அப்பா அன்பில் பொய்யாமொழி தந்த சொத்து!

`நான் காணா உயரத்தையும் நீ காண வேண்டும்‘ என நம்மைத் தோளில் சுமப்பவர் அப்பா. தாயின் அன்பு பெருமளவில் பேசப்பட்டாலும், தந்தை அன்பையும் கண்ணீரையும் முழுமையாக யாரும் பார்ப்பதில்லை. அதை வெளிப்படுத்திக் கொள்ளாதவர்களாகவே அப்பாக்கள் இருக்கிறார்கள். அப்படியான அப்பா அன்பில் பொய்யாமொழி பற்றி மகனின் நினைவுகளே இந்த கட்டுரை.

சமீபத்தில் ஒரு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது அப்பா அன்பில் பொய்யாமொழி தனக்குக் கொடுத்த சொத்து குறித்து பேசியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலினுடன் அன்பில் பொய்யாமொழி

`விநாயகர் சதுர்த்தியின்போது காலையில் அனைவரும் கொழுக்கட்டை சுட்டுக் கொண்டிருந்தார்கள். என்னுடைய மாமா சும்மா சைக்கிள் எடுத்துக் கொண்டு வெளியே போ உடற்பயிற்சி செய்தது போல இருக்கும்’ என்று சொன்னார். போகிற வழியில் கடைக்குள் இருந்து வந்த ஒருவர் `கல்யாணத்திற்குக் குத்துவிளக்கு வாங்க வேண்டும் என்று அப்பா சொன்னார். நீ வருகிறாயா?’ என்று கேட்டார்.

அவர் யார் என்றுகூட எனக்குத் தெரியாது. அந்த நபர் வண்டி ஓட்ட, நான் முன்பு அமர்ந்து கொண்டேன். தூரத்திலிருந்து எனது சித்தப்பாவும் நான் வேறு ஒருவருடன் செல்வதைப் பார்த்தார். அவரும் எதுவும் சொல்லாமல் `சைக்கிளில் காற்று குறைவாக இருக்கிறது, காற்றடித்துக் கொண்டு போங்கள்’ என்றார்.

Portrait of Anbil P Dharmalingam, Anbil Poyyamozhi and Anbil Mahesh

ஆறேழு கிலோ மீட்டர் தொலைவிற்குக் கூட்டிச் சென்றவர், ஏதோ ஒரு சலூன் கடை வாசலில் என்னை உட்காரவைத்து விட்டு சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன் என்று சென்றுவிட்டார். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. அங்கிருந்து வீடு வரைக்கும் நடந்தே வந்துவிட்டேன். காலையில் சென்ற நான் மதியம்தான் வந்து சேர்ந்தேன். அம்மா மட்டும் என்னை விசாரித்துக்கொண்டே இருந்திருக்கிறார்.

Also Read : தளபதியின் தளபதி அன்பில் பொய்யாமொழி!

நான் உள்ளே நுழைந்தவுடன் அம்மா என்னைப் பார்த்துக் கேட்ட முதல் கேள்வி சைக்கிள் எங்கடா?' என்று. அப்பாவின் நண்பர் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் என்று சொன்னவுடன்ஏமாந்துட்டியேடா’ என்று அடி விழுந்தது.

Portrait paint work of Anbil Mahesh Family. With His father Anbil Poyyamozhi and his mother Malathi. அன்பில் பொய்யாமொழி, அன்பில் மகேஷ் மற்றும் மாலதி.

அந்த சைக்கிள் வாங்க நான் மிகவும் பாடுபட்டேன். அதனால் அப்பா மிகவும் கோபமாக இருப்பார் என்று ஹாலில் சோகமாகப் படுத்துக்கிடந்தேன். `என்னங்க சன்… பரவால்ல சன்… அதனால என்ன சன்’ என்று சிரித்தபடி போய்விட்டார். அப்பா மிகவும் சகஜமாக சிரித்த முகத்தோடு இருப்பார்.

தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் கட்சிக்காரர்கள் என்னிடம் `அப்பா தோளில் கைபோட்டுப் பேசுவார், வாங்க டீ சாப்பிடலாம் என்று உரிமையோடு கூப்பிடுவார்’ என்று சொல்வார்கள். அந்த குணம்தான் எனக்கும் வந்திருக்கிறது. சகஜமாக சிரித்த முகத்தோடு நான் இருப்பது அப்பா எனக்குக் கொடுத்த சொத்து” என்கிறார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top