Anbil Updates – December 2025

‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் உயர்கல்வி இடைநிற்றலைத் தடுக்கும் நம்பிக்கை ஒளி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

01, டிசம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், உயர்கல்வியில் இடைநிற்றல் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்குடன், ‘தமிழ்ப்புதல்வன்’ போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

“வெயிலில் நிற்பவர்களுக்குத்தான் நிழலின் அருமை தெரியும்” என்று தம்பி பரசுராமன் குறிப்பிட்டுள்ளதுபோல், முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வரும் ஒவ்வொரு திட்டத்தின் உண்மையான அருமையும் அதன் பயனாளர்களுக்கே முழுமையாகப் புரியும். இத்திட்டங்களை “இலவசங்கள்” என்று சொல்லிக் கொச்சைப்படுத்துபவர்களால், எளிய மக்களின் வாழ்வியல் உணர்வுகளை உணர இயலாது என்றும், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியின் காணொலியைப் பகிர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.

மேலும், கல்வி பயிலும் போதே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமையில் இருக்கும் மாணவர்களின் இன்னல்களைப் போக்கவும், பெற்றோரின் பொருளாதாரச் சுமைகளை குறைக்கவும் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம், நாளைய இளைஞர் சமுதாயத்தின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது என்றும் அமைச்சர் பெருமையுடன் பாராட்டினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசுப் பள்ளிகளுக்கு RO குடிநீர் இயந்திரம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

திருச்சி 01, டிசம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகரக் கழகப் பொறியாளர் அணிகளின் சார்பாக அரசுப் பள்ளிகளுக்கு RO குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, திருச்சி சௌராஷ்டிரா நகரில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் திருவெறும்பூர் வேங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் RO Water இயந்திரங்களை வழங்கி, பொருத்தும் பணிகளை தொடங்கி வைத்தார்.

மாணவச் செல்வங்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, அரசுப் பள்ளி மாணவர்களின் நலனில் அரசின் அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்தது. மாவட்ட அமைப்பாளர் திரு. ஜியாவுதீன் மற்றும் மாநகர் அமைப்பாளர் திரு. மெய்யப்பன் ஆகியோரின் சிறப்பான ஏற்பாட்டில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

திருவெறும்பூர் தொகுதியில் குடிநீர் வசதிகள் – ரூ.5.68 இலட்சம் மதிப்பீட்டில் திட்டங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்

திருவெறும்பூர் 01, டிசம்பர் 2025 : திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் அசோக் நகரில், சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.68 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைப்பினை மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிளியூர் கிராமத்தில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட போர்வெல், சின்டெக்ஸ் டேங் மற்றும் மோட்டார் அமைப்பினையும் அமைச்சர் திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

மக்களின் அடிப்படை தேவையான பாதுகாப்பான குடிநீர் வசதியை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டங்கள், திருவெறும்பூர் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைந்துள்ளன.


தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு: 1500 மாணவர்களின் தெரிவுப் பட்டியல் இன்று வெளியீடு- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து

01, டிசம்பர் 2025 :  2 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 1500 மாணவர்களின் தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் பங்கேற்ற மாணவச் செல்வங்கள், இணையதளம் மூலம் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தனது எக்ஸ் (X) பக்கத்தில் தெரிவித்து, மாணவர்களின் முயற்சியை பாராட்டியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் பொதுக்கூட்டம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை

திருச்சி 01, டிசம்பர் 2025 :கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகரத்திற்குட்பட்ட பொன்மலை பகுதி கழகத்தின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரையாற்றி, கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் திரு. சுப. வீரபாண்டியன் மற்றும் தலைமைக் கழக பேச்சாளர் மணப்பாறை திரு. துரை காசிநாதன் ஆகியோருக்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். அதேபோல், இந்நிகழ்வை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த பொன்மலை பகுதி கழகச் செயலாளர் திரு. தர்மராஜ் அவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.

‘நான் முதல்வன்’ திட்டம் இளைஞர்களை சாதனையாளர்களாக உருவாக்குகிறது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

02, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டம், தமிழ்நாட்டு இளைஞர்கள் தாங்கள் போட்டியிடும் அனைத்துத் துறைகளிலும் முதன்மையானவர்களாகவும், சாதனையாளர்களாகவும் மிளிர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தந்தையை இழந்து, முன்களப் பணியாளரான தாயின் அரவணைப்பில் வளர்ந்து, நெஞ்சில் சுமந்த பெரும் கனவுகளுடன் கல்லூரியில் அடியெடுத்து வைத்த மாணவி தெபோராள், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பெற்ற உயரிய பயிற்சியின் காரணமாக இன்று வாழ்வில் பெரும் தன்னம்பிக்கையை பெற்றுள்ளார்.

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் தாம் பெற்ற பயனை மாணவி தெபோராள் விளக்கும் காணொலியை மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர்  திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்துள்ளார். மேலும், திராவிட மாடல் அரசு முன்னெடுக்கும் இத்தகைய திட்டங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து, உண்மையான சமூக விடுதலைக்கு வழிவகுக்கின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்களின் வாழ்த்தும் அன்பும் பெற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை 02, டிசம்பர் 2025 : பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், தனது பிறந்தநாளை முன்னிட்டு தன் அரசியல் ஆசானாகவும் தமிழ்நாட்டின் பேரரணாகவும் விளங்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, தந்தை பெரியாரின் கொள்கை முரசமாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்களுடன் பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

மேலும், தனக்கு எப்போதும் உந்துசக்தியாகவும், ஒட்டுமொத்த இளையோரின் ஊக்கசக்தியாகவும் விளங்கும் கழக இளைஞரணி செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடமும் அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்துகளை பெற்றார்.

அதேபோல், அன்போடு அரவணைத்து வழிநடத்தும் கழக முதன்மைச் செயலாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்களிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.

மேலும், தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய அன்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொண்ட அமைச்சர், கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழியில் தொடர்ந்து உழைத்து, அனைவரின் வாழ்த்துகளுக்கு உரியவனாக இருப்பேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இதயங்களில் நன்றி விதைக்கிறது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

03, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இதயத்தில் இருந்து பிறந்த மகத்தான திட்டம்தான் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மாணவி ஐஸ்வர்யாவின் தாய், நல்லதாய் காலை உணவுத் திட்டத்தின் மூலம் தங்கள் குடும்பம் பெறும் பயனை விளக்கும் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” காணொலியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், “பிள்ளைகளின் பசியையும் பெற்றோரின் மனதையும் நிறைக்கும் இந்தக் காலை உணவுத் திட்டத்தின் அருமை–பெருமைகளை நம் தாய்மார்கள் இதயத்திலிருந்து வாழ்த்துவதைக் கேட்கும்போதெல்லாம், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனதால் நன்றி கூறிக்கொள்வேன். உலகத்தின் மிக உயரம்; மனிதனின் சிறு இதயம்!” என அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிநாட்டுப் பணிப் பயிற்சி முகாம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

திருச்சி 03, டிசம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகர அயலக அணிகளின் சார்பாக பட்டதாரிகள் வெளிநாட்டுப் பணிகளுக்கு செல்ல தேவையான பயிற்சிகளை வழங்கும் முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது.

மாவட்ட அமைப்பாளர் திரு. அடைக்கலராஜா மற்றும் மாநகர் அமைப்பாளர் திரு. இப்ராம்ஷா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து, பயிற்சியில் பங்கேற்ற இளைஞர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

மேலும், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தலைமைக் செயற்குழு உறுப்பினர் திரு. சபியுல்லா அவர்களை அமைச்சர் கெளரவித்ததுடன், இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

“நான் முதல்வன்” திட்டம்: உலகளவில் தமிழ் மாணவர்களின் வெற்றியை பதிவு செய்யும் திராவிட மாடல் அரசு

04, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, சமூகநீதி மற்றும் சம வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறது. அந்தச் சாதனைகளின் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக “நான் முதல்வன்” திட்டம் திகழ்கிறது.

எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர் ஷேக் அப்துல்லா, “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாக இங்கிலாந்தின் புகழ்பெற்ற Durham University-யில் Data Science & Machine Learning தொழில்நுட்பப் படிப்பை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துள்ளார். இதன் மூலம் கிடைத்த உலகளாவிய வாய்ப்பினால் தற்போது அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்சியில் இந்தப் பெருமைக்குரிய பயனை விளக்கும் காணொலியை பகிர்ந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “ஒரு மாணவனின் வெற்றிக்குக் குடும்பச் சூழலும் பொருளாதார நிலையும் தடையல்ல என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது நம் திராவிட மாடல் அரசு” என தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வெற்றிக் கதை, கல்வியின் மூலம் சமத்துவம் மற்றும் முன்னேற்றம் என்ற திராவிட மாடல் அரசின் கனவை நனவாக்கும் இன்னொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

திருவெறும்பூர் தொகுதியில் பள்ளி மாணவர்களுக்காக 4 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை தொடக்கம் 

திருவெறும்பூர் 04, டிசம்பர் 2025 : திருவெறும்பூர் தொகுதியில் உள்ள பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்யும் வகையில், 4 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவையை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இணைந்து தொடங்கிவைத்தனர். இந்த பேருந்துகள் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் மாணவர்கள் மட்டும் பயணிக்கும் வகையில் இயக்கப்படவுள்ளன. இதனால் மாணவர்களின் தினசரி பள்ளிப் பயணம் பாதுகாப்பாகவும், எளிதாகவும் அமையக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த சேவையைத் தொடங்கி வைத்ததற்காக, திருவெறும்பூர் தொகுதி மக்களின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை வழங்கும் திராவிட மாடல் அரசின் இன்னொரு மக்கள் நல நடவடிக்கையாக இத்திட்டம் பாராட்டைப் பெற்றுள்ளது.

திருச்சியில் கட்டப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகக் கட்டுமானப் பணிகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு

திருச்சி 04, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்சியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கட்டப்பட்டு வரும் நூலகத்தின் கட்டுமானப் பணிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை, பணிகளின் தரம், காலக்கெடு மற்றும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். நூலகம் நிறைவடைந்ததும் கல்வி, வாசிப்பு மற்றும் அறிவு வளர்ச்சிக்கான முக்கிய மையமாக உருவெடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

திராவிட மாடல் அரசின் கல்விச் சாதனை: IIT கனவை நனவாக்கிய அரசுப் பள்ளி மாணவர் வசந்த் குமார்

05, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வித் திட்டங்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகளை இன்று அவர்களது கைகளில் கொண்டு வந்து சேர்த்துள்ளன.

அந்த வகையில், சேலம் அரசு மாதிரிப் பள்ளியில் கல்வி பயின்ற மாணவர் வசந்த் குமார், தமிழ்நாடு அரசின் Centre of Academic Excellence மையத்தில் பயிற்சி பெற்று, JEE – Advanced தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னை IIT-இல் B.Tech பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

அவரின் கல்விக் கனவு நனவாக திராவிட மாடல் அரசு வழங்கிய வழிகாட்டலும் ஆதரவும் முக்கிய பங்காற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. IIT, NIT, NIFT உள்ளிட்ட முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து நம் அரசுப் பள்ளி மாணவர்கள் கல்விச் சிகரங்களைத் தொடும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயலாற்றும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த வெற்றிக் கதையைப் பதிவு செய்யும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியின் காணொலியை அமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பள்ளிக் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் நம்பிக்கையளிக்கும் தாயுள்ளத்திட்டம்

06, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தாயுள்ளத்தோடு செயல்படுத்தி வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பள்ளிக் குழந்தைகளின் பசியைத் தீர்ப்பதுடன், அவர்களது பெற்றோரின் வாழ்வாதாரத்திற்கும் உறுதுணையாக இருந்து வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், தனது மகன் பயிலும் அதே பள்ளியில் காலை உணவு சமைத்து பரிமாறும் பணியை மேற்கொண்டு வரும் சௌமியா அவர்கள், தன் அனுபவங்களை கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். தன் குழந்தைக்கு உணவு அளிப்பது போலவே, தினமும் நூற்றுக்கணக்கான பள்ளிச் செல்வங்களுக்கு அன்புடனும் தாயுள்ளத்தோடும் உணவு சமைத்து பரிமாறுவதில் அவருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி, இந்தத் திட்டத்தின் மனிதநேயத் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த அனுபவத்தைப் பகிர்ந்து, “சௌமியா அவர்களின் முகத்தில் மலரும் மகிழ்ச்சியே முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் வெற்றியை உரக்கச் சொல்கிறது” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் ஒருங்கே உயர்த்தும் திராவிட மாடல் அரசின் மனிதநேயச் செயல்பாடாக இந்தத் திட்டம் பாராட்டைப் பெற்றுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள்: புரட்சியாளரின் போராட்ட வாழ்வையும் கருத்தியலையும் போற்றுவோம்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

06, டிசம்பர் 2025 : “அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம், இன்று அவரைத் துதிப்பதுபோல் நடிக்கிறதே — அதுதான் அவரது வெற்றி” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறியதை மேற்க்கோள்காட்டி , புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளில் அவரது போராட்ட வாழ்வையும் சமூக நீதி கருத்தியலையும் போற்றுவோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர்  திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

சமத்துவம், சமூக நீதி, மனித மரியாதை ஆகிய மதிப்புகளுக்காக அண்ணல் அம்பேத்கர் மேற்கொண்ட வாழ்நாள் போராட்டம் இன்றும் வழிகாட்டியாக திகழ்கிறது. அவரது கருத்தியல் வழியில் நடைபோட்டு, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்புவதே அவருக்கு உண்மையான மரியாதை என அமைச்சர் வலியுறுத்தினார். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளை முன்னிட்டு, அவரது சிந்தனைகள் இன்றைய சமூகத்திற்கும் எதிர்கால தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள்: திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரியாதை

திருச்சி 06, டிசம்பர் 2025 : புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப் படத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.

இந்த நிகழ்வின் போது, சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காக அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, அவரது கருத்தியல் வழியில் திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறை, திருவெறும்பூரில் பொதுக்கூட்டங்கள்

திருச்சி 06, டிசம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, மணப்பாறை தொகுதி பொன்னம்பட்டி பேரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேரூர் கழகச் செயலாளர் திரு. நாகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தலைமைக் கழக பேச்சாளர்கள் திரு. கந்திலி கரிகாலன் மற்றும் திரு. பாலக்கரை கோவிந்தன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பிலான தொடர் நிகழ்ச்சிகளின் மற்றொரு பகுதியாக, திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம் சின்னசூரியூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் திரு. கும்பக்குடி கங்காதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றியதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் திரு. நெல்லிக்குப்பம் புகழேந்தி மற்றும் திருமதி. ரம்யா பேகம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள். திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.

கனவுகளை நனவாக்கும் ‘நான் முதல்வன்’ – அகிலா பானுவின் வெற்றிக்குப் பின்னால் திராவிட மாடல் அரசு

07, டிசம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்திவரும் சிறப்புமிக்கத் திட்டமான ‘நான் முதல்வன்’, உயர் கல்வி பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

கல்வித் தடைகளை உடைத்தெறிந்து கல்லூரி கல்வியைத் தொடர்ந்த மாணவி அகிலா பானு, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பெற்ற கட்டணமில்லா பயிற்சியின் பயனாக இன்று தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக திகழ்கிறார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம்  “ கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில் பணி ஆணை பெற்ற அந்த நெகிழ்ச்சியான காணொலியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்துள்ளார். பெண் பிள்ளைகளின் கனவுகள் வெல்ல திராவிட மாடல் அரசு எப்போதும் துணை நிற்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் – மனநல காப்பக முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி 07, டிசம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகர நெசவாளர் அணிகள் சார்பில் மனநல காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, முதியோர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநகரக் கழகச் செயலாளர் திரு. மதிவாணன், மாநிலங்களவை உறுப்பினர் திருமிகு. கவிஞர் சல்மா ஆகியோர் உடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் திரு. சுந்தர்ராஜன் மற்றும் மாநகர அமைப்பாளர் திரு. விஜயகோபால் ஆகியோர் தலைமை வகித்தனர். சமூக நலனுக்கான சேவைப் பணிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருவதாக இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டியது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் – வடக்கு காட்டூரில் இலவச மருத்துவம், கண் சிகிச்சை முகாம் தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர் 07, டிசம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 38வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. எம். தாஜூதீன் அவர்களின் ஏற்பாட்டில், வடக்கு காட்டூர் அண்ணா நகர் பள்ளிவாசல் மதரஸாவில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது.

இம்முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து, பொதுமக்கள் நலனுக்கான இத்தகைய சேவை நடவடிக்கைகள் சமூகத்தில் பெரும் பயனளிப்பதாக தெரிவித்தார். பொதுமக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இம்முகாம், திராவிட மாடல் அரசின் மனிதநேய சேவை அணுகுமுறையை பிரதிபலிப்பதாக அமைந்தது.

திருச்சியில் ASMITA கிக் பாக்சிங் லீக் 2025–26 – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

திருச்சி 07, டிசம்பர் 2025 : திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ASMITA Kickboxing League 2025–26 போட்டியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், போட்டியில் பங்கேற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளை வாழ்த்தி, விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு திராவிட மாடல் அரசு வழங்கி வரும் ஆதரவை எடுத்துரைத்தார். மாநிலம் முழுவதும் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய லீக் போட்டிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், இளம் தலைமுறையினர் விளையாட்டின் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருச்சியில் ASMITA கிக் பாக்சிங் லீக் 2025–26 – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

திருச்சி 07, டிசம்பர் 2025 : திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ASMITA Kickboxing League 2025–26 போட்டியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், போட்டியில் பங்கேற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளை வாழ்த்தி, விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு திராவிட மாடல் அரசு வழங்கி வரும் ஆதரவை எடுத்துரைத்தார். மாநிலம் முழுவதும் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய லீக் போட்டிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், இளம் தலைமுறையினர் விளையாட்டின் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

#DCM48 தொடர் நிகழ்ச்சிகள் – துவாக்குடியில் எழுச்சிமிக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

திருச்சி 07, டிசம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் #DCM48 என்ற தலைப்பில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 18வது நிகழ்ச்சியாக, திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி நகரில் எழுச்சிமிக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரையாற்றினார். நகரச் செயலாளர் மற்றும் நகர்மன்றத் தலைவர் திரு. காயாம்பு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கழக செய்தித்தொடர்பு பிரிவு இணைச் செயலாளர் திரு. தமிழன் பிரசன்னா அவர்கள் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார். திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில் இக்கூட்டம் அமைந்தது.

அதனைத்தொடர்ந்து திருச்சி தெற்கு  மாவட்ட தி.மு.க சார்பில் #DCM48 தொடர் நிகழ்ச்சிகளில் 19வது நிகழ்ச்சியாக திருச்சி கிழக்கு தொகுதி, கலைஞர் நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும். பகுதிச் செயலாளர் திரு.மணிவேல் அவர்கள் தலைமை ஏற்ற நிலையில், தலைமைக் கழக பேச்சாளர் திருமிகு. ஆரணி மாலா அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

‘நான் முதல்வன்’ திட்டம் – கல்வியோடு தொழில்திறன்; சுயதொழில் தொடங்கிய மாணவி சிந்து

08, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு கல்வி கற்கும் காலத்திலேயே தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் நவீன திறன்களை வழங்கி, அவர்களை வேலைவாய்ப்புக்குத் தகுதியானவர்களாக மாற்றும் உயரிய நோக்கத்துடன் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்று, நாட்டின் தலைசிறந்த நிறுவனங்களில் பணியில் அமர்ந்துள்ளனர். அதேபோல் பலர் தன்னம்பிக்கையுடனும் தன்முனைப்புடனும் சுயதொழில் தொடங்கி வெற்றியாளர்களாக உருவெடுத்துவருகின்றனர்.

அந்தச் சாதனைகளுக்குச் சான்றாகத் திகழ்கிறார் திருச்சி அரசினர் பொறியியல் கல்லூரி மாணவி சிந்து. அவர், படிப்புடன் இணைந்து ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக 60-க்கும் மேற்பட்ட பயிற்சிச் சான்றிதழ்களைப் பெற்று, தற்போது சுயதொழில் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.

மாணவி சிந்துவின் சாதனைகளை முன்னிறுத்தி, கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக் காணொலியை பகிர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், வாழ்க்கையில் எந்தவிதமான சவால்களையும் எதிர்கொண்டு, கல்வியின் துணையால் எந்தச் சூழலையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களின் மனதில் விதைத்திருக்கிறது திராவிட மாடல் அரசு என பெருமிதம் தெரிவித்தார்.

DCM48 தொடர் நிகழ்ச்சி – நலிந்த நாடக, நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி 08, டிசம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெறும் DCM48 தொடர் நிகழ்ச்சிகளின் 20வது நிகழ்வாக, மாவட்ட மற்றும் திருச்சி கிழக்கு மாநகர கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் நலிந்த நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பணமுடிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொன்மலைப்பட்டியில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட அமைப்பாளர் திரு. எஸ்.வி. ராஜ்குமார் மற்றும் மாநகர அமைப்பாளர் திரு. டி. செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் இனிகோ இருதயராஜ் அவர்களுடன் இணைந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், தமிழின் பண்பாடு மற்றும் மரபுகளை உயிர்ப்புடன் காக்கும் நாட்டுப்புற கலைஞர்களின் சேவை போற்றத்தக்கது எனக் குறிப்பிட்டு, அவர்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தினார்.

அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காணொலிக்காட்சி வாயிலாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

08, டிசம்பர் 2025 : கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில், காணொலி காட்சி வாயிலாக அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று, தலைமைக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்றார். இக்கூட்டத்தில் கழகத்தின் அமைப்புசார் பணிகள், எதிர்கால செயல்திட்டங்கள் மற்றும் மக்களுக்கான நலத்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவது குறித்த முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

பாரத சாரண சாரணியர் இயக்க புதிய தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் ஆய்வு

மணப்பாறை 08, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா நிறைவு நாளில், தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்திற்கு புதிய தலைமை அலுவலகம் கட்டப்படும் என அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, சுதந்திர தினத்தன்று மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் புதிய தலைமை அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதன் முன்னேற்ற நிலையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, கட்டுமானப் பணிகள் தரமான முறையில், காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், மாணவர்களின் ஒழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் தலைமைத் திறனை வளர்க்கும் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த இந்த அலுவலகம் முக்கிய பங்கு வகிக்கும் என அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் திட்டம் – மணப்பாறை தொகுதியில் புதிய விளையாட்டரங்கத்திற்கு காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டல்

08, டிசம்பர் 2025  : தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, ஒவ்வொரு துறையிலும் திட்டமிட்ட வகையில் செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசின் சார்பில், விளையாட்டுத்துறைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் சீரிய முறையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் முக்கிய முயற்சியாக “முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பல்வேறு தொகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் விளையாட்டரங்கங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், மேலும் 23 தொகுதிகளில் அமைக்க இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இதில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை சட்டமன்றத் தொகுதியும் இடம்பெற்றுள்ளது.

மணப்பாறை தொகுதியில் இத்திட்டம் அமையச் செய்ததற்காக, மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். இந்த விளையாட்டரங்கம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

முப்படை வீரர்களின் நலனுக்கான ‘கொடி நாள்’ நிதி நன்கொடை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 

08, டிசம்பர் 2025 : நாட்டின் பாதுகாப்பிற்காக தன்னலமின்றி சேவை புரியும் முப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் கொடி நாள் நிதி நன்கொடையை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில், கொடி நாள் நிதியை மனமுவந்து வழங்குவது, நாட்டின் எல்லைகளை பாதுகாத்து வரும் படைவீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்கு நன்றி செலுத்தும் சிறந்த வழியாகும் என அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், முப்படை வீரர்களின் நலன் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு அனைவரும் தங்களால் இயன்ற அளவு பங்களிப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் திராவிட மாடல் அரசின் நான் முதல்வன் திட்டம் 

09, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தியாவின் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து, நாளைய சாதனையாளர்களாக உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்குடன் பல்வேறு கல்வித் திட்டங்களைச் சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்களின் பயனாக, ஏராளமான மாணவர்கள் தங்கள் உயர்கல்விக் கனவுகளை இன்று நனவாக்கி வருகின்றனர்.

அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர் சுதாகர் விளங்குகிறார். ஆசிரியர்களின் ஊக்கமூட்டும் பயிற்சி மற்றும் அரசின் வழிகாட்டல் திட்டங்களின் மூலம், அவர் JEE தேர்வில் வெற்றிபெற்று, கேரள மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) ஒன்றில் சேர்ந்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியின் மாணவர் சுதாகரின் அனுபவக்காணொலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைக்கும் அரசின் கல்விக் கொள்கைகளின் வெற்றிக்கும் பெருமிதம் பாராட்டியுள்ளார்.

”முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கம்”-மணப்பாறை உள்ளிட்ட 23 தொகுதிகளில் காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டு விழா! நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 

சென்னை 09, டிசம்பர் 2025 : சொன்னதைச் செய்யும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழியில் பயணித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால், மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கம் அமையவிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மணப்பாறையில் நடைபெற்ற இந்திய அளவிலான கபடி போட்டியின் பரிசளிப்பு விழாவில், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில், மணப்பாறை உள்ளிட்ட 23 சட்டமன்றத் தொகுதிகளில் “முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம்” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மாண்புமிகு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களால் காணொலிக் காட்சி வாயிலாக சிறப்பாக நடைபெற்றது.

இந்தத் திட்டம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தி, மாநிலம் மற்றும் தேசிய அளவில் சாதனையாளர்களை உருவாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறைக்கு புதிய உயரத்தை அளிக்கும் முயற்சியாகும்.

உலகை தமிழுக்கும்; தமிழை உலகுக்கும் – சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026 அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு!

09, டிசம்பர் 2025 : உலக இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டு வரவும், தமிழை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லவும் நோக்கமாகக் கொண்ட சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா–2026, வரும் ஜனவரி 16 முதல் 18 வரை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. நான்காவது ஆண்டாக நடைபெறும் இத்திருவிழா, இந்தாண்டு புதிய முயற்சியாக தனித்துவமான B2B தளத்துடன் நடத்தப்பட உள்ளது.

இந்த B2B தளத்தின் மூலம் பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் ஆகியோர் நேரடியாக சந்தித்து கலந்துரையாடி, காப்புரிமை பரிமாற்றங்கள் மற்றும் இலக்கிய ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது பொதுமக்கள், வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் பயனளிக்கும் சிறந்த தளமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு மதிப்புறு விருந்தினராக உலகப் புகழ்பெற்ற Frankfurt Book Fair ஒருங்கிணைப்புக் குழு அழைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு கலந்துரையாடல்கள், நூல் கண்காட்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் என அனைவரும் பெருந்திரளாக பங்கேற்று, தமிழையும் உலக இலக்கியத்தையும் இணைக்கும் இம்மாபெரும் விழாவை சிறப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் அன்போடு அழைப்பு விடுத்துள்ளார்.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி துவாக்குடி, நவல்பட்டில் கால்நடை மருத்துவமனை அமைக்க கோரிக்கை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 

சென்னை 09, டிசம்பர் 2025 : திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி மற்றும் நவல்பட்டு கிராமப் பகுதிகளில் வசிக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள், கால்நடை வளர்ப்பை தங்களின் முக்கிய பொருளாதார ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கால்நடைகளின் சுகாதாரம் மற்றும் பராமரிப்பை உறுதி செய்ய, அவ்விரு பகுதிகளிலும் தலா ஒரு கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து, துவாக்குடி மற்றும் நவல்பட்டு பகுதிகளில் கால்நடை மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், மக்கள் சார்பில் கோரிக்கை மனுவை வழங்கினார். இந்த முயற்சி, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் நலனை பாதுகாத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

பசியற்ற பள்ளிக் குழந்தைகள் – முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சொல்லும் சுபஜா அவர்களின்  நம்பிக்கையின் கதை

10, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், பள்ளிக் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து, எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் துணை நிற்பார்கள் என்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைச் சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறார். “இனி எந்தக் குழந்தையும் பசியுடன் இருக்கக் கூடாது. நம் ஆட்சியின் பலனாக எனக்கு ஆகச் சிறந்த நிம்மதியைத் தருவது, பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளின் முகத்தில் தெரியும் அந்தப் புன்னகைதான்!” என்ற முதலமைச்சரின் மனிதநேய வார்த்தைகள் இன்று நடைமுறையில் உணர்வூட்டும் நிஜமாக மாறியுள்ளது.

அந்த வார்த்தைகளுக்கு மேலும் வலு சேர்ப்பதுபோல், மாணவி சுஷ்மிதாவின் தாயார் சுபஜா அவர்கள் பகிர்ந்த அனுபவம் அமைந்துள்ளது. தன் மகள் பயிலும் பள்ளியிலேயே முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சமையல் பணிபுரிந்து வரும் அவர், இத்திட்டம் குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி மற்றும் குடும்ப வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழித்து, மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரித்து, கல்வித் தரத்தை உயர்த்தி, நாளைய தமிழ்நாட்டைக் கட்டியெழுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை திராவிட மாடல் அரசு தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. இத்தகவல்களை உள்ளடக்கிய “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியின் காணொலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“ஒரு டிரில்லியன் டாலர் கனவு” நூல் அறிமுக விழா – பொருளாதார வளர்ச்சியின் பாதையை விளக்கும் கருத்தரங்கம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு 

சென்னை 10, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்ட “ஒரு டிரில்லியன் டாலர் கனவு” நூல் அறிமுக விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

இந்த நூலில், “ஒரு டிரில்லியன் டாலர் கனவு என்றால் என்ன?”, “துறை வாரியாக தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள பொருளாதார மாற்றங்கள் என்ன?” என்பன போன்ற பல கேள்விகளுக்கு எளிமையான, தெளிவான விளக்கங்களை நூலாசிரியர் திரு. திருஞானம் அவர்கள் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். சமூக சமத்துவக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு கனவு காண்கிறது என்றும், அதற்கு மாறாக மனிதர்களை பிளவுபடுத்தும் சிந்தனைகள் இம்மண்ணில் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது உரையில் வலியுறுத்தினார்.

அறிவையும் அறிவியலையும் நம்பும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், இவ்வகை நூல் வெளியீட்டு விழாக்கள் சமூக உணர்வையும் அரசியல் தெளிவையும் உரக்க வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள், Kissflow நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு. சுரேஷ் சம்பந்தம் அவர்கள், வழக்கறிஞர் திருமதி மதிவதனி அவர்கள், பத்திரிகையாளர் திருமதி இந்திரா குமார் தேரடி அவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

DCM48 தொடர் நிகழ்ச்சியில் 48 சாதனையாளர்களுக்கு விருது – திருச்சியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

திருச்சி 10, டிசம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளரும், மாண்புமிகு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெறும் DCM48 தொடர் நிகழ்ச்சிகளின் 24வது நிகழ்வாக, மாவட்ட மற்றும் கிழக்கு மாநகர வர்த்தக அணி சார்பில் 48 வகையான சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட துணைச் செயலாளர் திரு. அ.த.த. செங்குட்டுவன் அவர்களுடன் இணைந்து, சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் திரு. என். செந்தமிழ்செல்வன் மற்றும் மாநகர அமைப்பாளர் திரு. கே.கே.பி. சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். சமூகத்தின் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விழா அமைந்தது.

விளையாட்டு சாதனையாளருக்கு அரசுப் பணி – திராவிட மாடல் அரசின் பெருமையை விளக்கும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக் காணொலி  

11, டிசம்பர் 20252 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு இன்று இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக தலைநிமிர்ந்து நிற்கிறது. விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் வீரர், வீராங்கனைகளின் பொருளாதாரத் தடைகளை உடைத்து, அரசு நிதி உதவிகள் மற்றும் ஊக்கத் திட்டங்கள் மூலம் எண்ணற்ற சாதனையாளர்களை உருவாக்கி வருகிறார் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

அந்த வகையில், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் போல்வால்ட் (Pole Vault) விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனை ரோசி மீனா பால்ராஜ் அவர்களுக்கு, 3% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பணி வழங்கப்பட்டு, அவரது திறமை, உழைப்பு மற்றும் சாதனைக்கு மாபெரும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனையை விளக்கும் வகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில் வீராங்கனை ரோசி மீனா பால்ராஜ் அவர்கள் தன் பயணத்தையும் அரசின் ஆதரவால் கிடைத்த பலன்களையும் எடுத்துரைக்கும் காணொலியை பகிர்ந்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, திராவிட மாடல் அரசின் விளையாட்டு வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை பெருமையுடன் பாராட்டியுள்ளார்.

நாகூர் ஹனீபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா – இறுதிகட்ட பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

நாகை 11, டிசம்பர் 2025 : நாகை மாவட்டம், நாகூர் சில்லடி கடற்கரையில் கட்டப்பட்டுவரும் “இசைமுரசு நாகூர் ஹனீபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா” விரைவில் திறப்பு விழா காணவுள்ள நிலையில், அங்கு நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த நினைவுப் பூங்கா, இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் இசைச் சாதனைகளையும் சமூகப் பங்களிப்புகளையும் நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள், இசை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும் இந்தப் பூங்கா, நாகூரின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வின் போது, பணிகளின் தரம், நிறைவேற்ற வேகம் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசித்து, திட்டமிட்ட காலக்கெடுவில் பணிகளை முடிக்க உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மீனவர் நலன், கரையோர பாதுகாப்பு, கல்வி மேம்பாடு – நாகை மாவட்டத்தில் தொடர் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 

நாகை 11, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், வெள்ளையாற்றின் முகத்துவாரத்தில் வடக்கு மற்றும் தெற்கு பக்கக் கரை பாதுகாப்புச் சுவர் கட்டுதல் மற்றும் தூர்வாரும் பணிகள் ரூ.21.83 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டப் பணிகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்த மீனவ மக்களின் நீண்டநாள் கோரிக்கையின் அடிப்படையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் மீன் ஏலக்கூடம் கட்டுவதற்கும், ரூ.17.78 கோடி மதிப்பீட்டில் நேர்கல் சுவர் அமைப்பதற்குமான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், அடிக்கல் நாட்டி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

அடுத்ததாக, நாகை மாவட்டம் விழுந்தமாவடி ஊராட்சி, தென்பாதி கிழக்கில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறைகளை அமைச்சர் திறந்து வைத்தார். “வயிற்றுக்குச் சோறிடவேண்டும் – இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்; பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்” என்று மக்கள்கவி பாரதியார் பாடிய கருத்தை நினைவுகூர்ந்து, அவரது பிறந்தநாளில் இவ்விழா மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளில் நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர் திரு. என். கெளதமன் அவர்கள், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு. பி. ஆகாஷ் அவர்கள், மற்றும் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.பி. நாகைமாலி அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நாகை மாவட்டத்தில் மீனவர் நலன், உட்கட்டமைப்பு வளர்ச்சி – தொடர் திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

நாகை 11, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாகை மாவட்டத்தில் காமேஸ்வரம், விழுந்தமாவடி, வானவன்மகாதேவி ஆகிய கடற்கரையோர கிராமங்களில் மீன்பிடி தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், மீன் ஏற்றும் தளத்துடன் கூடிய மீன் ஏலக்கூடங்கள் தலா ரூ.1.44 கோடி மதிப்பீட்டில், திராவிட மாடல் அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன. இதற்கான பணிகளை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, வேளாங்கண்ணியில் மகளிர் நடத்தும் வகையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு அங்காடிகள், விழுந்தமாவடி ஊராட்சியில் ரூ.42.49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன்பிடி வலை பின்னும் கட்டிடம், வேதாரண்யம் வட்டம் ஆதனூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், காமேஸ்வரம் கிராமத்தில் தூய செபஸ்தியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, வேதாரண்யம் அருகே பாயும் மாணங்கொண்டான் ஆற்றில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை நேரில் ஆய்வு செய்து, விரைவில் முழுமையாக நிறைவேற்ற உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார் அமைச்சர்.

இறுதியாக, நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம், வானவன்மகாதேவி ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 125 பேர் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்ட நிகழ்வில் முன்னிலை வகித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள். இந்த நிகழ்வுகளில் நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர் திரு. என். கெளதமன் அவர்கள், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு. பி. ஆகாஷ் அவர்கள், மற்றும் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.பி. நாகைமாலி அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

என் வாக்குச்சாவடி – வெற்றிவாக்குச்சாவடி: நாகை மாவட்டக் கழக செயற்குழுக் கூட்டம் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் தளபதி அறிவாலயத்தில் நடைபெற்றது

நாகை 11, டிசம்பர் 2025 : கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, நாகை மாவட்டத் திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுக் கூட்டம் தளபதி அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அறிவாலயத்தின் வழிகாட்டுதலின்படி “என் வாக்குச்சாவடி – வெற்றிவாக்குச்சாவடி” என்ற முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் விரிவான ஆலோசனைகளை வழங்கினார். கட்சியின் அடிப்படை அமைப்புகளை வலுப்படுத்தி, களப்பணிகளை சீராக முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர் திரு. என். கெளதமன் அவர்கள் உடன் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துகளை பகிர்ந்தார்.

“நான் முதல்வன்” திட்டம் – மாணவர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் திராவிட மாடல் அரசு

12, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான “நான் முதல்வன்” திட்டம், ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்கி, தொழில்துறைக்குத் தேவையான திறன்மிகு சமுதாயத்தை உருவாக்கும் லட்சிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 42 லட்சம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் பயனாளியாக, “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் Medical Coding பயிற்சி பெற்ற மாணவன் ஸ்ரீநாத் அவர்களுக்கு உருவான நம்பிக்கையும் தன்னம்பிக்கையும், ஒட்டுமொத்த மாணவச் சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்க முடிகிறது. இவ்வனுபவத்தை வெளிப்படுத்தும் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியின் காணொலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “நான் முதல்வன்” திட்டம் மாணவர்களின் எதிர்காலத்தை எப்படி மாற்றி வருகிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

என் வாக்குச்சாவடி – வெற்றிவாக்குச்சாவடி: திருவெறும்பூர் தொகுதியில் BLC ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு

திருவெறும்பூர் 12, டிசம்பர் 2025 : கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் “என் வாக்குச்சாவடி – வெற்றிவாக்குச்சாவடி” பணிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, வார்டு 41, பாகம் 58ல் BLC-க்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், SIR பணிகளை கவனமாக கண்காணிக்க வேண்டியதுடன், திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை வீடுதோறும் கொண்டு சேர்க்க வேண்டும் என ஆய்வு மேற்கொண்டு கேட்டுக் கொண்டார்.

மேலும், கட்சியின் அடிப்படை அமைப்புகளை வலுப்படுத்தி, களப்பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் வாக்குச்சாவடி மட்டத்தில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்துப் பதிவு

12, டிசம்பர் 2025 : Gen Z தலைமுறையினரையும் தனது நடிப்பால் கவர்ந்து, பொன்விழா காணும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். திரை உலகில் பல தலைமுறைகளைத் தாண்டி ரசிகர்களை ஈர்த்து வரும் சூப்பர்ஸ்டாரின் கலைப் பயணம்,  அவரது பொன்விழா சாதனையை பாராட்டி, நீண்ட ஆயுள் மற்றும் தொடர்ந்து சாதனைகள் படைக்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

மகளிர் மேம்பாட்டின் திராவிட மாடல் அரசு – “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்  பங்கேற்பு

திருச்சி 12, டிசம்பர் 2025 : மகளிரின் சமூக–பொருளாதார விடுதலையும், ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் உறுதிசெய்யும் நோக்குடன் பல முன்னோடித் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம், விடியல் பயணம், மக்களைத் தேடி மருத்துவம், மகளிர் சுயஉதவி குழுக்கள், வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர், விளையாட்டு, தோழி விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றத் திட்டங்கள் பெண்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களின் சாட்சியாக, “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற பிரமாண்ட நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க விழாவின் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு திட்டப்பற்று அட்டைகளை வழங்கி, திராவிட மாடல் அரசின் மகளிர் நல உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

என் வாக்குச்சாவடி – வெற்றிவாக்குச்சாவடி: திருச்சி கிழக்கு தொகுதியில் BLC ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அச்வர்கள் பங்கேற்ப்பு

 திருச்சி 12, டிசம்பர் 2025 : திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், “என் வாக்குச்சாவடி – வெற்றிவாக்குச்சாவடி” முன்னெடுப்பின் கீழ், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதி, வட்டம் 17, பாகம் 57ல் BLC-க்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நடத்தி, களப்பணிகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். வாக்குச்சாவடி மட்டத்தில் அமைப்பு பணிகளை சீராக முன்னெடுத்து, கட்சியின் முன்னெடுப்புகளையும் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் வெற்றிவாக்குச்சாவடியாக மாற்றும் வகையில் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என்பதை அமைச்சர் வலியுறுத்தினார்.

‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் – மாணவர்களின் கனவுகளுக்கு துணை நிற்கும் திராவிட மாடல் அரசு

13, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், குடும்பப் பொருளாதாரச் சூழலால் எந்தவொரு மாணவரின் கல்வியும் தடைபட்டுவிடக் கூடாது என்ற தாயுள்ளத்தோடு, கல்லூரி மாணவர்களுக்கான ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

இந்தத் திட்டத்தின் பயனாளியாக, தாயை இழந்து தாத்தா–பாட்டியின் அரவணைப்பில் கல்லூரி கல்வியைத் தொடரும் மாணவன் நித்தீஷ், மாதம் ரூ.1000 உதவித்தொகையின் மூலம் தட்டச்சுப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். மேலும், அந்த உதவித்தொகை தன்னுடைய தம்பியின் கல்விச் செலவுக்கும் உதவியாக இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த அனுபவம், அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இத்தகவல்களை உள்ளடக்கிய “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சிக் காணொலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, மக்களுக்கான ஒவ்வொரு திட்டத்தையும் கவனமாக வடிவமைத்து செயல்படுத்தி, அதன் பயனை நேரில் கண்டு அகம் மகிழும் தாயுள்ளம் கொண்ட முதல்வரை தமிழ்நாட்டு மக்கள் பெற்றுள்ளனர் என பாராட்டினார்.

அன்பில் கிராமத்தில் மாட்டுவண்டிப் பந்தயம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்  தொடங்கி வைத்தார்

அன்பில் 13, டிசம்பர் 2025 : அன்பில் கிராமத்தில் மருத்துவர் ஏ.ஆர். சாந்தமோகன் அவர்களின் நினைவு நாளையொட்டி நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் திரு. செந்தில் தொண்டமான் அவர்கள் உடன் கலந்து கொண்டு, பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்வை சிறப்பித்தார். கிராமிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாக்கும் முயற்சியாக இந்த மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு, உற்சாகத்துடன் போட்டிகளை கண்டுகளித்தனர்.

கிறிஸ்தவ பறையர்களின் உரிமை மாநாடு – திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்பங்கேற்பு

திருச்சி 13, டிசம்பர் 2025 : திருச்சியில் வெள்ளாமை இயக்கம் சார்பில் நடைபெற்ற “கிறிஸ்தவ பறையர்களின் உரிமை மாநாடு” நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய அமைச்சர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை அமல்படுத்துவதிலும் திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது என்பதை விளக்கினார். சமூக நீதி, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் எனவும் அவர் வலியுறுத்தினார். மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை முன்வைத்து, சமூக நீதி பாதையில் அரசின் தொடர்ந்த ஆதரவை நாடினர்.

திருச்சி கிழக்கு–திருவெறும்பூர் தொகுதிகளில் BLC ஆலோசனைக் கூட்டங்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் ஆய்வு

திருச்சி 13, டிசம்பர் 2025 : திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதி, வட்டம் 12, பாகம் 13-ல் BLC-க்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நடத்தினார். இக்கூட்டத்தில், வாக்குச்சாவடி மட்டத்தில் கட்சிப் பணிகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, “என் வாக்குச்சாவடி – வெற்றிவாக்குச்சாவடி” முன்னெடுப்பின் கீழ், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் BLC-க்களுடனான ஆலோசனைக் கூட்டம், திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம், பனையக்குறிச்சி ஊராட்சி, பாகம் 2-ல் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும், திருவெறும்பூர் தொகுதி கூத்தைப்பார் பேரூர் – பெல் டவுன்ஷிப், பாகம் 42-லும், திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம், நவல்பட்டு ஊராட்சி, பாகம் 213-லும் BLC-க்களுடனான ஆலோசனைக் கூட்டங்களை அமைச்சர் நடத்தினார்.

இந்த கூட்டங்களில், SIR பணிகளை கவனமாக மேற்கொள்வதோடு, திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை வீடுதோறும் கொண்டு சேர்க்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தி, வாக்குச்சாவடி மட்டத்தில் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் – மணப்பாறையில் மருத்துவ முகாம், பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

மணப்பாறை 13, டிசம்பர் 2025 : நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், மணப்பாறை நகரத்தில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில், பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும் அமைச்சர் வழங்கினார். இந்தத் திட்டங்கள், மக்களின் உடல்நலப் பாதுகாப்பை உறுதி செய்யும் திராவிட மாடல் அரசின் முக்கிய முன்னெடுப்புகளாக உள்ளன. முகாமில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று, பரிசோதனை, ஆலோசனை உள்ளிட்ட மருத்துவ சேவைகளைப் பெற்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஐஐடி கனவு – புதிய வரலாறு படைக்கும் திராவிட மாடல் அரசு 

14, டிசம்பர் 2025 : வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற பிம்பத்தை மாற்றி, எளிய குடும்பங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களும் ஐஐடி உள்ளிட்ட இந்தியாவின் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயணத்தைத் தொடர முடியும் என்ற புதிய வரலாற்றை திராவிட மாடல் அரசு உருவாக்கி வருகிறது.

அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக மாணவர் மணி சர்மா திகழ்கிறார். அவரைப் போல ஆயிரத்திற்கும் அதிகமான அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து தங்கள் கனவுகளை நனவாக்கி வருகின்றனர். இந்த சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சிக் காணொலியை தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாணவர்களின் கல்விப் பயணம் சிறக்கட்டும்; வெற்றிகள் குவியட்டும் என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா-  உசிலம்பட்டியில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க பொதுக்கூட்டம்

திருச்சி 14, டிசம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளரும், மாண்புமிகு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை ஒன்றிய கழகத்தின் சார்பில் உசிலம்பட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஒன்றிய கழகச் செயலாளர் திரு. ராமசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில், கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் திரு. ஆர். எஸ். பாரதி அவர்களுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உரையில், திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இதற்கு முன்னதாக, உசிலம்பட்டி கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள கம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகக் கொடியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஏற்றினார்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் – பாலக்கரையில் DCM48 தொடர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் அனபில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 

திருச்சி 14, டிசம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளரும், மாண்புமிகு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டத்தின் DCM48 தொடர் நிகழ்ச்சிகளில் ஒன்றாக, கிழக்கு மாநகரம் பாலக்கரை பகுதிக் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பகுதிக் கழகச் செயலாளர் திரு. ராஜ்முகமது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உரையில் திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள், இளைஞர்களுக்கான முன்னெடுப்புகள் குறித்து விளக்கினார். இந்நிகழ்வில், கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் சகோதரர் திரு. சூர்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களை அமைச்சர் வாழ்த்தினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

திராவிட மாடல் ஆட்சியின் மனிதநேயத் திட்டம் – வாழ்க்கையில் ஒளியேற்றும் காலை உணவுத் திட்டம்

15, டிசம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தாயுள்ளத்தோடு செயல்படுத்திவரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பள்ளிக் குழந்தைகளின் பசிப்பிணியைப் போக்குவதோடு, தாய்மார்களின் பொருளாதாரச் சுமைகளை குறைத்து அவர்களுக்கு வருமான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது.

கணவரை இழந்து வாழ்வில் சிரமங்களை எதிர்கொண்ட சகோதரி தெய்வானை அவர்களுக்கு, தன்னுடைய மகன் பயிலும் பள்ளியிலேயே காலை உணவுத் திட்டத்தின் கீழ் கிடைத்த சமையல் பொறுப்பாளர் பணி, வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்துள்ளது.

திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் ஒவ்வொரு மக்கள் நலத் திட்டமும் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் எத்தகைய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் உருவாக்கி வருகிறது என்பதற்கு, இந்தச் சகோதரியின் அனுபவமே உயிர்ப்பான சாட்சியாக விளங்குகிறது எனக் குறிப்பிட்டு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியின் காணொலியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர் டி.எஸ். அருணாசலம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி 15, டிசம்பர் 2025 : விடுதலைப் போராட்ட வீரர் தியாகி டி.எஸ். அருணாசலம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வு, விடுதலைப் போராட்ட வீரர்களின் நற்பெயர் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை அன்றாட வாழ்க்கையில் மறக்காமல் நினைவூட்டும் வகையில் அமைந்தது.

திருச்சி கிழக்கில் கிறிஸ்துமஸ் பெருவிழா – சிறுபான்மையினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

திருச்சி 15, டிசம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு மாநகர சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட அமைப்பாளர் திரு. அருள்சுந்தர்ராஜன் மற்றும் மாநகர அமைப்பாளர் திரு. இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் சமது அவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சிறுபான்மையின மக்களின் நண்பராகத் திகழும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சாதனைகள், மக்கள் நல முன்னெடுப்புகள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் குறித்து அமைச்சர் விளக்கினார்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் – கூத்தைப்பார் பேரூரில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 

திருச்சி 15, டிசம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டம் கூத்தைப்பார் பேரூர் கழகத்தின் சார்பாக பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பேரூர் கழகச் செயலாளர் திரு. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு, மாற்றுக் கட்சிகளில் இருந்து தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டவர்களை வரவேற்றார். மாவட்டக் கழகத்தின் அழைப்பை ஏற்று இக்கூட்டத்தில் பங்கேற்ற தலைமைக் கழகப் பேச்சாளர்கள் திரு. பசும்பொன் ரவிச்சந்திரன் மற்றும் திரு. ஏர்போர்ட் பொன்னுசாமி ஆகியோருக்கும் நன்றியினை தெரிவித்தார் அமைச்சர்.

“நான் முதல்வன்” திட்டம் – தொழில் திறன்வாய்ந்த இளைஞர் சக்தியை உருவாக்கும் திராவிடமாடல் அரசு

16, டிசம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திராவிடமாடல் ஆட்சியில், தொழில்துறை வளர்ச்சிக்கு இணங்கும் வகையில் திறன்வாய்ந்த இளைஞர் சக்தியை உருவாக்கும் முயற்சியாக “நான் முதல்வன்” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், கல்லூரியில் படிக்கும்போதே தொழில் நிறுவனங்களில் வழங்கப்படும் Internship பயிற்சி, படித்து முடித்ததும் திறமைக்கு ஏற்ற வேலைவாய்ப்பு ஆகியவைகள் தமிழ்நாட்டுப் இளைஞர்களின் முன்னேற்ற பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்த சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக் காணொலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து பெருமிதம் தெரிவித்தார்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்தில் மாபெரும் இரத்ததான முகாம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ப்பு

திருச்சி 16, டிசம்பர் 2025 ; கழக இளைஞரணிச் செயலாளர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் வீரபாண்டியன் தொடங்கி வைத்து சிறப்பித்தார். குருதி கொடை வழங்குவதற்காக கலந்து கொண்ட 125 இளைஞர்களுக்கும், சமூக சேவையில் ஈடுபட்டவர்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார்.

திருச்சியில் விவசாயி பெருங்குடி மக்களை சந்தித்து கோரிக்கைகளை முதல்வரிடன் கொண்டு செல்வதாக உறுதி – அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி 16, டிசம்பர் 2025: பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி திருச்சியில் போராடிவரும் விவசாயப் பெருங்குடி மக்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக கேட்டுக் கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு இக்கோரிக்கைகள் எடுத்துச் செல்லப்படுவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின்  பிறந்தநாள்: காட்டூரில் பொதுக்கூட்டம் – அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்புரை, நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்சி 16, டிசம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு மாநகரம் காட்டூர் பகுதி கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காட்டூர் பகுதி கழகச் செயலாளர் திரு. நீலமேகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் தலைமைக் கழகப் பேச்சாளர் திரு. சைதை சாதிக் அவர்களும், இளம் பேச்சாளர் திரு. பாலகணபதி அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றி நிகழ்வை சிறப்பித்தனர்.

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு – உலக அரங்கில் ஒளிரும் விளையாட்டு சாதனைகள் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக் காணொலியை பகிர்ந்த அமைச்சர் அன்பில் அவர்கள்

17, டிசம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் உலக அரங்கில் உயரிய சாதனைகளைப் பதிவு செய்து, மாநிலத்திற்கு பேரும் புகழும் சேர்த்துள்ளனர்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் மூலம், விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு, அவர்கள் சர்வதேச விளையாட்டு மைதானங்களில் வெற்றியாளர்களாக வலம் வருவதைக் கண்டு மகிழ்கிறார் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

இந்தச் சாதனைகள், தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதுவதோடு, வருங்கால இளைஞர்களுக்கு பெரும் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பதாக அமைந்துள்ளன. இதனை எடுத்துரைக்கும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக் காணொலியை தனது எக்ஸ் பக்கதில் பகிர்ந்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் .

நான் முதல்வன் திட்டம்: KYOTO பல்கலைக்கழக இன்டர்ன்ஷிப் மூலம் மாணவி சுவேதாவின் விஞ்ஞானக் கனவு நனவாக்கும் நம் திராவிட மாடல் அரசு 

18, டிசம்பர் 2025 ; மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் “அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தரக் கல்வி” என்ற உன்னத நோக்கத்தில் செயல்படுத்தி வரும் கல்வி வளர்ச்சித் திட்டங்கள், பல தலைமுறைகளுக்குப் பயனளிக்கும் வகையில் அமையுள்ளன.

அந்த வரிசையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற KYOTO பல்கலைக்கழகத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு தேர்வாகி, “ஒரு விஞ்ஞானி ஆக வேண்டும்” என்ற உயரிய இலட்சியத்துடன் பயணிக்கும் மாணவி சுவேதாவின் கனவு நனவாகும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.

இத்தகைய கனவுகளுக்கு உறுதுணையாக நம் திராவிட மாடல் அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டு, இதனை விளக்கும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக் காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கொளத்தூரில் கல்வி–சமூக நல வளர்ச்சிப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்; தொடர் விழாக்களில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்பு

சென்னை 18, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி புதிய கட்டடம் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார். பள்ளிக் கல்வித் துறையின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை வழங்கி வரும் தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் அவர்களுக்கு, அதே விழாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுடன் இணைந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து, பெரியார் நகர் அமுதம் அங்காடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, ரூ.25.72 கோடி செலவில் கட்டப்பட்ட பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை திறப்பு விழா, மேலும் 15 இணைகளுக்கு திருமணம் நடத்தப்பட்ட நிகழ்வு ஆகியவற்றிலும் முதலமைச்சர் பங்கேற்று சிறப்பித்தார்.

இந்த நிகழ்வுகளில் மாண்புமிகு கழக முதன்மைச் செயலர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்கள் உடன் கலந்து கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

மதுரையில் கிறிஸ்துமஸ் விழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்

மதுரை 18, டிசம்பர் 2025 : Synod of Pentecostal Churches சார்பாக மதுரையில் ஒருங்கிணைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்பித்தார். சகோதரத்துவம், அன்பு, சமத்துவம் ஆகிய கிறிஸ்துமஸ் செய்திகளை நினைவூட்டும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு. பி. மூர்த்தி அவர்கள் மற்றும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். சமூக நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்தக் கிறிஸ்துமஸ் விழா.

புதுமைப்பெண் திட்டம் அறிவுப் புரட்சிக்கு அடையாளம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

19, டிசம்பர் 2025 : பொருளாதாரச் சூழ்நிலையால் எந்தவொரு மாணவரின் கல்விக் கனவும் தடைபட்டு விடக் கூடாது என்ற உன்னத நோக்கத்துடன் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் ‘புதுமைப்பெண்’ உள்ளிட்ட திட்டங்கள், தமிழ்நாட்டில் அறிவுப் புரட்சிக்கு வித்திடுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதற்கான சாட்சியாக மாணவி காஞ்சனா திகழ்கிறார் என்றும், அவரது கல்வி முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக் காணொலியை தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அரசின் கல்வி நலத்திட்டங்கள் மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் நேர்மறை மாற்றங்களை இந்தக் காணொலி வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் அன்பழகன்  அவர்கள் பிறந்தநாளில் அவர் கற்ப்பித்த  திராவிடக் கருத்தியலின் வழி நடப்போம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து

திருச்சி 19, டிசம்பர் 2025 : இனமானப் பேராசிரியர் திரு. க. அன்பழகன் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திராவிட வாழ்வியலையும் கருத்தியல் பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி திமுக கட்சி அலுவலகத்தில் பேராசிரியர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தடம் மாறாமல் திராவிடக் கருத்தியலை ஏந்தி வந்த கழகத்தின் பெருமையாக பேராசிரியர் அன்பழகன் திகழ்ந்தார் என்றும், அன்பான ஆசிரியர் போல கழகத்தின் விதிமுறைகளையும் ஒழுக்கத்தையும் கற்பித்த அவர் காட்டிய வழியில் அனைவரும் நடைபோட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் அவர்களின் திராவிட வாழ்வியலை நினைவுகூர்ந்து போற்றுவோம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் எந்திரவியல் ஆய்வகங்கள்: திருச்சியில் தொடங்கி வைத்த அமைச்சர்கள்

திருச்சி 19, டிசம்பர் 2025 : அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் தலா ஒரு எந்திரவியல் ஆய்வகம் என்ற அடிப்படையில் மொத்தம் 15 எந்திரவியல் (Robotics) ஆய்வகங்கள் ரூ.6.09 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளன.

இந்த ஆய்வகங்களின் செயல்பாட்டைத் தொடங்கிவைக்கும் அடையாளமாக, மாண்புமிகு அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களுடன் இணைந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எந்திரவியல் ஆய்வகத்தின் செயல்பாட்டைத் தொடங்கிவைத்து சிறப்பித்தனர்.

“அறிவியல் அனைவருக்குமானது” என்ற நிலையை உருவாக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த Robotics Lab-களை மாணவச் செல்வங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்களின் அறிவியல் சிந்தனைகளையும் புதுமைத் திறன்களையும் மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

திருவாரூரில் கலைஞர் பூங்கா திறப்பு – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கம்

திருவாரூர் 19, டிசம்பர் 2025 : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருவாரூர் மண்ணில், கலைஞர் கோட்டம் அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பூங்காவை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

குழந்தைகள் உற்சாகமாகக் கொண்டாடிய இவ்விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்கள், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. பூண்டி கலைவாணன் அவர்கள், கழக இளைஞரணி துணைச் செயலாளர் திரு. இளையராஜா அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருவாரூரின் வளர்ச்சிக்கும், குழந்தைகளின் பொழுதுபோக்கு மற்றும் மனநல மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்கா, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

திருவாரூரில் அய்யா அர. திருவிடம் அவர்களுக்கு புகழ் வணக்கம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பங்கேற்பு

திருவாரூர் 19, டிசம்பர் 2025 : திராவிட இயக்க எழுத்தாளரும், கழகத்தின் கலை-இலக்கிய-பகுத்தறிவு பேரவையின் செயலாளராகச் செயலாற்றியவருமான மறைந்த அய்யா திருவாரூர் அர. திருவிடம் அவர்களின் புகழ் வணக்கக் கூட்டம், திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், அய்யா திருவிடம் அவர்களின் திருவுருவப்படத்தை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், திராவிட இயக்கத்துக்கும் கழகத்துக்கும் அய்யா திருவிடம் அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க தொண்டுகளையும், கலை-இலக்கியச் சேவைகளையும் நினைவுகூர்ந்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்கள், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. பூண்டி கலைவாணன் அவர்கள், கழக இளைஞரணி துணைச் செயலாளர் திரு. இளையராஜா அவர்கள், கழக செயலாளர் திரு. ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். திராவிடக் கருத்தியலைப் பரப்பி, சமூகநீதிக்காக எழுத்தும் செயலுமாக உழைத்த அய்யா திருவிடம் அவர்களின் நினைவு அனைவராலும் ஆழ்ந்த மரியாதையுடன் போற்றப்பட்டது.

நாகை மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம் மறைவு – குடும்பத்தினருக்கு துணை முதல்வரும் அமைச்சரும் ஆறுதல்

நாகை 19, டிசம்பர் 2025 : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பொறுப்பு அமைச்சராகப் பணியாற்றும் நாகை மாவட்ட கழகத்தின் இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள் அண்மையில் மறைந்தார்.

இந்த நிலையில், கழக இளைஞரணி செயலாளரும் மாண்புமிகு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடன், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பன்னீர்செல்வம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மறைந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, இந்த துயர நேரத்தில் கழகம் அவர்களுடன் இருப்பதை உறுதிப்படுத்தினர். கழகத்தின் வளர்ச்சிக்கும் இளைஞரணியின் செயல்பாடுகளுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பன்னீர்செல்வம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என தலைவர்கள் நினைவுகூர்ந்தனர்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு – திராவிட மாடல் அரசின் சாதனையை எடுத்துரைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

20, டிசம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பள்ளிக் கல்வித் துறையில் விதைத்துள்ள திட்டங்கள், இன்று மாபெரும் கல்விச் சாதனைகளாக கிளைத்து நிற்கின்றன என்பதை எடுத்துரைக்கும் வகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சிக் காணொலியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த காணொலியில், விழுப்புரம் அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று, அங்கு வழங்கப்பட்ட உயர்தரப் பயிற்சியின் மூலம் தனது குடும்பத்தின் ‘முதல் தலைமுறை மருத்துவர்’ என்ற உன்னதக் கனவை நனவாக்கி வரும் மாணவி பிருந்தா அவர்களின் சாதனை வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நம் பிள்ளைகளின் கல்விப் பயணத்தில் வறுமையோ, மறுக்கப்படும் வாய்ப்புகளோ எது தடையாக வந்தாலும், அவற்றை தகர்த்தெறிந்து வெற்றியாளர்களாக மாற்றிக் காட்டுவதே திராவிட மாடல் அரசின் தலையாய கடமை என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சாதனை, தமிழக அரசின் கல்விக் கொள்கைகள் மாணவர்களின் வாழ்க்கையில் உருவாக்கி வரும் மாற்றத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் பாய்மர படகு போட்டி பயிற்சி முகாம் அலுவலகம் திறப்பு – துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  தொடக்கம்

நாகப்பட்டினம் 20, டிசம்பர் 2025 : மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நாகப்பட்டினம் துறைமுகத்தில் அமைந்துள்ள பாய்மர படகு போட்டி பயிற்சி முகாம் அலுவலகத்தினை திறந்து வைத்து நிகழ்வை சிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, பாய்மர படகு போட்டி பயிற்சியும் பயிற்சி முகாமும் தொடங்கிவைக்கப்பட்ட நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு பங்கேற்றார். இந்த பயிற்சி முகாம், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி, கடல்சார் விளையாட்டுகளில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு புதிய ஊக்கமாக அமையும் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

நாகூரில் ஹனிபா நூற்றாண்டு நினைவு சிறுவர் பூங்கா திறப்பு – துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்க்ள் தொடங்கி வைத்தார்

நாகூர் 20, டிசம்பர் 2025 : இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட நாகூர் சில்லடி கடற்கரையில் அமைந்துள்ள நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவு சிறுவர் பூங்காவை, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

குழந்தைகளின் மகிழ்ச்சி, பொழுதுபோக்கு மற்றும் உடல்நல வளர்ச்சியை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த சிறுவர் பூங்கா, இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் நினைவை எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா நூற்றாண்டு விழா – மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்பு

நாகூர் 20, டிசம்பர் 2025 : இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பேருரையாற்றி, விழா மலரையும் வெளியிட்டார்.

விழாவில் உரையாற்றிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், நீதிக்கட்சி மேடைகள் தொடங்கி இன்றைய கழக மேடைகள் வரை மட்டுமல்லாமல், மக்கள் மேடைகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் குரல், 2026ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 வெற்றியின்போதும் கம்பீரமாக ஒலிக்கும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் செய்தித்துறை அமைச்சர் திரு. எம்.பி. சுவாமிநாதன் அவர்கள், நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பாளர் திரு. என். கெளதமன் அவர்கள், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆளூர் ஷாநவாஸ் அவர்கள், நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பி. ஆகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். திராவிட இயக்கப் பண்பாட்டையும் மக்கள் குரலையும் பாடல்களால் மக்களிடம் கொண்டு சென்ற இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் நினைவு, இந்த நூற்றாண்டு விழாவின் மூலம் ஆழ்ந்த மரியாதையுடன் போற்றப்பட்டது.

நாகப்பட்டினம் இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் – துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  பங்கேற்பு

நாகப்பட்டினம் 20, டிசம்பர் 2025 : கழக இளைஞரணி செயலாளரும் மாண்புமிகு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு மற்றும் பாகங்களில் நியமிக்கப்பட்டுள்ள கழக இளைஞரணியின் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டார். துணை முதல்வர் அவர்கள் முன்னிலையில் 500 பேர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

தளபதி அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், “நாடும் நமதே, நாகையும் நமதே!” என முழக்கமிட்ட இளைஞர்களுக்கு துணை முதல்வர் அவர்கள் வாழ்த்துகளையும், எதிர்கால செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பாளர் திரு. என். கெளதமன் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இளைஞர்களின் பங்களிப்பே கழகத்தின் வலிமை என வலியுறுத்திய இந்தக் கூட்டம், வருங்கால அரசியல் பணிகளுக்கு புதிய உற்சாகத்தை அளித்தது.

காலை உணவுத் திட்டம்: குழந்தைகளின் ஆரோக்கிய எதிர்காலத்திற்கு திராவிட மாடல் அரசின் உறுதியான முன்னெடுப்பு

21, டிசம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயிலும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் உடல்-மன உறுதியையும் வழங்கி, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் பயன்களை உணர்ந்து, பெற்றோர் நெஞ்சம் நெகிழ்ந்து பாராட்டும் அன்பும், மகிழ்ச்சி ததும்பும் குழந்தை ஸ்ரீஹரிணியின் சிரிப்பும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக மிளிர்கின்றன.

அந்தக் குழந்தைகளின் குரல்களில் ஒலிக்கும் எதிர்கால நம்பிக்கைக்காகவே, ஓயாது உழைக்கிறது திராவிட மாடல் அரசு என குறிப்பிட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியின் காணொலியை தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உடல்நல விழிப்புணர்வுக்காக ‘நம்ம ரன்’ மாரத்தான்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்  தொடங்கி வைத்தார் 

சென்னை 21, டிசம்பர் 2025 : உடல்நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், News18 TamilNadu சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘நம்ம ரன்’ மாரத்தான் போட்டி, சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், மழலையர் முதல் பல்வேறு வயதினரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். குறிப்பாக உற்சாகமாக ஓடிப் பங்கேற்ற மழலையர்களுக்கு அமைச்சர் அவர்கள் பதக்கங்களை வழங்கி, அவர்களின் முயற்சியைப் பாராட்டினார்.

உடல்நலம் பேணலும், உடற்பயிற்சியின் அவசியமும் சமூகத்தில் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய செய்தியாகும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைவரையும் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிநடத்தும் என்றார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் SIR திட்டம்: வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்த சிறப்பு முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

திருச்சி 21, டிசம்பர் 2025 : திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், SIR (Systematic Inclusion of Voters) திட்டத்தின் கீழ் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் விவரத் திருத்தம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாமினை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று புதிய வாக்காளர் பெயர் பதிவு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளை மேற்கொண்டனர். முகாமின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விளக்கங்கள் கேட்டறிந்து, பணிகள் துரிதமாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினார். பொதுமக்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயற்குழுக் கூட்டம்: 2026 தேர்தல் பணிகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆலோசனை

திருச்சி 21, டிசம்பர் 2025 : கழகத் தலைவர்–மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயற்குழுக் கூட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ஆணவப் பேச்சை பொய்யாக்கும் வகையில், 2026-இல் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைப்போம் என அமைச்சர் வலியுறுத்தினார்.

திருவெறும்பூர் தொகுதியில் புதிய பேருந்து நிலையம், மணப்பாறையில் கலைஞர் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கி அடிக்கல் நாட்டியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

மேலும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்து ஒன்றிய அரசின் கைக்கூலியாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். அதோடு, 100 நாள் வேலைத் திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய அரசுக்கும், அதற்கு துணை நிற்கும் அடிமை அ.தி.மு.க-விற்கும் கண்டனம் தெரிவிக்கும் உள்ளிட்ட 5 தீர்மானங்களை இக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நிறைவேற்றினார்.

திருநெல்வேலியில் ரூ.98 கோடி மதிப்பீட்டில் “காயிதே மில்லத் அறிவுலகம்” நூலகம் அடிக்கல் நாட்டு விழா : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ்  

21, டிசம்பர் 2025 ; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பள்ளிக் கல்வித்துறையின் பொதுநூலக இயக்ககம் சார்பில் ரூ.98 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள “காயிதே மில்லத் அறிவுலகம்” நூலகக் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அறிவு ஒளியை பரவச் செய்யும் திராவிட மாடல் அரசின் தொடர் முன்னெடுப்புகளில் ஒன்றாக, தென் மாவட்டத்தில் அமையவுள்ள இந்த அறிவுலகம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வாசிப்பு பண்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

“நான் முதல்வன்” திட்டம் உலகளவில் ஒலிக்கும் சான்று: கொரியாவில் சிறக்கும் மாணவர் சந்துரு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதிவு

22, டிசம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமாக உருவெடுத்து, தமிழ்நாட்டின் புகழை தரணி எங்கும் ஒலிக்கச் செய்து வரும் “நான் முதல்வன்” திட்டம், மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதற்கான சிறந்த சான்றாக, எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, முதல் தலைமுறைப் பட்டதாரியாக உயர்ந்து, “நான் முதல்வன் – ஸ்கவுட்” திட்டத்தின் மூலம் பலன் பெற்று, இன்று கொரியா நாட்டின் ஆய்வுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர் சந்துரு அவர்களின் சாதனையை அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களின் கனவுகளை நனவாக்க அனைத்து வகையிலும் உறுதுணையாக நிற்கும் திராவிட மாடல் அரசு என வலியுறுத்திய அமைச்சர், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியின் காணொலியை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்து, கனவுகள் கொள்வோம்! உலகை வெல்வோம்!” என பதிவிட்டுள்ளார்.

ரூ.210.17 கோடி மதிப்பில் பள்ளி, நூலகக் கட்டடங்கள் திறப்பு; 9 புதிய காவல் நிலையங்களும் தொடக்கம் – முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்

சென்னை 22, டிசம்பர் 2025 : பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.210.17 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிகள் மற்றும் விடுதிக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். மேலும் ரூ.19.72 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார். இதனுடன், ரூ.4.40 கோடி செலவில் மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகத்திற்கான புதிய கட்டடம் கட்டும் பணிக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 20 மாவட்டங்களில் உள்ள 60 அரசுப் பள்ளிகளில் ரூ.96.49 கோடி செலவில் கட்டப்பட்ட 192 புதிய வகுப்பறைகள், 4 ஆய்வகக் கட்டடங்கள், 16 மாணவர்–மாணவியர் கழிப்பறை கட்டடங்கள், 8 குடிநீர் வசதிப் பணிகள் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.
அதேபோல், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.71.68 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 2 மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி கட்டடங்கள் மற்றும் விடுதிகள், பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ரூ.17.82 கோடி செலவில் 20 மாவட்டங்களில் கட்டப்பட்ட 68 நூலகக் கட்டடங்கள், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ.1.90 கோடி செலவில் கட்டப்பட்ட 3 கிளை நூலகக் கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர்  திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், தலைமைச் செயலர் திரு. தா. முருகானந்தம் அவர்கள், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் மருத்துவர் பி. சந்தர மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, உள் (போக்குவரத்து) துறை ஆகியவற்றின் சார்பில் மொத்தம் ரூ.43.91 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடங்களையும், 9 புதிய காவல் நிலையங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 3 காவல் உட்கோட்டங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார்.

‘புதுமைப்பெண்’ திட்டம் சமூக மாற்றத்தின் வலுவான அடையாளம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

23, டிசம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, “கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்” என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் உயர்ந்த கொள்கைக்கு செயல்வடிவம் கொடுத்து, சமூக முன்னேற்றப் பாதையில் உறுதியாக முன்னேறி வருகிறது.

அந்த வகையில், ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் மூலம் பயனடையும் மாணவி அகஸ்தியா, தன்னுடைய அத்தியாவசிய தேவைகளுக்கும், தந்தையின் மருத்துவச் செலவுகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெரும் ஆதரவாக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த அனுபவப் பகிர்வு, ‘புதுமைப்பெண்’ திட்டம் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும், அதன் அவசியத்தையும் வெளிப்படுத்துவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதனை எடுத்துக்காட்டும் வகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சிக்கான காணொலியை அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கழக கல்வியாளர் அணியின் முதல் நிகழ்வு திருச்சி தெற்கு மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது –  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் எம்.பி தமிழச்சி தங்கபாடியன் பங்கேற்ப்பு

திருச்சி 23, டிசம்பர் 2025 : கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் உருவாக்கப்பட்ட கழக கல்வியாளர் அணியின் முதல் நிகழ்வு, கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்டம் – திருச்சி கிழக்கு மாநகர கல்வியாளர் அணிகளின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இவ்விழாவில், அணியின் மாநிலச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் கலந்து கொண்டு கல்வியாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற சாதனைகளை எடுத்துரைக்கும் குரல்களும் ஒலித்தன. மாவட்ட அமைப்பாளர் முனைவர் திரு. குணசீலன் மற்றும் மாநகர அமைப்பாளர் திரு. பொன்முடி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம், கல்வியாளர்களிடையே பெரும் உற்சாகத்தையும் ஒருமைப்பாட்டையும் உருவாக்கியது.

திருவெறும்பூர் பால்பண்ணை நான்கு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரடி ஆய்வு 

திருவெறும்பூர் 23, டிசம்பர் 2025 : திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பால்பண்ணை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர்  திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அரசு உயர் அலுவலர்களுடன் இணைந்து நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, அந்தப் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை கவனமாக கேட்டறிந்த அமைச்சர், அவற்றின் அடிப்படையில் சோதனை முறையில் செயல்படுத்தக்கூடிய சில வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நடவடிக்கைகள் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கமலஹாசன் அவர்களால் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு  அவர்களுக்கு ‘குழந்தைகளின் ஐகான்’ விருது வழங்கல் விழா

திருச்சி 23, டிசம்பர் 2025 : உடற்கல்வி அறக்கட்டளை (Physical Education Foundation of India) மற்றும் கமல் கலாச்சார மையம் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், குழந்தைகளின் ஐகான் விருது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் நிறுவனர் மற்றும் மக்களவை உறுப்பினருமான திரு. கமலஹாசன் அவர்கள் இந்த விருதை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார். கமலஹாசன் அவர்களிடமிருந்து கிடைத்த இந்த அங்கீகாரம் அந்த நிகழ்வை மேலும் சிறப்பானதும் மறக்கமுடியாததும் ஆக்கியது.

மேலும், இந்த விழாவில் விளையாட்டுத் துறையில் சிறப்பாக சாதனை படைத்த பலர் கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் சிறப்பை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அனைவருக்கும் ஊக்கமளிக்கும் மகிழ்ச்சியான மாலை நேரமாக அமைந்தது.

இந்த இனிய, ஊக்கமூட்டும் மற்றும் ஆனந்தமிகு நிகழ்ச்சியை சிறப்பாக உருவாக்க ஒத்துழைத்த அனைவருக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.

இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

24, டிசம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலமே மாநிலத்தின் வளர்ச்சி என்ற உயரிய நோக்கில், பல மகத்தான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.

உயர் கல்வியுடன் இணைந்த உலகத் தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி, மாணவர்களின் தனித்திறன்களைப் பட்டை தீட்டி மிளிரச் செய்வதில் திராவிட மாடல் அரசு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியும் உறுதியான வேலைவாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்ற கனவுடன் வாழ்கின்றனர். அந்தக் கனவை நனவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டதே ‘நான் முதல்வன்’ திட்டம் என அமைச்சர் தெரிவித்தார். இத்திட்டத்தின் பயன்களையும், கல்வியில் தமிழ்நாடு அடைந்து வரும் முன்னேற்றத்தையும் எடுத்துரைக்கும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி காணொலியை, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மனிதகுல சமத்துவத்திற்கான பெரியாரின் புரட்சியே எங்களின் தலைநிமிர்வு – தந்தை பெரியார் அவர்களின் நினைவுதினத்தில் எக்ஸ் பக்கத்தில் பதிவு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

திருச்சி 24, டிசம்பர் 2025 : “எங்கள் வாழ்வுக்கும் தலைநிமிர்வுக்கும் அடித்தளமாக அமைந்தது தந்தை பெரியாரின் புரட்சிதான். சாதி, மதம், இனம் ஆகிய வேறுபாடுகளைத் தாண்டி மனிதகுலத்தின் சமத்துவத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார்” 

பெரியாரின் பெயரை முழங்கும் போது சிலர் அலறுகிறார்கள்; அதுவே எங்களுக்கான வெற்றி என்றும், தந்தை பெரியாரின் வெற்றியே நமது வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தந்தை பெரியாரின் வெற்றி! பெரியார் புகழ் ஓங்குக!” என உருக்கமான வாசகத்துடன் பெரியாரின் சிந்தனைகளும் சமூகநீதி கோட்பாடுகளும் என்றும் நிலைத்திருக்கும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தந்தை பெரியார் நினைவு நாளில் பெண்கள் அதிகாரமளிப்பை வலியுறுத்தி புதிய அலுவலகம் திறப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

திருச்சி 24, டிசம்பர் 2025 : பெண்களுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்ற தந்தை பெரியாரின் உயரிய சிந்தனையை நினைவு கூரும் வகையில், அவரது நினைவு நாளன்று திருச்சியில் திருச்சி மாமன்ற உறுப்பினர் திருமதி. தங்கலெட்சுமி தசரதன் அவர்களின் அலுவலகம் மற்றும் பல்நோக்கு கட்டடத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 1, வார்டு எண்: 15-இன் உறுப்பினராக செயல்பட்டு வரும் திருமதி. தங்கலெட்சுமி தசரதன் அவர்களின் மக்கள் பணிகள் மேலும் சிறக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிகழ்வு, பெண்கள் முன்னேற்றமும் அதிகாரமளிப்பும் சமூக மாற்றத்திற்கு அடித்தளமாக அமையும் என்ற தந்தை பெரியாரின் சிந்தனைகளை மீண்டும் உறுதிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

திருச்சி மாவட்ட மைய நூலக கூடுதல் கட்டடத்தின் செயல்பாட்டை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

திருச்சி 24, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் திறக்கப்பட்ட கூடுதல் கட்டடத்தின் செயல்பாட்டினை, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாணவர்கள், போட்டித் தேர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் கட்டடம், நவீன வசதிகளுடன் செயல்பட தொடங்கியதன் மூலம் திருச்சி மாவட்டத்திற்கு மேலும் ஒரு அறிவுச் செல்வமாக அமைந்துள்ளது. கல்வி வளர்ச்சிக்கும் வாசிப்பு பண்பாட்டை ஊக்குவிப்பதற்கும் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறது என்பதையும், இந்நூலக விரிவாக்கம் அதற்கான சான்றாக விளங்குகிறது என்பதையும் இந்த நிகழ்வு வெளிப்படுத்துகிறது.

திருவெறும்பூர் பாரதிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பறை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறப்பு

திருவெறும்பூர் 24, டிசம்பர் 2025 : திருவெறும்பூர் பாரதிபுரம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தமது சொந்த நிதியில் இருந்து ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பொது கழிப்பறையை இன்று திறந்து வைத்தார்.

பொதுமக்களின் சுகாதாரத் தேவைகளை கருத்தில் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த வசதி, அந்தப் பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. நீண்ட காலமாக நிலவிய குறையை தீர்த்து, மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து வரும் திராவிட மாடல் அரசின் அணுகுமுறைக்கு ஏற்ப, உள்ளூர் தேவைகளுக்கு உடனடி தீர்வு காண்பதே தமது கடமை என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இந்த நிகழ்வில் தெரிவித்தார்.

சகிப்புத்தன்மை, மனிதநேயம், அன்பு, அமைதி உலகை வழிநடத்தட்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கிறிஸ்துமஸ் வாழ்த்து

25, டிசம்பர் 2025 : சகிப்புத்தன்மையும், மனிதநேயமும் மேலோங்கிடவும், அன்பும் அமைதியும் நிலைப்பெறவும் இயேசு பிரான் வகுத்த நெறிகள் என்றென்றும் உலகை வழிநடத்தட்டும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலக மக்கள் அனைவரிடமும் அன்பு, ஒற்றுமை, சகிப்புத்தன்மை போன்ற உயரிய பண்புகள் வளர வேண்டும் என்பதே இயேசு பிரானின் போதனை என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த உயரிய நெறிகளை பின்பற்றி அமைதியும் மனிதநேயமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவோம் என்றும், அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

“முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்” சொல்லொணா மகிழ்ச்சி அளிக்கிறது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

25, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான “முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்” குறித்து குழந்தை தமிழ்வாணன் பகிர்ந்துகொண்ட கருத்துகள் சொல்லொணா மகிழ்ச்சியைத் தருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சிக் காணொலியை பதிவிட்டு, சத்தான மற்றும் சுவையான காலை உணவு மாணவர்களின் கற்றல் திறனையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த திட்டம் தொடக்கக் கல்வியில் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியைத் தொடர உதவும் வகையில் செயல்பட்டு, ‘இடைநிற்றல் இல்லாத தமிழ்நாடு’ என்ற பெருமைக்குரிய இலக்கை அடைவதற்கு உறுதியான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசு மாதிரிப் பள்ளிகள் மூலம் உயர்கல்விக் கனவு நனவாகிறது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

26, டிசம்பர் 2025 : “கிராமப்புற மாணவர்களும் இந்தியாவின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில வேண்டும்” என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் உயரிய கனவு, அரசு மாதிரிப் பள்ளிகள் வழியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக நனவாகி வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக் காணொலியை பகிர்ந்து, இராமநாதபுரம் அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று, தரமான பயிற்சியின் மூலம் CLAT தேர்வில் வெற்றி பெற்று, திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவன் அமுதபிரியனின் சாதனையை எடுத்துரைத்துள்ளார்.

மேலும், இவரைப் போன்ற திறமையான மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் திராவிட மாடல் அரசு ஏற்றுக்கொண்டு, பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, கல்விக்கான தடைகளைத் தகர்த்தெறிந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கல்வி எனும் பேராயுதமே மாணவர்களின் நிரந்தரச் சொத்து என்பதை உறுதிப்படுத்தும் முதலமைச்சரின் இந்த சமூக நீதிப் பயணம்’ தொடர வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், தம்பி அமுதபிரியனின் லட்சியக் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

தோழர் நல்லகண்ணு அய்யா 101வது பிறந்தநாள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து

26, டிசம்பர் 2025 : தனது பள்ளி ஆசிரியர் வழியாக பொதுவுடைமைக் கருத்துகளைப் பெற்று, மக்களுக்கான போராட்டங்களும் சிறைவாசமும் என தன்னுடைய முழு வாழ்வையும் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொதுவுடைமைக் கொள்கைகளை வாழ்க்கை நெறியாகக் கொண்டு, சமூக நீதி மற்றும் மக்கள் உரிமைகளுக்காக இடையறாது போராடி வரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் அர்ப்பணிப்புமிக்க வாழ்க்கை தொடர்ந்து பல தலைமுறைகளுக்கும் வழிகாட்டியாக விளங்க வேண்டும் என அமைச்சர் வாழ்த்தினார்.

கள்ளக்குறிச்சி–திருவண்ணாமலை: அரசு மாதிரிப் பள்ளி கட்டடங்கள் அர்ப்பணம்; ரூ.1,045 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருவண்ணாமலை 26, டிசம்பர் 2025 : கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு மாதிரிப் பள்ளிகளுக்கான புதிய கட்டடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன், திருவண்ணாமலை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தார். வீரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 2,16,056 பயனாளிகளுக்கு ரூ.1,045 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தே. மலைஅரசன், து. ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தா. உதயசூரியன், வசந்தம் க. கார்த்திகேயன், ஏ.ஜெ. மணிக்கண்ணன், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி புவனேஸ்வரி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

“நான் முதல்வன்” திட்டம் – இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திராவிட மாடல் அரசின் முன்னெடுப்பு

27, டிசம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களின் துறையில் முதல்வனாக உயர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் “நான் முதல்வன்” திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்.

அந்தத் திட்டத்தின் மூலம் பயிற்சி பெறும் சகோதரர் கிருஷ்ணா அவர்களின் பேச்சில் வெளிப்படும் தெளிவும், தொலைநோக்குப் பார்வையும், தன்னம்பிக்கையும், “நான் முதல்வன்” திட்டத்தின் மகத்தான பலனை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகின்றன.

“கல்வி என்பது யாராலும் திருட முடியாத சொத்து. அந்தக் கல்வியை நவீன காலத்திற்கேற்ப வழங்குவதே திராவிட மாடல் அரசின் நோக்கம்” என்ற மாண்புமிகு முதலமைச்சரின் கனவும், இளைஞர்களின் கனவும்  எதிர்காலமும் இந்தத் திட்டத்தின் மூலம் நனவாகி வருகிறது என்ற நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது.

இத்தகைய கல்விச் சிறப்பையும், இளைஞர் மேம்பாட்டையும் வெளிப்படுத்தும் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சிக் காணொலியை, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

பத்திரிகை–ஊடக நண்பர்களுடன் 2026 புத்தாண்டுக் கொண்டாட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

சென்னை 27, டிசம்பர் 2025 : பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களோடு 2026 புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஏற்பாட்டில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், பத்திரிகையாளர் மன்றத்தின் உறுப்பினர்களுக்கு நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பு ஆகியவற்றை வழங்கி, புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையின் பங்களிப்பை பாராட்டிய அமைச்சர், வரும் ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமைய வாழ்த்தினார்.

‘புதுமைப்பெண்’ திட்டம் கல்விக் கனவுகளுக்கு அரண்: மாணவி சுகன்யாவுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்து

28, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒரு தந்தையின் பேரன்போடு உருவாக்கிய ‘புதுமைப்பெண்’ திட்டம், லட்சக்கணக்கான பெண் பிள்ளைகளின் கல்விக் கனவுகளை நனவாக்கி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

பெற்றோரின் ஆதரவின்றி, தனியொரு பெண்ணாகத் துணிச்சலுடன் கல்விப் பாதையில் வெற்றி நடைபோடும் மாணவி சுகன்யாவுக்கு, திராவிட மாடல் அரசு ஓர் அரணாக துணை நிற்கிறது என்றும், அவரது இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றிபெற உள்ளத்திலிருந்து வாழ்த்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக் காணொலியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

திருவெறும்பூர் தொகுதியில் புதிய திட்டப்பணிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்

திருவெறும்பூர் 28, டிசம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்.

தொகுதி மேம்பாட்டு நிதி 2024–2025ன் கீழ், வார்டு 46 கொட்டப்பட்டில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சீரணி அரங்கம், வார்டு 42 ஆலத்தூர் மந்தை மற்றும் வார்டு 40 அகரம் ஆகிய இடங்களில் தலா ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக் கடைகள், வார்டு 36 ஸ்டாலின் நகர் மற்றும் வார்டு 16 அம்மாகுளம் கலைவாணர் தெரு ஆகிய இடங்களில் தலா ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

மேலும், தொகுதி மேம்பாட்டு நிதி 2025–2026ன் கீழ், வார்டு 41 காந்தி நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல், சத்துணவுத் திட்டத்தின் கீழ், காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளியில் ரூ.8.44 லட்சம் மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையல் கூடத்தை பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இளந்தலைவர் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாளையொட்டி DCM48: திருச்சியில் எழுச்சியூட்டிய சிறப்புப் பட்டிமன்றம்

திருச்சி 28, டிசம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் DCM48 என்ற தலைப்பில் தொடர் நிகழ்ச்சிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஒருங்கிணைத்தார்.

இந்தத் தொடர் நிகழ்ச்சிகளின் இறுதி நிகழ்ச்சியாக, திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் நடுவராகப் பங்கேற்ற சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்கள் பங்கேற்று, சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.

“இளந்தலைவரின் வெற்றிக்கு பெரிதும் துணை நிற்பது கட்சி பணியே! அரசுப்பணியே!” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில், சிறப்பாக வாதங்களை எடுத்துவைத்த கவிஞர் இனியவன், திருமதி நாகநந்தினி, பேராசிரியர் விஜயகுமார், கடலூர் தணிகைவேலன் ஆகியோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்வை எழுச்சியோடு ஏற்பாடு செய்த மாநகரச் செயலாளர் மு. மதிவாணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு அமைச்சர் பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் இனிகோ இருதயராஜ் அவர்கள் உடன் பங்கேற்றார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top