பள்ளிக்கல்வித் துறை: திட்டங்கள், பயனர்கள் – ஓர் தொகுப்பு! 

மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு எண்ணும் எழுத்தும், வானவில் மன்றம், வாசிப்பு இயக்கம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித் துறையின் 2025-26ம் ஆண்டுகான மானியக் கோரிக்கையில் அந்த திட்டங்களால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் அதனால் பயனடைந்தோரின் விவரங்களைக் குறித்தும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி சட்டப் பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதின் தொகுப்பு இது.

பள்ளிக்கல்வித் துறை Minister anbil amhesh poyyamozhi speaki ng in assembly

பள்ளிக்கல்வித் துறை நடத்திய ‘திணை தோறும் இலக்கியத் திருவிழா’!

பள்ளிக் கல்வித்துறை யின் சார்பாக தமிழின் இலக்கிய மரபுகளைக் கொண்டாட, ரூ.4.28 கோடி மதிப்பீட்டில், சென்னை, வைகை, காவேரி, பொருநை, சிறுவாணி இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

 பள்ளிக்கல்வித் துறை நடத்திய 'திணை தோறும் இலக்கியத் திருவிழா'!

சாதனை படைத்த பள்ளிக்கல்வித் துறையின் சர்வதேச புத்தகக் கண்காட்சி!

தமிழை உலகிற்கும், உலகைத் தமிழுக்கும் கொண்டுசேர்க்க ரூ.6 கோடி மதிப்பீட்டில் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. 64 நாடுகள், 50-க்கும் மேற்பட்ட் மொழிகளில் 1,880 தமிழ் நூல்களை பிற மொழிகளுக்கும், 544 நூல்களை தமிழுக்கும் மொழிபெயர்க்க, 2,471 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

சாதனை படைத்த  பள்ளிக்கல்வித் துறையின் சர்வதேச புத்தகக் கண்காட்சி!

TN Talk! 

அறிஞர்கள், ஆளுமைகள், ஆய்வாளர்களுடன் இளைஞர்கள் கலந்துரையாட,
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் TN Talk நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 25 நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்துள்ளன.

TN Talk! 

விடியல் தந்த அரசுப் பணி!

பொது நூலக இயக்ககத்தின் கீழ் மாவட்ட நூலக அலுவலர், நூலகர், உதவியாளர் உள்பட 25 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ளன. கருணை அடிப்படையில் 32 பேருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள் 32 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 

பள்ளிக்கல்வித் துறை விடியல் தந்த அரசுப் பணி!

முத்திரை பதிக்கும் முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்!

முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் உள்பட 139 நூல்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித் துறை முத்திரை பதிக்கும் முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்!

இளந்தளிர் – சிறார் இலக்கியத் திட்டம்!

வயதுக்கேற்ற வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின்கீழ் ரூ.26.95 லட்சம் மதிப்பீட்டில் 138 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரூ.8.24 லட்சம் மதிப்பீட்டில் 22 உலக சிறார் இலக்கிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இளந்தளிர் - சிறார் இலக்கியத் திட்டம்!

பள்ளிக்கல்வித் துறை : நூல் வெளியீடுகள்!  

நாட்டுடைமைப் படைப்புகளாக 36 நூல்கள், கலைக்களஞ்சியம் & சிறார் களஞ்சியம் 20 தொகுதிகள், பெரியார் சிந்தனை 20 நூல்கள், செவ்விலக்கியங்கள் 14 நூல்கள், 
வ.உ.சி நூல்கள் 4 தொகுதிகள், நூற்றாண்டு ஆளுமைகளின் தொகுப்பு 7 நூல்கள், ஆங்கிலத்தில் தமிழ் நூல்கள் 12 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 பள்ளிக்கல்வித் துறை : நூல் வெளியீடுகள்!  

புது ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர்! 

பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே வாசிப்பைத் தூண்ட ரூ.7.15 கோடி நிதியில் 37,556 அரசுப் பள்ளிகளில் 69,207 வகுப்பறைகளுக்கு புது ஊஞ்சல், 70,188 வகுப்பறைகளுக்கு தேன்சிட்டு வழங்கப்படுகிறது. அனைத்து வகுப்புகளுக்கும் கனவு ஆசிரியர் மாத இதழ்கள் அளிக்கப்படுகின்றன.

புது ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர்! 

பள்ளிக்கல்வித் துறையில் பணி நியமனங்கள்! 

3,087 முதுகலை ஆசிரியர்கள், 3,192 பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மையப் பயிற்றுநர், 1,038 பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள், 129 வட்டாரக் கல்வி அலுவலர்கள் என  7,446 பேருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

 பள்ளிக்கல்வித் துறையில் பணி நியமனங்கள்! 

உயரும் உயர்கல்வி சேர்க்கை! 

2023-24ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது 47% இலிருந்து 74% ஆக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியை (28%) விட 46% அதிகம் என மானியக் கோரிக்கையில் அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

உயரும் உயர்கல்வி சேர்க்கை! 

வெளிநாட்டுக் கல்விக்கு விமான கட்டணம்!

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களால் இந்தியாவின் IIT, IIM மற்றும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்கின்றனர். உள்நாட்டில் 961 பேர் அயல்நாட்டில் 16 பேர் என முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். உள்நாட்டில் இளங்கலை பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தையும்  அயல்நாட்டில் பயிலச் செல்லும் மாணவர்களின் முதல் விமானப் பயணக் கட்டணத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது. இதற்காக ரூ.6.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கல்விக்கு விமான கட்டணம்!

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி! 

‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் மூலம் ரூ.658.67 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. 11,590 அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது என மானியக்கோரிக்கையில் அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி! 

மணற்கேணி 4.1 ஸ்டார் ரேட்டிங்!

உயர்தரமான டிஜிட்டல் கல்விக்காக உருவாக்கப்பட்ட மணற்கேணி கல்வித் தளத்தில் 2D &  3D அனிமேஷன் வீடியோ வழியில் விரிவான கற்றல் நூலகம் வழங்கப்படுகிறது. மணற்கேணி செயலியானது 8,91,261-க்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டதோடு 4.1 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

மணற்கேணி 4.1 ஸ்டார் ரேட்டிங்!

பள்ளிக்கல்வித் துறை: நூற்றாண்டுப் பள்ளிகள்!

பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக நூற்றாண்டு காணும் 2,211 பள்ளிகளுக்கு ஆண்டுவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 883 பள்ளிகளில் ஆண்டுவிழா நிறைவு செய்யப்பட்டுள்ளது. 

 பள்ளிக்கல்வித் துறை: நூற்றாண்டுப் பள்ளிகள்!

அனைவருக்கும் ஐஐடிஎம்!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.  363 மாணவர்கள் உயர் கல்வியுடன் ஐஐடி மெட்ராஸ்-ல், BS – Data Science பட்டப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

அனைவருக்கும் ஐஐடிஎம்!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்!

34,987 அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 17.53 லட்ச மாணவர்கள் பயனடைகிறார்கள். மாணவர்களிடையே கற்றல் ஆர்வம், வகுப்பறைக் கவனிப்பு, நினைவாற்றல், விளையாட்டில் ஈடுபாடு கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைப் பின்பற்றி, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளும், இந்தியாவில் தெலுங்கானா மாநிலமும் செயல்படுத்துகின்றன.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்!

பொலிவு பெறும் பள்ளிகள்!

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 3527.50 கோடி மதிப்பீட்டில், 8,370 வகுப்பறைகள், 52 ஆய்வகங்கள், 184 யூனிட் கழிப்பறைகள், 752 மீட்டர் சுற்றுச்சுவர்கள், 5 மாணவர் விடுதிகள், 5 மாணவியர் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. 4,412 வகுப்பறைகள், 105 ஆய்வகங்கள், 323 கழிப்பறைகள், 2,290 மீட்டர் சுற்றுச்சுவர் விரைவில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிவு பெறும் பள்ளிகள்!

கட்டணம் ரத்து!

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கணிணி அறிவியல் பாடத்துக்கான ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இதனால் 3.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். 

கட்டணம் ரத்து!

கோடைக் கொண்டாட்டம்!

11-ஆம் வகுப்பு மாணவர்கள் கோடை விடுமுறையைப் பயனுள்ளதாகக் கழிக்க ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் `கோடைக் கொண்டாட்டம்’ சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. 3,135 மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். 

கோடைக் கொண்டாட்டம்!

பேராசிரியர் அன்பழகன் விருது!

மாவட்டத்திற்கு 2 பள்ளிகள் வீதம் 76 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாகத் தேர்வு செய்யப்பட்டு ரூ.7.28 லட்சம் மதிப்பீட்டில் பாராட்டுச் சான்றுடன் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படும் என்று மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

பேராசிரியர் அன்பழகன் விருது!

கனவு ஆசிரியர் விருது!

‘கனவு ஆசிரியர் விருது’ திட்டத்தின்கீழ் 380 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஃபிரான்ஸ் நாட்டுக்கு 55 ஆசிரியர்களும் இந்திய அளவில் 325 ஆசிரியர்களும் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

கனவு ஆசிரியர் விருது!

வெளிநாட்டுக் கல்விச்சுற்றுலா!

கலைத்திட்டங்களில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாட்டுக் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். ரூ.3 கோடி நிதி ஒதுக்கீட்டில், 323 மாணவ மாணவியர் ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, ஜப்பான், தென்கொரியா. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் பயணம் செய்துள்ளனர்.

வெளிநாட்டுக் கல்விச்சுற்றுலா!

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு!

11-ஆம் வகுப்பு மாணவர்களின் தமிழ் மொழி, இலக்கியத் திறனை மேம்படுத்த மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திருக்குறள் மாணவர் மாநாடு நடத்தப்படும்.

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு!

பணி ஆணை! 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நான்கு ஆண்டுகளில் 1,406 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 475 உதவியாளர்கள், 885 இளநிலை உதவியாளர்கள் 29 தட்டச்சர்  17 சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளன.

பணி ஆணை! 

பெற்றோர்களைக் கொண்டாடுவோம்! 

மதுரை, திருச்சி, தருமபுரி, கோவை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, கடலூர் ஆகிய 7 மண்டலங்களில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு நடந்துள்ளது. 3 லட்சம் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். 

பெற்றோர்களைக் கொண்டாடுவோம்! 

வாரிசுதாரர்களுக்கு பணி!

அரசுப்பள்ளிகளின் பணிக்காலத்தில் உயிரிழந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகின்றன. 2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரை 650 இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வாரிசுதாரர்களுக்கு பணி!

தொழிற்கல்வி பாடத்திட்டம்!

11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டம், புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 60,000 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தொழிற்கல்வி பாடத்திட்டம்!

வயது உச்சவரம்பு அதிகரிப்பு!

பொதுப்பிரிவினர் 45-இல் இருந்து 53 இதர பிரிவினர் 50-இல் இருந்து 58 என அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமன வயது உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வயது உச்சவரம்பு அதிகரிப்பு!

வைரவிழா ஜம்போரி!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் பாரத சாரணர் சாரணியர் இயக்க 75-வது ஆண்டு வைரவிழா ஜம்போரி.  திருச்சி மணப்பாறையில் 20,000 சாரண சாரணியர்கள் பங்கேற்று, 7 சாதனைகள் நிகழ்த்தினர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு சாரண சாரணிய இயக்கத்தின் உரிய விருதான வெள்ளி யானை விருது வழங்கப்பட்டது.

வைரவிழா ஜம்போரி!

ஆசிரியர்களுக்குத் தொல்லியல் பயிற்சி!

தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாசாரம் தொன்மையின் சிறப்புகளை மாணவர்களுக்குக் கற்பிக்க, 2,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் 6 நாட்கள் தொல்லியல் பயிற்சி வழங்கப்படுகிறது.  

ஆசிரியர்களுக்குத் தொல்லியல் பயிற்சி!

கல்வித் தொலைக்காட்சி!  

கல்வித் தொலைக்காட்சியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு பாடங்கள் காணொலிக் காட்சிகளாக ஒளிபரப்பு. ரூ.7 கோடி மதிப்பீட்டில் மெய்நிகர் ஒளிப்பதிவுக்கூடம் 6 உயர் தொழில்நுட்ப படப்பதிவு, ஒலிப்பதிவுக் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கல்வித் தொலைக்காட்சி!  

துணைமுதல்வரின் பணி ஆணை!

மூன்று சதவிகிதம் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 9 இளநிலை உதவியாளர்கள் 11 உதவியாளர்களுக்கு மாண்புமிகு துணை முதலமைச்சர் பணி நியமன ஆணை!

துணைமுதல்வரின் பணி ஆணை!

கற்றல் இழப்பீட்டை மீட்டெடுத்த இல்லம் தேடிக் கல்வித் திட்டம்!

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்கவும், மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கவும் ஏற்படுத்தப்பட்டது இல்லம் தேடிக் கல்வித் திட்டம். இந்த திட்டத்தினால் 4 ஆண்டுகளில் 95.97 லட்சம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இழப்பீட்டை இத்திட்டம் 25% மீட்டெடுத்திருப்பதாக கலிஃபோர்னியா சாண்டியாகோ பல்கலைக்கழக ஆய்வு உறுதிசெய்திருக்கிறது.

கற்றல் இழப்பீட்டை மீட்டெடுத்த இல்லம் தேடிக் கல்வித் திட்டம்!

வளம் பெறும் வாசிப்பு இயக்கம்!

அரசுப்பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம் வாசிப்பு இயக்கம். இந்த திட்டத்தின் மூலம் 11 மாவட்டங்களில் உள்ள 914 அரசுப் பள்ளிகளில் பயிலும் 44.50 லட்சம் மாணவர்களுக்காக 90.45 லட்சம் புத்தகப் பிரதிகள் அளித்து மகத்தான சாதனை படைத்திருக்கிறது பள்ளிக்கல்வித் துறை.

வளம் பெறும் வாசிப்பு இயக்கம்!

எண்ணும் எழுத்தும்!

குழந்தைகளிடையே வாசிப்பு மற்றும் கணித கற்றல் அனுபவத்தை எளிதாக்க உருவாக்கப்பட்டது எண்ணும் எழுத்தும் திட்டம். இந்தத் திட்டத்திற்காக ரூ. 414.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 37,767 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் 40,732 ஆசிரியர்களுக்கு பயிற்சிக் கையேடுகளும் 36,481 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகளும் வழங்கப்பட்டுள்ளன. 25.08 லட்சம் மாணவர்கள் பலனடைந்த பயன்மிகு திட்டம் இது.

எண்ணும் எழுத்தும்!

நலம் நாடி செயலி!

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்புக் கல்வி, ஆயத்தப்பயிற்சி, வீட்டுவழிக் கல்வி, இயன்முறை மருத்துவ சேவைகள் வழங்குகிறது ‘நலம்நாடி’ செயலி.  96,082 மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் தீவிரப் பாதிப்புகள் கொண்ட 17,676 பேருக்கு சிறப்புக்கல்வி, பயிற்சிகள் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றன.

நலம் நாடி செயலி!

மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!

உள்ளடக்கிய கல்விச் செயல்பாடுகளுக்கு ரூ.93.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை 2015-16 கல்வி ஆண்டில் 76.64% -ல் இருந்து 2023-24ல் 85.19% ஆக அதிகரித்திருக்கிறது.

மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!

ஒன்றிய அரசின் பாராட்டுச்சான்று!

அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் 1,12,81,426 மாணவர்களில், 76,56,074 மாணவர்களின் ஆதார் பதிவுகள் இந்தக் கல்வியாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 70% மாணவர்களின் ஆதார் விபரங்களைத் துல்லியமாகப் பதிவுசெய்ததற்காக ஒன்றிய அரசின் UIDAI ஆணையம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுச் சான்று வழங்கி கௌரவித்துள்ளது.

ஒன்றிய அரசின் பாராட்டுச்சான்று!

தமிழகமெங்கும் தகைசால் பள்ளிகள்!

தமிழ்நாட்டிலுள்ள 28 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 பள்ளிகள் ரூ.160.82 கோடி நிதியில், உள்கட்டமைப்பு வசதிகளுடன் தகைசால் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

தமிழகமெங்கும் தகைசால் பள்ளிகள்!

அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்!

அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 519.73 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்!

திறன்மிகு வகுப்பறைகள்!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 44.50 லட்சம் மாணவர்கள் பயன்பெற ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திறன்மிகு வகுப்பறைகள்!

உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்!

சிறுபான்மைப் பள்ளிகள் உள்பட 654 அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களுக்கு ரூ.41.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்!

நிதி ஒதுக்கீடு!

சிறுபான்மைப் பள்ளிகள் உள்பட அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,750 திறன்மிகு வகுப்பறைகள் கட்டுவதற்காக, ரூ.33.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு!

புதுப் பொலிவு!

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்கீழ், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை 4 ஆண்டுகளில் ரூ.435.96 கோடி மதிப்பீட்டில் 12,210 பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

புதுப் பொலிவு!

எல்லோருக்கும் எல்லாம் என்பதே இலக்கு!

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் 92% பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் என்பதே இலக்கு!

 விண்ணைத் தொடும் வானவில் மன்றம்!

அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க, கணிதத் திறன்களை ஊக்குவிக்க, ரூ.55.69 கோடி ஒதுக்கீட்டில், ‘வானவில் மன்றம்’ நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் செயல்படுத்தப்பட்டன. இதனால் மூன்று ஆண்டுகளில் 33.50 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

 விண்ணைத் தொடும் வானவில் மன்றம்!

தமிழ்மொழி கற்போம்!

புலம்பெயர் தொழிலாளர்கள் குழந்தைகளுக்காக ரூ.1.21 கோடி மதிப்பீட்டில், ‘தமிழ்மொழி கற்போம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,806 குழந்தைகள் தமிழ் மொழியையும், தங்கள் தாய்மொழியில் பிற பாடங்களையும் பயில்கிறார்கள்.

தமிழ்மொழி கற்போம்!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால முகாம்!

தமிழ்நாட்டிலுள்ள 28 தகைசால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 5 நாள்கள் தலைமைப்பண்பு, STEM பயிற்சியுடன் குளிர்கால உண்டு உறைவிட முகாம் நடத்தப்படுகிறது. 700 மாணவர்கள், 140 ஆசிரியர்கள் இந்த முகாமில் பயிற்சி வழங்கப்படுகிறது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால முகாம்!

மழைக்காகத்தான் மேகம்… அட கலைக்காகத்தான் நீயும்!

மண்ணின் கலைகளை, மாணவர்கள் மனங்களில் உயிர்ப்போடு வளர்த்தெடுக்க, தனித்திறன்களை ஊக்குவிக்க கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. ரூ.16.05 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் 1,15,48,000 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். கலைத்திருவிழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற 34 மாணவர்களுக்கு கலையரசி, கலையரசன் விருது வழங்கி அங்கீகரிக்கிறது பள்ளிக்கல்வித் துறை.

மழைக்காகத்தான் மேகம்... அட கலைக்காகத்தான் நீயும்!

To read more about Anbil Mahesh Poyyamozhi’s work: https://anbilmaheshforever.com/anbil-mahesh-poyyamozhi-a-modern-face-of-dravidian-educational-reform-in-tamil-nadu/

மாணவச் செல்வங்களே… உங்கள் நலனுக்காக அழையுங்கள் 14417

மாணவர்கள் மன உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் கல்விசார் உதவிகளுக்கும் வழிகாட்டுதல்கள் பெற, ரூ.4.1 கோடி மதிப்பீட்டில் 14417 மாணவர் உதவிமையம் செயல்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் 19,39,633 அழைப்புகள் உதவி மையத்திற்கு வந்துள்ளன.

உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்காக 10,07,335 அழைப்புகளும், மாணவர் சேர்க்கைக்காக 3,79,242 அழைப்புகளும், பள்ளி மேலாண்மைக்குழு தொடர்பாக 2,54,246 அழைப்புகளும், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் தொடர்பாக 97,777 அழைப்புகளும், பள்ளி இடைநிற்றல் குறித்து 88,468 அழைப்புகளும்

கல்வி உதவித்தொகை தொடர்பாக 65,583 அழைப்புகளும், சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தை தொடர்பாக 46,982 அழைப்புகளும் என மொத்தம் 19,39,633 அழைப்புகள் உதவி மைய எண்ணுக்கு வந்துள்ளன.

மாணவச் செல்வங்களே... உங்கள் நலனுக்காக அழையுங்கள் 14417

கற்றல் இனிதே!

டிஜிட்டல் கற்றலை மேம்படுத்த, 31,129 அரசு தொடக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளிகளின் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி மதிப்பீட்டில் 79,723 கைக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

கற்றல் இனிதே!

நம்பிக்கை கொள்… தடைகளே இல்லை!

அரசுப் பள்ளி மாணவிகள் மனவலிமை, உடல்வலிமை பெறவும் கராத்தே, ஜூடோ, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைப் பயிற்சிகள் வழங்குவதற்காக 13,208 பள்ளிகளுக்கு ரூ.15,000 வீதம் ரூ.19.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 13 லட்சம் மாணவிகளுக்கு மூன்று மாத காலத் தற்காப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.

நம்பிக்கை கொள்… தடைகளே இல்லை!

கலைஞர் நூற்றாண்டு நூலகம்!

மதுரையில் ரூ.218.19 கோடி மதிப்பீட்டில் 3,64,521 புத்தகங்களுடன் செயல்பட்டு வருகிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம். இதுவரை 16,55,820 வாசகர்கள் இந்த  நூலகத்தினால் பயனடைந்திருக்கிறார்கள்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்!

செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்!

தமிழ் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் `செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்’ அமைக்கப்பட்டுள்ளது. 25,816 வாசகர்கள் பார்வையிட்டுள்ளனர்.

செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்!

நூலகங்கள்!

நூலகவியலின் தந்தை பத்மஸ்ரீ டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் பெயரில் ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் சீர்காழியில் நூலகமும், செந்நாப் புலவர் ஆர்.கார்மேகனாரின் பெயரில் இராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கிளை நூலகமும் திறக்கப்பட்டுள்ளன.

நூலகங்கள்!

டிஜிட்டல் நூலகங்கள்!

தமிழகம் முழுவதும் 76 நூலகங்களில் ரூ.57.20 லட்ச மதிப்பீட்டில் தலா இரண்டு மெய்நிகர் நூலகக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. 32,712 பள்ளி மாணவர்கள் இதன்மூலம் பயன் பெற்றுள்ளனர். 10 லட்சம் நூல்களை கிண்டில் செயலியில் வாசிக்க, 1,469 பொது நூலகங்களுக்கு WiFi வசதி அளிக்கப்பட்டுள்ளது. 18,50,123 வாசகர்கள், போட்டித்தேர்வர்கள் பயனடைந்துள்ளனர்.

டிஜிட்டல் நூலகங்கள்!

வரலாறு படைத்த புத்தகக் கண்காட்சிகள்!

வாசிப்பை மக்கள் இயக்கமாக்க, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.21.86 கோடி நிதி ஒதுக்கீட்டில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை புத்தகக் கண்காட்சிக்கு 1.25 கோடி வாசகர்கள் வருகை புரிந்துள்ளனர். 1.19 லட்சம் நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ரூ.105.4 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

வரலாறு படைத்த புத்தகக் கண்காட்சிகள்!

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top