
இருமொழிக் கொள்கை கல்வித் திட்டம் என்பது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஒரு முக்கிய மொழிக் கொள்கையாகும். தமிழ்நாட்டின் முதல் கல்வித்துறை அமைச்சர் திருப்பூர் சுப்ரமணிய அவினாசிலிங்கம் செட்டியார் முதல் தற்போதைய அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரை கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்து வருகின்றனர். இந்த இரு மொழிக் கொள்கை தமிழ்நாட்டின் தனித்துவமான மொழிக் கொள்கையாகவும் கல்வி மற்றும் சமூக ஒற்றுமைக்கு ஆதரவாகவும் செயல்பட்டுவருகிறது.
மொழிப் போராட்டங்களின் பின்னணி

தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க ராஜாஜி மேற்கொண்ட முதல் முயற்சியை எதிர்த்து 1935களிலேயே போராட்டம் நடத்தியவர் தந்தை பெரியார். 1965-ம் ஆண்டு இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தபோது தமிழ்நாட்டில் பலகட்டப் போராட்டங்கள் வெடித்தன.
அடுத்தடுத்த காலங்களில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் ஒரு மொழிப் போர் நடந்தே முடிந்துவிட்டது.
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு

இப்போது புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க ஒன்றிய அரசு மீண்டும் ஒரு மொழிப் போரினை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தற்போது மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் புதிய கல்விக் கொள்கைக்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
தமிழ்நாட்டின் கல்வித் தரம் – இந்தியாவுக்கே முன்மாதிரி

அண்மையில், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட கல்வி நிதி ரூ.2152 கோடி வழங்காததை எதிர்த்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடுமையான கண்டனப் போராட்டம் நடத்தினார். அவரின் கூற்றுப்படி, இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னணியில் உள்ளது. மும்மொழிக் கொள்கை ஏற்றுள்ள மாநிலங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளன. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கையானது உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறந்த முடிவுகளைத் தந்துள்ளது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல துறைகளில் தமிழர்கள் சிறந்து விளங்குவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

“இந்தியாவின் கல்வித் தரத்தைக் காட்டிலும் அதிக கல்வித் தரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை முறைதான் ஒட்டுமொத்த இந்தியாவின் கல்விமுறையாக இருக்க வேண்டும் என்றும் அன்பில் மகேஸ் வலியுறுத்தி வருகிறார்.
“NEP 2020 அல்ல, RSS 2020!”

அதன் தொடர்ச்சியாக பல்வேறு நாளிதழ் மற்றும் சானல்களுக்கு அளித்த பேட்டியிலும் மும்மொழிக் கொள்கைக்குத் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை (NEP2020) முறையாக ஆராய்ந்தால், அது RSS சித்தாந்தத்தை வலியுறுத்தும் RSS 2020 என்பது புரியும் எனவும் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் நவீன யுகத்தில் எங்களின் மூன்றாவது மொழி C, C++, Java, AI போன்ற அறிவியல் மொழிகள்தான் என்றும், இந்தியாவிலேயே கல்விக்காக அதிக நிதி ஒதுக்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் உறுதியான நிலைப்பாடு

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை என்பது, அடுத்தடுத்த தலைமுறைகளின் மேம்பாட்டிற்காக தாய்மொழியாகிய தமிழில் சிந்திக்கவும், உலகத்தோடும், அறிவியல் தொழில்நுட்பங்களோடும் தொடர்புகொள்ள ஆங்கிலம் இருக்கையில், தேவையற்ற சுமையாக மூன்றாவது மொழி வேண்டாம் என்றும், அறிவியல் நோக்கிய வளர்ச்சிக் காலத்தில், இன்னுமும் பழமையைத் தூக்கிப் பிடிக்கும் புதிய கல்விக் கொள்கையை எக்காலத்திலும் தமிழ்நாடு ஏற்காது எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr