தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 217 பேருக்கு, இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகளை வழங்கிச் சிறப்பித்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 9,491 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் குரூப் 4 தேர்வு (Group IV) நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களில் 217 பேர் பள்ளிக் கல்வித்துறையைத் தேர்வு செய்தார்கள். அவர்களுக்குக் கடந்த 15ம் தேதி இணைய வழிப் பணி நியமன க் கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது. அதில் பள்ளிக் கல்வித்துறை இயக்கத்தைத் தேர்வு செய்த 186 பேருக்கு நேரடி நியமனமும், 24 பேர் தமிழ்நாடு பொது நூலகத்துறையும், 7 பேர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தையும் தேர்வு செய்திருந்தார்கள்.
அவர்கள் அனைவருக்கும் பணி நிமயன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி(Anbil Mahesh Poyyamozhi), அனைவருக்கும் தனது கைகளால் பணிநியமன ஆணைகளை வழங்கி, பணியில் சிறந்து விளங்கிட வாழ்த்தினார்.

மாநில அளவில் முதலிடம் பிடித்து பெருமிதம்!
விழாவில் பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்த லட்சுமி பிரியா பேசுகையில், TNPSC மூலம் நடத்தப்பட்ட குரூப் -4 தேர்வில் 562 வது இடம் பிடித்து, அரசுப்பணிக்கான கலந்தாய்வில் பள்ளிக்கல்வித்துறையைத் தேர்வு செய்து மாநில அளவில் முதலிடம் பிடித்ததாகக் கூறினார். “ஐ.டி.பணியைத் தவிர்த்து நம்பிக்கையோட படிச்சேன். பள்ளிக்கல்வித்துறையில் அரசுப்பணி கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். முதலமைச்சர், துணைமுதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.

விழிச்சவால் கொண்ட இளம்பெண்ணின் வியக்கவைக்கும் சாதனை!
திருவண்ணாமலையைச் சேர்ந்த விழிச்சவால் கொண்ட அக்சயா பேசுகையில், “TNPSC குரூப் – 4 தேர்வுல செலக்ட் ஆகி, அரசுப்பணிக்கான கலந்தாய்வுல பள்ளிக்கல்வித்துறை மூலமா, சென்னை விருகம்பாக்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில வேலை கிடைச்சிருக்கு. அரசுப்பள்ளியிலேயே படிச்சு, அரசுப்பணி வாங்கிருக்கேன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கையால பணி ஆணை வாங்கினது ரொம்ப சந்தோஷம். தமிழ்நாடு அரசுக்கு என்னோட மனமார்ந்த நன்றி” எனத் தெரிவித்தார்.

அரசுப்பணிக் கனவு நனவாயிருச்சு!
விருதுநகரைச் சேர்ந்த எம்.மாதவன் பேசுகையில், “குரூப் 4 தேர்வுல தேர்வாகி, அரசுப்பணிக்கான கலந்தாய்வுல பள்ளிக்கல்வித்துறையைத் தேர்வு செய்தேன். அதில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடிச்சிருக்கேன். BE முடிச்சிட்டு தனியார்ல வேலை பார்த்தேன். அரசாங்க வேலைக்குபோயி சேவை பண்ணனும்கிறதுதான் என்னோட லட்சியமா இருந்துச்சு. விருதுநகர் மாவட்டத்துல ஒரு பள்ளியில இளநிலை உதவியாளரா வேலை கிடைச்சிருக்கு. தமிழ்நாடு அரசுக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.



பள்ளிக் கல்வித் துறை விருதுகள்

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr