+2 தேர்வு முடிவுகள் – மணிமகுடம் சூடிய அரசுப் பள்ளிகள்!

+2 பொதுத் தேர்வு முடிவுகளை மே 8 ஆம் தேதியன்று வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தேர்வின் முடிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் அசாத்திய சாதனை படைத்து, `கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.  

+2 பொதுத் தேர்வு முடிவுகளை மே 8 ஆம் தேதியன்று வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.


+2 பொதுத் தேர்வு: அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம்!

தமிழ்நாட்டில் 7,513 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 7,92,494 மாணவர்கள் +2 பொதுத் தேர்வை எழுதி இருந்தார்கள். இவர்களில் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மொத்த தேர்ச்சி விகிதம் 95.03 சதவீதம். தமிழ்நாட்டில் 3,162 அரசுப் பள்ளிகள் உள்ளன. அதில் 436 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளன. அதோடு அரசுப் பள்ளிகளில் படித்த 91.94% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

+2 பொதுத் தேர்வில் 436 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளன.

கல்வி சிறந்த தமிழ்நாடு! 

மொழிப் பாடத்தை பொறுத்தவரையில் தமிழ் மொழிப்பாடத்தில் 135 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். ஆங்கில பாடத்தில் 68, இயற்பியல் பாடத்தில் 1,125, வேதியியல் பாடத்தில்  3,181, உயிரியல் பாடத்தில் 827, கணித பாடத்தில் 3,022, தாவரவியல் பாடத்தில் 269, விலங்கியல் பாடத்தில் 36, கணினி அறிவியல் பாடத்தில் 9,536, வணிகவியல் பாடத்தில் 1624, கணக்குப் பதிவியல் பாடத்தில் 1,240, பொருளியல் பாடத்தில் 556, கணிணிப் பயன்பாடுகள் பாடத்தில் 4,208, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 273 பேர் என 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து மாணவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள்.  

தமிழ் மொழிப்பாடத்தில் 135 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை!

+2 பொதுத் தேர்வு: எல்லார்க்கும் எல்லாம்!

+2 பொதுத் தேர்வு எழுதிய 8,019 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 7,466 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய  140 சிறைவாசிகளில் 130  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 16,904 தனித்தேர்வர்களில் 5,500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

எல்லார்க்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்!

+2 பொதுத் தேர்வு: டாப் 5 மாவட்டங்கள்!

அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் 98.32% பெற்று முதலிடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டம் 96.88% பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.  திருப்பூர் ( 95.64%), கன்னியாகுமரி (95.06%), கடலூர் ( 94.99%) மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 

+2 தேர்வு முடிவுகள்: அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டங்கள்!

ஊக்கம் அளிக்கும் உற்சாகமூட்டும்  `14417’

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து துணைத்தேர்வு தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது பள்ளிக் கல்வித்துறை.

இதற்காக 24X7 செயல்படும் 14417 என்ற கல்வி உதவி மைய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரியில் விண்ணப்பிக்கும் முறை, கல்விக் கட்டணம், உதவித்தொகை போன்ற ஆலோசனைகளையும் இந்த எண்ணில் பெறலாம்.

To know more about Ministers work click

+2 மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் உற்சாகமூட்டும்  `14417’ கல்வி உதவி மைய எண்!

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் செயல்படும் பள்ளிக் கல்வித்துறை தகவல் மையத்திற்கு  (14417) மே 10-ம் தேதி சென்று அப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் தொலைபேசி மூலம் உரையாடினார். 

“வணக்கம். நான் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகிறேன். +2 தேர்வில் உங்கள் மகன் தேர்ச்சி பெறவில்லை எனக் கவலைப்படாதீர்கள். பிள்ளைக்கு ஊக்கம் கொடுங்கள். உறுதுணையாக இருந்தால், துணைத்தேர்வு எழுதி வெற்றிபெற்று இந்த வருடமே தம்பியைக் கல்லூரியில் சேர்த்துவிடலாம். +2 துணைத்தேர்வை நம்பிக்கையோடு எழுதச் சொல்லுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று மாணவர்களின் பெற்றோரிடம் பேசினார்.


உயர்த்தும் உயர்கல்வி!

பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்விக்குள் அடியெடுத்துவைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். 

“மாணவர்களுக்கு கல்லூரிக் கனவு – உயர்வுக்குப் படி – சிகரம் தொடு – நான் முதல்வன் என அரசின் திட்டங்கள் வழிகாட்டும். அதனை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் மீது எந்த அழுத்தத்தையும் தராமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும். தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாமல் துணைத்தேர்வு எழுதி விரைவாக உயர்கல்வியில் சேர்ந்து வெற்றி பெறுவீர்கள் என்ற முனைப்போடு செயல்படுங்கள். அதற்கான அத்தனை வாய்ப்புகளையும் நமது அரசு உறுதிசெய்யும்’’ என்றார். 

1 thought on “+2 தேர்வு முடிவுகள் – மணிமகுடம் சூடிய அரசுப் பள்ளிகள்!”

  1. Pingback: 10, +1 பொதுத் தேர்வு முடிவுகள் - அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்! - Anbil Mahesh Forever

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

English
Scroll to Top