‘சமூகத்திற்கு திருப்பி செலுத்துதல்’ தத்துவத்தின் நீட்சியே அன்பில் அறக்கட்டளை!
கல்வி சிறந்த தமிழ்நாட்டை கட்டமைக்கு மாண்புமிகு முதலமைச்சரின் கட்டளைகளை நிறைவேற்ற நொடிப்பொழுது உழைத்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. அரசுப் பள்ளிகளில் ஆய்வு, மாவட்டம் தோறும் தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வுக் கூட்டம், திருவெறும்பூர் தொகுதியில் மக்கள் பணி, நாகப்பட்டினத்தின் பொறுப்பு அமைச்சராக களப்பணி ஓய்வறியா உழைப்பாளியாகத் திகழும் அமைச்சரின் மறுபக்கம் நம்மை வியக்க வைக்கிறது.

அன்பில்
அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது சொந்த கிராமமான, ‘அன்பில்’ என்ற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கி எண்ணற்ற சமூக சேவைகளை செய்துவருகிறார்.
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு முகாம், எளிய மக்களின் பசியைப் போக்க அன்னதானம், மருத்துவ முகாம்கள் என அறக்கட்டளை தொடங்கிய கடந்த 15 ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான சமூகத் தொண்டுகளை செய்து வருகிறார்.
வேலைவாய்ப்பு முகாம்!
புரவலர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் நினைவாக இளைஞர்களுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம் அன்பில் அறக்கட்டளை சார்பில் 10-வது ஆண்டாக நடைபெற்றது.
இந்த முகாம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் தொகுதியில் உள்ள முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் 20.07.2025 அன்று நடைப்பெற்றது. 8,10,12- ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
பறந்து போ!

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “இளைஞர்களே, தன்னம்பிக்கை – முயற்சி எனும் இரண்டு சிறகுகளின் மூலம் பறந்துகொண்டே இருங்கள். வெற்றி எனும் வானத்தை நிச்சயம் எட்டிப் பிடிக்கலாம். உங்கள் எதிர்காலம் சிறக்க என் அன்பான வாழ்த்துகள்’’ என ஊக்கம் அளித்தார்.
130 நிறுவனங்கள் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், 1,871 இளைஞர்கள் பங்கேற்றனர். அவர்களில் 1,390 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கிடைத்தன. பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்ட இளைஞர்கள், மகிழ்ச்சியுடன் வாழ்வின் அடுத்தக்கட்ட முன்னேற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும் வாசிக்க:
- மாநில கல்விக் கொள்கை-2025 குறித்த கேள்விகளும் பதில்களும்!
- அரசுப் பள்ளி மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு!

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr
