ஹாட்ரிக் ஹைலைட்! புகழ்ந்த முதல்வர்… நெகிழ்ந்த அமைச்சர்!

சாரண சாரணியர் வைரவிழா

2025 ஜனவரி மாதம் தனது சொந்த மாவட்டமான திருச்சி-மணப்பாறையில், சாரணர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணியை ஒரு வார காலம் கோலாகலமாக நடத்திக் காட்டினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 

அன்பில் மகேஷ், முதல்வர் ஸ்டாலின், கே.என். நேரு, டி.ஆர்.பி. ராஜா, செந்தில் பாலாஜி ஆகியோர் ஜாம்போரி இறுதி நாளில் மேடையில் கலந்து கொண்டனர்.

மலேசியா, இலங்கை உள்ளிட்ட அயல் நாடுகள், இந்தியாவின் 24 மாநிலங்களிலிருந்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான சாரண, சாரணியர்கள் பங்கேற்ற  இந்த விழாவை மாண்புமிகு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று ஜனவரி 28-ம் தேதி தொடங்கிவைத்தார்.

அன்பில் மகேஷ் மணப்பாறையில் வெள்ளி ஜாம்போரியை ஏற்பாடு செய்தார். துணை முதல்வர் உதயநிதி நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு ‘வெள்ளி யானை’ விருது

சர்வதேச அளவில் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்த இந்த வைரவிழா பெருந்திரளணியின் நிறைவு நாளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்று சிறப்பித்தார். முதல்வர் முன்னிலையில் சாரணர் இயக்கத்தின் உயரிய விருதான ‘வெள்ளி யானை விருது’ அமைச்சர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது, தந்தை ஸ்தானத்தில் இருந்து நான் மகிழ்கிறேன் என்று முதலமைச்சர் நெகிழ்ந்தது பரவசத்தை ஏற்படுத்தியது!

‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’

அந்தப் பரவசம் தீரும் முன்பே, பிப்ரவரி 22-ம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் 7வது மண்டல மாநாட்டை ஒருங்கிணைத்திருந்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். 1.32 லட்சம் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள்  அலைகடலெனத் திரண்டிருந்த மாநாட்டில் மாணவர்களுக்குச் சீர் சுமந்து வந்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் தமிழ்நாடு முதலமைச்சர்! அந்த மேடையில்தான் அமைச்சர் அன்பில் மகேஸ் அமைச்சராக இருக்கும் காலம் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என்று புகழாரம் சூட்டினார் மாண்புமிகு முதல்வர்!

அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களின் பொறுப்பு தொகுதியில் நலப்பணித்திட்டங்கள்

இதோ ஹாட்ரிக் வெற்றியாக, அமைச்சர் அன்பில் மகேஸ் பொறுப்பிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். ரூ.423 கோடியில் அரசின் திட்டப் பணிகளைத் துவக்கிவைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கியிருக்கிறார் முதல்வர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையே ஒரு மாநாடு போல நடத்திக் காட்டி,  ‘நாகையில் வாகை சூடியிருக்கிறார்’ என்று முதல்வரிடம் வாழ்த்து பெற்றிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்!  

அன்பில் மகேஸ் நாகப்பட்டினத்தில் நலத்திட்ட வழங்கல் விழாவை ஏற்பாடு செய்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

ஜனவரி 28 முதல், மார்ச் 3ஆம் தேதி வரையிலான  35 நாட்களுக்குள் அடுத்தடுத்து மூன்று மிகப்பெரிய நிகழ்வுகளை வெற்றி மாநாடுகளாக ஒருங்கிணைத்திருக்கிறார் அமைச்சர்!  இந்த மூன்று மேடைகளுமே முதலமைச்சரின் மனதுக்கு நெருக்கமானதாக அமைந்ததுதான் ‘ஹாட்ரிக் ஹைலைட்!’

Also Read :  “பெற்­றோர்­­களைக் கொண்­டா­டு­வோம்”  ஏழாவது மண்டல மாநாடு 

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top