
மண்டலத் திரளணி – கேம்போரி! மாணவர்களின் தலைமைத்துவப் பண்பு, ஒற்றுமை மற்றும் சமூக சேவை மனப்பான்மை ஆகியவை குறித்த நேரடி கள அனுபவத்தை வழங்கும் ஒரு அரிய வாய்ப்புதான் சாரணர் இயக்கத்தின் கேம்போரி!
கடந்த ஜுலை – 17 அன்று சாரணர்-சாரணியர்களுக்கான மண்டலத் திரளணியை (Camporee) அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தது மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை அளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் அமைந்துள்ள குனிகாந்தூர் கிராமம், மலைவாழ் மக்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 670 சாரணர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
ஆயத்தமாக இரு!
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “மக்கள் பேரிடரில் சிக்கினால் உடனடியாக உதவி செய்யும் மனப்பான்மையுடன், மற்ற உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றும் பொறுப்பு உணர்வுடன் மாணவர்கள் இருக்க வேண்டும். உடல் மற்றும் மனதளவில் எப்போதும் தயாராக இருப்பதோடு அறிவோடும் சிந்தனையோடும் செயல்பட வேண்டும்’’ என்று ஊக்குவிக்கும் விதமாகப் பேசினார்.



வைரவிழா ஜம்போரி!
முன்னதாக திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 2025 ஜனவரி மாதம் 28-ம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவுப் பெருந்திரளணி மற்றும் பாரத சாரணர்-சாரணியர் இயக்கத்தின் 75-ம் ஆண்டு வைரவிழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த விழாவில் 20,000-க்கும் மேற்பட்ட சாரணர், சாரணியர்கள் பங்கேற்று 7 உலக சாதனைகளை நிகழ்த்தினர். அந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு, சாரணர்-சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான `வெள்ளி யானை விருது’ வழங்கப்பட்டது.
ஜம்போரியின் வெற்றிக்கு கேம்போரியின் பங்கு!





“சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஜம்போரி நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு, மண்டல அளவில் நடத்தப்படும் கேம்போரி நிகழ்ச்சிகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம்தான் காரணம். இத்தகைய நிகழ்ச்சிகள், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் பயிற்சிக் கூடங்களாகச் செயல்படுகின்றன’’ என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
முதலமைச்சருக்கு நன்றி!
சாரணர்-சாரணியர்களுக்கு ஊக்கமளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “நமது இயக்கத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அளிக்கும் முக்கியத்துவம், நாம் பெருமையுடன் செயலாற்ற வேண்டிய உந்துசக்தி. அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒவ்வொரு சாரணரும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
`ஒருமுறை சாரணர், எப்போதும் சாரணரே!’ என்ற உறுதியை மாணவர்கள் பெற வேண்டும்’’ என்றார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Also Read: State Education Policy: A Blueprint for Tomorrow’s Tamil Nadu!

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr