
பள்ளி மாணவ விஞ்ஞானிகளின் கனவுகளை எளிமையாக்கும் ‘துளிரும் விஞ்ஞானி’ அறிவியல் கண்காட்சி ஜூலை 25ம் தேதி, திருச்சி எம்.ஐ.இ.டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியை மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
துளிரும் விஞ்ஞானி : மாணவர்களின் கண்டுபிடிப்புகளால் பரவசமான பார்வையாளர்கள்!

இந்த கண்காட்சியில், பள்ளி மாணவர்கள் தங்கள் கற்பனையையும், அறிவியலையும் வைத்து உருவாக்கிய பல்வேறு கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தினார்கள். தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், விவசாயம், சுகாதாரம் போன்ற துறைகள் சார்ந்த ஆர்வமுள்ள முயற்சிகள் பார்வையாளர்களை பரவசமாக்கியது.
மாணவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் ஒரு சக மாணவனாகவே உணர்கிறேன்!

‘துளிரும் விஞ்ஞானி’ அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்தக் கண்காட்சிகளில் நுழையும்போது, மாணவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் ஒரு சக மாணவனாகவே என்னை உணர்கிறேன்” என்று நெகிழ்ந்தார்.
கூடவே மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது கண்டுபிடிப்புகளையும் பாராட்டி மகிழ்ந்தார்.
கல்வி என்பது தேர்வுகளில் மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல!
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
“கல்வி என்பது தேர்வுகளில் மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல.
அது நிஜ வாழ்வில் நாம் கற்றதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது.
புத்தகங்களில் படிக்கும் கோட்பாடுகளை, ஆய்வகங்களிலும், களத்திலும் நேரடியாகச் செயல்படுத்திப் பார்ப்பது மிகவும் முக்கியம்.
அறிவியல், கணிதம், சமூக அறிவியல் என எந்தப் பாடமாக இருந்தாலும், அதனைச் செயல்முறை அனுபவத்துடன் கற்கும் போதுதான் கற்றல் முழுமை அடைகிறது. ஒரு மாணவன் தனது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தவும் வெளியுலகச் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் அது வழிவகுக்கிறது.
பகுத்தறிவும் சமூகப் பொறுப்பும் தேவை
மாணவர்கள் சமூகத் தேவைகளைப் புரிந்து,புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். விவசாயம் முதல் தொழில்நுட்பம் வரை பாகுபாடின்றி கல்வி பயில வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தினார்.
இந்த அறிவியல் கண்காட்சி, மாணவர்களின் எதிர்காலக் கனவுகளுக்கு பலம் தரும் ஒரு தூண்டிலாய் அமைந்திருக்கிறது.
Read about Nan Muthalvan Scheme here
நாளைய தலைமுறைக்கான அறிவியலாளர்களை உருவாக்கும் துளிரும் விஞ்ஞானி!
பல்வேறு அறிவியல் மாதிரிகள், செயல்விளக்கங்கள் மற்றும் வினாடி வினாக்கள் மூலம் மாணவர்களின் ஆர்வம் தூண்டப்பட உதவியிருக்கிறது. இது வெறும் கற்றல் நிகழ்வாக மட்டுமில்லாமல், மாணவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தையும், அறிவியலின் மீதான காதலையும் வளர்த்திருக்கிறது. நாளைய தலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கும், நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையிடுவதற்கும் பேருதவியாக அமையும் வகையில் உள்ளது.
“துளிரும் விஞ்ஞானி” – அறிவியல்சார் சமூகத்தை உருவாக்கும் சிறந்த முயற்சி!









Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr
Pingback: அரசுப் பள்ளி மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு! - Anbil Mahesh Forever