திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அமைந்துள்ள “அன்பில்” என்ற சிறிய கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் அன்பில் தர்மலிங்கம். தன்னுடைய அயராத உழைப்பால் உயர்ந்தவர், தலைவர் கலைஞரின் நட்பையும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், மதிப்புக்குரிய காயிதேமில்லத் ஆகியோரின் அன்பையும் ஒருங்கே பெற்ற தலைசிறந்த அரசியல் சிற்பி.





















இயக்கப் பணியை நீதிக் கட்சியில் தொடங்கி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் போன்ற தளங்களில் அயராது உழைத்தவர். திராவிட முன்னேற்றக் கழகம் உருவானதிலும் இன்றியமையாத பங்கு வகித்தார்.
1938ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், மும்முனைப் போராட்டத்திலும் கலந்துகொண்டு சிறை சென்றவர். திராவிட இயக்கத்தின் அடிப்படை இலக்குகளை நிலைநிறுத்த, ஒப்பற்ற ஒத்துழைப்பை வழங்கிய முன்னணித் தலைவர்.
ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தொடங்கி, 22 ஆண்டுகளாக திருச்சி மாவட்ட கழக செயலாளராக தொடர்ந்தது அவரது நிர்வாகப் பயணம். சட்டமன்ற உறுப்பினராகவும், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்மை, வருவாய், உள்ளாட்சி மற்றும் செய்தித்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.












கூட்டுறவு சங்க இயக்குநர், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர், சென்னை கூட்டுறவு வங்கி இயக்குநர் பதவிகளையும் வகித்து, கூட்டுறவு இயக்க வளர்ச்சியில் சிறப்பான பங்களிப்பு ஆற்றியுள்ளார்.
தந்தை பெரியாரால் ‘எனது செல்லப்பிள்ளை அன்பில் தர்மலிங்கம்’ என அன்புடன் அழைக்கப்பட்டவர். 1956ஆம் ஆண்டு, தேர்தல் அரசியலில் இறங்குவதற்காக திருச்சி மாநாட்டில் தம்பிகளை அழைத்த பேரறிஞர் அண்ணா, திராவிட நாடு இதழில் ’அன்பில் அழைக்கிறார்’ என தலைப்பிட்டு இவரைப் பெருமைப்படுத்தினார்.
கழகத்திற்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவருக்கு, 1986ஆம் ஆண்டு கழகத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் ’பெரியார் விருது’ வழங்கப்பட்டு பெருமை சூட்டப்பட்டது.
“முடியுமா?” என்ற கேள்விக்கு “முடியும்” என்ற பதிலையே சொல்லாக்கி அதைச் செயலாக்கி முடித்தவர்.“திராவிடமே என் பேச்சு” என, தனது முழு வாழ்வையும் கழகத்திற்கே அர்ப்பணித்த ஒப்பற்ற திராவிடப் போராளி அன்பில் தர்மலிங்கம்.

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr
Pingback: தளபதியின் தளபதி அன்பில் பொய்யாமொழி! - Anbil Mahesh Forever
Pingback: அன்பில் அப்டேட்ஸ் | Anbil Updates - Anbil Mahesh Forever
Pingback: தாத்தா எனக்குக் கிடைத்த பரிசு! - Anbil Mahesh Forever