Anbil Updates – September 2025

மாணவர்களை விளையாட அனுமதியுங்கள்! 

சென்னை,01,செப்டம்பர் 2005 : மயிலாப்பூர் ரோசரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 75ஆம் ஆண்டு வைர விழாவில் கலந்துகொண்டார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கடமை உணர்வுமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு அழகான வரவேற்பை அளித்த மாணவச் செல்வங்களுக்கு நன்றி தெரிவித்தார். அனுபவமிக்க கலைஞர்களைப் போலும் சிறப்பாக தங்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளையும், பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவிகளையும் பாராட்டினார்.

மேலும் “பெற்றோர்களே… ஆசிரியர்களே… மாணவர்களை விளையாட அனுமதியுங்கள்! அவர்களுக்கு நூல்களை அறிமுகம் செய்து வையுங்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கமே மக்கள் வாசலுக்கு வந்து தீர்வு தருகிறது 

திருவெறும்பூர்,02,செப்டம்பர் 2025 : திராவிட மாடல் அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், திருவெறும்பூர் தொகுதி மாநகர வார்டு 49-ல் வசிக்கும் மக்களுக்காக சங்கிலியாண்டபுரம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

அதனை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்ததோடு, உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கி மகிழ்ந்தார். மக்களின் மனுக்களை அரசாங்க அலுவலகங்களுக்கு சென்று தர வேண்டிய அவசியமில்லை; அரசாங்கமே மக்கள் வாசலுக்கு வந்து தீர்வு தருகிறது என்பதே இந்த திட்டத்தின் சிறப்பும் வலிமையும் ஆகும்” என அமைச்சர் வலியுறுத்தினார்.

திருவெறும்பூரில் அரியமங்கலம் – துவாக்குடி நெடுஞ்சாலையில் அணுகுச்சாலை கோரிக்கை

திருவெறும்பூர்,02,செப்டம்பர்2025: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உள்ள நெடுஞ்சாலைப் பகுதியில் அணுகுச்சாலை (Service Road) அமைப்பது தொடர்பாக மக்கள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.அதில் அவர்கள், “நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிரமங்கள் குறையவும், மக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், அணுகுச்சாலை மிக அவசியம்” என மக்கள் வலியுறுத்தினர்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உறுதியளித்தார்.

திருச்சி மாவட்ட அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது 

திருச்சி,02,செப்டெம்பர் 2025: திருச்சி கலைஞர் நகரில் சிறப்பாக செயல்பட்டு வந்த அரசு உயர்நிலைப்பள்ளி, அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நடப்புக் கல்வியாண்டு முதல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையொட்டி இன்று நடைபெற்ற விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று வாழ்த்துரையாற்றினார். கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கி, கல்வெட்டினையும் புதிய வகுப்பறையையும் திறந்து வைத்தார். மேலும், 11ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவச் செல்வங்களை அன்புடன் வரவேற்று, அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான வாழ்த்துகளை வழங்கினார்.

மணப்பாறை  பகுதி அரசு உயர்நிலைப் பள்ளி  மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்வு.

மணப்பாறை,02,செப்டெம்பர்2025: மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளக்காம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, நடப்புக் கல்வியாண்டு முதல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை முன்னிட்டு பள்ளியில் சிறப்பான விழா நடைபெற்றது. கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். புதியதாக தொடங்கப்பட்ட 11ஆம் வகுப்பில் சேர்க்கை பெற்ற மாணவச் செல்வங்களை அவர் நேரடியாக வரவேற்று, வாழ்த்துரை நிகழ்த்தினார்.

இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

திருவெறும்பூர் தொகுதி குண்டூர் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் 

திருவெறும்பூர், 02,செப்டெம்பர்2025: நம்முடைய திருவெறும்பூர் தொகுதியின் குண்டூர் ஊராட்சியைச் சேர்ந்த மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் அயன்புத்தூர் சித்ரா கணேஷ் மகாலில் சிறப்பாக நடைபெற்றது.

முகாமில் கோரிக்கையோடு வந்த பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடி, அவர்களின் தேவைகளை கவனித்து தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உடனடியாக பயனடைந்த மக்களுக்கு ஆணைகளை வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்துகொள்ளப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சிகள் – குழந்தைநேய வகுப்பறைகள் & பள்ளி நூலக மேம்பாடு தொடக்கம்

மதுரை,02,செப்டெம்பர்2025 : நம்முடைய பள்ளிக் கல்வித்துறையின் 2025–2026 மானியக்கோரிக்கை அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டபடி, “குழந்தைநேய திறன்மிகு வகுப்பறைக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் தளவாடப் பொருட்கள் வழங்கப்படும்” என்ற திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதனை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 6,478 தொடக்கப்பள்ளிகளில் குழந்தைநேய வகுப்பறைச் சூழலை உருவாக்க, மொத்தம் 32,390 மேசைகள் மற்றும் 1,29,560 நாற்காலிகள் வழங்கும் பணியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு அமைச்சர்  பி.மூர்த்தி அவர்களுடன் இணைந்து, மதுரை மாவட்டம் ம.சந்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் துவக்கி வைத்தனர்.

அதேபோல, “பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத்தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்துதல்” என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் எழுதப்பட்ட 51 கதைகள் அடங்கிய 81 நூல்களை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

மதுரை யா.கொடிக்குளம் பள்ளி உயர்நிலைப்பள்ளியாக உயர்வு – புதிய வகுப்புகள் தொடக்கம் 

மதுரை,02,செப்டெம்பர்2025: மதுரை மாவட்டம் யா.கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுடன் இணைந்து பங்கேற்று, புதிய வகுப்புகளைத் தொடங்கி வைத்து, மாணவச் செல்வங்களை அன்புடன் வரவேற்றனர்.

மேலும், இப்பள்ளி உயர்வு குறித்த கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து பாடுபட்ட கல்விக் கொடையாளர் ஆயி பூரணம் அம்மாள் அவர்களையும் நிகழ்வில் சிறப்பாக கவுரவித்தனர்.

மதுரை ஊமச்சிக்குளம் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு

மதுரை,02,செப்டம்பர் 2025:

திராவிட மாடல் அரசால் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள 20 உயர்நிலைப் பள்ளிகளில், மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளத்தில் செயல்படும் பள்ளியும் ஒன்று.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. மாண்புமிகு அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுடன் இணைந்து மதுரை ஊமச்சிக்குளம் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்ததற்கான அரசாணையை பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினார்கள். மேலும், 11ஆம் வகுப்புகளைத் தொடங்கி வைத்து மாணவச் செல்வங்களை அன்புடன் வரவேற்றனர்.

“உங்களுடைய கல்விக்கு தடையாக எத்தனை சவால்கள் வந்தாலும், அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளிக்கும் முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம்… எனவே நம்பிக்கையோடு படியுங்கள்” எனும் வாழ்த்துச் சொற்களை மாணவர்களிடம் பகிர்ந்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

 கல்வித் திறன் மேம்பாட்டிற்கான கலந்துரையாடல்

விருதுநகர்,02,செப்டம்பர்2025: SLAS ஆய்வறிக்கை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களின் கற்றல் அடைவு இலக்குகளை எட்டுவது, வரவிருக்கும் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை மேலும் உயர்த்துவதற்கான முயற்சிகள் குறித்து தலைமை ஆசிரியர்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

மொத்தம் 5 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 520 தலைமை ஆசிரியர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். அவர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, பள்ளிகளில் நடைமுறைக்கு கொண்டு வரக்கூடிய புதிய கல்வி முறைகள், கற்பித்தல்–கற்றல் உத்திகள், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

டெல்டா பகுதி தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்

திருச்சிராப்பள்ளி,03,செப்டெம்பர்2025 : கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் மு,க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு, டெல்டா பகுதி தி.மு.க. பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டம், கழக முதன்மைச் செயலாளர் – மண்டலப் பொறுப்பாளர், மாண்புமிகு அமைச்சர் கே,என் நேரு அவர்களின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புசார் விவகாரங்கள் குறித்த ஆலோசனைகளில் பங்கேற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .

திருவெறும்பூர் தொகுதி துவாக்குடியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் – மக்களுக்கு உடனடி தீர்வுகள்

திருவெறும்பூர்,03,செப்டெம்பர் 2025 :  திராவிட மாடல் அரசின் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சியின் வார்டுகள் 18 மற்றும் 19-ல் வசிக்கும் மக்களுக்காக நடைபெற்றது.

முகாமை நேரில் பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஒவ்வொரு மனுவையும் கவனமாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்தார். குறிப்பாக, சில கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட்டதால், அந்த மனுக்களுக்கு உரிய அரசாணைகள் மற்றும் உத்தரவுகளை நேரடியாக பயனாளிகளிடம் வழங்கினார்.

TET தேர்வு வழக்கு தீர்ப்பைத் தொடர்ந்து – ஆசிரியர் நலனுக்கான நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

சென்னை,04,செப்டெம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, TET தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 36 ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அவர்கள் வலியுறுத்திய கருத்துகள் கவனமாக கேட்டறியப்பட்டன. “எந்த நிலையிலும் ஆசிரியப் பெருமக்களை நம்முடைய திராவிட மாடல் அரசு கைவிடாது” என்ற மாண்புமிகு முதலமைச்சரின் உறுதிப்பாடு ஆசிரியர் சங்கங்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

ஆசிரியர் தின விழாவில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விருதுகள் மற்றும் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன 

சென்னை,05,செப்டெம்பர் 2025 : சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பாக ஆசிரியர் தின விழா நடைபெற்றது. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலை வகுக்க, மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமை தாங்கி, விருதுகள் மற்றும் பணிநியமன ஆணைகள் வழங்கினார்

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தியோடு, துணை முதலமைச்சர் அவர்கள் ‘ஆசிரியர் தின விழா மலர்’ மற்றும் ‘10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் கையேடு’ ஆகியவற்றை வெளியிட்டு சிறப்பித்தார்

தொடர்ந்து, 396 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி கௌரவித்தார். மேலும், 2810 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வின் தொடக்கமாக, 50 பேருக்கு நேரில் ஆணைகள் வழங்கப்பட்டன. உலகை சிந்திக்க வைக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் நடைபெற்ற இவ்விழா, சிறப்பான நிகழ்ச்சிகளுடன் நிறைவுற்றது.

‘மகிழ் முற்றம்’ திட்டத்திற்கு உலக அங்கீகாரம்

சென்னை,05,செப்டெம்பர் 2025 : மாணவர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் குழுக்களை அமைத்து, ‘மகிழ் முற்றம்’ எனும் திட்டம் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒற்றுமையுணர்வு, சமூக மனப்பான்மை, வேற்றுமை களைதல் போன்ற பண்புகளை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்ததற்காக, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு Inclusive Neighbourhood Children’s Parliament அமைப்பின் உலக அங்கீகாரச் சான்று வழங்கப்பட்டது. இந்த பெருமைக்குரிய அங்கீகாரம் இன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழா மேடையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டு பெருமை கொள்ளப்பட்டது. மாணவர்களின் ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டங்களுக்கு கிடைத்த சர்வதேச பாராட்டாக இந்த அங்கீகாரம் கருதப்படுகிறது.


கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு  POCSO விழிப்புணர்வு பயிற்சியை தொடக்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கிருஷ்ணகிரி,06,செப்டெம்பர்2025 : 2025-26 பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் அடிப்படையில், தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வழங்கும் திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் சக்கரப்பாணி அவர்களுடன் இணைந்து திட்டத்தை தொடங்கி வைத்தார். ரூ.4.94 இலட்சம் மதிப்பில், தமிழ்நாடு முழுவதும் 90,000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.இப்பயிற்சியின் மூலம், பள்ளி வளாகங்களில் குழந்தைகளின் உரிமைகள் காக்கப்படுவதோடு, பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்க தேவையான சட்ட அறிவும் விழிப்புணர்வும் அனைவருக்கும் பரப்பப்படும். குழந்தைகள் பாதுகாப்பாகக் கற்கும் சூழலை உருவாக்குவது, ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதையும் இத்திட்டம் வலியுறுத்துவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பாக பார்வைக் குறைபாடுள்ள மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 

சேலம்,06,செப்டெம்பர் 2025 : சேலம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பன்னாட்டு அரிமா சங்கங்கள் (அரிமா மாவட்டம்: 3242E) சார்பாக பார்வைக் குறைபாடுள்ள மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கண் கண்ணாடிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு. சேலம் ஆர். ராஜேந்திரன் அவர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு AI கண்ணாடிகளை வழங்கினர். மொத்தம் ரூ.55.60 இலட்சம் மதிப்பில் 170 மாணவர்களுக்கு இக்கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கலந்து கொண்ட மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் திருமிகு டாக்டர் இரா. பிருந்தா தேவி இ.ஆ.ப., அரிமா மாவட்ட ஆளுநர் திரு. விஸ்வநாதன், அரிமா சங்க நிர்வாகிகள் திரு. தனபாலன், Capt. D.J. உள்ளிட்ட பலர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மாணவர்களின் கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு கண் கண்ணாடிகள், பார்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் முன்னேறுவதற்கும், அறிவைப் பெருக்கிக்கொள்ளுவதற்கும் பெரும் துணை புரியும். “அறிவியல் என்பது நிலாவிற்கு செல்வது மட்டுமல்ல; புதிய கோள்களைத் தேடிப்பிடிப்பது மட்டுமல்ல; எளிய மக்களுக்கு உதவும் வகையில் புதிய சாதனங்களை உருவாக்குவதே அறிவியலின் உண்மை நோக்கமாக இருக்க வேண்டும். இந்த AI கண் கண்ணாடி அந்த நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்,” என அமைச்சர் உரையாற்றினார்.

கழக முன்னோடி திரு.சிவராமன் அவர்களின் மறைவுக்கு அமைச்சர் அஞ்சலி 

கரூர்,06,செப்டெம்பர் 2025 : கழகத்தின் மூத்த முன்னோடி குளித்தலை திரு.சிவராமன் அவர்கள். கரூரில் நடைபெறவிருந்த கழக முப்பெரும் விழாவில் ‘பாவேந்தர் பாரதிதாசன்’ விருது வழங்கப்படவிருந்த நிலையில் காலமானார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதன்முதலாக குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது, அவரின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர் திரு.சிவராமன். திருச்சி மாவட்டத் தொண்டரணி ஒருங்கிணைப்பாளர், குளித்தலை நகரச் செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளில் கழகத்துக்காக சேவை செய்தவர்.

அவரின் மறைவையொட்டி மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் குளித்தலையில் உள்ள முத்துவேலர் இல்லத்திற்கு சென்று, திரு.சிவராமன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினரிடம் ஆறுதல் பகிர்ந்துகொண்டார்.

துவாக்குடியில் அன்பில் அறக்கட்டளை சார்பாக மருத்துவ முகாம் தொடக்கம்

திருவெறும்பூர்,07,செப்டெம்பெர் 2025 : அன்பில் அறக்கட்டளை சார்பில் தனது திருவெறும்பூர் தொகுதி மக்களுக்காக தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தி வாருகிறார் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. அதன்படி, Apollo மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்படும் மருத்துவ முகாம் துவாக்குடி மக்களுக்காக ராவுத்தன்மேடு சமுதாய நலக்கூடத்தில் நடத்தப்பட்டது.

இம்முகாமினை தொடங்கிவைத்து பின் பார்வையிட்டு. துவாக்குடி பகுதி மக்கள் ஆரோக்கிய நலனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முகாமை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

பொதுத் தேர்வுகளில் முழு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய அமைச்சர்கள் 

திருச்சி,07,செப்டெம்பெர் 2025 :  2024 – 25-ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தமிழ்ப் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருவெறும்பூரில் ஒருங்கிணைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோருக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். 

இவ்விழாவில்  மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு , அரசுப் பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். தமிழ்ப் பாடத்தில் முழு மதிப்பெண் பெற காரணமாக இருந்த ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன். திருச்சி மாவட்டத்தில் அரசு சார்பில் பிரம்மாண்ட விழாக்களை நடத்துவதற்க்காகவே நகராட்சிநிர்வாகத் துறை சார்பில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு அருகே மிகப் பெரிய அரங்கம் அமைத்துத் தரஏற்பாடு செய்யப்படும் என்றார். மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , கடந்த ஆண்டைவிட நிகழாண்டு தமிழ்ப் பாடத்தில் அதிக மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதற்கு ஆசிரியர்களின் அயராத உழைப்பே காரணம். அனைத்துக்கும் பின்புலமாக இருந்து நம்மை இயக்குவது ஆசிரியர்கள். தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பாராட்டு, அவர்களுக்கு மட்டுமானது அல்ல, ஒட்டுமொத்த பள்ளி ஆசிரியர்களுக்குமானது என்றார்.

திருச்சியில் காமராஜர் நூலக கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

திருச்சி,07,செப்டெம்பெர் 2025 : திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உலகத் தரத்தில் உருவாகும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தரை மற்றும் 7 தளங்களுடன், 1,97,337 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் இந்நூலகம் புத்தகங்கள், இ-புத்தகங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்  என மொத்தம் ரூ.290 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது.

பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்கள், விரைவாகவும் தரமாகவும் நிறைவு செய்ய அறிவுறுத்தினர். அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் நூலகம் திறக்கப்படும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன” என்றார். ஆய்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், எம்எல்ஏ கதிரவன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகை மிலாதுநபி விழாவில் மீலாது ஊர்வலத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

நாகப்பட்டினம்,07,செப்டெம்பெர் 2025 : நாகை முஸ்லிம் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற மிலாதுநபி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மீலாது ஊர்வலத்தை மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் , “மிலாதுநபி போன்ற இஸ்லாமிய திருவிழாக்களில் மட்டுமல்லாது, பிற மதத் திருவிழாக்களிலும், மேலும் மக்கள் பேரிடர்களை எதிர்கொள்ளும் வேளைகளிலும், எப்போதும் சமூகத் தொண்டில் ஈடுபடும் இஸ்லாமிய சகோதரர்களின் பங்களிப்பு சிறப்புக்குரியது” என்று குறிப்பிட்டார். அனைவருக்கும் மிலாதுநபி நல்வாழ்த்துகயும்  தெரிவித்துக் கொண்டார்.

நாகையில் ஓரணியில் தமிழ்நாடு இலக்கை எட்டிய கழகத்தினருக்கு கௌரவிப்பு

நாகப்பட்டினம்,07,செப்டெம்பெர் 2025 : நாகை மாவட்ட திமுக அலுவலகமான தளபதி அறிவாலயத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பாராட்டு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க, 40 சதவீதத்திற்கும் மேல் உறுப்பினர் சேர்த்த அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் பி.எம்.ஸ்ரீதர், முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், தொகுதி பார்வையாளர்கள் ஆர்.அருள் செல்வம், இரா.சங்கர், ஜெயபிரகாஷ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் பி.எம்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு, அதிக உறுப்பினர்களை சேர்த்த கழக செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும், உறுப்பினர் சேர்க்கையில் அனைவரும் காட்டிய உறுதியான பங்களிப்பை சிறப்பித்து, கழக வளர்ச்சிக்கான தன்னார்வ சேவை தொடர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

TNRising பயண வெற்றிக்குப் பின் முதல்வருக்கு கலைஞரின் படைப்பால் வரவேற்பளித்தர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை,08,செப்டெம்பெர் 2025 : ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான TNRising பயணத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். வெளிநாடுகளில் நடைபெற்ற முதலீட்டு சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம், தமிழகத்தில் புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகும் வகையில் மாபெரும் வெற்றி பெற்றதாக அப்பயணம் மதிக்கப்படுகிறது.

தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளை வழிகாட்டுதலாகக் கொண்டு, அந்நாடுகளின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்து வந்திருக்கும் கழகத் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மரியாதையாக, கலைஞர் கருணாநிதி எழுதிய வரலாற்றுப் படைப்பு “தென்பாண்டிச் சிங்கம்” நூலை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கி வரவேற்றார்.

‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் 9,534 மாணவர்களுக்கு பல் சிகிச்சை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கோயம்புத்தூர், செப்டம்பர் 08, 2025 –  ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் கீழ் 9,534 அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் பல் குறைபாடுகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சூலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பல் ஆரோக்கிய முகாம் நிறைவு விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஆர்.வி.எஸ். பல் மருத்துவக் கல்லூரி இணைந்து கடந்த ஓராண்டாக 80 பள்ளிகளில் முகாம்கள் நடத்திவருகின்றனர். ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற இம்முகாமில் மொத்தம் 16,080 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் ரூ.800 கோடி சிஎஸ்ஆர் நிதி பள்ளிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த முகாம்களில் பல் மற்றும் ஈறு பரிசோதனை, பல்சொத்தை தடுக்கும் விழிப்புணர்வு, பல் சுத்தம் செய்வது, உணவு பழக்க வழக்கங்களின் முக்கியத்துவம் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முதல்வர் மு.க. ஸ்டாலின் 2022 டிசம்பர் 19-ந்தேதி இத்திட்டத்தை தொடங்கி, முதல் நிதியாக ரூ.5 லட்சம் வழங்கியதாகவும் அமைச்சர் நினைவூட்டினார். விழாவில் கலெக்டர் பவன்குமார், முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, ஆர்.வி.எஸ். கல்விநிறுவனங்கள் சேர்மன் குப்புசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

India Today Conclave south மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை

கோயம்புத்தூர், 08, செப்டம்பர் 2025 – கோயம்புத்தூரில் நடைபெற்ற India Today Conclave South மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், கர்நாடக மாநில ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிக் கல்வி அமைச்சர் திரு. மது பங்காரப்பா அவர்களை சந்தித்து, மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025 மற்றும் தாம் எழுதிய தேசியக் கல்விக் கொள்கை 2020: மதயானை (The Rogue Elephant) என்ற நூலை வழங்கினார்.

One Nation, Many Classrooms: Can #NEP Align with State Realities?” என்ற தலைப்பில் திரு. ராஜ் செங்கப்பா அவர்கள் நடத்திய கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு ஏன் தனிப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையை (SEP) உருவாக்கியது என்பதை விரிவாக விளக்கினார்.

“SEP என்பது மாற்று ஆவணம் அல்ல; அது நமது கலாச்சாரம், மொழி அடையாளம், பாரம்பரியம் மற்றும் சமூகநீதிக்கான உறுதியின் பிரதிபலிப்பு. மாணவர்களின் நலனும், ஒருங்கிணைந்த எதிர்காலமும் இதன் நோக்கம். ஆனால் NEP 2020 இத்தகைய அடித்தளங்களை புறக்கணித்து, ஒரே மாதிரி வார்ப்புருவை திணிக்கிறது. மூன்று மொழிக் கொள்கை கற்றலுக்காக அல்ல; கட்டுப்பாட்டிற்காக. மதச்சார்பற்ற என்ற சொல்லை நீக்கியிருப்பதே அதன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது,” என்றார்.

மேலும், “மத்திய அரசு முழு நாட்டிற்கும் ரூ.78,572 கோடி மட்டுமே ஒதுக்கும்போது, தமிழ்நாடு பள்ளிக் கல்விக்கே ரூ.46,767 கோடி முதலீடு செய்கிறது. இது யார் உண்மையில் குழந்தைகளின் எதிர்காலத்தை மதிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. SEP தான் எங்கள் பதில். தமிழ்நாட்டிற்கு கல்வியில் யாரும் பாடம் கற்பிக்க வேண்டாம்; யாராவது முயன்றால் பாடம் கற்பிப்பது தமிழ்நாடுதான்” என வலியுறுத்தினார் அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி .

திருச்சியில் ஆசிரியர் தின விழா: அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு உரை

திருச்சி,09, செப்டெம்பர் 2025: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி இணைந்து நேற்று ஆசிரியர் தின விழாவை கொண்டாடின. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக திருச்சி தலைமை கல்வி அதிகாரி கிருஷ்ணப்ரியா பங்கேற்றார்.

விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாம் பெற்றோர்களாக இருந்து, நாகரிகம், பண்பாடு, அறம் ஆகியவற்றை கற்றுத்தந்து சிறந்தவர்களாக செதுக்குகின்றனர்” எனக் கூறினார். மேலும், மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பள்ளிக் கல்வித்துறை நடத்தும் கல்லூரிக் களப்பயணம், அவர்களின் கல்லூரிக் கனவுக்கான விதை என்பதை குறிப்பிட்டார்.

கல்லூரி செயலர் முனைவர் கோ.மீனா தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன், இயக்குநர் அபர்ணா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், உயர்நீதி மன்ற பயிற்சியாளர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் கெஜ லெட்சுமி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் 105 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 207 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு அலுவலர் பத்மப்ரியா நன்றி தெரிவித்தார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

திருச்சி, 09, செப்டெம்பர் 2025 – திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 50வது வார்டு மக்களுக்காக பருப்புக்காரத் தெருவில் உள்ள பழைய கோட்ட அலுவலகத்திலும், 65வது வார்டு மக்களுக்காக ராசி மகாலிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

மாநிலம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடைபெறும் இம்முகாமின் மூலம், பொதுமக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகர செயலாளர் மதிவாணன், மண்டலம்-2 தலைவர் ஜெய நிர்மலா, மாமன்ற உறுப்பினர் ரிஸ்வான் பானு, பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக அமைச்சர் நேரடியாக கேட்டறிந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துறையினருக்கு அறிவுறுத்தினார். திராவிட மாடல் அரசின் சேவைகளை வீடு தோறும் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.

திருவெறும்பூர் தொகுதி குவளக்குடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு

திருவெறும்பூர்,09, செப்டெம்பர் 2025  – திருவெறும்பூர் அருகே உள்ள குவளக்குடி ஊராட்சியில் 2 நாள் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பொதுமக்களின் சிரமங்களை போக்கும் நோக்கில் தமிழக அரசு மாநிலம் முழுவதும் இம்முகாம்களை நடத்தி வருகிறது.

குவளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 9ஆம் வார்டு மக்களுக்கு கிரீட்ஸ் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இம்முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். திருச்சி ஆர்டிஓ அருள், திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தகுமார், அண்ணாதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வருவாய் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நத்தம் பட்டா 2 பேருக்கு வழங்கினார். மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கினார். முகாமில் கலந்து கொண்ட அனைத்துத் துறைகளையும் ஆய்வு செய்த அவர், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அரியலூரில் மாநில திட்டக் குழுவின் SLAS ஆய்வறிக்கையை மையமாகக் கொண்டு ஆலோசனைக் கூட்டம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்

அரியலூர், 09, செப்டெம்பர் 2025 – மாநில திட்டக் குழுவின் SLAS ஆய்வறிக்கையை முன்வைத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாவட்ட வாரியாக நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தின் 27வது நிகழ்வு அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 2 கல்வி ஒன்றியங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து கேட்டறிந்து, அவற்றை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கல்வி தரத்தை உயர்த்த அரசின் அனைத்து திட்டங்களும் பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கழகத் தலைவர் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உறுதிமொழி

சென்னை,09,செப்டெம்பர் 2025 – கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைவர் அவர்களின் மேலான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டோம் என்று தெரிவித்தார். மேலும், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15-ஆம் தேதி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் BLA, BDA, BLC கூட்டங்களை நடத்துவோம் என்றும், செப்டம்பர் 20-ஆம் தேதி ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்களை நடத்துவோம் என்றும் கூறினார். 2026ஆம் ஆண்டு கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் வரை ஓயாமல் உழைப்போம் என உறுதியேற்றுள்ளார்.

பெரம்பலூரில் SLAS 2025 ஆய்வறிக்கை குறித்து ஆலோசனை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில்

பெரம்பலூர், 09, செப்டெம்பர் 2025 – பள்ளித் தலைமையாசிரியர்களுடன் நடைபெற்று வரும் மாநில அளவிலான கற்றல் அடைவுத்திறன் குறித்த ஆய்வுக் கூட்டங்களின் தொடர்ச்சியாக, 28ஆவது மாவட்டமாக பெரம்பலூரில் ஆலோசனைக் கூட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்தினார்.

மாநில திட்டக் குழுவின் SLAS 2025 ஆய்வறிக்கையை முன்னிறுத்தி நடைபெற்ற இக்கூட்டத்தில், 4 கல்வி ஒன்றியங்களைச் சேர்ந்த 410 தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட SEP 2025-ஐ பரவலாக்கும் நோக்கில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக உருவாக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை – ஆசிரியர் பதிப்பு இந்நிகழ்வின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது.

டெட் தேர்வு விவகாரம்: ஆசிரியர் சமுதாயத்தை காப்பது தமிழக அரசின் முதல் கடமை – அமைச்சர் அன்பில் மகேஸ்

பெரம்பலூர், 09, செப்டெம்பர் 2025 : பெரம்பலூரில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு கல்வி வளர்ச்சியே அடிப்படை. தரமான கல்வி வழங்க தகுதியான ஆசிரியர்களை நியமித்திருப்பது மாநில அரசின் பெருமை. இதற்காக ஒன்றிய அரசே தமிழகத்தை பாராட்டுகிறது” என்றார்.

டெட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் ஆசிரியர் சமுதாயத்தை காப்பாற்றுவது தமிழக அரசின் முதல் கடமையாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். டெட் தேர்வு தொடர்பாக வருகிற 19ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்றும், ஏற்கனவே வாசிக்கப்பட்ட தீர்ப்பில் சில மாறுதல்கள் தேவைப்படுகிறது, எதெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்று அப்போது பார்க்கப்படும். மேலும், தீர்ப்பு வெளியான 72 மணி நேரத்திலேயே 36 ஆசிரியர் சங்கங்களை முதலமைச்சர் அழைத்து கலந்துரையாடினார் என்றார். 

டெட் தேர்வினை நாங்கள் எழுத தயாராகவே இருக்கிறோம். ஆனால்ஏதாவது ஒரு விதத்தில் எங்களுக்கான பாதுகாப்பினை நீங்கள் அளிக்க வேண்டும் என சங்கத்தினர் கேட்டுக்கொண்டதிற்க்கினங்க, முதல்வர், என்றும் ஆசிரியர்களுக்கான பாதுகாப்பு அரணாக நாங்கள் இருப்போம் என உறுதி அளித்துள்ளார்.

“20, 30 ஆண்டுகளாக பணியாற்றும் ஆசிரியர்களே இன்று பல மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உருவாக காரணம். நீதிபதிகளை உருவாக்கியவர்கள் கூட ஆசிரியர்களே. எனவே, அவர்களின் அனுபவத்தை அரசு காக்கும். ஆசிரியர் சங்கங்களின் ஆலோசனையும், சட்ட வல்லுநர்களின் கருத்தையும் இணைத்து, தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்” என அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தினார்.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விவகாரம்: ஆடிட்டர் குருமூர்த்தி பகிர்ந்துள்ள தகவல் தவறு – அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி

சென்னை, 09, செப்டெம்பர் 2025 : தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை விட இந்தி பிரச்சார சபாவில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளதாக ஆடிட்டர் குருமூர்த்தி வெளியிட்ட தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மறுத்துள்ளார்.

ஆடிட்டர் குருமூர்த்தி, 2025-26 கல்வியாண்டில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பில் 70 ஆயிரம் மாணவர்களும், இந்தி பிரச்சார சபாவில் 80 ஆயிரம் மாணவர்களும் சேர்ந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இது கல்வி மற்றும் மொழிக் கொள்கை விவகாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “ஆடிட்டர் குருமூர்த்தி வெளியிட்ட தகவல் முற்றிலும் தவறு. உண்மையில் 2025-26 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 769 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 70 ஆயிரம் அல்ல” என்று தெளிவுபடுத்தினார்.

அத்துடன், தமிழகத்தில் அரை நூற்றாண்டாக நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கையை தவிர, மும்மொழிக் கொள்கையை ஏற்க இயலாது என்பது முதலமைச்சரின் நிலைப்பாடு என்றும் அவர் மறுபடியும் வலியுறுத்தினார்.

“திராவிட மாடல் கல்விப் புரட்சி” – திராவிட மாதம் நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆற்றிய சிறப்புரை தி.மு.க தகவல் தொழில்நுட்ப குழுவின் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு

10,செப்டெம்பர் 2025 தி.மு.க தகவல் தொழில்நுட்ப குழு : தமிழகத்தில் கல்வி வளர்ச்சி இன்று உலக அரங்கில் பேசப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் பின்னணியில் உள்ளது திராவிட மாடல் அரசின் முன்னோடியான முயற்சிகளும், முதலமைச்சரின் தெளிந்த பார்வையும் ஆகும். “திராவிட மாதம்” நிகழ்வில் சிறப்புரை ஆற்றினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் .

காவிக் கொள்கையும் திராவிட மாடலும்

அமைச்சர் தனது உரையில் ஒன்றிய பாஜக அரசு NEP-2020 என்ற பெயரில் கல்வியை காவிமயமாக்கி வருவதை கடுமையாக விமர்சித்தார். “வேதகாலத்தில் புஷ்பக விமானம் இருந்தது; ரைட் சகோதரர்கள் பின்னாளில் கண்டுபிடித்தார்கள்” என்ற அபத்தங்களைக் குழந்தைகளிடம் புகட்டி மூளைச் சலவை செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். இத்தகைய கொள்கையை ஏற்காத காரணத்தால், தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதி தடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக அரசின் முதலீடுகள்

அதை மாறாக, திராவிட மாடல் அரசு கல்வியை நவீனப்படுத்த பெரும் நிதி ஒதுக்குகிறது. பள்ளிக் கல்விக்காக ரூ.46,767 கோடி ஒதுக்கீடு. ரூ.65 கோடி – 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள். ரூ.56 கோடி – 880 பள்ளிகளில் தொழில்நுட்ப ஆய்வகங்கள். ரூ.160 கோடி – 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள். இவை அனைத்தும் மாணவர்களின் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு வகுப்பறைக்குள் தொழில்நுட்பக் கல்வியை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

234/77 கள ஆய்வு

அமைச்சர் மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் கல்விசார்ந்த 77 பொருண்மைகளில் ஆய்வு மேற்கொண்டு, விரிவான அறிக்கையை பிப்ரவரி 22 அன்று முதலமைச்சரிடம் சமர்ப்பித்ததாகவும் கூறினார். “மாணவராகவும், ஆசிரியராகவும், பெற்றோராகவும், நூலகராகவும், சத்துணவுப் பணியாளராகவும்” தன்னை மாற்றிக் கொண்டு ஆய்வில் ஈடுபட்டதாக அவர் வலியுறுத்தினார்.

மாணவர்களுக்கான சிறப்புத் திட்டங்கள்

திராவிட மாடல் அரசின் புகழ்பெற்ற காலை உணவுத் திட்டம் தற்போது 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 20.59 லட்சம் மாணவர்களை தினசரி பயன் பெறச் செய்கிறது. இது பசியை போக்குவதோடு மட்டுமல்ல, நல்ல உடல்நலத்துடன் மாணவர்கள் வகுப்பறைக்கு வர வழிவகுக்கிறது. இன்று பிற மாநிலங்களும், சர்வதேச நாடுகளும் இதை பின்பற்றத் தொடங்கியுள்ளன.

ஆசிரியர் நலன்

79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி மதிப்பில் மொபைல் டேப்லெட்கள் வழங்கப்பட்டன. 100 தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.10 கோடி மதிப்பில் ‘அண்ணா தலைமைத்துவ விருது’. ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான உதவித்தொகை – ரூ.50,000 ஆக உயர்வு. 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல்நல பரிசோதனை.

வரலாற்றுப் பாரம்பரியம்

1958-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் நடந்த முதலாவது பள்ளிச் சீரமைப்பு மாநாட்டிலிருந்து, 2025 பிப்ரவரி 22-ஆம் தேதி விருத்தாசலத்தில் முதலமைச்சர் தலைமையில் நடந்த சமீபத்திய மாநாடு வரை, பள்ளிக் கல்வி சீரமைப்பு தொடர்ச்சியாக வளர்ந்து வருகிறது. இது தமிழகக் கல்வி மறுமலர்ச்சியின் சின்னமாக திகழ்கிறது.

அறிவுப் புரட்சி

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மக்கள் திரளாக அணுகும் அறிவுக் கோவிலாக மாறியுள்ளது. ஏறத்தாழ 20 லட்சம் வாசகர்கள் இதனால் பயன் பெற்றுள்ளனர். “பொதுமக்களே வாசகர்களாக மாறும் காட்சி, திராவிட மாடல் ஆட்சியில் அறிவுப் புரட்சி நிகழ்வதற்கான சாட்சி” என அமைச்சர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மாநில கல்விக் கொள்கை – 2025

அரசு அறிவித்த மாநில கல்விக் கொள்கை-2025 சமரசமற்ற, வாழ்க்கைக்கான கல்வியைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. கடைக்கோடி கிராமங்களிலும் டிஜிட்டல் வழிக் கற்பித்தல், சமச்சீர் பாடப்புத்தகங்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பு ஆகியவை இந்தக் கொள்கையின் சிறப்பம்சங்களாகும்.

ஒன்றிய அரசின் மொழி, பண்பாட்டு திணிப்பை அடிப்படையாகக் கொண்ட NEP-2020-ஐ தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று அமைச்சர் வலியுறுத்தினார். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரும் போராட்டமே ஒரே வழி என்றும் அவர் உறுதியளித்தார்.

திராவிட மாடல் கல்விப் புரட்சி, பள்ளிகளிலும், நூலகங்களிலும், மாணவர்களின் எதிர்காலத்திலும், ஆசிரியர்களின் நலனிலும் தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டு இருப்பதை அவரது உரை தெளிவாக எடுத்துரைக்கிறது.

திருச்சி (தெ) மாவட்டக் கழக செயற்குழுக் கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் 

திருச்சி,10,செப்டெம்பர் 2025 :  தி.மு.க. கழகத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழகச் செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயற்குழுக் கூட்டம் அவைத்தலைவர் என். கோவிந்தராஜ் தலைமையிலும், மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், சபியுல்லா, மாநில அணி நிர்வாகி செந்தில், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் பெருமையை எடுத்துரைத்து, புரட்சியாளர் பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்த தமிழக முதல்வர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தொழில்வளம் மேம்பாடு, வேலைவாய்ப்பு விருத்தி, அந்நிய முதலீடுகளை ஈர்த்தல் போன்ற முயற்சிகளுக்காக இக்கூட்டத்தில் பாராட்டுகளை தெரிவிக்கப்பட்டன.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்வில் தியாகம் செய்து, மிசாவில் சிறை தண்டனை அனுபவித்த தலைவர் மீது, ஒன்றிய அரசின் கைக்கூலியாக செயல்பட்டு விமர்சனங்கள் செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமியை, இக்கூட்டம் கடுமையாக கண்டித்தது. மேலும், கரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில், திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு நாள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரியாதை

திருச்சி,11,செப்டெம்பர் 2025: விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 68வது நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவர் பொன் முருகேசன் அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமத், கழக நிர்வாகிகள் மற்றும் அகில இந்திய மறுமலர்ச்சி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் ஆயக்காரன்புலம் இரா. நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளி பவள விழா

நாகப்பட்டினம்,11,செப்டெம்பர் 2025 : ஆயக்காரன்புலம் இரா. நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியின் பவள விழா, ஊர் மக்கள், ஆசிரியர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக  நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துகொண்ட திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விழா மலரை வெளியிட்டார். மேலும், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதின் மூலம் கிடைத்த 10 ஆயிரம் ரூபாயை பள்ளியின் வளர்ச்சிக்காக வழங்கிய ஆசிரியர் திரு. செல்வ சிதம்பரம் அவர்களை கௌரவித்தார்.

“இப்பள்ளி நூற்றாண்டு விழாவையும் மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். மாணவர்கள் தங்கள் சாதனைகளால் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும்” என்று அமைச்சர் வாழ்த்துரை வழங்கினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சீராய்வு செய்யும் மனு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை

சென்னை,13,செப்டெம்பர் 2025 : “ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீது, தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும்” எனும் அறிவிப்பைத் தொடர்ந்து, தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) நிர்வாகிகள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து, மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எடுத்த துரித நடவடிக்கைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

பின்னர், சீராய்வு மனு குறித்த அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து, தொடர்பான ஆலோசனைகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேற்கொண்டார்.

சர்வதேச தமிழ் பொறியாளர்கள் சங்க மாநாடு – 3000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்

சென்னை,13,செப்டெம்பர் 2025 : சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ் பொறியாளர்கள் சங்கம் (ITEF) மாநாட்டில் கலந்து கொண்டு, 3000 தமிழ் இளைஞர்களுக்கு பன்னாட்டில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்து சிறப்பித்தார் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

மேலும், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் முன்னிலையில், தமிழ்நாடு அரசுக்கும் ITEF-க்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகளும் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகவுள்ளன.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் 16வது ஆண்டில் தடம் பதித்தது

சென்னை, 15 செப்டம்பர் 2025 : சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டு இன்று 16வது ஆண்டில் தடம் பதித்ததை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் ஆணையின்பேரில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவாக கோட்டூர்புரத்தில் இந்த அதிநவீன பொது நூலகம் கட்டப்பட்டது. அண்ணாவின் 102வது பிறந்த நாளில் நூலகம் பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது.

தினமும் சராசரியாக 2,700 பார்வையாளர்கள் வருகை தரும் இந்த நூலகம், ஆசியாவின் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதுவரை 56 லட்சத்து 50 ஆயிரம் முதல் 70 லட்சத்து 38 ஆயிரம் வரை வாசகர்கள் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“வாசகர்கள், எழுத்தாளர்கள், மாணவர்களின் அறிவுச் சரணாலயமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் திகழ்வது பெருமை. கலைஞர் வழியில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் நூலகங்களை உருவாக்கி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இலட்சியம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு செய்துள்ளார்.

திருச்சியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, 15 செப்டம்பர் 2025 : திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி சிந்தாமணி அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து, “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற தலைப்பில், தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுத்தனர்.

இந்நிகழ்வில் மாநில அவை உறுப்பினர் கவிஞர் சல்மா, மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், தலைமை வண்ணை அரங்கநாதன், செயற்குழு உறுப்பினர் சபியுல்லா, பகுதிக் கழக செயலாளர் மோகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

மணப்பாறையில் அறிஞர் அண்ணா 117வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை

மணப்பாறை, 15 செப்டம்பர் 2025 : மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், மணப்பாறையிலும் விழா நடைபெற்றது.

திமுக நகரச் செயலாளர் மு.ம. செல்வம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என்ற உறுதிமொழியை கட்சியினருடன் சேர்ந்து அனைவரும் ஏற்றுக்கொண்டனர். நிகழ்வில் நகராட்சி நகர் மன்ற தலைவர் கீதா ஆமைக்கேல்ராஜ், திமுக மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜன், நகர் மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அணிசார் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் முன்னெடுப்பை மீறிய சாதனை – நடிகர் விஜய் விமர்சனங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில்

திருச்சி,15,செப்டெம்பர் 2025 : ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பின் கீழ் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு 3,29,000 பேரை கழகத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதைக் கடந்து 3,59,000 பேரை கழகத்தில் இணைத்துள்ளோம் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அவர் மேலும், “திருச்சி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தவெக விஜயின் பேச்சு கேட்கவில்லை, என மக்கள் கூச்சலிட்டதாக பார்த்தேன். ஆனால் விஜய் திருச்சியின் வளர்ச்சியையே சரியாகப் பார்க்கவில்லை என்பதே உண்மை. ரூ.128 கோடியில் கனரகச் சரக்கு முனையம், ரூ.236 கோடியில் காய்கறி அங்காடி, ரூ.408 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ரூ.400 கோடியில் டைடல் பார்க் ஆகியவை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. மணப்பாறையில் அரசு கலைக் கல்லூரி, வார சந்தை, திருவெறும்பூர் தொகுதியில் ரூ.56 கோடியில் அரசு மாதிரிப் பள்ளி மேம்படுத்தப்பட்டுள்ளது. ரூ.150 கோடியில் சர்வதேச ஒலிம்பிக் அகாடமி பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.3 கோடியில் சூரியூர் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. திருச்சி கிழக்கில் ரூ.290 கோடியில் காமராஜர் நூலகம் கட்டப்படுகிறது. இத்தனை வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் நிலையில், திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை என விஜய் கூறுவதை அறிவார்ந்த பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்றார்.

மேலும், நடிகர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்ட பகுதிக்கு அருகில் அரசு பள்ளி மேற்கூரைகள், கழிவறைகள் இடித்துச் சேதப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டவற்றை சேதப்படுத்தக்கூடாது” எனக் கண்டனம் தெரிவித்தார்.

“எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும், மனதில் கொள்கை இருக்கும்போது வீடு திரும்புகையில் நம் நாட்டின் கொள்கை, நம் இனம், நம் மொழிப் பற்று என்ற உணர்வு மேலோங்கும். அப்படிப்பட்ட பற்று கொண்டவர்கள் எப்போதும் கொள்கையுடன் நிற்பார்கள், அத்தகையோர் எப்போதும் திமுகவின் பக்கம் இருப்பார்கள்” என வலியுறுத்தினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்சியில் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி, 15 செப்டம்பர் 2025 : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அவர் பேசியபோது, பெற்றோர்கள் இருவரையும் இழந்தோ, அல்லது ஒருவரை இழந்து மற்றொருவரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்காக, அவர்கள் 18 வயது நிறைவு பெறும் வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். “கொரோனா காலத்தில் தாயாக உயர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மனிதாபிமானம் மேலோங்கிய அரசுத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதற்கான இன்னொரு படியாக அன்புக்கரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.

இந்த திட்டத்தின் கீழ் 11,848 குடும்பங்கள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 377 குழந்தைகள் பயனடைய தகுதியுடையவர்கள் என கண்டறியப்பட்டனர். இக்குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளும், மாதாந்திர உதவித்தொகையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.

விழாவில் திருச்சி கலெக்டர் சரவணன், மாநில அவை உறுப்பினர் கவிஞர் சல்மா, எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் மதிவாணன், குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினர் செல்வேந்திரன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திமுக செயலாளர் மற்றும் அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற தலைப்பில், தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

உதகமண்டலத்தில் உருது நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக உயர்வு

உதகமண்டலம்,16,செப்டெம்பர் 2025 : உதகமண்டலம் காந்தள் பகுதியில் உள்ள நகராட்சி உருது நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை வழங்கி, தொடக்க விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்வில் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வரவேற்றார்.

இவ்விழாவில் அரசு தலைமை கொறடா கா. இராமசந்திரன், சட்டமன்ற உறுப்பினர் கணேசன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு (இ.ஆ.ப.) ஆகியோர் உடனிருந்தனர்.

“கல்வியே ஒளி என்பதை மனதில் நிறுத்தி, வாழ்வை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் கல்வியை இடைவிடாமல் கற்றிட வேண்டும்” என வலியுறுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ், இக்கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

நீலகிரியில் SLAS 2025 ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்

நீலகிரி,16,செப்டெம்பர் 2025 : SLAS 2025 ஆய்வறிக்கையை முன்னிறுத்தி 29வது ஆய்வுக் கூட்டத்தை நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நடத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்டத்தின் 4 கல்வி ஒன்றியங்களைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களது முயற்சிகளை கேட்டறிந்து பாராட்டிய அமைச்சர், தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என ஊக்குவித்தார்.

“இனிவரும் பொதுத் தேர்வுகளில் நீலகிரி மாவட்டம் அதிகப்படியான தேர்ச்சி விகிதத்தை வழங்கும்” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி உரையாற்றினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கோயம்புத்தூரில் “வேன்கார்டு அகாடமி” பள்ளிக்கட்டிடம் திறப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்

கோயம்புத்தூர், 16 செப்டம்பர் 2025 : டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையால் கோயம்புத்தூரில் நிறுவப்பட்டுள்ள “வேன்கார்டு அகாடமி” பள்ளிக் கட்டிடத்தை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். மாணவர்களிடம் சமூக ஒற்றுமை, அன்பு, சமத்துவம், ஜனநாயக மனப்பான்மை வளரச் சேவையாற்றவுள்ள இப்பள்ளிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார் அமைச்சர்.

கரூரில் நடைபெறவுள்ள கழக முப்பெரும் விழா மைதானத்தை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கரூர், 16 செப்டம்பர் 2025 : கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூரில் 17.09.2025 அன்று நடைபெறவுள்ள கழக முப்பெரும் விழாவின் முன்னேற்பாடுகளைத் தொடர்ந்து, விழா நடைபெறவுள்ள மைதானத்தை நேரில் பார்வையிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இவ்விழாவில் பங்கேற்கவுள்ள ஆயிரக்கணக்கான கழக உறுப்பினர்களுக்கான அமர்வு, பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட ஏற்பாடுகளை அதிகாரிகளுடன் ஆலோசித்து, அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற வேண்டும் எனக் கூறினார். மேலும், நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உற்சாகமாக முன்னெடுத்து வந்த உடன்பிறப்புகளின் ஆர்வத்திலும் பங்கேற்று, அவர்களை உற்சாகப்படுத்தினார்.

தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளையொட்டி அவரின் புகழை போற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

17, செப்டம்பர் 2025 : நமது தமிழ் நிலத்தில் எவ்வித சமரசமும் இல்லாமல் சமூக அவலங்களை அடித்து நொறுக்கிய பெரியார் எனும் பேரியக்கம் தோன்றிய நாள் எனக் குறிப்பிட்டுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

“ஆதிக்கத்தை வீழ்த்திய இயக்கம், ஆரியத்தை வீழ்த்திய இயக்கம், சூத்திரர்களுக்கு சுயமரியாதையை கற்றுக்கொடுத்த இயக்கம், பெண்களுக்கு மதிப்பளிக்க ஆணையிட்ட இயக்கம், கல்வியைப் பெற்றுக்கொடுத்த இயக்கம், சமூக நீதியை இந்த மண்ணில் ஆழமாக விதைத்த இயக்கம் – தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக!” என்று தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி, 17 செப்டம்பர் 2025 : திருச்சி மாநகரில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் மாநில அரசின் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கல்வி மற்றும் அறிவியல் வளங்களை எளிதில் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த நூலகம் சிறப்பாக அமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசனை வழங்கினார். மேலும், பணிகள் திட்டமிட்ட காலக்கெட்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

திருச்சியில் தந்தை பெரியாருக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி, 17 செப்டம்பர் 2025 : தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் காடூரில் அமைந்துள்ள பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

பின்னர், கழகத் தொண்டர்களுடன் இணைந்து சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். சுயமரியாதை மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் சமூகநீதி நாள் உறுதிமொழி

சென்னை,17, செப்டெம்பர் 2025 :  தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், முதல்வர் அவர்களின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, துரை வைகோ, அருண் நேரு, கவிஞர் சல்மா, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.செந்தில்பாலாஜி, எம்.பழனியாண்டி, அ.சௌந்தர பாண்டியன், அப்துல் சமது, எஸ்.கதிரவன், என்.தியாகராஜன், ஸ்டாலின் குமார், தமிழரசி, வை.முத்துராஜா, துரை சந்திரசேகர், நீலமேகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

திமுக முப்பெரும் விழா-2025( கரூர்)

கரூர்,17,செப்டெம்பர் 2025 :  கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் திமுக முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில், கழகப் பொருளாளாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, கழக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கழக துணைப் பொதுச் செயலாளர்களாகிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கரூர் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், அமைச்சர் பெருமக்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இவ்விழாவில், பெரியார் விருது கழக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. அண்ணா விருது சுப.சீத்தாராமன் அவர்களுக்கும், கலைஞர் விருது சோ.மா.இராமச்சந்திரன் அவர்களுக்கும், பாவேந்தர் விருது நினைவில் வாழும் குளித்தலை சிவராமன் அவர்களின் சார்பாக அவரது துணைவியாருக்கு வழங்கப்பட்டது. பேராசிரியர் விருது மருதூர் இராமலிங்கம் அவர்களுக்கும், மு.க.ஸ்டாலின் விருது பொங்கலூர் நா.பழனிசாமி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

மேலும், முரசொலி அறக்கட்டளையின் சார்பில் முதன்முறையாக முரசொலி செல்வம் விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

வேல்ஸ் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் 1,000 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா

சென்னை,18,செப்டெம்பர் 2025 : பல்லாவரம் வேல்ஸ் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் 1,000 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றியபோது, “தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அனைத்துத் திட்டங்களும் சிறப்பாக செயல்படுவதற்கு ஆசிரியர்கள்தான் முக்கியக் காரணம். இதுவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை, அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் வழங்கி கௌரவிக்க உள்ளோம்” என்றார்.

நிகழ்வில், மயிலாப்பூர் பி.எஸ். சீனிவாசா உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ரேவதி, பல்லாவரம் மறைமலை அடிகளார் பள்ளி ஆசிரியர் ரவி காசி வெங்கட்ராமன், சென்னை காது கேளாதோர் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி, தூத்துக்குடி பண்டாரம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், கோவை அரசூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் ஆகிய 5 பேருக்கு சிறப்பு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. இதில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன், வேல்ஸ் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவன வேந்தர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீத்தா கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலவலம்பேட்டை ஆரம்பப்பள்ளியில் ஆய்வு நடத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மதுராந்தகம்,18,செப்டெம்பர் 2025 : பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதுராந்தகம் ஒன்றியத்தின் மேலவலம்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

மாணவர்களிடம் திருக்குறள் மற்றும் செய்யுள் சொல்லச் சொல்லி, அவர்களின் வாசிப்புத் திறனை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும், இப்பள்ளி சிறந்த தொடக்கப்பள்ளிக்கான பள்ளிக் கல்வித்துறை விருதைப் பெற்றதை குறிப்பிட்டு பாராட்டினார்.

அதன்பின் சத்துணவுப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். வடமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் இப்பள்ளியில் பயில்வதால், அவர்களிடமும் அமைச்சர் கலந்துரையாடி, அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார்.

விழுப்புரத்தில் கற்றல் அடைவுத்திறன் SLAS 2025  ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

விழுப்புரம்,18,செப்டெம்பர் 2025 : மாநில அளவிலான கற்றல் அடைவுத்திறன் SLAS 2025  குறித்து தலைமையாசிரியர்களுடனான ஆய்வின் தொடர்ச்சியாக 30வது மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு கூட்டத்தை நடத்தினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

மயிலத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 கல்வி ஒன்றியங்களைச் சேர்ந்த 500 தலைமையாசிரியர்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். மாவட்டப் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தூய்மை இயக்கம் 2.O திட்டத்தை அமைச்சர் ஆர். காந்தியுடன் இணைந்து தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இராணிப்பேட்டை,19, செப்டெம்பர் 2025 : தமிழ்நாடு தூய்மை நிறுவனத்தின் ‘தூய்மை இயக்கம் 2.O’ திட்டத்தின் கீழ் கழிவுகள் சேகரிக்கும் பணியை, அமைச்சர் ஆர். காந்தியுடன் இணைந்து தொடங்கி வைத்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இந்நிகழ்வு இராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு கிராமத்தில் நடைபெற்றது. மாணவர்களுடன் இணைந்து தூய்மை உறுதிமொழியை எடுத்துக்கொண்ட அமைச்சர், விழிப்புணர்வுப் பேரணியையும் தொடங்கி வைத்தார்.

காலாண்டுத் தேர்வில் மாணவர்களுக்கு ஊக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இராணிப்பேட்டை,19,செப்டெம்பர் 2025 : இராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காலாண்டுத் தேர்வின்போது மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அமைச்சர் மாணவர்களிடம், தேர்வை அச்சமின்றி நம்பிக்கையுடன் எழுத வேண்டும் என்றும், தொடர்ந்து உழைத்தால் கல்வியில் சிறந்த நிலையை எளிதில் அடையலாம் என்றும் ஊக்கமளித்தார். பள்ளியின் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், மாணவர்களின் தேர்வு முன்னேற்பாடுகள் மற்றும் கல்வித் தரம் குறித்து விசாரித்தார். 

இராணிப்பேட்டையில் நடைபெற்ற SLAS ஆய்வுக் கூட்டம் –300 தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

இராணிப்பேட்டை,19,செப்டெம்பர் 2025 : மாநில திட்டக்குழுவினால் வெளியிடப்பட்ட மாநில அளவிலான கற்றல் அடைவு (SLAS) ஆய்வறிக்கையை முன்னிறுத்தி, இராணிப்பேட்டை மாவட்டப் பள்ளித் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வாரியாக நடைபெற்று வரும் தொடர் ஆலோசனைகளில், இராணிப்பேட்டை 31வது மாவட்டமாகும். இந்த ஆய்வுக் கூட்டத்தில் 3 கல்வி ஒன்றியங்களைச் சேர்ந்த  300 பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், பள்ளிகளில் பாடப் பயிற்சி முறைகள், கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சிகள் போன்றவை குறித்து அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்து, தலைமையாசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தைப் பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருப்பத்தூர்,19,செப்டெம்பர் 2025 : திருப்பத்தூர் மாவட்டம் பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டார்.

மையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுடன் அவர் உரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேவைகளை அறிந்துகொண்டார். மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அரசின் சார்பில் வழங்கப்படும் சிறப்பு கல்வித் திட்டங்கள் குறித்து கூறிய அமைச்சர், “ஒவ்வொரு குழந்தையும் தன் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு பெற வேண்டும்; அதற்கான அனைத்து வசதிகளையும் அரசு தொடர்ந்து செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடிய அவர், மாணவர்களுக்கு தேவையான கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

திருப்பத்தூரில் நடைபெற்ற 32வது SLAS ஆய்வுக் கூட்டம் – தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருப்பத்தூர்,19,செப்டெம்பர் 2025 : மாநில திட்டக்குழுவின் SLAS-2025 அறிக்கையை முன்னிறுத்தி, திருப்பத்தூர் மாவட்டத்தில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்த 32வது ஆய்வுக் கூட்டத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 கல்வி ஒன்றியங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வழிமுறைகள், பாடத்திட்டங்களை எளிதாகப் புரிந்துகொள்ளும் பயிற்சி முறைகள், கற்றல் அடைவுகளை மேம்படுத்தும் செயல்திட்டங்கள் குறித்து அமைச்சர் விரிவான ஆலோசனைகளை வழங்கினார். மேலும், பள்ளிகள் இடையே சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்ளும் விதமாக ஒருங்கிணைந்த பணியாற்ற வேண்டும் என்றும் அவர் ஊக்கமளித்தார்.

வேலூரில் 33வது SLAS ஆய்வுக் கூட்டம் – கல்வி முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்த முயற்சி அவசியம் என வலியுறுத்திய அமைச்சர்

வேலூர்,19,செப்டெம்பர் 2025 : மாநில அளவிலான கற்றல் அடைவு (SLAS) ஆய்வறிக்கையை முன்னிறுத்தி, வேலூர் மாவட்டப் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத் தொடரில் 33வது மாவட்டமாக  வேலூரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 8 கல்வி ஒன்றியங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். அவர்கள் தங்களின் பள்ளிகளில் மேற்கொண்ட சிறப்பான கற்பித்தல் முறைகள் மற்றும் புதுமையான கல்வி நடைமுறைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூட்டத்தில் கலந்து கொண்டு, தலைமையாசிரியர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார். மேலும், “மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் அரசு துணை நிற்கும்” எனக் கூறி ஊக்கமளித்தார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா

சென்னை, 20 செப்டம்பர் 2025: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாண்புமிகு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலை வகுத்து வரவேற்புரை ஆற்றினார். “அரசுப் பள்ளிகளில் 8,380 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; மேலும் விரைவில் 3,227 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்” என்று தெரிவித்தார்.

புதிதாக தேர்வுசெய்யப்பட்ட 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை மாண்புமிகு முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.122 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 76 அரசு பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்ததுடன், ரூ.310 கோடியில் 262 புதிய பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் பாரத சாரண-சாரணியர் தலைமை அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

பின் சிறப்புரையாற்றிய முதல்வர், ஆசிரியர்கள் பாடப்புத்தக அறிவை மட்டுமின்றி வாழ்வியல் அனுபவங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து, நல்லொழுக்கமிக்க சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பிய தலைமுறையாக மாணவர்கள் மாறாமல் இருக்க, மனிதச் சிந்தனை, அறம், நேர்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்றும் கூறினார். மேலும், மாணவர்களிடம் சமத்துவம், சமூகநீதி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, காலநிலை மாற்றம், மாற்று எரிசக்திகளின் அவசியம் ஆகியவற்றைப் பற்றிய புரிதலை வளர்த்திட வேண்டும் என்றார். மாணவர்களிடம் சாதியுணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத் தனங்கள் தலையிடக்கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், சி.வி. கணேசன், நாசர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் எஸ். ஜெயந்தி, பள்ளிக்கல்வி துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளிக்கல்வித் துறை செயலர் பி. சந்திரமோகன் நன்றி கூறினார்.

திருச்சி தெற்கு தி.மு.க. சார்பில் ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்’ தீர்மான பொதுக்கூட்டம்

திருச்சி, 20 செப்டம்பர் 2025: கழகத் தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்’ ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கழக முதன்மைச் செயலாளர் மற்றும் அமைச்சர் கே.என். நேரு தொடக்க உரையாற்றி, உறுப்பினர் சேர்க்கையைச் சிறப்பாக மேற்கொண்ட நிர்வாகிகளுக்கு மாவட்டக் கழகம் சார்பில் கேடயம் வழங்கி பாராட்டினார்.

பின்னர் தலைமை உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கழக நிர்வாகிகளுடனும் பெருந்திரளான பொதுமக்களுடனும் இணைந்து தீர்மான ஏற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

நிறைவுரையாக, தலைமைக் கழகம் சார்பில் கழக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா உரையாற்றினார். அவர், தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் பொருளாதாரத்தை சிதைக்க ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் அநீதிகளை சுட்டிக்காட்டியதோடு, அதையெல்லாம் மீறியும் திராவிட மாடல் அரசு படைத்துவரும் சாதனைகளை விரிவாக விளக்கினார்.

திரு. வேதமூர்த்தி அவர்களின் படத்திறப்பு நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரியாதை

சென்னை, 21 செப்டம்பர் 2025: மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சம்பந்தியும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மைத்துனருமான திரு. சபரீசன் அவர்களின் தந்தை திரு. வேதமூர்த்தி அவர்களின் படத்திறப்பு நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முப்பெரும் விழா தொடரில் திருநங்கையருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை, 21 செப்டம்பர் 2025: தி.மு.க. முப்பெரும் விழாவை முன்னிட்டு, “முப்பெரும் தொடர் – 02 : பாலின சமத்துவம் காப்போம்! சூரிய மகள்களால் பூப்போம்!” எனும் தலைப்பில், சென்னை சௌகார் பேட்டை திருப்பள்ளி தெரு சிவாஞ்சி ஜெயின் பவனில் மாபெரும் நலத்திட்ட விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு முன்னிலையில், பி. ஸ்ரீராமுலு தலைமையில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி, துறைமுகம் மேற்கு பகுதி சார்பில், 200 திருநங்கைகளுக்கு ரூ.5000 உதவித் தொகை, 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நலத்திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருநங்கையர் நலவாரிய உறுப்பினர் அ. ரியா ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். மேலும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், மாவட்டக் கழக நிர்வாகிகள், பிரதிநிதிகள், முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

திருச்சியில் “வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம்” பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,22,செப்டெம்பர் 2025 : தமிழ்நாடு உயர்கல்வித்துறை சார்பில், திருச்சியில் உள்ள அண்ணா அறிவியல் மையம்  கோளரங்க வளாகத்தில் “வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம்” அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சிக்கூடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

மாணவர்கள் அறிவியலை எளிமையாகவும் ஆர்வமூட்டும் வகையிலும் அறிந்து கொள்ள உதவும் வகையில் இந்த காட்சிக்கூடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் எதிர்காலத்தில் இளம் தலைமுறைக்கு அறிவியல் பற்றிய ஆர்வத்தை வளர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

திரு. கே.என். ராமஜெயம் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,22,செப்டெம்பர் 2025 : கழக முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அவர்களின் சகோதரரும் மறைந்தவருமான திரு. கே.என். ராமஜெயம் அவர்களின் பிறந்தநாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் இணைந்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. இந்நிகழ்வில், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திருச்சி iTNT Hub மண்டல மைய தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,22,செப்டெம்பர் 2025 : நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், உயர்கல்வி நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் செயல்பட்டு வரும் iTNT Hub (Innovation and Technology of Tamil Nadu) – இன் திருச்சி மண்டல மையத்தின் தொடக்க விழா, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுடன் இணைந்து பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மண்டலத்தில் தகவல் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்புகள் வேகமாக வளர்ந்து வருவதை வலியுறுத்தினார். மேலும், எதிர்காலத்தில் அந்த வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த அனைவரும் சிறப்பான பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.

சிவகங்கையில் SLAS 2025 ஆய்வுக்கூட்டத்தில் தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சிவகங்கை,22,செப்டெம்பர் 2025 : SLAS2025 அடிப்படையில் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம், 34வது மாவட்டமாக சிவகங்கையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 3 கல்வி ஒன்றியங்களைச் சேர்ந்த 340 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். மாணவச் செல்வங்கள் முழுமையான கற்றல் அடைவுகளை எட்டுவதும், ஒவ்வொரு பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கான முன்னெடுப்புகள் தொடர்பாக விரிவான ஆலோசனைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். பள்ளிக் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை முயற்சிகள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

சென்னை ஐஐடியில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்கப்படும்” என்று கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலடியாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பின்வருமாறு பேசியிருந்தார்.

“அனைவரும் பல மொழிகளை கற்றுக்கொள்ளலாம், அதில் தவறு இல்லை. ஆனால் இந்த மொழியைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாகத் திகழ்வதற்கு காரணம் இருமொழிக் கொள்கை. அதையெல்லாம் புறக்கணித்து மும்மொழிக் கொள்கையை திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சிதான்” என்று வலியுறுத்தினார்.

மேலும், ஒன்றிய அரசு மாணவர்களின் நலனைக் காரணம் காட்டி அரசியல் செய்வதாகவும், கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி இடையறாது வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் நிதி ஒதுக்கப்படாமல் முரண்பாடு காட்டுவது தவறு எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு 8,388 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, இந்த ஆண்டில் மேலும் 3,277 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அவர் அறிவித்தார். ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்குப் பதிலாக புதிய நியமனங்கள் தொடரும் என்றும், பகுதிநேர ஆசிரியர்களின் பணிநியமனம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சிவகங்கையில் ‘அகல் விளக்கு’ திட்ட பயிலரங்கில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சிவகங்கை,22,செப்டெம்பர் 2025 : 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எவ்வித இடர்பாடும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் நோக்கில், ‘அகல் விளக்கு’ திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு, திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். மேலும், மாணவிகளின் கல்வி பயணத்தை தடையின்றி முன்னெடுக்கச் செய்வது தொடர்பாக திட்டத்தின் நோக்கத்தினை வலியுறுத்திய உறுதிமொழியையும் ஏற்றார்.

இராமநாதபுரத்தில் SLAS 2025 ஆய்வுக்கூட்டத்தில் தலைமையாசிரியர்களுடன் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இராமநாதபுரம்,22,செப்டம்பர் 2025 : மாநிலத்திட்டக்குழு SLAS 2025 ஆய்வறிக்கை அடிப்படையில், 35வது மாவட்டமாக இராமநாதபுரத்தில் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த சந்திப்பில், 8 கல்வி ஒன்றியங்களைச் சேர்ந்த 800 பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற அரங்கில், செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்கும் நோக்கில், மாவட்டத்தின் அனைத்து கல்வி ஒன்றியங்கள் சார்பில் உருவாக்கப்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை பார்வையிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களின் படைப்பாற்றலை பாராட்டி வாழ்த்தினார்.

திருச்சி தெற்கு மாவட்டத்தில் பொதுக்கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி தெரிவித்தார்

23,செப்டெம்பர் 2025 : திருச்சி தெற்கு மாவட்டம் ஓரணியில் நடைபெற்ற தமிழ்நாடு பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழ்நாட்டிற்காக அணிதிரண்ட மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ்(x)  பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.

அந்த பதிவில், “எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் எனது அரசியல் ஆசான் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. கழக முதன்மைச் செயலாளர், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் கே.என். நேரு அவர்களோடு இணைந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களிடம் சமர்ப்பிப்போம். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

திருச்சி கிழக்கில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை தொடங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,23,செப்டெம்பர் 2025 : திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டு 34-ல் வசிக்கும் மக்களுக்காக நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை துரைசாமிபுரம் பகுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்பட்டவற்றுக்கான ஆணைகளை அவர் நேரடியாக பயனாளிகளிடம் வழங்கினார். மேலும், மக்கள் இம்முகாமின் மூலம்  பயன்பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

திருவெறும்பூர் வேங்கூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர் ,23,செப்டெம்பர் 2025 : திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமின் ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டார்.

அதே நேரத்தில் கோரிக்கைகளுடன் வந்திருந்த மக்களுடன் கலந்துரையாடி, உடனே தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளை அவர் மக்களிடம் வழங்கினார்.

திருவெறும்பூர் தொகுதிக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்த கோரிக்கை மனு அளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர்,23,செப்டெம்பர் 2025 : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்களைச் சந்தித்து தனது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு கிராம சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தார். மேலும், பொன்மலை பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துக் கொடுக்கவும் அவர் தனது கோரிக்கையை முன்வைத்தார்.

தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வீரர்களுக்கு சீருடை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திண்டுக்கல்,23,செப்டெம்பர் 2025 : திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 44வது சப் ஜூனியர் மற்றும் 71வது சீனியர் தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான சீருடை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு பால் பேட்மிண்டன் அசோசியேசன் மற்றும் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் இப்போட்டிக்கான சீருடை வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் பழநி ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் காந்திராஜன், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக பொதுச்செயலாளர் விஜய் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு சீருடைகளை வழங்கி வாழ்த்தினார்.

திண்டுக்கல்லில் SLAS 2025 ஆய்வுக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திண்டுக்கல்,23,செப்டெம்பர் 2025 : மாநிலத் திட்டக்குழுவின் SLAS 2025 ஆய்வறிக்கையை முன்னிறுத்தி மாவட்ட வாரியாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுடன் நடைபெற்று வரும் ஆய்வுக்கூட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அந்த வகையில் 36வது மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தின் 4 கல்வி ஒன்றியங்களைச் சேர்ந்த 520 தலைமை ஆசிரியர்களைச் சந்தித்து கலந்துரையாடினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்களை நோக்கி அவர், கற்றல் அடைவிலும் தேர்ச்சி விகிதத்திலும் சிறப்பான முன்னேற்றத்தை நடப்புக் கல்வியாண்டிலேயே உறுதிசெய்யும் வகையில் திட்டமிட்டு செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும்,திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மற்றும் இணை செயல்பாடுகளிலும் ஆர்வமாக பங்கேற்கும் மாணவர்களுக்கான காமராசர் விருது வழங்கப்பட்டது.  10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு முறையே தலா 15 மாணவச் செல்வங்களுக்கு விருதினை வழங்கிப் பாராட்டினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. மேலும், விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பராமரிப்புச் செலவினங்களுக்கு உதவும் வகையில் 51 மாணவச் செல்வங்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் காப்பீட்டு வைப்பு நிதிக்கான பத்திரங்களை வழங்கி நம்பிக்கையூட்டினார்.

தேனியில் SLAS ஆய்வுக்கூட்டம்: தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தேனி,23,செப்டெம்பர் 2025 :மாநிலத் திட்டக்குழுவின் SLAS ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டங்களில், 37வது மாவட்டமாக தேனியில் நடைபெற்ற பள்ளித் தலைமையாசிரியர்களுடன் கூடிய ஆய்வுக்கூட்டம் நிறைவுபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, மாணவச் செல்வங்களின் கற்றல் அடைவு குறித்து கலந்துரையாடி, தேவையான முன்னேற்றங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்கினார்.

திருவெறும்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை தொடங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர்,24,செப்டெம்பர் 2025 : திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மாநகர மண்டலம் 3, வார்டு 40-ல் வசிக்கும் மக்களுக்காக கூத்தைப்பார் சாலை, பழைய பேரூராட்சி அலுவலகத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டச் சிறப்பு முகாம் நடைபெற்றது.

மக்களின் கோரிக்கைகளை கனிவோடு கேட்டு, கவனமாக பரிசீலித்து தீர்வுகளை வழங்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட  முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். மக்களிடம் நேரடியாக அவர்களின் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடியும் கேட்டறிந்தார்.

துவாக்குடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர், 24, செப்டெம்பர் 2025 : திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சியின் வார்டுகள் 1 மற்றும் 2-ல் வசிக்கும் மக்களுக்காக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டச் சிறப்பு முகாம், சி-செக்டார் பெல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு, மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் உடனே தீர்வு காணப்பட்டவற்றுக்கான ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கினார்.

திருச்சி கிழக்கு உடையான்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,24,செப்டெம்பர் 2025 : திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாநகர வார்டு 64-ல் வசிக்கும் மக்களுக்காக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டச் சிறப்பு முகாம் உடையான்பட்டியில் நடைபெற்றது. இம்முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்து, உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உரிய ஆணைகளை நேரடியாக பயனாளிகளிடம் வழங்கினார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் 

திருச்சி,24,செப்டெம்பர் 2025 : திருச்சி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்ய வேண்டிய பணிகள் குறித்து  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.

தென்காசியில் 38வது SLAS ஆய்வுக்கூட்டம்: தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தென்காசி,24,செப்டெம்பர் 2025 : மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், SLAS (State Level Achievement Survey) ஆய்வறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளித் தலைமையாசிரியர்களைச் சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஜூன் 25ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய இந்த தொடர் ஆய்வுக்கூட்டத்தின் 38வது அமர்வு தென்காசியில் நடைபெற்றது. இதில் 4 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 700 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, SLAS தரவுகளை முன்வைத்து, தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

காட்டூர் பகுதியில் கூட்டுறவு சங்கம் அமைக்க கோரிக்கை மனு அளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர் ,24,செப்டெம்பர் 2025 : திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் சேமிப்பு முயற்சிகள் மற்றும் நகைக்கடன் தேவைகளுக்கு உதவும் வகையில் கூட்டுறவு சங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்களைச் சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோரிக்கை மனு அளித்தார்.

திருச்சியில் கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி, 25 செப்டெம்பர் 2025 : திருச்சி பெரிய கடை வீதியில் நவீனபடுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலையத்தில், எதிர்வரும் விழாக்காலங்களை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இக்கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திருச்சி கிழக்கு மாநகர வார்டு 13-ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை தொடங்கிய அமைச்சர் 

திருச்சி,25,செப்டெம்பர் 2025 : திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாநகர வார்டு 13-ல் வசிக்கும் மக்களுக்காக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டச் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து  உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உரிய ஆணைகளை நேரடியாக பயனாளிகளிடம் வழங்கினார்.

திருவெறும்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை ஆய்வு செய்து ஆணைகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர், 25 செப்டெம்பர் 2025: திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மண்டலம் 3 – வார்டு 39 மக்களுக்காக சிகரம் மகாலில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்து, அப்பகுதி மக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அன்போடு அழைத்தார்.

மேலும், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோழமாதேவி ஊராட்சியின் 1 முதல் 5 வரை உள்ள வார்டுகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாமையும் அவர் பார்வையிட்டார். இங்கு வரப்பெற்ற மனுக்களில் முகாமிலேயே தீர்வுகாணப்பட்டவற்றின் ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கினார். அத்துடன் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கி மகிழ்ந்தார்.

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு – கல்விப் புரட்சிக்கு மணி மகுடம்!”

சென்னை, 25 செப்டம்பர் 2025: தமிழ்நாடு அரசு சார்பில் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. கல்வித் துறையில் தமிழ்நாடு அரசு சாதித்த முன்னேற்றங்களையும், அதனால் பயன்பெற்ற மாணவர்களின் வெற்றிக்கதைகளையும் கொண்டாடும் வகையில் நடந்த இந்த விழா, திராவிட மாடல் அரசின் கல்விப் புரட்சிக்கு வரலாற்றுச் சான்றாக அமைந்தது.

இந்த விழா, பசியாற்றும் காலை உணவுத் திட்டம், உயர்கல்விக்குத் தளமமைக்கும் நான் முதல்வன், பெண்களை வலுப்படுத்தும் புதுமைப் பெண், மாணவர்களுக்கு ஊக்கமாக தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்கள் மூலம், கல்வியைக் கருவியாகக் கொண்டு சமூக முன்னேற்றத்தையும் தலைமுறை மாற்றத்தையும் நிகழ்த்தும் திராவிட மாடல் அரசின் கல்விப் புரட்சியை உலகம் முன் வெளிப்படுத்தியது.

தெலுங்கானா முதலமைச்சர் அ. ரேவந்த் ரெட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் செயல்படும் திட்டங்கள் மாணவர்களின் கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் பெண்களின் சுயாதீனத்தை ஊக்குவிப்பதாகவும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் சிறந்த திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், கல்வி வாய்ப்பை மறுத்த சாதி ஆதிக்கத்திற்கு எதிராக திராவிட இயக்கம் கல்விப் புரட்சியை நிகழ்த்தியதாகவும், அனைவருக்கும் உயர்தரக் கல்வி வழங்குவதே அரசின் தெளிவான இலக்காகும் என்றும் வலியுறுத்தினார். மத்திய அரசு தடைகள் இருந்தாலும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் கல்வி மற்றும் சமூக திட்டங்கள் அவற்றை உடைத்து மாணவர்களின் முன்னேற்றத்தைக் உறுதி செய்யும் என்றும் கூறினார். 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், காலை உணவு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, கல்விதான் மாணவர்களின் சொத்து, மாணவர்களே தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பதற்கான உண்மையான சான்றுகள் என வலியுறுத்தினார். மேலும், இந்த திட்டங்கள் குழந்தைகளுக்கு கல்வியுடன் உடற்கல்வி மற்றும் திறன் வளர்ச்சிக்கும் வாய்ப்பை வழங்கி, சமூக முன்னேற்றத்துக்கும் தலைமுறை மாற்றத்துக்கும் வழிகாட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் விழாவின் முக்கிய தருணமாக, திட்டப் பயனாளர்கள் மேடையேறி சொந்த அனுபவங்களைப் பகிர்ந்தபோது, கண் கலங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் உரையாற்றினார் “திராவிட மாடல் அரசின் கல்வித் திட்டங்கள், ஒரு தலைமுறையையே அல்ல; ஏழு தலைமுறைகளையும் உயர்த்துகின்றன. நம் பிள்ளைகளின் சாதனைகளைப் பார்க்கும் போது ஆனந்தக் கண்ணீர் வழிகிறது. முதலமைச்சரின் அனைத்து திட்டங்களும் மாணவர்களை தாயன்புடன் வழிநடத்தும் திட்டங்கள். தமிழ்நாட்டின் கல்வி புரட்சி, இனி உலக நாடுகளுக்கே முன்மாதிரி” என்றார்.

மேலும் விழாவில் கலந்து உரையாற்றிய பிற பங்கேற்பாளர்கள் பள்ளிக் கல்வி முன்னேற்றம், சமூகநீதி மற்றும் மாணவர்களின் சாதனைகளை குறித்து  பாராட்டினார்கள். இயக்குநர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா, நடிகர்கள் சிவகுமார், சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் நடராஜன், முன்னாள் நீதிபதி கே. சந்துரு, மருத்துவர் அருண்குமார் மற்றும் பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தனர். விழாவில் பங்கேற்றவர்கள் அரசு கல்வித் திட்டங்கள் குழந்தைகளின் வளர்ச்சியிலும், திறன் மேம்பாட்டிலும், சமூக முன்னேற்றத்திலும் ஏற்படுத்தும் மாற்றத்தை பாராட்டி மகிழ்ந்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் 26 புதிய பாடநூல்கள் வெளியீடு; நூலகக் கட்டடங்களை பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு

சென்னை, 26 செப்டெம்பர் 2025: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் 26 புதிய நூல்களை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டு சிறப்பித்தார்.

மேலும், பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ரூ.39 கோடியே 33 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 146 நூலகக் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்து, கள்ளக்குறிச்சி நகரில் ரூ.4 கோடியே 1 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட மைய நூலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் சிறப்பித்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து சிறப்பித்தார்.

திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டச் சிறப்பு முகாம்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு

திருச்சி, 26, செப்டெம்பர் 2025: மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாநகர வார்டுகள் 47 மற்றும் 48 மக்களுக்காக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டச் சிறப்பு முகாம் நடைபெற்றது. அதை நேரில் பார்வையிட்டு, விரைவில் தீர்வு காணப்பட்ட மனுக்கள் தொடர்பான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

மேலும், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 42வது வார்டு மக்களுக்காக நடைபெறும் முகாமையும் ஆய்வு செய்து, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அரசு அலுவலர்களிடம் வரப்பெற்ற மனுக்கள் குறித்து கேட்டறிந்தார். அப்பகுதியில் வீட்டுமனைப் பட்டா மற்றும் வரிப்பதிவு பெயர் மாற்றம் தொடர்பான ஆணைகளையும் வழங்கினார்.

இதேபோல், சோழமாதேவி ஊராட்சியின் 6 முதல் 9 வரையிலான வார்டுகளைச் சேர்ந்த மக்களுக்காக நடைபெறும் முகாமையும் நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

தஞ்சை மாவட்டத்தில் புதிய நூலகக் கட்டடம், வகுப்பறைகள் திறப்பு – கல்வித் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்

தஞ்சாவூர், 26 செப்டெம்பர் 2025 : தஞ்சை மாவட்ட மைய நூலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். முரசொலி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதனை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்களுடன் இணைந்து திறந்து வைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்காக புதிய புத்தகங்களையும் வழங்கி, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து ஒரத்தநாடு அருகிலுள்ள ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் அரசு மன்னை ப. நாராயணசாமி உயர்நிலைப்பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றையும் திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கல்விக்காக செயல்படுத்தும் திட்டங்களை மாணவச் செல்வங்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

நாகை மாவட்டத்தில் பல்வேறு பொதுநலக் கட்டடங்களை திறந்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நாகப்பட்டினம், 27 செப்டெம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகர ஓரத்தூர் ஊராட்சி மற்றும் புதுச்சேரி ஊராட்சியில் தலா ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் கிராம செயலகக் கட்டடங்கள், ஆலங்குடி ஊராட்சியில் ரூ.23.37 லட்சம் மதிப்பீட்டில் கிராம செயலகக் கட்டடம், வேப்பஞ்சேரி ஊராட்சி – நீடூர் கிராமத்தில் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் மற்றும் விழுந்தமாவடி ஊராட்சி – தென்பாதி கிராமத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் படகு சவாரி சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நாகை, 27 செப்டெம்பர் 2025 : நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரப்பகுதியில் உள்ள வேதாமிர்த ஏரியில் பொதுமக்களின் பொழுதுபோக்கு தேவைக்காக நகராட்சி சார்பில் படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த சேவையை இன்று தொடங்கி வைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

வேதாரண்யம் நகரத்தின் புதிய அடையாளங்களில் ஒன்றாக இந்த படகு சவாரி அமைய வாழ்த்துகள் தெரிவித்தார். இந்நிகழ்வில் நாகை மாவட்ட கலெக்டர் பி. ஆகாஷ், நாகை தெற்கு மாவட்ட கழக செயலாளர் என். கெளதமன் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.

நாகையில் “வெற்றிப் பள்ளிகள்” திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நாகை, 27, செப்டெம்பர் 2025 : கல்வியில் சிறந்த தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் “வெற்றிப் பள்ளிகள்” திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 236 வட்டாரங்களில் உள்ள 367 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தை நாகை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கடந்த 4 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவச் செல்வங்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், இனி வருங்காலங்களில் அது பல மடங்கு உயரும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், “தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் கல்விக்குத் தடையாக யார் வந்தாலும் தயவுசெய்து ஒதுங்கி நில்லுங்கள்… அனைவரும் மேலே ஏறி வருகிறார்கள்” என உறுதியாக உரையாற்றினார் அமைச்சர்.

கரூர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் வழங்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கரூர், 27, செப்டெம்பர் 2025 : கரூரில் நடிகர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம் மாநிலம் முழுவதும் பரவலான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 50-க்கும் மேற்பட்டோர் மயக்க முற்றியும், பலர் உயிரிழப்புகளும் ஏற்பட்ட நிலையில், கரூர் மருத்துவமனையில் பரபரப்பான சூழல் நிலவியது. நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனை முன் குவிந்து கதறி அழும் காட்சி மனதை உலுக்கியது.

இந்த நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க உடனடியாக கரூருக்கு விரைந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து நம்பிக்கையூட்டினார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்ததோடு, மருத்துவ சேவைகளை துரிதப்படுத்த தேவையான ஒருங்கிணைப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி விமர்சனத்திற்கு கடும் பதிலளித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

30,செப்டெம்பர் 2025 : கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களைப் பற்றிய தமிழக முதலமைச்சரின் வீடியோ அறிக்கையை பார்த்துவிட்டு கதறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. “நாம் முதலமைச்சராக இருந்தபோது தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் ஆட்சி செய்தோம், இப்போது இருக்கிற முதலமைச்சர் நேரில் சென்று பார்க்கிறாரே” என அவர் விரக்தி தெரிவித்தார். மேலும், அரசு அமைத்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தை “Eyewash” என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “அதே ஆணையத்தை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது அமைத்தவர் எடப்பாடிதான். அப்போது அவருடைய கண்கள் மூடியிருந்ததா? ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தையும் அமைத்தவர் எடப்பாடிதான். அது கூட Eyewash தானா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நடந்த நாடகங்களையும், அவரது உடலைப் போல உருவாக்கப்பட்ட பொம்மையை வைத்து ஆர்.கே.நகர் தேர்தலில் பிரசாரம் செய்தவர்கள்தான் இவர்கள். இப்படிப்பட்ட நாடகங்களை நடத்த பழகியவர்களுக்கே எல்லாமே போட்டோஷூட்டாகத் தெரிகிறது” என்று விமர்சித்தார்.

அத்துடன், “2014-ல் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதால் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது. அப்போது அமைச்சர்கள் அழுது கொண்டே பதவியேற்றனர். அந்த நாடகம் பழனிசாமிக்கு நினைவிலையா? இப்போது அழுகையைப் பற்றிப் பேசும் இவரின் நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை அன்புமணி ராமதாஸ் அவர்களின் விமர்சனத்திற்க்கு , அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “கரூர் விபத்தில் உயிரிழந்த 9 குழந்தைகளை நான் எனது பிள்ளைகள் போலவே கருதுகிறேன். மக்களில் ஒருவராக நானும் துயரத்தில் பங்கெடுக்கிறேன். எங்கள் தலைவர் சொல்வதுபோல எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார். எனவே மக்களுடன் நாங்கள் நிற்கிறோம், ஆறுதல் சொல்கிறோம். ஆனால், பிறந்த தந்தையை கூட கொச்சைப்படுத்தியவர் அளிக்கும் கருத்துக்கு இனி எவ்வித முக்கியத்துவமும் தர தேவையில்லை” எனவும் கடுமையாக எதிர்வினை தெரிவித்தார்.

திருவெறும்பூர் காட்டூரில் புதிய கூட்டுறவு சங்கம் தொடக்கம்; மக்களுக்கு சிறுவணிக, பெண்கள் கடனுதவி வழங்கினார் அமைச்சர்

திருவெறும்பூர், 30, செப்டெம்பர் 2025: திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக புதிய கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்பு மாண்புமிகு அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் அவர்களிடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், இருதயபுரம் கூட்டுறவு வங்கியின் கிளை காட்டூரில் செயல்பாட்டை இன்று தொடங்கி வைத்தார். 

இக்கூட்டுறவு சங்கம் தனிநபர்களுக்கு சிறுவணிக கடன்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கும் வகையில் செயல்பட உள்ளது. மாண்புமிகு அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் அவர்களுக்கு , தொகுதி மக்களின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

திருவெறும்பூர் வார்டு 41-ல் உங்களுடன் ஸ்டாலின் திட்டச் சிறப்பு முகாம்.ஆய்வினை மெற்கொண்டார் அமைச்சார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர், 30, செப்டெம்பர் 2025: மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகர மண்டலம் 3, வார்டு 41-ல் வசிக்கும் மக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டச் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை தொடங்கி வைத்து ஆய்வு செய்ததோடு, மக்களுடன் கலந்துரையாடினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. மேலும், முகாமிலேயே தீர்வு காணப்பட்ட மனுக்கள் தொடர்பான ஆணைகளையும் பயனாளிகளிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 14வது வார்டினைச் சேர்ந்த மக்களுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” திட்டச் சிறப்பு முகாம் பிஷப் ஹீபர் பள்ளியில் நடைபெற்றது. அந்த முகாமையும் நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top