார்.
இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சித் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழ்நாட்டின் சமூகநீதி, மொழி உரிமை மற்றும் வளர்ச்சிப் பாதைக்கு கலைஞர் அவர்கள் வழங்கிய தொண்டை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கன்னிமாரா நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு – முற்போக்கு சிந்தனைகளின் உறுதியான அடையாளம்
06, பிப்ரவரி 2026 : சமூக மாற்றத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் சிலை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் சென்னை கன்னிமாரா பொது நூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மண்ணில் முற்போக்கு, சமத்துவ சிந்தனைகளே வேரூன்றியுள்ளன; இங்கு பிற்போக்கு, பிரிவினைவாதங்களுக்கு இடமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு எடுத்துக்காட்டும் அடையாளமாக, திராவிட மாடல் அரசால் கார்ல் மார்க்ஸ் சிலை நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தன் தனிப்பட்ட வாழ்வின் வறுமையைப் பற்றிச் சிந்திக்காமல், உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்த தன்னை அர்ப்பணித்த தியாகப் பெருமகனாக கார்ல் மார்க்ஸ் திகழ்ந்தார். குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்து, அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என வலியுறுத்திய அவரது சிந்தனைகள் இன்றும் சமூக முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக உள்ளன.
மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் உயரிய சிந்தனைகளைப் போற்றி, சமூகநீதி மற்றும் சமத்துவம் நிலைநிறுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயில் அம்மன் புதிய மரத்தேர் திருப்பணி – ரூ.57.80 கோடி மதிப்பீட்டில் துவக்கம்
திருச்சி 06, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயில் அம்மன் புதிய மரத்தேர் திருப்பணி ரூ.57.80 கோடி மதிப்பீட்டில் துவக்கப்பட்டுள்ளது.
இந்த திருப்பணியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. இனிகோ இருதயராஜ் அவர்கள் இணைந்து துவக்கிவைத்து, அதற்கான அரசாணையை வழங்கினார்கள். இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மற்றும் மண்டல குழுத் தலைவர் திரு. மு. மதிவாணன் அவர்களும் கலந்துகொண்டார்.

திருச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு, அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே. சேகர் பாபு அவர்களுக்கும், மக்கள் நலன் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகள் திருச்சியின் வளர்ச்சிப் பாதைக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.
மேலும், திருச்சி மக்களின் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர் அவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம் திறப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
திருச்சி 06, பிப்ரவரி 2026 : மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருச்சி தெப்பக்குளம் பகுதியில் , நத்திக்கோயில் தெருவில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்டிடத்தைத் திறந்துவைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. இனிகோ இருதயராஜ் அவர்கள் மற்றும் திருச்சி கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மற்றும் மண்டல குழுத் தலைவர் திரு. மு. மதிவானன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.
பொதுமக்களுக்கு மேம்பட்ட மற்றும் தரமான சுகாதார வசதிகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் கட்டிடம், அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் தேவையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசின் மக்கள் நல முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது சுகாதார சேவைகளின் தரத்தை மேலும் உயர்த்தும் என்றும் குறிப்பிடப்பட்டது.
திருவெறும்பூர் தொகுதியில் நலத்திட்டங்கள் – ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு
திருச்சி 06, பிப்ரவரி 2026 : மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், தமது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கிவைத்து சிறப்பித்தார். காட்டூர் பகுதியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தைத் திறந்துவைத்து சிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, அரியமங்கலம் பகுதியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தையும், மலைக்கோட்டை வ.உ.சி. நகரில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தையும், பொன்மலை ஜே.ஜே. நகரில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தையும் மாண்புமிகு அமைச்சர் திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
பொதுமக்களுக்கு அடிப்படை மற்றும் மேம்பட்ட சுகாதார சேவைகளை எளிதாக வழங்கும் நோக்கில் இந்த நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் அருகாமையில் கிடைக்க வழிவகுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
திருச்சியில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா – 10 மாவட்டங்களுக்கு 5,742 கிட்டுகள் வழங்கல்
திருச்சி 06, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற சிறப்பான விழாவில் கலந்து கொண்டு, 10 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளுக்காக 5,742 கலைஞர் விளையாட்டு உபகரணக் கிட்டுகளை வழங்கினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் அவர்கள், உடலையும் மனதையும் வலுப்படுத்தி, விளையாட்டு துறையின் மூலம் நாட்டிற்கே பெருமை சேர்க்கும் இளைஞர்களை உருவாக்குவதே அரசின் நோக்கம் எனத் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்த பெருமைமிகு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, விளையாட்டின் மூலம் உடல் மற்றும் மன வலிமையை வளர்த்து, நாட்டிற்கே பெருமை தேடித்தரும் இளைஞர்களை உருவாக்கும் இம்முயற்சி காலத்திற்கேற்ற ஒரு முக்கியமான முன்னெடுப்பு எனக் குறிப்பிட்டார்.
மணப்பாறை மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு – ரூ.14 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது திராவிட மாடல் அரசு
மணப்பாறை 06, பிப்ரவரி 2026 : மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு திராவிட மாடல் அரசு சிறப்பான தீர்வை வழங்கியுள்ளது. மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நிலவிய நிர்வாக சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்த கோரிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக ரூ.14 கோடி மதிப்பிலான பயிர்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் மற்றும் நகைக்கடன் பெற்றவர்கள் உள்ளிட்ட மொத்தம் 3,595 பேரின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு பெரும் நிவாரணம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கடன் தள்ளுபடிக்கான அரசாணைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். அதோடு, புதிதாக 20 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன்களும், 38 நபர்களுக்கு கால்நடை பராமரிப்பு கடன்களும் வழங்கப்பட்டு, கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளுக்கு புதுப்பொலிவு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, மணப்பாறை தொகுதி மக்களின் சார்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தொடக்கம் முதலே துணை நின்ற மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் துறையின் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். விழாவில் அமைச்சர் கே.என். நேரு அவர்கள் மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது அவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
திருவெறும்பூரில் 120 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
திருவெறும்பூர் 08, பிப்ரவரி 2026 : திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட 120 கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா எழில் நகரில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி அவர்கள் தலைமை தாங்கினார். இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், அவரது மனைவி ஜனனி அவர்கள் மற்றும் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தகுமார் அவர்கள் முன்னிலை வகித்தனர்.

விழாவைத் தொடர்ந்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் நித்தியா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் முடிவில், திருவெறும்பூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கார்த்திகா அவர்கள் நன்றி தெரிவித்தார். கர்ப்பிணி தாய்மார்களின் நலன், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இச்சமுதாய வளைகாப்பு விழா அமைந்தது.
கீழக்குமரேசப்புரத்தில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு – பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உத்தரவு
திருவெறும்பூர் 08, பிப்ரவரி 2026 : திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குமரேசப்புரத்தில், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு நிதியின் கீழ் ரூ.9.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேற்று திறந்து வைத்தார்.

இந்த விழாவிற்கு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) பாலாஜி அவர்கள் தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் போது அப்பகுதி மக்கள், கடந்த 30 ஆண்டுகளாக சுமார் 300 குடும்பங்கள் இந்த பகுதியில் வசித்து வருவதாகவும், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்றும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மக்களுக்கு பட்டா பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மக்கள் தேவைகளை நேரடியாக கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசின் உறுதிப்பாட்டை இந்நிகழ்வு வெளிப்படுத்தியது.
கூத்தப்பாரில் மாபெரும் பொங்கல் மாட்டு வண்டி போட்டி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்
திருச்சி 08, பிப்ரவரி 2026 : திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், கூத்தப்பார் கிராம கமிட்டி மற்றும் பேரூராட்சித் தலைவர் ஒருங்கிணைத்த பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், பாரம்பரிய விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர், போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர்களை பாராட்டினார். பொங்கல் பண்டிகையை மக்களுடன் இணைந்து கொண்டாடும் விதமாக அமைந்த இந்த மாட்டு வண்டி போட்டியில், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டதற்க்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அவர்களுக்கு ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் நன்றி அறிவிப்பு மாநாடு
சென்னை 08, பிப்ரவரி 2026 : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டுகால நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) செயல்படுத்தப்பட்டதற்காகவும், பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வூதிய உயர்வு, குடும்ப ஓய்வூதியம், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டதற்காகவும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது.

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏற்புரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “உங்களின் கோரிக்கைகள், கனவுகள், எதிர்பார்ப்புகளை ‘திராவிடமாடல் 2.0’ ஆட்சியிலும் நிச்சயம் தொடர்ந்து நிறைவேற்றுவோம்” என உறுதியளித்தார்.
இந்த மாநாட்டில் மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் ஜாக்டோ–ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் எதிர்கால உறுதியை முன்னிலைப்படுத்தும் அரசின் செயல்பாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
12-ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடக்கம் – நந்தனம் அரசு பள்ளி மாணவர்களைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து
சென்னை 09, பிப்ரவரி 2026 : 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், சென்னை நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று மாணவச் செல்வங்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொண்டு சிறப்பாக வெற்றி பெற வேண்டும் என அமைச்சர் ஊக்கமளித்தார். மாணவர்களின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக நிற்கும் வகையில் அரசு தொடர்ந்து பல்வேறு கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசுப் பள்ளி மாணவர் கதிர்நிலவன் எழுதிய “நோர்டிக் மொழிகள்” நூல் வெளியீடு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து
சென்னை 09, பிப்ரவரி 2026 : அரசுப் பள்ளி மாணவர் கதிர்நிலவன் விஜயசங்கர் அவர்கள் எழுதிய “நோர்டிக் மொழிகள்” என்ற நூலை, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டு, நூலாசிரியருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் பேசுகையில், “வளரும் பருவத்திலேயே மொழி குறித்த புரிதல் அவசியம். அதற்கு கதிர்நிலவன் அவர்களும், இந்நூலும் சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றன” என்று பாராட்டினார். மொழிகளின் அறிவு உலகப் பார்வையை விரிவாக்கும் என்பதையும், மாணவர்கள் பல மொழிகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த நூலை எழுதிய கதிர்நிலவன் விஜயசங்கர் அவர்களுக்கும், நூலை வெளியிட்ட “ஆழி” பதிப்பகத்தாருக்கும், நூல் உருவாக்கத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் அமைச்சர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அயல் நாட்டு கல்விச் சுற்றுலா: மலேசியா செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களை அமைச்சர் அன்பில் மகேஸ் வழியனுப்பிவைத்தார்
சென்னை 09, பிப்ரவரி 2026 : கலைத் திறன் போட்டிகளில் சிறந்து விளங்கிய அரசுப் பள்ளி மாணவர்கள் 42 பேர், அயல் நாட்டு கல்விச் சுற்றுலா திட்டத்தின் கீழ் மலேசியாவிற்கு பயணிக்க உள்ள நிலையில், அவர்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், மாணவர்களின் தனித்திறன்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும், உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில வேண்டும் என்ற தன்னம்பிக்கையை மாணவர்களின் மனங்களில் விதைப்பதே அயல் நாட்டு கல்விச் சுற்றுலாவின் அடிப்படை இலக்கு என்றும் தெரிவித்தார்.
அயல் நாட்டு கல்விச் சுற்றுலா என்பது வெறும் வெளிநாட்டு பயணம் மட்டுமல்ல; அது பல அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்நாள் கனவுகளுக்கான நுழைவு வாயிலாக விளங்குகிறது. பிற நாடுகளின் கல்வி முறை, பண்பாடு, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றை நேரில் கண்டு அறியும் இந்த அனுபவம், மாணவர்களின் சிந்தனை வட்டத்தை விரிவுபடுத்தி, எதிர்கால இலக்குகளை உயர்வாக நிர்ணயிக்க உதவும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உலகத் தரத்திலான வாய்ப்புகளை உருவாக்கி வழங்கும் திராவிட மாடல் அரசின் இந்த முயற்சி, சம வாய்ப்பு கல்விக்கான உறுதியான அடையாளமாக விளங்குகிறது என கல்வியாளர்கள் பாராட்டினர்.
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா: கல்வி வளர்ச்சிக்கு அமைச்சர்கள் உறுதி
பட்டுக்கோட்டை 09, பிப்ரவரி 2026 : பட்டுக்கோட்டை நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் கோவி செழியன் அவர்களுடன், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, நூற்றாண்டு வளைவு, நினைவுத்தூண் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் ஆகியவற்றை இணைந்து திறந்து வைத்தனர்.

விழாவின் ஒரு பகுதியாக, இயற்கை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மாணவர்கள் அமைத்திருந்த கண்காட்சியை அமைச்சர்கள் பார்வையிட்டு பாராட்டினர். தொடர்ந்து, பள்ளியின் வரலாறும் கல்விச் சாதனைகளும் பதிவான நூற்றாண்டு விழா மலரையும் வெளியிட்டனர்.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் சிறப்புமிகு இப்பள்ளியின் உட்கட்டமைப்பு மேம்பாடு, கல்வித் தர உயர்வு மற்றும் மாணவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்தனர். அரசுப் பள்ளிகளை தரமான கல்வியின் மையங்களாக மாற்றும் அரசின் தொடர் முயற்சிகளுக்கு இந்த விழா ஒரு சான்றாக அமைந்தது.
தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் – திருச்சியில் விரிவாக்கம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருவெறும்பூர் 09, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் முன்னோடித் திட்டத்தை 25 மாநகராட்சிகள், 145 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1,29,689 தூய்மைப் பணியாளர்களுக்காக விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தினசரி சேவைபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு, மாண்புமிகு முதலமைச்சரின் இந்த மனிதநேயத் திட்டத்தை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து, நேரடியாக உணவு பரிமாறினார்.
மேலும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அன்றாடம் சேவையாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தூய்மைப் பணியாளர்களின் நலனையும், அவர்களின் உழைப்புக்கு உரிய மரியாதையையும் உறுதி செய்யும் வகையில், திராவிட மாடல் அரசின் சமூகநலக் கொள்கைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கீழ்கட்டளை ஹோலி பேமிலி மெட்ரிக் பள்ளி 36வது ஆண்டு தொடக்கம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
சென்னை 10, பிப்ரவரி 2026 : சென்னையை அடுத்த கீழ்கட்டளை பகுதியில் இயங்கிவரும் ஹோலி பேமிலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 36வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு, அப்பள்ளியின் இன்றைய தொடக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், “ஒழுக்கமும் கல்வியும் வாழ்க்கையின் அடித்தளம். இவற்றை வழிகாட்டியாக கொண்டு உங்களை வளர்த்துக் கொண்டு, நீங்கள் படித்த பள்ளிக்கும், உங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாணவச்செல்வங்கள் அறமுள்ள மனிதர்களாக உருவாக வேண்டும்” என அறிவுறுத்தினார்.
மேலும், கல்வி என்பது வேலை வாய்ப்பிற்கான பாதை மட்டுமல்ல; சமூக பொறுப்புணர்வும் மனிதநேயமும் வளர்க்கும் சக்தி என குறிப்பிட்ட அமைச்சர், மாணவர்கள் தங்களின் திறமைகளை முழுமையாக பயன்படுத்தி சமூகத்திற்கு பயனளிக்கும் குடிமக்களாக உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவ–மாணவிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மலேசியா சுற்றுப்பயணம்: கே.எல்.டவரில் இருந்து கோலாலம்பூரை கண்டுகளித்த அரசுப் பள்ளி மாணவச்செல்வங்கள்
10, பிப்ரவரி 2026 : நமது அரசுப் பள்ளி மாணவச்செல்வங்கள் மலேசியாவில் முதல்நாள் சுற்றுப்பயணத்தை உற்சாகமாகத் தொடங்கியுள்ளனர். மலேசியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் கே.எல். டவரை அவர்கள் பார்வையிட்டு, அங்கு அமைந்துள்ள கட்டடக்கலை மற்றும் அறிவியல் அதிசயங்களை நேரில் உணரும் அனுபவத்தை பெற்றனர்.

கோலாலம்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 421 மீட்டர் உயரமுள்ள கே.எல். டவரின் உச்சியில் இருந்து, 360 டிகிரி கோணத்தில் கோலாலம்பூர் நகரை மாணவச்செல்வங்கள் கண்டுகளித்தனர். உயரத்திலிருந்து நகரத்தின் அமைப்பையும் வளர்ச்சியையும் பார்வையிட்டது அவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அனுபவமாக அமைந்தது.
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேச் பொய்யாமொழி அவர்கள் காணொளி வாயிலாக மாணவச்செல்வங்களுடன் உரையாடி, அவர்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் தெரிவித்தார். கல்வியுடன் கூடிய உலக அனுபவம் மாணவர்களின் சிந்தனையை விரிவுபடுத்தும் என்றும், எதிர்கால இலக்குகளை உயர்த்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி பொன்விழா நிறைவுக் கொண்டாட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை 10, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துகளுடன், காயிதே மில்லத் ஆடவர் கல்லூரியின் பொன்விழா நிறைவுக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. சென்னை மேடவாக்கத்தில் அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மா. சுப்ரமணியன் அவர்கள், அமைச்சர் கோவி செழியன் அவர்கள் ஆகியோருடன், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, அமைச்சர்கள் பொன்விழா மலரினை வெளியிட்டு உரையாற்றினார்கள். கல்வி வளர்ச்சிக்காகவும், சிறுபான்மையின மக்களின் நலன் மேம்பாட்டுக்காகவும் திராவிடமாடல் அரசு தொடர்ந்து ஆற்றி வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், உயர்கல்வி அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சமூக சமத்துவத்தை வலுப்படுத்தும் என்றும், கல்வி வழியாக சமூகம் முன்னேற வேண்டும் என்பதே அரசின் திடமான இலக்கு என்றும் அவர் தெரிவித்தார். இவ்விழாவில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பொன்விழா கொண்டாட்டத்தை சிறப்பித்தனர்.
பல்லாவரத்தில் ஆர்க்கிட் இண்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா – புனித டோம்னிக் பள்ளி 125ஆம் ஆண்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு
சென்னை 10, பிப்ரவரி 2026 : பல்லாவரத்தில் செயல்பட்டு வரும் ஆர்க்கிட் இண்டர்நேஷனல் பள்ளியின் ஆண்டு விழாவில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார். அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், கல்வி, விளையாட்டு மற்றும் பல்துறை திறமைகளில் சிறந்து விளங்கிய மாணவச் செல்வங்களுக்கு அமைச்சர் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாணவர்களின் முயற்சி மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, சென்னை பரங்கிமலை பகுதியில் அமைந்துள்ள புனித டோம்னிக் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 125ஆம் ஆண்டு விழாவிலும் அமைச்சர் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். நூற்றாண்டை கடந்த கல்விச் சேவையை வழங்கி வரும் இப்பள்ளியின் பணியை பாராட்டிய அவர், மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை கண்டறிந்து வளர்த்துக் கொண்டு, பேராற்றல் மிக்க ஆளுமைகளாக சமூகத்தில் உயர வேண்டும் என்று வாழ்த்துகள் தெரிவித்தார். இவ்விழாக்களில் கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்தனர்.
இந்தியா டுடே TN ரவுண்ட்டேபிள்: திராவிட மாடல் கல்விப் பயணம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் விளக்கம்
சென்னை 11, பிப்ரவரி 2026 : இந்தியா டுடே TN ரவுண்ட்டேபிள் நிகழ்ச்சியில் பிரமோத் மாதவ் மற்றும் அக்ஷிதா என் ஆகியோருடன் இணைந்து தமிழ்நாட்டின் கல்விப் பயணம் குறித்த விரிவான கலந்துரையாடலில் பங்கேற்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

திராவிட மாடல் அரசின் கீழ் தமிழ்நாட்டில் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கியத் திட்டங்கள் மற்றும் புதுமையான முயற்சிகள் குறித்து அவர் விளக்கமளித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு தலைமையின் கீழ், கற்றல் தரத்தை உயர்த்துதல், மாணவர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு மாணவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய இலக்குகளுடன் அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், இருமொழிக் கொள்கையில் அரசின் தெளிவான நிலைப்பாட்டை மறுபடியும் வலியுறுத்தினார். உயர்கல்வி மற்றும் உலகளாவிய தொழில் வாய்ப்புகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம் என்றும், இந்தி திணிப்பை உறுதியாக எதிர்க்கும் நிலைப்பாட்டில் அரசு தொடர்ந்தும் நிலைத்து நிற்கும் என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றப் பயணத்தை தேசிய அளவில் எடுத்துரைக்கும் வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் கல்விச் சுற்றுலா: 3வது நாளில் மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் காணொலி வாயிலாக உரையாடல்
12, பிப்ரவரி 2026 : மலேசியாவிற்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ள தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவச் செல்வங்கள், தங்களது பயணத்தின் 3வது நாளாக பல்வேறு கல்வி மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் காணொலி வாயிலாக மாணவர்களுடன் உரையாடினார். பயண அனுபவங்கள், அங்குள்ள கல்வி அமைப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பண்பாட்டு பரிமாற்றங்கள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்து, அவர்களை ஊக்குவித்தார்.
உலகளாவிய பார்வையை உருவாக்கும் இத்தகைய கல்விச் சுற்றுலாக்கள், மாணவர்களின் அறிவுப் பரப்பை விரிவுபடுத்தி, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதையும் அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், வெளிநாட்டு அனுபவங்களைப் பயன்படுத்தி கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டுமென மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.
பாரத சாரண சாரணியர் இயக்கத் தலைமையகத்திற்கு புதிய கட்டிடம்: பணிகளை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு
சென்னை 12, பிப்ரவரி 2026 : தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்திற்காக சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள தலைமை அலுவலக வளாகத்தில் நவீன தரத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் முன்னேற்றம், கட்டிடத்தின் வடிவமைப்பு, மாணவர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.
புதிய கட்டிடம், பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தி, மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் தலைமைத்துவ வளர்ச்சிக்கு துணைபுரியும் வகையில் அமையும் என அமைச்சர் தெரிவித்தார். பணிகளை தரமான முறையிலும், குறிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்: லேடி வெலிங்டன் பள்ளியில் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் வாழ்த்து
சென்னை 12, பிப்ரவரி 2026 : மாநிலம் முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாணவச் செல்வங்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். செய்முறைத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு சிறப்பாக தேர்ச்சி பெற வேண்டும் என அவர் ஊக்கமளித்தார்.
மேலும், அரசு பள்ளிகளில் கற்றல் சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளதையும், மாணவர்களின் திறன்களை வளர்க்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பொதுத்தேர்வில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று எதிர்கால இலக்குகளை அடைய மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
VISTA Ideathon நிறைவு விழா: மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
சென்னை 12, பிப்ரவரி 2026 : பள்ளி மாணவச் செல்வங்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்து, பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நோக்கில் Times of India, Vellore International School மற்றும் EDII-TN இணைந்து ஒருங்கிணைத்த VISTA Ideathon நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின் நிறைவு விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று, மாணவர்களின் அறிவியல் படைப்புகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார். இளம் அறிவாளிகளின் சிந்தனைத் திறன், சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கும் முயற்சி ஆகியவற்றை அவர் பாராட்டினார்.
தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பாங்கை வளர்த்து, எதிர்கால விஞ்ஞானிகள் மற்றும் புதுமையாளர்களை உருவாக்கும் அடித்தளமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொன்னனியாறு அணை – கண்ணூத்து ஏரிக்கு காவேரி உபரிநீர்: நிதி வழங்க ஒன்றிய அமைச்சரிடம் மனு
12, பிப்ரவரி 2026 : திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், “பொன்னனியாறு அணை மற்றும் கண்ணூத்து ஏரிக்கு காவேரி ஆற்றின் உபரிநீரை கொண்டுவர வேண்டும்” என நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா அவர்கள், மாண்புமிகு ஒன்றிய நீர்வள மேலாண்மைத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து, இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியை வழங்கிடக் கோரியும், திட்டத்தின் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கி மனு அளித்துள்ளார்.
மேலும், ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சிக்காக, திருச்சி தெற்கு மாவட்டக் கழகம் சார்பிலும், விவசாயிகள் சார்பிலும் கவிஞர் சல்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
“திராவிட மாடல் அரசின் அதிரடி முடிவு” கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்: 1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 வரவு – முதலமைச்சர் அறிவிப்பு
13, பிப்ரவரி 2026 : தமிழ்நாட்டு மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத்தொகை என்பது தாம் அளித்த உறுதிமொழி என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேர்தலை காரணமாகக் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்க முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறிய முதலமைச்சர், அதனை முறியடிக்கும் வகையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 இன்று வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதன் மூலம் 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் இன்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. “வெல்லும் தமிழ்ப் பெண்களின் ஆதரவோடு அடுத்ததும் நாங்கள்தான் வெல்வோம். திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம். இது என் சகோதரிகளுக்கு நான் அளிக்கும் வாக்குறுதி,” என முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க முயன்றவர்கள் தேர்தலை காரணமாகக் காட்டி பெண்களுக்கான உரிமைத்தொகையையும் தடுக்க நினைத்தார்கள். ஆனால் நமது முதலமைச்சர் அவர்கள் முந்திக்கொண்டு, தமிழ்நாட்டு பெண்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை வழங்கியுள்ளார்,” என தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
9,801 பேருக்கு பணி நியமன ஆணைகள்: 1,892 பேர் பள்ளிக் கல்வித்துறைக்கு – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்
சென்னை 13, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 நபர்களுக்கு ஜவகர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். இந்த நியமனங்களில் 1,892 நபர்கள் பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்ற உள்ளனர். இதன் மூலம் அரசு பள்ளிகளில் மனிதவளத்தை வலுப்படுத்தும் முயற்சி மேலும் வலுவடைந்துள்ளது.

மேலும், முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் இதுவரை 12,894 நபர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
துறையின் வளர்ச்சிக்கும், கல்வி முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் அமைச்சர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மலேசியா கல்விச் சுற்றுலா – 4வது நாள்: Albukhary International பல்கலைக்கழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள்
13, பிப்ரவரி 2026 : தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்கள் மலேசியாவில் நடைபெற்று வரும் கல்விச் சுற்றுலாவின் 4வது நாளில், Albukhary International University பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டனர்.
அங்கு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடி, உயர்கல்வி வாய்ப்புகள், பாடத்திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு கல்வி அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தனர். வெளிநாட்டு பல்கலைக்கழக சூழல், கல்வி வளங்கள் மற்றும் சர்வதேச வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் நேரடியாக அறிந்துகொண்டனர்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாணவர்களுடன் தொடர்புகொண்டு பேசியதுடன், “மலேசியா வருகை தந்துள்ள நம் மாணவச் செல்வங்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குங்கள்” என அங்குள்ள மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
உலகளாவிய உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து நேரடி அனுபவம் பெறும் இந்த கல்விச் சுற்றுலா, அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்கால இலக்குகளை விரிவுபடுத்தும் முக்கியமான முயற்சியாக அமைந்துள்ளது.
திருவெறும்பூரில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்
திருவெறும்பூர் 13, பிப்ரவரி 2026 : மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பொதுநலத் திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ (One Stop Centre) திறந்து வைக்கப்பட்டது. இந்த மையம் மூலம் மாற்றுத் திறனாளிகள் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வசதி உருவாகியுள்ளது.

மேலும், நவல்பட்டு ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார நிலையமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனால் அந்தப்பகுதி மக்களுக்கு மேம்பட்ட சுகாதார சேவைகள் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
காந்தலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி குமரேசபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றிலும் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
அதேபோல், பனையக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வைப்பறையுடன் கூடிய சமையல் கூடமும் திறந்து வைக்கப்பட்டது. இந்த வசதி மூலம் மாணவர்களுக்கு சத்தான உணவு சீராக வழங்கப்படுவதற்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த திட்டங்கள் மூலம் திருவெறும்பூர் தொகுதியில் கல்வி மற்றும் சுகாதார துறைகள் மேலும் வலுப்பெறுகின்றன.
திருவெறும்பூரில் புதிய கழிவறைகள் மற்றும் அடிப்படை வசதி பணிகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அடிக்கல் நாட்டினார்
திருவெறும்பூர் 13, பிப்ரவரி 2026 : திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் கலந்து கொண்டு புதிய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

நவல்பட்டு அண்ணா நகர் – வடக்கில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, பக்தவத்சல நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பத்தாளப்பேட்டை ஊராட்சி செட்டியார்பேட்டையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் குவளக்குடி ஊராட்சி வீதிவடங்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் புதிய கழிவறைகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த வசதி மாணவர்கள் சுகாதாரமான சூழலில் கல்வி கற்க உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், பழங்கனாங்குடி ஊராட்சி எம்.எம்.சிட்டியில் பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாக காத்திருக்க வசதி ஏற்படும்.
அதேபோல், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி கணேசபுரத்தில் மழைநீர் வடிகால் வசதி அமைக்கும் பணியும், வேங்கூர் ஊராட்சி கலைஞர் நகரில் சீரணி அரங்கம் அமைக்கும் முதற்கட்ட பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த பணிகள் நிறைவு பெறும் போது, திருவெறும்பூர் தொகுதியில் கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த அடிப்படை வசதிகள் மேலும் வலுப்பெறும் என அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அருணாச்சலம் குடியிருப்பில் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் – பல்நோக்கு கட்டடம் திறப்பு விழா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
திருச்சி 14, பிப்ரவரி 2026 : திருச்சி மாநகராட்சியின் வார்டு 33-க்கு உட்பட்ட அருணாச்சலம் குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மாமன்ற உறுப்பினர் அலுவலகம் – பல்நோக்கு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த புதிய கட்டடம் அர்ப்பணிக்கப்பட்டது.

இக்கட்டடம் மாமன்ற உறுப்பினர் அலுவலகமாக மட்டுமல்லாது, பொதுமக்கள் சந்திப்பு, சிறிய அளவிலான கூட்டங்கள் மற்றும் சமூகநல நிகழ்வுகள் நடத்தும் பல்நோக்கு மையமாகவும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தப்பகுதி மக்களுக்கு அரசு சேவைகள் எளிதில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
நிகழ்ச்சியில் உள்ளூர் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். புதிய கட்டடம் அருணாச்சலம் குடியிருப்பு பகுதியில் வளர்ச்சி மற்றும் மக்கள் நல சேவைகளுக்கு மேலும் ஊக்கமாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
திருவெறும்பூரில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் தொடக்கம் – நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருவெறும்பூர் 14, பிப்ரவரி 2026 : திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் வட்டார மக்களுக்காக “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் வேங்கூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.
முகாமில் முதியோருக்கான மருந்துப் பெட்டகங்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இந்த உதவிகள் மூலம் பொதுமக்களின் உடல்நல பாதுகாப்பு மற்றும் தாய்மை நலன் மேம்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு சிறப்பு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. இதனால் அவர்கள் தன்னிறைவு வாழ்க்கை மேற்கொள்ளவும், அன்றாட தேவைகளை சுயமாக நிறைவேற்றவும் வசதி ஏற்படும் என கூறப்பட்டது.
நிகழ்ச்சியின் போது அமைச்சர் மருத்துவ முகாமின் ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு, மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த முகாம் திருவெறும்பூர் வட்டார மக்களுக்கு சிறப்பான சுகாதார சேவைகளை வழங்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
“என் ஊர்; என் கனவு” – Vision 2030 மாவட்ட கலந்துரையாடல் தொடக்கம் திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உரை
திருச்சி 14, பிப்ரவரி 2026 : மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் கீழ் ‘என் ஊர்; என் கனவு’ Tiruchirapalli District – Vision 2030 எனும் மாவட்ட அளவிலான கலந்துரையாடல் நிகழ்வு கலையரங்கத்தில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்த நிகழ்வை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். தனது உரையில், திராவிட மாடல் அரசின் சாதனைகள், சமூகநீதி நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு முன்னெடுப்புகளை விரிவாக விளக்கினார்.

மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான மக்களின் கனவுகளை பதிவு செய்து, 2030-ம் ஆண்டை நோக்கி திட்டமிட்ட முன்னேற்றப் பாதையை வகுப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என அமைச்சர் தெரிவித்தார். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்து எடுத்துக்கூறிய அவர், மக்கள் பங்கேற்பே நல்லாட்சியின் அடிப்படை என வலியுறுத்தினார்.
நிகழ்வில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறையினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்துகொண்டனர். Vision 2030 நோக்கில் திருச்சி மாவட்டத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த கலந்துரையாடல் அமைகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் மூன்று மாமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் திறப்பு – புதிய மின்மாற்றி பயன்பாடுகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி 14, பிப்ரவரி 2026 : திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகள் 59, 48 மற்றும் 49-க்கான மாமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அலுவலகங்களை அர்ப்பணித்தார்.
வார்டு 59-க்கான மாமன்ற உறுப்பினர் அலுவலகம் இலுப்பூர் சாலை – கல்லுக்குழியில் திறந்து வைக்கப்பட்டது. வார்டு 48-க்கான அலுவலகம் ஏரிக்கரை சாலை, சுப்பிரமணியபுரத்தில் மற்றும் வார்டு 49-க்கான அலுவலகம் சுப்பையா தெருவில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அலுவலகங்கள் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் தேவைகளை நேரடியாக தெரிவித்து விரைவான தீர்வுகளை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மக்கள் சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இவை செயல்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அந்தப்பகுதியில் புதிய மின்மாற்றி (Transformer) ஒன்றின் பயன்பாட்டையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மின்விநியோகம் சீராகும் மற்றும் மின்தடை பிரச்சினைகள் குறையும் என கூறப்பட்டது.
நிகழ்ச்சிகளில் உள்ளூர் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த திட்டங்கள் திருச்சி கிழக்கு தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றன.
திருச்சி புத்தகத் திருவிழா 2026 தொடக்கம்: அறிவுத் தேடலுக்கு மாணவர்கள், இளைஞர்கள் வரவேற்பு – சிறைவாசிகளுக்குப் புத்தக தானம் அழைப்பு
திருச்சி 14, பிப்ரவரி 2026 : திருச்சி புத்தகத் திருவிழா – 2026 சிறப்பாக தொடங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும் இத்திருவிழா பிப்ரவரி 14 முதல் 22 வரை நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய அறிவுத் தேடலை விரிவுபடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு துறைகளில் சிறப்பு விருந்தினர்களின் உரைகள், நூல் வெளியீடுகள் மற்றும் வாசகர் சந்திப்புகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

மேலும், சிறைவாசிகளுக்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் புத்தக தானம் செய்து அவர்களின் மறுவாழ்வுக்கு துணை நிற்போம் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மற்றும் அமைச்சர் கே.என் நேரு அவர்கள் உறுதியளித்துள்ளனர். வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் இத்திருவிழா, திருச்சியில் அறிவுப் பண்டிகையாக அமைகிறது.
திருச்சியில் பல்வேறு இடங்களில் கபடிப் போட்டிகள் தொடக்கம்: வீரர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி அவர்கள் வாழ்த்து
திருச்சி 14, பிப்ரவரி 2026 : திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் தொகுதி நடராஜபுரத்தில் AT Sports Club மற்றும் SMC இணைந்து நடத்தும் 29வது ஆண்டு கபடிப் போட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அரியங்கமங்கலத்தில் AA Sports Club சார்பில் நடைபெறும் கபடிப் போட்டியும், வாழவந்தான்கோட்டையில் இதயப்பறவை கபடிக் குழு ஒருங்கிணைத்துள்ள போட்டியும் அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு வீரர்களுக்கு அவர் வாழ்த்துகள் தெரிவித்தார்.
மேலும், திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கே.கே.நகரில் நேதாஜி பிறந்தநாளையொட்டி All India Forward Bloc சார்பில் நடத்தப்பட்ட கபடிப் போட்டியையும் அமைச்சர் தொடங்கி வைத்து, விளையாட்டு மனப்பாங்குடன் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை பாராட்டினார். இத்தகைய விளையாட்டு போட்டிகள் இளைஞர்களின் உடல் நலன் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் என்றும், கிராமப்புறங்களில் விளையாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக அமைகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மலேசியா கல்விச் சுற்றுலா நிறைவு: புது அனுபவங்களுடன் திரும்பிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து
14, பிப்ரவரி 2026 : கல்விச் சுற்றுலாவிற்காக மலேசியா நாட்டிற்கு சென்றிருந்த தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவச் செல்வங்கள், பல்வேறு கல்வி மற்றும் பண்பாட்டு அனுபவங்களுடன், புதிய நம்பிக்கைகளோடு தமிழ்நாடு திரும்பியுள்ளனர்.

வெளிநாட்டு கல்வி அமைப்புகள், உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் சர்வதேச சூழல் குறித்து நேரடி அனுபவம் பெற்ற மாணவர்கள், தங்களின் அறிவுப் பரப்பை விரிவுபடுத்திக் கொண்டுள்ளனர். இந்த கல்விச் சுற்றுலா, அவர்களின் எதிர்கால இலக்குகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து, பெற்ற அனுபவங்களை கல்வி முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். உலகளாவிய பார்வையுடன் முன்னேற அரசுப் பள்ளி மாணவர்கள் தயாராக இருப்பது பெருமைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட்டுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைகள் திறப்பு: திராவிட மாடல் 2.0க்கு உறுதி
தஞ்சாவூர் 15, பிப்ரவரி 2026 : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை பகுதியில், பேரறிஞர் அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி ஆகியோரின் திருவுருவச் சிலைகளை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் உணர்ச்சி முழக்கங்களுக்கிடையே நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய துணை முதலமைச்சர் அவர்கள், “தமிழ்நாட்டிற்குள் புறவாசல் வழியாக நுழைய முயற்சிக்கும் பாசிஸ்ட்டுகளையும், அவர்களை தோள் மேல் சுமந்து வரும் அடிமைகளையும் வீழ்த்தி, மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திராவிட மாடல் 2.0 அமைக்க அண்ணா – கலைஞர் சிலைகள் முன்பாக உறுதியேற்போம்” எனக் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
ரூ.20 கோடியில் பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் திறப்பு: சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் அவர்கள்
தஞ்சாவூர் 15, பிப்ரவரி 2026 : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் வசதிக்காக ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திராவிட மாடல் அரசின் கீழ் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையம், பட்டுக்கோட்டை நகர வளர்ச்சிக்கும், பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளுக்கும் முக்கிய பங்காற்றும் என துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
செங்கிப்பட்டியில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு: துணை முதலமைச்சர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது
தஞ்சாவூர் 15, பிப்ரவரி 2026 : திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தஞ்சை மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி செங்கிப்பட்டியில் எழுச்சியுடன் நடைபெற்றது.

நிகழ்வில் இளைஞரணி அமைப்பு வலுப்படுத்தல், கழகப் பணிகள் விரிவாக்கம் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இளைஞர்கள் தீவிரமாகக் கழகப் பணிகளில் ஈடுபட்டு மக்கள் தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என துணை முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ரூ.4.69 கோடியில் லால்குடி நகராட்சி அலுவலகம் திறப்பு: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்
திருச்சி 16, பிப்ரவரி 2026 : திருச்சி மாவட்டம் இலால்குடியில் ரூ.4.69 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலகத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

புதிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளை பார்வையிட்ட அவர், லால்குடி நகர்மன்றத் தலைவர் துரைமணிக்கம் அவர்களை அவரது புதிய அறையில் சந்தித்து பணிகள் சிறக்க வாழ்த்துகள் தெரிவித்தார். பல்வேறு பொதுசேவை வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த நகராட்சி அலுவலகம், லால்குடி நகர மக்களின் தேவைகளை விரைவாகவும் எளிதாகவும் பூர்த்தி செய்யும் என அவர் தெரிவித்தார். புதிய அலுவலகத்தின் மக்கள் சேவை சிறக்க தனது அன்பும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் எஸ். மெய்யநாதன் மற்றும் மக்களவை உறுப்பினர் அருண் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
லால்குடியில் ரூ.31.89 கோடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு: சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் அவர்கள்
திருச்சி 16, பிப்ரவரி 2026 : தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புகளை திராவிட மாடல் அரசு தொடர்ந்து உருவாக்கி வரும் நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடியில் ரூ.31.89 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகளை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம், லால்குடி மற்றும் சுற்றுவட்டார மக்களின் போக்குவரத்து தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் இந்த புதிய வசதியை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள அன்பும் வாழ்த்துகளும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் எஸ். மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் அ. சௌந்தரபாண்டியன் மற்றும் மக்களவை உறுப்பினர் அருண் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
துவாக்குடி அரசு கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள்: ரூ.1,098 கோடி மதிப்பிலான திட்டங்களில் முக்கிய இடம்
திருவெறும்பூர் 16, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள், உயர்கல்வித்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் ரூ.542.02 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
அவற்றில் ஒன்றாக, தனது திருவெறும்பூர் தொகுதியின் துவாக்குடியில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்காக 8 புதிய வகுப்பறைகள் மற்றும் 5 ஆய்வகங்கள் அமைக்கும் பணியும் இடம்பெற்றுள்ளது.

மேலும், ரூ.555.92 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், துவாக்குடி அரசு கலைக்கல்லூரிக்கு புதிதாக 27 வகுப்பறைகள் கட்டும் திட்டமும் அதில் அடங்கியுள்ளது.
இந்த திட்டங்கள் உயர்கல்வி கட்டமைப்பை வலுப்படுத்தி, மாணவர்களுக்கு மேம்பட்ட கற்றல் சூழலை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனை சாத்தியப்படுத்திய முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர் கோவி செழியன் அவர்களுக்கும் தொகுதி மக்கள் மற்றும் மாணவச் செல்வங்களின் சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
2025–26 பொதுத்தேர்வு ஆய்வுக் கூட்டம்: புதுப்பிக்கப்பட்ட மடக்கைப் புத்தகங்கள் வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
சென்னை 16, பிப்ரவரி 2026 : 2025–2026ஆம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகளை முன்னிட்டு, பள்ளிக் கல்வித்துறை மற்றும் அரசுத் தேர்வுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டமும், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கல்விசார் ஆய்வுக் கூட்டமும் சென்னை அண்ணாசாலை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுத்தேர்வுகள் குறித்த முன்னேற்பாடுகள், தேர்வுமையங்களின் ஏற்பாடுகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன.
மேலும், மேல்நிலைத் தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களில் தேர்வெழுதும் மாணவர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட மடக்கைப் புத்தகங்களை (Logarithmic Books) அமைச்சர் வெளியிட்டார். மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும், தேர்வுகள் சீர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
முதல்வர் பிறந்தநாள் விழா: 150 மாணவர்களுக்கு மடிக்கணினி, 500 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
சென்னை 16, பிப்ரவரி 2026 : கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடத்தப்படவுள்ள 41 நிகழ்ச்சிகளின் தொடக்க விழா சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி. கே. சேகர் பாபு அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று, 150 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும், 500 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளையும் வழங்கினார்.
விழாவில் உரையாற்றிய அமைச்சர், “மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் பல முன்னோடி திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ள நிலையில், இன்னும் 50 நாட்களில் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைத்து இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு மேலும் பல திட்டங்களை வழங்கவுள்ள நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க” என வாழ்த்திப் புகழுரைத்தார்.நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ப. தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
NAMBIKKAI தமிழ் ஊடக சேவை விரிவாக்கம்: சென்னை அறிமுக விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
சென்னை 16, பிப்ரவரி 2026 : மலேசியத் தமிழர்களால் நடத்தப்பட்டுவரும் தமிழ் ஊடகமான NAMBIKKAI News செய்தித்தளத்தின் சேவை இந்தியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற அறிமுக விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார். தமிழ் ஊடகங்கள் உலகத் தமிழர்களை இணைக்கும் பாலமாக செயல்படுகின்றன என்றும், தகவல் பரிமாற்றத்திலும், பண்பாட்டு ஒருமைப்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் தமிழ் செய்தி ஊடக சேவையை விரிவுபடுத்தும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என்றும், NAMBIKKAI செய்தித்தளத்திற்கு தனது வாழ்த்துகளை அமைச்சர் தெரிவித்தார்.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்விக்கு சிறப்பு நிதி: முதலமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நன்றி
17, பிப்ரவரி 2026 : தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் உலகத்தரத்திலான கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கில், திராவிட மாடல் அரசின் மூலம் பல்வேறு முன்னோடி திட்டங்களை பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தி மாபெரும் மாற்றங்களுக்கு வழிகாட்டி வருகிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள்.

அந்த தொடர்ச்சியாக, முந்தைய ஐந்து நிதியாண்டுகளைப் போலவே, இவ்வாண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையிலும் பள்ளிக்கல்வித்துறைக்கு சிறப்புக் கவனம் அளித்து உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர் பணியமர்த்தல், கற்றல் தர உயர்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், விரைவில் அமையும் திராவிட மாடல் 2.0 ஆட்சியும் கல்வித்துறையில் மேலும் பல சாதனைகளை உருவாக்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய நூலக மாநாடு நிறைவு விழா: அறிவு பரவலின் நீண்ட பயணம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உரை
சென்னை 17, பிப்ரவரி 2026 : சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற நான்காவது Indian Library Congress மாநாட்டின் நிறைவு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்றார்.

நிறைவு அமர்வில் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் நூலக வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட நீண்ட பயணத்தை விரிவாக எடுத்துரைத்தார். பொது நூலக இயக்ககம் நிறுவப்பட்டதிலிருந்து, மாநிலம் முழுவதும் அறிவு அணுகலை விரிவுபடுத்தும் அடையாள நூலகங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவது வரை பல்வேறு முன்னேற்றங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
“Knowledge for Social Change” என்ற கருத்தை முன்னிறுத்தும் வகையில், பொது நூலகங்கள் சமூக மாற்றத்திற்கான முக்கிய கருவியாக செயல்பட்டு வருகின்றன என்றும், தமிழ்நாடு நூலக அமைப்பை மேலும் வலுப்படுத்த உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுக்கு ஏஐ பயிற்சி சான்றிதழ் வழங்கல்: ஐஐடிஎம் ஆராய்ச்சி பூங்காவில் நிகழ்ச்சி
சென்னை 17, பிப்ரவரி : தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு MKS AI Academy சார்பில் ஆன்லைன் வழியில் ஆரம்ப நிலையிலான Artificial Intelligence (ஏஐ) பயிற்சி நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியின் மூலம் மொத்தம் 3,560 மாணவச் செல்வங்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி IIT Madras Research Park வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாண்புமிகு அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இணைந்து சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு நேரடியாக சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினர்.
மேலும், MKS AI Academyயின் புதிய இணையதளத்தையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மாணவர்கள் எதிர்காலத் தொழில்நுட்ப உலகில் முன்னிலை வகிக்க இத்தகைய ஏஐ பயிற்சிகள் பெரிதும் உதவும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
திராவிடக் களஞ்சியம் திட்டத்தில் 7 முக்கிய நூல்கள் வெளியீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியீடு
சென்னை 18, பிப்ரவரி 2026 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், திராவிடக் களஞ்சியம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் பதிப்பிக்கப்பட்ட 7 முக்கிய நூல்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திரு. க.திருநாவுக்கரசு எழுதிய “நீதிக்கட்சி வரலாறு”, திரு. புனிதப்பாண்டியன் எழுதிய “தந்தை பெரியார் சிந்தனைத் தொகுப்பு”, திரு. வீ.எம்.எஸ். சுபகுணராஜன் எழுதிய “அறிஞர் அண்ணா சிந்தனைத் தொகுப்பு”, முனைவர் எஸ். ஆனந்தி எழுதிய “திராவிட இயக்க பெண் சிந்தனையாளர்கள் தொகுப்பு”, பேரா. திரு. சுப. வீரபாண்டியன் எழுதிய “திராவிட இயக்கமும் சமூக பண்பாட்டு பொருளாதார மாற்றங்களும்”, பேரா. திரு. ந. இளங்கோ எழுதிய “திராவிட இயக்கச் சிறுகதைகள்”, பேரா. திரு. ஹாஜாகனி எழுதிய “திராவிட இயக்கக் கவிதைகள்” ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “114 ஆண்டுகளை கடந்த திராவிட இயக்கத்தின் வளர்ச்சியே தமிழ்நாட்டின் மாபெரும் முன்னேற்றத்திற்கான அடித்தளம். அந்த வரலாற்றை ஆவணப்படுத்தும் பணிகளை ‘திராவிட மாடல் 2.0’ வழியாகவும் தொடர்ந்து முன்னெடுப்போம்” என்று தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி. சந்திரமோகன், கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மரு. மா. ஆர்த்தி, திராவிடக் களஞ்சியத்தின் பொது பதிப்பாசிரியர் மூ. அப்பணசாமி மற்றும் நூல்களின் பதிப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
1751 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி – “லெசன் பிளான்” திட்டம் அறிவிப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
சென்னை 18, பிப்ரவரி 2026 : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் புதிதாக நியமனம் பெற்றுள்ள 1751 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைநிலைப் பயிற்சி அண்ணா நூற்றாண்டு நூலகம் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, வாழ்த்துரையாற்றினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அமைச்சர் தனது உரையில், புதிய ஆசிரியர்கள் கல்வித் துறையின் தரத்தை உயர்த்தும் முக்கிய பங்காற்றுவார்கள் எனக் கூறி வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக “Lesson Plan” சார்ந்த புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளதாகவும் அறிவித்தார். இந்தத் திட்டம் கற்பித்தல் முறையை ஒருங்கிணைத்து, வகுப்பறை செயல்பாடுகளை எளிமைப்படுத்தும் வகையில் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன், பாடத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் திருமதி ந. லதா, தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ. நரேஷ், இணை இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மெகா ஏர் ஷோ நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
சென்னை 18, பிப்ரவரி 2026 : மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்காக வான்வழித் தொழில்நுட்பம் தொடர்பாக நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையின் நிறைவாக “Mega Air Show” நிகழ்வு நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்றார்.

நிகழ்வில், மாணவர்கள் தயாரித்த விமான மாதிரிகள் மற்றும் வான்வழி தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகளை அமைச்சர் பார்வையிட்டு பாராட்டினார். மாணவச் செல்வங்களின் புதுமைச் சிந்தனை மற்றும் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பயிற்சிப் பட்டறை மற்றும் மெகா ஏர் ஷோ நிகழ்வு மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும் தொழில்நுட்ப திறனையும் மேம்படுத்தியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பள்ளிக்கல்வித்துறைக்கு ₹48,534 கோடி ஒதுக்கீடு – புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டப்படும்: சட்டமன்றத்தில் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உறுதி
சென்னை 19, பிப்ரவரி 2026 : சட்டமன்ற கேள்வி நேரத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு, புதிய கட்டிடங்கள் மற்றும் ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் விரிவான பதில் அளித்தார்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அனுமதியுடன் பதிலளித்த அமைச்சர், இந்த ஆண்டும் பள்ளிக்கல்வித்துறைக்கு ₹48,534 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள மாண்புமிகு முர்தலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசுக்கும் நிதி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் மரக்கோணம் அரசு பள்ளியில், வரும் கல்வியாண்டில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் கூடுதலாக புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என அவர் அறிவித்தார்.
அரக்கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அவர்கள், அரக்கோணம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார். 50 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை மாற்றி, புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக வசதிகள் நபார்டு நிதி மூலம் ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
கட்டமைப்பு மேம்பாடு குறித்து பேசுகையில், இதுவரை தனது தொகுதியில் மட்டும் 95 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், கடந்த நான்கரை ஆண்டுகளில் 12,895 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சிறப்பு ஆசிரியர்கள் தொடர்பாக புதிய அரசாணை வெளியிடப்படும் போது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வேளச்சேரி தொகுதி உறுப்பினருடன் பேசும்போது தனியார் பள்ளி மூடல் குறித்த சந்தேகத்திற்கு பதிலளித்த அமைச்சர், உடனடி ஆய்வில் அத்தகைய நிலைமை எதுவும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து அவர்கள் கோரிய புதிய கட்டிடம் குறித்து, மாற்று இடம் தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் தேவையான கட்டிடம் கட்டித் தரப்படும் என்றும் அமைச்சர் பேரவை வாயிலாக உறுதியளித்தார். சட்டமன்ற கேள்வி நேரத்தில் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர் நியமனம் மற்றும் புதிய கட்டிடங்கள் தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
JEE Mains தேர்வில் 448 அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி – தமிழ்நாட்டில் திராவிட மாடலின் அமைதியான கல்விப் புரட்சி
சென்னை 19, பிப்ரவரி 2026 : JEE Mains தேர்வில் 448 அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது ஒரு சாதாரண கல்வி நிகழ்வு அல்ல; அது தமிழ்நாடு முழுவதும் வகுப்பறைகளில் அமைதியாக வெளிப்படும் திராவிட மாடலின் சமூகநீதிப் புரட்சியாகக் கருதப்படுகிறது என தெரிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேச் பொய்யாமொழி அவர்கள்.
கல்வியே சமூகநீதிக்கான மிக வலுவான கருவி என்ற நம்பிக்கையுடன் செயல்படும் தலைமையின் கீழ், ஒருகாலத்தில் முன்னணி கல்வி நிறுவனங்களின் வாயிலில் கூட நுழைய முடியாமல் இருந்த மாணவர்கள் இன்று தன்னம்பிக்கையுடன் அந்த வாயில்களை கடந்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் அரசு பள்ளிகள் மற்றும் மாடல் பள்ளிகளை வலுப்படுத்திய ஒருங்கிணைந்த முயற்சிகளின் பலனாக இந்த மாற்றம் சாத்தியமாகியுள்ளது என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு தேர்வில் 99.53 சதவீதம் பெற்ற பிரவீன், 99.50 சதவீதம் பெற்ற நரேஷ், 99.42 சதவீதம் பெற்ற வேல்முருகன் உள்ளிட்ட பலர் மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற ஒவ்வொரு மாணவரும் சம வாய்ப்பு, சமத்துவம் மற்றும் நம்பிக்கை ஆகிய அடிப்படைகளில் உருவாகிய புதிய தலைமுறையின் பிரதிநிதிகளாக திகழ்கிறார்கள். இந்த சாதனை மாணவர்களின் உழைப்பிற்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பிற்கும், மக்களை மையமாகக் கொண்ட ஆட்சிமுறைக்கும் சொந்தமானது என அமைச்சர் கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் முன்னேறி வரும் இந்தப் பயணம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
“தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை: திருச்சி கிழக்கு தொகுதியில் முக்கியப் பிரமுகர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
திருச்சி 19, பிப்ரவரி 2026 : கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்சி (தெற்கு) மாவட்ட தி.மு.க சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையின் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான முக்கிய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தொகுதியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தொகுதியின் எதிர்கால வளர்ச்சி தேவைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

தலைமைக் கழகம் சார்பில் பங்கேற்ற கழகச் செய்தித் தொடர்புக்குழு துணைத்தலைவர் மருது அழகுராஜ், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோருடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசுகையில், மக்கள் முன்வைத்துள்ள தேவைகள் மற்றும் பரிந்துரைகள் அனைத்தையும் தொகுத்து மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவற்றை நடைமுறைப்படுத்த உறுதுணையாக இருப்போம் என அமைச்சர் உறுதியளித்தார். மக்கள் பங்கேற்புடன் நடைபெறும் இந்த வகையான கலந்துரையாடல்கள், தொகுதி வளர்ச்சிக்கான திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் எனக் கூறப்பட்டது.
திருச்சி கிழக்கு தொகுதியில் “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரைக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
திருச்சி 19, பிப்ரவரி 2026 : திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையின் ஒரு பகுதியாக நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் – மாண்புமிகு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமை வகித்தார். தமிழினத்தின் உரிமைகளையும் நலன்களையும் திராவிட மாடல் அரசின் மூலம் திறம்பட உறுதிசெய்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சாதனைகள் தொடர்ந்து வளர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், சமூகநீதி, சமத்துவம் மற்றும் மாநில உரிமைகள் ஆகியவற்றை காக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் உறுதியான ஆதரவு அளித்து வருவது பெருமைக்குரியது என தெரிவித்தார்.
தலைமைக் கழகம் சார்பில் கழக செய்தித்தொடர்பு துணைத் தலைவர் திரு.மருது அழகுராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர் திரு.இனிகோ இருதயராஜ். மாநகரச் செயலாளர் மண்டலக் குழுத்தலைவர் திரு.மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.வண்ணை அரங்கநாதன், பகுதிச் செயலாளர் திரு.மோகன், மாநில அணி நிர்வாகி திரு.செந்தில், துணை மேயர் திருமதி.திவ்யா. தொகுதிப் பார்வையாளர் திரு.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிராமப்புற மாணவர்களுக்கு டெக்னாலஜி கல்வி – 8,209 பள்ளிகளில் ஹைடெக் லேப், 22,931 பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு: சட்டமன்றத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் விளக்கம்
சென்னை 20, பிப்ரவரி 2026 : கிராமப்புற மாணவர்களுக்கும் தொழில்நுட்ப அடிப்படையிலான தரமான கல்வியை வழங்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சட்டமன்றத்தில் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டு லேப்டாப் வழங்கல் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், வெறும் மடிக்கணினி வழங்குவது மட்டுமல்லாது, அதனை பயனுள்ளதாக பயன்படுத்த தேவையான கட்டமைப்பு வசதிகளும் அவசியம் என குறிப்பிட்டார்.
₹520 கோடி மதிப்பில் 8,209 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ₹450 கோடி செலவில் 22,931 பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பள்ளிக் கல்வியுடன் இணைக்கும் முயற்சியாக, மாணவர்களுக்கு பிரீமியம் மென்பொருள் சந்தாக்களும் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு இந்த திட்டங்களை நேரடியாக கண்காணித்து செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், 7.5% இடஒதுக்கீடு மருத்துவக் கல்வியைத் தாண்டி பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட அனைத்து தொழில்கல்விகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் கவுன்சிலிங் பயணம், விடுதி கட்டணம், கல்விக் கடன் ஆகிய செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்கிறது என்றும் கூறினார்.
2021க்குப் பிறகு அறிமுகமான மாடல் பள்ளி திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் சேர்ந்து வருவதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 2,853 அரசு பள்ளி மாணவர்கள் Indian Institutes of Technology மற்றும் Indian Institutes of Management உள்ளிட்ட தேசிய, சர்வதேச பிரீமியம் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; அது பெருமையின் அடையாளம் என்பதை இந்த முன்னேற்றம் நிரூபிப்பதாகவும் அவர் கூறினார்.
அரசு உதவிபெறும் 654 பள்ளிகளில் ₹41.85 கோடியில் ஹைடெக் ஆய்வகங்கள் – சென்னை அடையாற்றில் அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்
சென்னை 20, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசுப் பள்ளிகளைப் போலவே அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Lab) அமைக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதனை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 654 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.41.85 கோடி மதிப்பீட்டில் ஹைடெக் ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த ஆய்வகங்களை மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சென்னை அடையாறு குமார ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று, ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் உரையாற்றிய அமைச்சர், “அனைத்துப் பள்ளிகளையும் சரிசமமாகக் காணும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கித் தந்துள்ள இத்தகைய ஆய்வகங்களை, நவீன தொழில்நுட்பங்கள் குறித்த அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள மாணவச் செல்வங்கள் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் சமமான தொழில்நுட்ப வசதிகள் கிடைப்பதன் மூலம், மாணவர்கள் டிஜிட்டல் உலகிற்கு தயாராகும் திறனை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.
‘Loading 2.0 – Firewallz 2026’ நிகழ்ச்சி: நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் துணை முதலமைச்சர் அவர்கள் கலந்துரையாடல்
சென்னை 20, பிப்ரவரி : சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், ‘லோடிங் 2.0 – ஃபயர்வால்ஸ் 2026’ என்ற தலைப்பில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு இளைஞர்களுடன் உற்சாகமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பேரறிஞர் அண்ணாவின் “காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி” என்ற வழிக்காட்டும் சொற்றொடரை மேற்கோள் காட்டிய அவர், இன்றைய இளைஞர்களுக்கு தேவையான கொள்கை சார்ந்த எண்ணங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக கொண்டு சேர்க்கும் பணியில் தகவல் தொழில்நுட்ப அணியின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டார். கழகத்தின் கொள்கை மற்றும் சாதனைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் பணிகள் மேலும் சிறக்கட்டும் எனவும் வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கழக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், தகவல் தொடர்பு அணியின் இணைச் செயலாளர் மகேந்திரன், ஆலோசகர்கள் மனுஷ்யபுத்திரன், கோவி லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய தளமாக அமைந்தது.
உலகத் தாய்மொழி நாள்: மொழித் திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
21, பிப்ரவரி 2026 : உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு, நம் தமிழ் மொழிக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மொழிப்போர்த் தியாகிகளை நினைவுகூர்வோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

“தந்தை பெரியார் ஈ.வி.ராமசாமி, பேரறிஞர் சி.நா.அண்ணாதுரை, முத்தமிழறிஞர் மு.கருணாநிதி ஆகியோர் வழியில், மொழித் திணிப்பு என்பது வெறும் மொழியை மட்டுமே திணிப்பது அல்ல; அது பண்பாட்டுத் திணிப்பு. நமது தொன்மையையும் சமத்துவத்தையும் அழிக்க முனையும் முயற்சியே மொழித் திணிப்பு என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.
கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மொழித் திணிப்பு ஆதிக்கத்திற்கு எதிராக என்றும் போராடுவோம். தமிழ் உள்ளிட்ட அனைத்து மக்களின் தாய்மொழி உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம்” என பதிவிட்டுள்ளார். உலகத் தாய்மொழி நாளை போற்றும் வகையில் வெளியிடப்பட்ட இந்தப் பதிவு, மொழி உரிமைகள் மற்றும் பண்பாட்டு பாதுகாப்பு குறித்த உறுதியை மீண்டும் வலியுறுத்துவதாகக் கருதப்படுகிறது.
உலகத் தாய்மொழி நாள் விழா: தமிழ்–இந்தோ ஐரோப்பிய வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி 4ஆம் தொகுதி வெளியீடு
சென்னை 21, பிப்ரவரி 2026 : உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறையின் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று, தமிழ் மற்றும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதியின் 4வது தொகுதியை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து, மொழியியல் ஆய்வின் முக்கியத்துவம் மற்றும் தமிழ் மொழியின் தொன்மை குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ் மொழியின் செழுமை மற்றும் உலக மொழிகளுடனான அதன் தொடர்புகளை ஆய்வரங்கத்தின் மூலம் உலகளவில் வெளிப்படுத்தும் முயற்சியாக இந்த நிகழ்வு அமையப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.
பெந்தெகொஸ்தே திருச்சபைகளுக்கு தனி கல்லறைத் தோட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நடவடிக்கை
திருச்சி 21, பிப்ரவரி 2026 : திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் நீண்ட நாள் கோரிக்கையான தனி கல்லறைத் தோட்டம் அமைப்பதற்காக, திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் பகுதியில் இடம் வழங்கும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “இது என் கடமை. திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு நானும், சிறுபான்மையின மக்களுக்கு கழகமும் என்றும் துணை நிற்கும்” எனத் தெரிவித்தார். சிறுபான்மையின மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை அப்பகுதி மக்கள் வரவேற்று, அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.
திருவெறும்பூரில் பெண்கள் கழிவறை மற்றும் சமுதாயக் கூடம் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி 21, பிப்ரவரி 2026 : திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் துரை வைகோ அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளின் ஒரு பகுதியாக, திருவெறும்பூர் 40வது வார்டு இந்திரா நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெண்கள் கழிவறை மற்றும் வேங்கூர் ஊராட்சி பெரியார் நகரில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்.

அப்பகுதி மக்களின் நீண்ட நாள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதிகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கும், சமூக நிகழ்வுகள் நடைபெறுவதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. திறப்பு விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
துவாக்குடியில் மக்கள் நலத் திட்டங்கள் தொடக்கம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உறுதி
திருச்சி 21, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, துவாக்குடியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக ₹49.05 இலட்சம் மதிப்பீட்டில் (பொதுநிதி) மீசை கந்தசாமி பூங்கா, ₹122.80 இலட்சம் மதிப்பீட்டில் (நமக்கு நாமே திட்டம் & பொதுநிதி) போட்டித் தேர்வர்களுக்கான படிப்பறையுடன் கூடிய டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நூலகம், ₹36.00 இலட்சம் மதிப்பீட்டில் (15வது நிதிக்குழு மானியம்) டாக்டர் கலைஞர் பசுமைப் பூங்கா ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.

மேலும் ₹231.45 இலட்சம் மதிப்பீட்டில் 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. அத்துடன் ₹30.00 இலட்சம் செலவில் (சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ₹16.50 + நகராட்சி பொதுநிதி ₹13.50) அங்கன்வாடி மையம் மற்றும் ₹7.56 இலட்சம் மதிப்பீட்டில் துவாக்குடி மலை தெற்கு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் பள்ளி சமையல் அறை மற்றும் வைப்பறை கட்டப்பட்டது. இவ்விழாவில் உரையாற்றிய அமைச்சர், “திராவிடம் 2.0 ஆட்சியில் நவீன வசதிகளுடன் கூடிய நகராட்சியாக துவாக்குடி திகழும்” என உறுதியளித்தார்.
திருவெறும்பூரில் மக்கள் சந்திப்பு: வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்போம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உறுதி
திருச்சி 21, பிப்ரவரி 2026 : தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரையின் ஒருபகுதியாக, திருவெறும்பூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து, தொகுதியின் வளர்ச்சி குறித்த அவர்களின் கனவுகள் மற்றும் கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டறிந்தார்.

சந்திப்பின் போது பொதுமக்கள் முன்வைத்த தேவைகள் மற்றும் பரிந்துரைகளை பதிவு செய்து கொண்ட அவர், தொகுதி மக்களின் பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டார். பின்னர் உரையாற்றிய அமைச்சர், “திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் திருவெறும்பூர் தொகுதியின் முழுமையான மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைப்போம்” என உறுதியளித்தார். இச்சந்திப்பு, மக்களுடன் நேரடி தொடர்பை வலுப்படுத்தும் முயற்சியாக அமைந்தது எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு தலைகுனியாது: திருவெறும்பூரில் பரப்புரை பொதுக்கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
திருச்சி 21, பிப்ரவரி 2026 : “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற முழக்கத்துடன், திருவெறும்பூர் தொகுதியில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் ஊடகவியலாளர் செந்தில்வேல் (“தமிழ் கேள்வி”) சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர வேண்டும் என்றும், திராவிட மாடல் 2.0 ஆட்சியில் புதிய திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என முழக்கமிடுவோம் என அவர் அழைப்பு விடுத்தார்.
பட்டிமன்ற உலகில் பொன்விழா: திண்டுக்கல் ஐ. லியோனிக்கு கௌரவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி 21, பிப்ரவரி 2026 : பட்டிமன்ற உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா கண்டுள்ள திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களுக்கு, திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் சிறப்பு கௌரவிப்பு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கணையாழி அணிவித்து மரியாதை செலுத்தினார். பட்டிமன்ற மேடைகளில் அரை நூற்றாண்டாக சிறப்பாக பணியாற்றி வருகிறார் லியோனி என பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
திருவெறும்பூர் தொகுதியில் பல்வேறு மக்க்ள் மேம்பாட்டு பணிகள் அர்ப்பணிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில்
திருச்சி 22, பிப்ரவரி 2026 : திருவெறும்பூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு உள்கட்டமைப்பு, கல்வி, மின்சாரம் மற்றும் சுகாதாரத் திட்டப் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
புகழ் நகர் (வார்டு 38), கணேஷ் நகர் (வார்டு 39), விக்னேஷ் நகர் (வார்டு 42), காவிரி நகர் (வார்டு 43) பகுதிகளில் மாமன்ற உறுப்பினர் அலுவலகங்கள், சுகாதார அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. அய்யனார் நகர் மற்றும் பழங்கனாங்குடி பகுதிகளில் புதிய பாலங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும் கணேஷ் நகர் நியாய விலைக்கடை மற்றும் சங்கிலியாண்டபுரம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகள் துவக்கிவைக்கப்பட்டன.

உக்கடை (வார்டு 35) மற்றும் கீழக்கல்கண்டார் கோட்டை (வார்டு 42) பகுதிகளில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன. காவிரி நகர், உக்கடை மற்றும் பாப்பாக்குறிச்சி பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டதுடன், பாப்பாக்குறிச்சி பகுதியில் சுற்றுச்சுவர் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
கணேஷ் நகர், ஸ்ரீநகர், செந்தண்ணீர்புரம் மற்றும் ஆசாத் நகர் பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. நேருஜி நகர் மற்றும் பாப்பாக்குறிச்சி பகுதிகளில் பொதுக் கழிப்பிடங்கள் திறந்து வைக்கப்பட்டன. மஞ்சத்திடல் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நிறைவு செய்யப்பட்டது.
இவ்விழாவில் உரையாற்றிய அமைச்சர், “திருவெறும்பூர் தொகுதியின் முழுமையான வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. மக்கள் தேவைகளை முன்னிலைப்படுத்தியே பணிகள் நடைபெறும்” என தெரிவித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம்: வழிமுறைகளை கடைப்பிடிக்க அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வலியுறுத்தல்
திருச்சி 22, பிப்ரவரி 2026 : கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நடத்தினார்.

இக்கூட்டத்தில் மகளிரணி உட்பட அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தனர். அவற்றை கேட்டறிந்த அமைச்சர், அறிவாலயத்தால் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கழகத்தின் கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் தள மட்டத்தில் சிறப்பாக செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கொளத்தூரில் கல்லூரி புதிய கட்டடங்கள் திறப்பு; பெரம்பூரில் 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
சென்னை, பிப்ரவரி 23, 2026: மு.க. ஸ்டாலின் அவர்கள், தன்னுடைய கொளத்தூர் தொகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இக்கட்டடங்கள், மாணவர்கள் நவீன மற்றும் சிறப்பான கல்வி சூழலில் பயில உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் திட்டங்களின் கீழ் 1969 பயனாளிகளுக்கும், அரசாணை எண். 97ன் கீழ் இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் மூலம் 38 பயனாளிகளுக்கும் என மொத்தம் 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள், உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவர்கள், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
மாநில கல்விக்கொள்கை 2025: 1–3ஆம் வகுப்பு வரைவு பாடத்திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில்
சென்னை 23, பிப்ரவரி 2026 : தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை – 2025 (பள்ளிக்கல்வித்துறை) அடிப்படையில் 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள வரைவு பாடத்திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாடத்திட்ட வல்லுநர் குழுவினருடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. ஆரம்பக்கல்வி கட்டத்தில் மாணவர்களின் அடிப்படை திறன்கள், மொழித்திறன், கணிதத்திறன் மற்றும் செயற்பாட்டு கற்றல் முறைகள் ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், குழந்தைகள் மையப்படுத்தப்பட்ட கற்றல் அணுகுமுறை, தாய்மொழி வழிக் கல்வி, சிந்தனை திறன் வளர்ச்சி மற்றும் மதிப்புக் கல்வி போன்ற அம்சங்கள் பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். புதிய கல்விக்கொள்கையின் நோக்கங்கள் சிறப்பாக அமல்படுத்தப்படுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
“மாநிலங்களுக்கே மக்களுடன் நெருக்கம்” – CNN–News18 ‘டவுன் ஹால் சென்னை’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை 23, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னையில் நடைபெற்ற CNN-News18 தொலைக்காட்சி நிறுவனத்தின் “டவுன் ஹால் சென்னை” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், “மாநில அரசுகள்தான் மக்களுக்கு நெருங்கிய அரசுகள்” என்றும், “உண்மையான வளர்ச்சிக்காக மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். மாநிலங்களின் உரிமைகள் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் அவசியம் குறித்து அவர் விரிவாக விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன் அவர்கள், ஒன்றிய முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர் அவர்கள், CNN–News18 நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர்கள், News18 தொலைக்காட்சி நிறுவனத்தின் மூத்த ஆசிரியர் கார்த்திகைசெல்வன் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பத்திரிகை, ஊடகத் துறை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
24வது அமைச்சரவைக் கூட்டம்: ரூ.31,592.39 கோடி முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் – 61,521 பேருக்கு வேலைவாய்ப்பு
சென்னை 23, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் 24வது அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்படவுள்ள மற்றும் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ள 46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டங்களின் மூலம் ரூ.31,592.39 கோடி முதலீடு மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் வாயிலாக 61,521 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பிற அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணிமனை திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நிகழ்வு
நாகப்பட்டினம் 24, பிப்ரவரி 2026 : 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பணிமனை நாகை நகர தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டது. இந்த தேர்தல் பணிமனையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் என். கெளதமன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து, பரப்புரைப் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து செல்லுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் 2.0 அரசு மீண்டும் அமைவதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பான தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் வாழ்த்துத் தெரிவித்தார்.
நாகை மாவட்டத்தில் 482 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா – பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
நாகப்பட்டினம் 24, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாகை மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் வண்டுவாஞ்சேரி, கோடியக்காடு உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த 482 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சி.பி.சி.எல். (CPCL) மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ் பனங்குடி, கோபுராஜபுரம் மற்றும் நரிமணம் கிராமங்களைச் சேர்ந்த 2163 பயனாளிகளில் முதல்கட்டமாக 60 பேருக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 41 பயனாளிகளுக்கு சிறப்பு இருசக்கர வாகனங்களும், 6 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையும் வழங்கப்பட்டன. மொத்தம் 47 பேருக்கு ரூ.48,78,440 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் என். கெளதமன், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் (இ.ஆ.ப) உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாகை மாவட்டத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு – பல்வேறு திட்டப்பணிகளை பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
நாகப்பட்டினம் 24, பிப்ரவரி 2026 : நாகை மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஐவநல்லூர் மற்றும் மஞ்சக்கொல்லை ஊராட்சிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி செயலகக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், சங்கமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டன.

அதேபோல், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் தெற்குபொய்கை நல்லூரில் புதிய ஊராட்சி செயலகக் கட்டடமும், திருவாய்மூர் ஊராட்சியின் திருவாசல் கிராமத்தில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறைகளும் திறந்து வைக்கப்பட்டன. வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் தாணிக்கோட்டகம் ஊராட்சி சேக்குட்டிதேவன்காடு கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டடமும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் என். கெளதமன், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் (இ.ஆ.ப) உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வேதாரண்யம் அருகிலுள்ள தகட்டூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு
நாகப்பட்டினம் 24, பிப்ரவரி 2026 : கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் மற்றும் கழக இளைஞரணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேதாரண்யம் அருகிலுள்ள தகட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கல்வி உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று முன்னேற வேண்டும் என வாழ்த்தினர்.
2026 தேர்தல்: சமூக வலைதளப் பணிகள் முக்கியம் – நாகை தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆலோசனை
நாகப்பட்டினம் 24, பிப்ரவரி 2026 : நாகை மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. களப்பணிகளுக்கு இணையாக சமூக வலைதளப் பணிகளும் இத்தேர்தலில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
“நிகழ்கால அரசியல் சூழலில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகையால், தரமான தகவல்களை மக்களிடம் விரைவாகவும், பொறுப்புடன் கொண்டுசெல்லும் வகையில் செயல்பட வேண்டும்” என அமைச்சர் கேட்டுக்கொண்டார். தகவல் தொழில்நுட்ப அணியினர் ஒருங்கிணைந்து திட்டமிட்ட முறையில் செயல்பட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
திருவெறும்பூர் தொகுதியில் ரூ.59.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருவெறும்பூர் 25, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவெறும்பூர் தொகுதியில் திராவிட மாடல் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்.
வருவாய்த்துறை சார்பில் 215 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 80 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. தொழிலாளர் நலத்துறை சார்பில் நலவாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினரைச் சேர்ந்த 175 பேருக்கு கல்வி மற்றும் திருமண உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 22 பயனாளிகளுக்கு தொழில் முனைவுக்கான கடனுதவி வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 130 பயனாளிகளுக்கு சிறப்பு இருசக்கர வாகனங்கள், காதொலி கருவிகள், திறன்பேசிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
மொத்தம் 840 பயனாளிகளுக்கு ரூ.59.78 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர், “வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மக்களுக்கு மேலும் எந்த வகையில் திட்டங்களை கொண்டு சேர்க்கலாம் என சிந்தித்து செயல்படும் முதலமைச்சரின் வழியில் மக்கள் நலப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்” என உறுதியளித்தார்.
தோழர் நல்லகண்ணு மறைவு: “அவரது புகழ் என்றென்றும் நிலைக்கும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இரங்கல்
25, பிப்ரவரி 2026 : விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடமை இயக்கத்தின் ஆகப்பெரும் முன்னோடியும், தகைசால் தமிழருமான நல்லகண்ணு அவர்களின் மறைவு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “விடுதலைப் போராட்டத்தில் tireless-ஆகப் பங்கேற்று, பொதுவுடமை சிந்தனைகளை வாழ்வில் நடைமுறைப்படுத்திய தலைசிறந்த தலைவர் நல்லகண்ணு அய்யாவின் மறைவு துயரத்தைத் தருகிறது. அவரது புகழ் என்றென்றும் வரலாற்றில் நீடித்திருக்கும்” எனக் குறிப்பிட்டு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது சமூகப் பங்களிப்புகள் மற்றும் அரசியல் வாழ்வு தமிழக வரலாற்றில் நினைவுகூரத்தக்கதாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
TET தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 40% குறைந்தபட்சத் தேர்ச்சி – அரசாணை வெளியீடு
25, பிப்ரவரி 2026 : முத்தமிழறிஞர் மு. கருணாநிதி அவர்களின் வழியில் மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிக்காப்பதிலும், அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதிலும் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான முக்கிய கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதும் மாற்றுத்திறனுள்ள தேர்வர்களுக்கான குறைந்தபட்சத் தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவு, மாற்றுத்திறனாளி ஆசிரியர் தேர்வர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு பதிலளிப்பதாகும்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பதிவில், “திராவிட மாடல் அரசு சமூகநீதி அரசு என்பதை மாற்றுத்திறனாளி ஆசிரியப் பெருமக்களின் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் மீண்டும் ஒருமுறை வரலாற்றில் பதிவு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சமூகநீதியை முன்னிறுத்தும் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக கல்வியியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
நூற்றாண்டுப் போராளி தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அஞ்சலி
சென்னை 26, பிப்ரவரி 2026 : ஆதிக்கத்திற்கு எதிராகவும் எளிய மக்களின் உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த நூற்றாண்டுப் போராளி நல்லகண்ணு அய்யாவின் திருவுடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

சமூகநீதி, பொதுவுடமை மற்றும் விவசாயிகளின் உரிமைகள் ஆகியவற்றிற்காக போராடிய தகைசால் தமிழரான நல்லகண்ணு அய்யாவின் மறைவு சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய எளிமை, நேர்மை மற்றும் பொதுநலப் பற்றுள்ளம் பல தலைமுறைகளுக்கும் வழிகாட்டியாக இருக்கும் என அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். “தகைசால் தமிழரின் பெருவாழ்வைப் போற்றுவோம்; அவர் காட்டிய சமூகநீதிப் பாதையை தொடர்ந்து முன்னெடுப்போம்” என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.
35 மாவட்டங்களில் 217 அரசுப்பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் திறப்பு – கடலூரில் “அஞ்சலை அம்மாள் அறிவுலகம்”க்கு அடிக்கல் நாட்டினார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள்
சென்னை 26, பிப்ரவரி 2026 : திராவிட மாடல் அரசின் முயற்சியாக தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் பல புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

35 மாவட்டங்களில் உள்ள 217 அரசுப்பள்ளிகளில் ரூ.296.62 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 1,232 வகுப்பறைக் கட்டடங்கள், 9 ஆய்வகக் கட்டடங்கள், 24 குடிநீர் வசதிகள், 60 கழிவறைகள் மற்றும் 500 மீட்டர் சுற்றுச்சுவர் ஆகியவை இந்த நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டன. அத்துடன், பொது நூலக இயக்ககம் சார்பில் ரூ.5.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இராணிப்பேட்டை மைய நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
மேலும், கடலூர் மாவட்டத்தில் ரூ.98.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள “அஞ்சலை அம்மாள் அறிவுலகம்” கட்டுமானப் பணிக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டார். தமிழக அரசின் கல்வி மேம்பாட்டு முயற்சிகள், மாணவர்களுக்கு தரமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நோக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மணப்பாறை தொகுதி வளர்ச்சிக்கான கோரிக்கை கருத்துகேட்பு கூட்டம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது
திருச்சி 26, பிப்ரவரி 2026 : திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில், மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வளர்ச்சிக்கான கோரிக்கை கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.
“தமிழ்நாடு தலைகுனியாது” இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமைக் கழகத்தின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. P.H. மனோஜ்பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் திருமிகு. சல்மா மற்றும் தொகுதி பார்வையாளர் திரு. அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது, பொதுமக்கள் மற்றும் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகள், வளர்ச்சி தொடர்பான பரிந்துரைகள் மற்றும் உள்ளூர் தேவைகள் குறித்து நேரடியாக கேட்டறியப்பட்டது. மணப்பாறை தொகுதியின் முழுமையான முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் பரிமாறப்பட்டன. மக்களின் தேவைகளை முன்னிறுத்தி செயல்படுவது கட்சியின் முக்கிய நோக்கமாகும் என்பதை வலியுறுத்திய அமைச்சர், தொகுதி வளர்ச்சிக்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
மணப்பாறையில் “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரைக் கூட்டம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உரை
மணப்பாறை 26, பிப்ரவரி 2026 : மணப்பாறை நகரில் “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரைக் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பெரியார் ஈ.வி. ராமசாமி அவர்களின் சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில், “திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய மு.க. ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும் என முழக்கமிடுவோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணிகள் தொடர ஓயாது உழைப்போம்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. P.H. மனோஜ்பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் திருமிகு. சல்மா, தலைமைக் கழகப் பேச்சாளர் திருமிகு. நாகநந்தினி, தொகுதி பார்வையாளர் திரு. அண்ணாமலை உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். பெரிய திரளான பொதுமக்கள் பங்கேற்ற இப்பரப்புரைக் கூட்டம் உற்சாகக் கோஷங்களுடன் நடைபெற்றது.
மேற்கு மண்டல பாக முகவர்கள் மற்றும் குழுவினருடன் பயிற்சி மாநாடு – தயாரிப்புகள் தீவிரம் அமைச்சர் ஆய்வு
கோவை 27, பிப்ரவரி 2026 : கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வரும் சாதனைத் திட்டங்களின் முகங்களாக திகழும் பாக முகவர்கள் மற்றும் பாக குழுவினருக்கான மேற்கு மண்டல பயிற்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டை முன்னிட்டு, மாநாட்டுத் திடலில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டார். அவருடன் கழக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

மாநாட்டில் பங்கேற்கும் பாக முகவர்கள் மற்றும் குழுவினருக்கு சிறப்பான பயிற்சி வழங்கும் வகையில் திடல் அமைப்பு, வசதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கழகத் தலைவர் வெற்றி முழக்கத்திற்காக உற்சாகமாக தயாராகும் இம்மாநாடு, மேற்கு மண்டலத்தில் அமைப்பு வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைய உள்ளது.
கோவையில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையக் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆய்வு
கோவை 27, பிப்ரவரி 2026 : மு.க. ஸ்டாலின் அவர்கள் கோவையில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் “தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்” கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கல்வி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சியை முன்னிறுத்தும் நோக்கில் அமைக்கப்படும் இம்மையத்தின் கட்டுமான முன்னேற்றம், பணிகளின் தரம் மற்றும் காலக்கெடு குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அறிவியல் மனப்பாங்கை வளர்க்கும் முக்கிய முயற்சியாக உருவாகும் இந்நூலகம் மற்றும் அறிவியல் மையம், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் புதிய அறிவுக் கூடமாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.
நாங்குநேரியில் புதிய வகுப்பறைகள் சட்டப்பேரவைத் தலைவர் அவர்களால் திறப்பு – குழந்தைகள் விரும்பும் கற்றல் சூழல் உருவாக்கம்
27, பிப்ரவரி 2026 : மகிழ்ச்சியான சூழலில் குழந்தைகள் கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தொடக்கப்பள்ளிகள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செண்பகராமநல்லூர் கிராமத்தில், குழந்தைகள் விரும்பும் வகையில் புதிய வகுப்பறை கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வகுப்பறைகளை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வை முன்னிட்டு, இதற்காக துணைநின்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
“குழந்தைகளைக் கொண்டாடும் நாம், அவர்கள் கொண்டாடும் வகையில் கற்கும் சூழலையும் அமைத்துக் கொடுப்போம்” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றல் பயிலும் சூழலை உருவாக்கும் முயற்சியாக இந்த திட்டம் பாராட்டப்படுகிறது.
கழக மாநில மாநாடு: 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு
திருச்சி 28, பிப்ரவரி 2026 : கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எழுச்சியுரை நிகழ்த்தவுள்ள கழக மாநில மாநாட்டிற்கான பணிகள் திருச்சியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள், கழக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு அவர்களின் வழிகாட்டுதலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெற்றி முழக்கமிடவுள்ள இந்த மாநில மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கு அடித்தளமிடவுள்ள முக்கிய அரசியல் நிகழ்வாக கருதப்படும் இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பணிகள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநாட்டை சிறப்பாக நடத்த அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைந்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
காட்டூர் ஆதிதிராவிடர் பள்ளியில் 9 புதிய வகுப்பறைகள் திறப்பு – மாண்புமிகு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடக்கம்
திருச்சி 28, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், காட்டூர் ஆதிதிராவிடர் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்துவைத்தார். மாணவர்களுக்கு மேம்பட்ட கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கில் கட்டப்பட்ட 9 புதிய வகுப்பறைகள், கல்வி வசதிகளை உயர்த்தும் முக்கிய முயற்சியாக கருதப்படுகின்றன.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் புதிய வகுப்பறைகளை நேரில் பார்வையிட்டு, கல்வி செயல்பாடுகளுக்கு அர்ப்பணித்தார். இந்த புதிய கட்டடங்கள் மூலம் மாணவர்கள் சீரான மற்றும் சிறந்த கற்றல் சூழலில் கல்வி பயில வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தாய்மொழி நாள் முப்பெரும் விழா – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
திருச்சி 28, பிப்ரவரி 2026 : காவேரி முத்தமிழ்ச் சங்கமம் சார்பில் திருச்சியில் “தாய்மொழி நாள் விழா – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கவிதை நூல் மற்றும் தங்கப்பாப்பா சிறுவர் பாடல் நூல் வெளியீடு” ஆகிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்த முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உரையில், நமது தாய்மொழியான தமிழ் மொழி சமத்துவத்தை போதிக்கும் மொழி என்றும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ போன்ற உயரிய கருத்துகள் தமிழரின் அடையாளம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், மொழித் திணிப்பு மூலம் வரக்கூடிய சமத்துவத்திற்கு எதிரான பண்பாட்டு சீர்கேடுகளை அனுமதிக்க முடியாது என்றும், தாய்மொழி மற்றும் பண்பாட்டு மரபுகளை காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திருவெறும்பூர் செல்வபுரத்தில் கிரிக்கெட் போட்டி தொடக்கம் – வீரர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து
திருவெறும்பூர் 28, பிப்ரவரி 2026 : திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில், மலைக்கோயில் கிரிக்கெட் கிளப் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி உற்சாகமாக தொடங்கியது. இந்த போட்டியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து, பங்கேற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் தளமாக விளங்கும் விளையாட்டு போட்டிகள் சமூக ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் வளர்க்கின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வீரர்கள் அனைவரும் விளையாட்டு மனப்பாங்குடன் போட்டியில் ஈடுபட்டு வெற்றிகளைப் பெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.
திராவிட மாடல் ஆட்சியில் கல்வி கட்டமைப்பு வலுப்படுகிறது – திருவெறும்பூரில் புதிய வகுப்பறைகள் திறப்பு
திருவெறும்பூர் 28, பிப்ரவரி 2026 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால், திருவெறும்பூர் தொகுதியில் அமைந்துள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 9 வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய வகுப்பறைகளை நேரில் பார்வையிட்டு, கல்வி செயல்பாடுகளை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

இந்நிகழ்வில், திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை மொத்தம் 10,648 புதிய வகுப்பறை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், 6,666 வகுப்பறைகள் கட்டும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார். கழக அரசு அமைந்ததிலிருந்து, 4,877 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.3,878 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒன்றிய அரசால் வழங்கப்பட வேண்டிய கல்வி நிதி தொடர்ந்து மறுக்கப்பட்டாலும், முதலமைச்சர் கல்வி வளர்ச்சியில் எந்தவித சமரசமும் செய்யாமல் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற நிலையை தொடர்ந்து நிலைநாட்டுவோம் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
சீதாலஷ்மி ராமசாமி கல்லூரியில் பவள விழா மற்றும் பட்டமளிப்பு – 937 மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி 28, பிப்ரவரி 2026 : திருச்சியில் அமைந்துள்ள சீதாலஷ்மி ராமசாமி கல்லூரியின் 75ஆவது ஆண்டு பவள விழாவும், 51வது பட்டமளிப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு, மொத்தம் 937 மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பவள விழாவை முன்னிட்டு கல்லூரியின் கல்விசார் சாதனைகள் பாராட்டப்பட்டன. பட்டம் பெற்ற மாணவிகள் தங்கள் திறமைகளை சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் வாழ்த்துரை வழங்கினார்.
பெருந்தலைவர் காமராஜர் நூலகம்: கட்டுமானப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் ஆய்வு
திருச்சி 28, பிப்ரவரி : திராவிட மாடல் அரசின் அறிவு கட்டுமானங்களின் அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்து வரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அறிவு வளங்களை விரிவுபடுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டு வரும் இந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது. பணிகள் துரிதமாகவும் தரமான முறையிலும் நடைபெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
திருவளர்ச்சிப்பட்டியில் கபாடி உள்விளையாட்டு அரங்கம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களால் தொடக்கம்
திருவெறும்பூர் 28, பிப்ரவரி 2026 : திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருவளர்ச்சிப்பட்டி கிராம மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தமது சொந்த நிதியில் இருந்து கபாடி உள்விளையாட்டு அரங்கம் அமைத்துக் கொடுத்தார். மாணவிகளின் விளையாட்டு திறமையை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த அரங்கம், கிராமப்புற இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் முயற்சியாகும்.

அரங்கத்தை திறந்து வைத்து, முதல் கபாடி விளையாட்டுப் போட்டியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். பங்கேற்ற மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், விளையாட்டு கல்வியுடன் இணைந்து மாணவர்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் துணைபுரியும் என்றும் கூறினார். மாணவிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய இந்த முயற்சி, விளையாட்டு வளர்ச்சிக்கான ஊக்கமாக அமைந்துள்ளது.
திருவெறும்பூரில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
திருவெறும்பூர் 28, பிப்ரவரி 2026 : திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காட்டூரில் அமைந்துள்ள அர் ரஹ்மான் பள்ளிவாசலில், முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ரம்ஜான் நோன்பு திறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், நோன்பு நோற்றி வரும் சகோதர, சகோதரிகளுடன் இணைந்து நோன்பு திறந்து, அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்தார். சமூக நல்லிணக்கத்தையும், மத நல்லுறவையும் வலுப்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள் தமிழகத்தின் ஒற்றுமை மரபை எடுத்துரைப்பதாக அமைச்சர் பாராட்டினார். நிகழ்ச்சியில் உள்ளூர் நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
காட்டூரில் பெண்கள் கபாடி போட்டி மற்றும் கபாடி திருவிழா தொடக்கம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு
திருச்சி 28, பிப்ரவரி 2026 : திருச்சி மாவட்டம், காட்டூர் கபாடி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தந்தை பெரியார் சிலை அருகே ஒருங்கிணைக்கப்பட்ட பெண்கள் கபாடி போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகளுக்கு அவர் வாழ்த்துகள் தெரிவித்ததுடன், பெண்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, துவாக்குடி ஜோதி – பெண்ணிஸ் நினைவு கபாடி குழு மற்றும் அமெச்சூர் கபாடி கழகம் இணைந்து ஒருங்கிணைத்த 4ஆம் ஆண்டு கபாடி திருவிழாவையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், விளையாட்டு மனப்பாங்கும் ஒற்றுமையும் சமூக முன்னேற்றத்திற்கு அவசியமானவை எனத் தெரிவித்தார். இளைஞர்கள் மற்றும் பெண்கள் விளையாட்டுகளில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்றும், அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். நிகழ்ச்சிகளில் உள்ளூர் நிர்வாகிகள், விளையாட்டு ஆர்வலர்கள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மூத்த செய்தியாளர் லெனின் அவர்களின் தாயார் மறைவு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆறுதல் தெரிவித்தார்

திருவெறும்பூர் 28, பிப்ரவரி 2026 : புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் திரு. லெனின் அவர்களின் தாயார் திருமதி ஆர்.எஸ். முத்துலெட்சுமி அவர்கள் மறைவையொட்டி, திருவெறும்பூர் அரியமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மறைந்தவரின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்த அமைச்சர், இழப்பால் துயரத்தில் உள்ள குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
திருவெறும்பூர் காட்டூரில் ரூ.2.02 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்
திருவெறும்பூர் 28, பிப்ரவரி 2026 : திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காட்டூர் அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாட்கோ நிதியில் இருந்து ரூ.2 கோடியே 2 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 புதிய வகுப்பறைகள் மற்றும் நவீன ஆய்வகக் கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்.

மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் அரசு மேற்கொண்டுள்ள கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இக்கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகம் மூலம் மாணவர்கள் சிறந்த கல்வி சூழலில் கற்கும் வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் உள்ளூர் நிர்வாகிகள், கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
