அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் 234/77 பள்ளி விசிட்!

எல்லோருக்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டு வருகிறது திரு மு.க. ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு. அதன் அடிப்படையில் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பள்ளிக்கல்வித்துறை இதுவரையிலும் கண்டிடாத மாபெரும் முன்னேற்றங்களையும் சாதனைகளையும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு அங்கமே 234/77 விசிட்.

மாணவர்களின் நலனையும் திறன்களையும் ஊக்குவிக்கும் விதமாகப் பல சிறப்பான திட்டங்களைத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. திட்டங்களை அறிமுகப்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல் அந்தத் திட்டங்கள் மாணவர்களைச் சென்றடைகிறதா என்பதை ஆராயவும் பள்ளிக் கல்வித் துறையின் முன்னெடுப்புகள் தொடர்கின்றன.

அந்தவகையில் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

களம் காணும் அமைச்சர்!

பள்ளிக் கல்வித் துறையின் சிறந்த முயற்சிகளில் 234/77 ஆய்வும் ஒன்று.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 77 பிரிவுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 2022 அக்டோபர் 10 அன்று தொடங்கிய இந்த ஆய்வு 2024 நவம்பர் 27 அன்று நிறைவு பெற்றது.

பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’ என்று பிரம்மாண்டமாக விருத்தாசலத்தில் நடைபெற்ற ஏழாவது மண்டல பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டில் பள்ளிகள் குறித்த தன் ஆய்வறிக்கையை ‘ஒருமைக்கண்’ என்ற டிஜிட்டல் செயலி வழியாகச் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அந்த செயலியை வெளியிட்டு, `அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பொறுப்புக் காலம், பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம்‘ என்று வாழ்த்தினார்.

வரலாறு படைக்கும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வு

இந்தியாவிலேயே எந்தவொரு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் நினைத்துக்கூட பார்க்காததை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 திட்டத்தின் மூலம் செய்து காட்டியுள்ளார். மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்த முதல் கல்வி அமைச்சர் என்ற வரலாறு படைத்துள்ளார்.

இதன்மூலம் அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல… அது நம் பெருமையின் அடையாளம் என்ற மனப்பான்மையை மக்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு சேர்த்திருக்கிறார். அது அதிகரித்துவரும் அரசுப்பள்ளி சேர்க்கையில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஆக, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தொடர் செயல்பாடுகளால், தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகிறது.

1 thought on “அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் 234/77 பள்ளி விசிட்!”

  1. Pingback: +2 தேர்வு முடிவுகள் - மணிமகுடம் சூடிய அரசுப் பள்ளிகள்! - Anbil Mahesh Forever

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

English
Scroll to Top