Anbil Updates – November 2025

திருச்சி கிழக்கில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டங்களைத் தொடங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,01 , நவம்பர் 2025 : புரவலர் தாத்தா அன்பில் தர்மலிங்கம் பெயரில் அமைந்துள்ள தெருவில் இருந்து, திருச்சி மாவட்டக் கழகத்தின் சார்பாக ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கலைஞர் நகர் பகுதியில் உள்ள 64வது வட்டத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமை கழகத்தின் வழிகாட்டுதல்களை அவர் விரிவாக விளக்கி, அறிவாலயத்தின் அறிவுறுத்தல்களை ஆலோசனைகளாக வழங்கினார். கூட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், வட்டச் செயலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞரணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருவெறும்பூரில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,01 , நவம்பர் 2025 :  திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்தின் காந்தலூர் ஊராட்சி (290வது வட்டம்) பகுதியில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து, கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கினார்.

அமைச்சர் தனது உரையில், தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகவும் தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டதுடன், திருச்சி மாவட்டத்தில் திராவிட மாடல் அரசு செய்துள்ள வளர்ச்சி மற்றும் நலத்திட்ட சாதனைகளை விளக்கும் அச்சிட்ட துண்டறிக்கைகளையும் வழங்கினார். கூட்டத்தில் தொகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள், பெண்கள் அணி, இளைஞரணி மற்றும் பல்வேறு பிரிவு உறுப்பினர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

திருவெறும்பூர் பொன்மலையில் ரூ.2.21 கோடி மதிப்பில் உருவாகும் சமூக நலக்கூடப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,01 , நவம்பர் 2025 :  திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதியில், தாட்கோ நிதியில் ரூ.2 கோடியே 21 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமூக நலக்கூடத்தின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளின் முன்னேற்றத்தினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகளின் தரம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான வசதிகள், மற்றும் பணிகள் நிறைவு பெறும் காலக்கெடு ஆகியவற்றை அவர் அதிகாரிகளிடம் ஆய்வு செய்து, திட்டத்தை விரைவில் முடிக்க தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மணப்பாறை வையம்பட்டியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமில் பங்கேற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,01 , நவம்பர் 2025 :   மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி பகுதியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டு, மருத்துவப் பயனாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நலனுதவிகளை வழங்கினார்.

மக்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தும் நோக்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்தத் திட்டம், கிராமப்புற மக்களுக்கு மிகப்பெரும் நன்மையாக அமைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். முகாமில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

மணப்பாறையில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டத்தில் உற்சாக உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,01 , நவம்பர் 2025 :  மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை நகரம் 18வது வட்டம், வாக்குச்சாவடி எண் 106-இல் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க செயல்பட அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

அமைச்சர் தனது உரையில், “உதயசூரியனை மக்களின் இதய சூரியனாக மாற்றுவோம்” என வலியுறுத்தி, வாக்குச்சாவடி மட்டத்தில் கழகத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். நிகழ்வில் தொகுதி நிர்வாகிகள், இளைஞரணி, பெண்கள் அணி மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

திருவெறும்பூரில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி முகாமை நடத்தினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,01 , நவம்பர் 2025 :    திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கூத்தப்பார் பேரூர் 9 மற்றும் 10வது வட்டம், வாக்குச்சாவடி எண் 42-இல் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நடத்தி, பங்கேற்ற நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கினார்.

அமைச்சர் தனது உரையில் BLA2, BLC, மற்றும் BDA ஆற்ற வேண்டிய முக்கியப் பொறுப்புகளை விரிவாக எடுத்துரைத்து, தேர்தல் செயல்பாடுகளில் ஒற்றுமையும் ஒழுக்கமும் அவசியம் என வலியுறுத்தினார். மேலும், SIR போன்ற ஜனநாயக விரோதப் போக்குகளை மக்கள் விழிப்புணர்வின் மூலம் தகர்க்க வேண்டும் எனவும், வாக்குச்சாவடி மட்டத்தில் கழகத்தின் வெற்றிக்காக ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அன்பில் அறக்கட்டளை சார்பில் திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர் , 02, நவம்பர்2025 :  அன்பில் அறக்கட்டளை சார்பில், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இம்முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நவல்பட்டு சீனிவாசா மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.

பொதுமக்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாமில், பல்வேறு துறைகளின் மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்டு மருந்துகள் வழங்கினர். அமைச்சர், இம்முகாமின் வாய்ப்பைப் பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்களின் ஆரோக்கியத்தைக் காக்குமாறு கேட்டுக்கொண்டார்.

“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – தலைமுறையின் கனவுகளுக்கு ஊட்டச்சத்து” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

03, நவம்பர் 2025 :  “ஒருவேளை உணவு என்பது ஒரு தலைமுறையின் கனவுகளுக்கான முதல் ஊட்டச்சத்து. நாளைய தமிழ்நாட்டை வலுவேற்றச் சிந்திக்கும் தலைவன் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளின் ஏக்கங்கள் தீர்ந்ததுடன், பெற்றோர்களின் சுமைகளும் குறைந்துள்ளன என்றார். “மக்களின் மனங்களில் தாயுமானவராக நிறைந்திருக்கிறார் நம் முதலமைச்சர்,” என உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்ட அமைச்சர், கல்வி மற்றும் ஊட்டச்சத்து இணைந்த சமூக முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

“நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” சேலம் மாநாட்டில் ரூ.1000 கோடி நன்கொடை உறுதி!

சேலம், 03 , நவம்பர் 2025 : “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” சேலம் மாநாட்டில் கல்வி முன்னேற்றத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு வெளிப்பட்டது. மொத்தம் 55 கல்வி நிறுவனங்கள், அரசு பள்ளிகள் வளர வேண்டும் என்ற உண்மையான விருப்பத்துடன் இணைந்து, ரூ.168.54 கோடி மதிப்பிலான பங்களிப்புகளை உறுதியளித்துள்ளன. இதனுடன், இதுவரை “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” முயற்சிக்காக அளிக்கப்பட்ட மொத்த ஆதரவு தொகை ரூ.1000 கோடி எனும் சாதனை நிகழ்ந்துள்ளது.

இந்த உயரிய முயற்சியில் இணைந்து, அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவாக நிற்கும் தாராள மனம் கொண்ட நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

உயர்தரக் கல்வி அனைவருக்குமானதாக மாறியுள்ள தமிழ்நாடு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம்

04, நவம்பர் 2025 : எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த உயர்தரக் கல்வியை, அனைவரும் அடையக்கூடியதாக மாற்றியிருக்கிறது மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் கடைக்கோடிக் கிராமங்களில் இருந்து இந்தியாவின் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைகள் மாநிலத்தின் கல்வி முன்னேற்றத்தைக் காட்டுகிறது எனவும் அவர் கூறினார்.

“கல்விச் சிறகை விரிக்கட்டும்! அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விப் பயணம் சிறக்கட்டும்!” என வாழ்த்திய அமைச்சர், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வை பகிர்ந்து  பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2025-26ம் கல்வியாண்டு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை , 04 , நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு (arrear) அரசுப் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டார்.

இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பொதுத்தேர்வில் எந்த மாணவரும் புறக்கணிக்கப்படாமல் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யவும், தேர்ச்சி விகிதத்தை மேலும் உயர்த்துவதற்கான செயல்திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தவும் அமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார். 

இதையடுத்து 2025–2026 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வியை உறுதி செய்யும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் முக்கியமான நடைமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தொலைதூர கிராமப்பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் புதிய குடியேற்றப் பகுதிகளில் 13 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. மேலும், கல்விச் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் 4 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை, புதிய பள்ளிகள் அமையவுள்ள மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.  இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மரு. பி.சந்தர மோகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மரு. மா.ஆர்த்தி மற்றும் பள்ளிக் கல்வித்துறை உயர் அலுவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

களம் நமதே! காலமும் நமதே! — விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு திகழும் திராவிட மாடல் சாதனை

05, நவம்பர் , 2025 : விளையாட்டுத் துறையில் சாதனைகள் நிகழ்த்தவும், சரித்திரம் படைக்கவும் கனவு காணும் இளைஞர்களைக் களம் காணச் செய்து, வெற்றிக் கோப்பைகளுடன் சர்வதேச மேடைகளில் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள். இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு உருவெடுக்க தொடர்ந்து உழைத்து வருகிறார் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

விளையாட்டு வீரர்களுக்கு திராவிட மாடல் அரசு வழங்கி வரும் ஊக்கமும் உற்சாகமும், 3 சதவிகித இடஒதுக்கீட்டு உரிமையும் இளம் தலைமுறையினரை வெற்றிப் பாதையில் முன்னேற்றுகின்றன. இதனைப் பெருமையாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில், விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு கண்டுவரும் முன்னேற்றத்தைப் பகிர்ந்து பெருமை தெரிவித்துள்ளார். களம் நமதே! காலமும் நமதே! – தமிழ்நாட்டின் இளைய வீரர்களின் உற்சாகக் குரலாக மாறியுள்ளது.

அய்யா சேடப்பட்டி ஆர். முத்தையா அவர்களின் நினைவிடத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரியாதை

மதுரை, 05, நவம்பர் 2025 : திருமங்கலத்தை அடுத்த முத்தப்பன்பட்டியில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவராகவும், ஒன்றிய அமைச்சராகவும் பணியாற்றியவரும், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் அவர்களின் தந்தையுமான அய்யா சேடப்பட்டி ஆர். முத்தையா அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வணங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

மறைந்த ஆர். முத்தையா அவர்கள்  பொதுமக்கள் நலனுக்காக அர்ப்பணித்த பணிகளை நினைவுகூர்ந்த அமைச்சர், அவரின் சேவை மனப்பாங்கு  பலருக்குச் சிந்தனை விளக்காக திகழ்கிறது என தெரிவித்தார்.

மணப்பாறை தொகுதியில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனைக் கூட்டங்களில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

மணப்பாறை,05 , நவம்பர் 2025:  மருங்காபுரி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆமணக்கம்பட்டி ஊராட்சி பாகம் 201ல் பாக முகவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று வழிகாட்டினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திராவிட மாடல் அரசு சாதித்துள்ள பல்வேறு முன்னேற்றப் பணிகள் குறித்த துண்டறிக்கைகளையும் அவர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை நகரம், வார்டு எண் 6 மற்றும் 13, பாகம் எண் 117-ல் நடைபெற்ற பாக முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர், ஜனநாயக விரோதமான SIR போன்ற போக்குகளை எதிர்கொள்ள கழகத்தின் BLA2, BLC, BDA ஆகியோர் ஆற்ற வேண்டிய பணிகளை விரிவாக எடுத்துரைத்தார்.

பின்பு, வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட லெச்சம்பட்டி (பாகம் 63) மற்றும் தே.கோவில்பட்டி (பாகம் 61) ஊராட்சிகளில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனைக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார்.

இக்கூட்டங்களில், முன்னெடுப்பின் நோக்கம் மற்றும் செயல்முறைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி அனைவரும் ஓரணியாய் உழைத்து, உதயசூரியன் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். உடன் மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ஆர். அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெண்கள் சமூக விடுதலையின் அடித்தளம் கல்வி – ‘புதுமைப்பெண்’ திட்டம் தமிழ்நாட்டின் கல்வி மறுமலர்ச்சி!

06,  நவம்பர் 2025 : பெண்கள் சமூக விடுதலை அடைந்து, பொருளாதாரச் சுதந்திரம் பெற கல்வியே மிகப் பெரிய ஆயுதம் எனக் குறிப்பிடத்தக்கது. பெண்களின் கல்விக்கான இடையூறுகள் மற்றும் சவால்களை உடைத்தெறிந்து, உயர் கல்வி படிக்கும் நிலையிலேயே பொருளாதாரச் சுதந்திரம் பெறும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கிய ‘புதுமைப்பெண்’ திட்டம், தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு இந்திய சராசரியை மீறி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை, வெறும் நிதி உதவி அல்ல — அவர்களின் முன்னேற்றத்திற்கான முதலீடாகும்.

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்வில், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பயனடைந்த சிவகங்கை மாவட்ட மாணவி அபிவர்ஷினியின் ஊக்கமூட்டும் காணொளியினை பகிர்ந்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. அவர், “பெண்கள் கல்வி பெறுவது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் முன்னேற்றத்தின் தொடக்கம்” என வலியுறுத்தி, புதுமைப்பெண் திட்டம் போன்ற புதுமையான முயற்சிகள் தமிழ்நாட்டின் பெண்கள் முன்னேற்றப் பயணத்தில் வரலாற்றுச் சின்னமாக திகழும் என தெரிவித்தார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனைக் கூட்டங்களில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

திருச்சி, 06 ,  நவம்பர் 2025 : கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” முன்னெடுப்பின் கீழ் திருச்சி கிழக்கு தொகுதிகளில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

கலைஞர் நகர் பகுதி (வார்டு 63 – பாகம் 233) மற்றும் பாலக்கரை பகுதி, உடையான்தோட்டம் (வார்டு 50 – பாகம் 150) ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து அரியமங்கலம் பகுதி (வார்டு 31 – பாகம் 121), மார்க்கெட் பகுதி (வார்டு 20 – பாகம் 109), மேலும் மலைக்கோட்டை பகுதி (வார்டு 12A – பாகம் 12) ஆகிய இடங்களிலும் பாக முகவர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இக்கூட்டங்களில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “SIR” என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்க முயலும் சதிகளை முறியடிக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் மதிப்புடன் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும், வாக்குச்சாவடிகள் அனைத்தும் வெற்றிச் சாவடிகளாக மாற்றப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் திருச்சிராப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் – என்வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டங்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது

திருச்சி , 06 , நவம்பர் 2025 : திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் “ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் குழு, பாக டிஜிட்டல் ஏஜென்ட், பாக இளைஞர் அணி, பாக மகளிரணி, பாகத்திற்குட்பட்ட கிளை, வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து என்வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி முன்னெடுப்பில் ஈடுபட வேண்டும்” என்ற ஆணைக்கிணங்க, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆலோசனைக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதல்களை விளக்கி, பாக பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

திருவெறும்பூர் தொகுதி அரியமங்கலம் (வார்டு 16 – பாகம் 123), காட்டூர் (வார்டு 37 – பாகம் 125), வேங்கூர் ஊராட்சி (பாகம் 5), கூத்தைப்பார் பேரூர் (வார்டு 5 – பாகம் 41), துவாக்குடி நகரம் (பாகம் 265), திருவெறும்பூர் (வார்டு 42 – பாகம் 181), பொன்மலை (வார்டு 44 – பாகம் 190), குண்டூர் ஊராட்சி (பாகம் 163) ஆகிய பல்வேறு பகுதிகளில் இந்த பயிற்சிக் கூட்டங்கள் நடைபெற்றன.

அதில் BLA2, BLC, மற்றும் BDA ஆகியோர் ஆற்ற வேண்டிய பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து அமைச்சர் விரிவாக விளக்கி, திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் துண்டறிக்கைகளையும் வழங்கினார். மேலும், மக்களின் வாக்குரிமையை பறிக்க முயலும் சதித் திட்டங்களை (SIR செயல்பாடுகளை) விழிப்புடன் கண்காணிக்குமாறு பணித்தார்.

அதோடு, “திராவிட மாடல் அரசு வளப்படுத்திய தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்யத் திட்டமிடும் கூட்டத்தை, வேரோடும் – வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம்” என்ற கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் முழக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில், திருவெறும்பூர் தொகுதியில் நடைபெற்ற என்வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டத்தை சிறப்பாக நடத்தினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு அணியினரை வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி , 06, நவம்பர் 2015 : SGFI (School Games Federation of India) நடத்தும் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் செல்லும் தமிழ்நாடு அணியினரை இன்று திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.

அணியினரின் உற்சாகத்தையும், முயற்சியையும் பாராட்டிய அமைச்சர் அவர்கள், போட்டியில் சிறந்த சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என உற்சாகமூட்டினார். மேலும், அவர்களுக்கு அன்பில் அறக்கட்டளை சார்பில் சீருடைகள் வழங்கி மாணவர்களை ஊக்குவித்தார்.

“நான் முதல்வன்” திட்டம் – உலகின் எல்லா கதவுகளையும் திறக்கும் திறன்களை வழங்கும் திராவிட மாடல் அரசின் முன்னேற்றப் பயணம்

07 , நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான “நான் முதல்வன்” திட்டம், தமிழ்நாட்டு மாணவர்கள் உலகின் எந்த நாட்டு மாணவர்களுக்கும் இணையாகவும், தரத்திலும் தகுதியிலும் சிறந்தவர்களாகவும் உயர்ந்து நிற்கின்றனர் என்பதற்கு சான்றாக திகழ்கிறது.

திராவிட மாடல் அரசின் தனிச்சிறப்பு வாய்ந்த இந்த திறன் மேம்பாட்டு திட்டம், மாணவர்களின் திறமைகளை உலகளாவிய மட்டத்திற்கு கொண்டு சென்று, “உலகின் எல்லா கதவுகளையும் திறப்போம், எல்லைகள் கடந்தும் ஜெயிப்போம்” என்ற நோக்கத்துடன் முன்னேறி வருகிறது.

இந்த கல்வி முன்னேற்றப் பயணத்தின் ஒரு பகுதியாக, “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்வில் கோயம்புத்தூர் மாணவன் மனோஜ் அவர்களின் ஊக்கமூட்டும் காணொலியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்து, மாணவர்களின் எதிர்கால வெற்றியைப் பற்றிய பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலைஞானி கமலஹாசனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள்

சென்னை, 07, நவம்பர் 2025 :  உலகம் கொண்டாடும் நமது கலைஞானி, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் மதிப்பிற்குரிய கமலஹாசன் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கல்வி உரிமைக்காகவும் ஜனநாயக உரிமைக்காகவும் இடையறாது குரல் கொடுத்து வரும் கலைஞானி கமலஹாசனை நாம் அனைவரும் கொண்டாடுவோம் என்றும் தனது எக்ஸ் (X) பக்கத்தில் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

உலக ரோபோடிக்ஸ் ஒலிம்பியாட்டில் தமிழக மாணவர்கள் சாதனை – IAAA சார்பில் ‘Global Innovative Champions Award’ வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை, 07, நவம்பர் 2025 : அமெரிக்காவில் நடைபெற்ற உலக ரோபோடிக்ஸ் ஒலிம்பியாட்டில் (World Robotics Olympiad) நமது தமிழ்நாட்டு மாணவர்கள் சிறப்பான சாதனை படைத்துள்ளனர். அவர்களின் சாதனையை பாராட்டும் வகையில், IAAA (Institute of Aeronautics Astronautics and Aviation) தொழில்முறை சங்கம் சார்பாக “Global Innovative Champions Award” விருதையும், ரூ.1 இலட்சம் மதிப்புள்ள ஸ்டார்ட்அப் வழிகாட்டுதல் (Startup Mentorship Support) உதவியையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் அவிவ், பவித்ரா, அஞ்சனா ஆகியோரும், அவர்களைக் வழிநடத்திய ஆசிரியர்களும் இந்த வெற்றிக்காக மாநிலம் முழுவதும் வாழ்த்துபெற்று வருகின்றனர்.

சென்னையில் நடைபெற்ற New India Education Summit-இல் கல்வி உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை, 07, நவம்பர் 2025 : சென்னையில் SCOO News அமைப்பு நடத்திய New India Education Summit நிகழ்வில் கலந்து கொண்டு, “Beyond The Bell Curve – Bold New Ways to Learn” என்ற தலைப்பில் தனது கருத்துகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்தார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்கள் கல்வியை சிலருக்கான சிறப்புரிமையிலிருந்து எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டிய உரிமையாக மாற்றிய விதத்தையும், அவர்களின் சிந்தனைகள் இன்னும் திராவிட மாடல்  அரசின் பணிகளை வழிநடத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மாநிலக் கல்விக் கொள்கை (SEP) இந்த மரபை தொடர்ந்து முன்னேற்றுவதில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமைப் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் விரும்பும் எந்த மொழியையும் கற்கலாம், ஆனால் எந்த மொழியும் திணிக்கப்பட்டு கற்பிக்கப்படக்கூடாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

தமிழ்நாடு பாரத சாரண–சாரணியர் இயக்க முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை, 07, நவம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பாரத சாரண–சாரணியர் இயக்கத்தின் முப்பெரும் விழா சென்னையின் மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி அரங்கில்盛மாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, பாரத சாரண–சாரணியர் இயக்க நிறுவன நாள் விழா, மாநில விருது வழங்கும் விழா மற்றும் சாரண இயக்க இணையதள தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழாக்களில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சாரண–சாரணியர்களுக்கு மாநில விருதுகள் வழங்கியதுடன், புதிதாக அமைக்கப்பட்ட குன்றத்தூர் வட்டாரக் கல்வி அலுவலகத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

நிகழ்வில் திருப்பெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா, பெற்றோர்–ஆசிரியர் கழக துணைத்தலைவர் பி.வி.பி. முத்துக்குமார், பல்வேறு கல்வி அலுவலர்கள், நிர்வாகிகள் மற்றும் 8,000-க்கும் மேற்பட்ட சாரண–சாரணியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தமிழ்ப்புதல்வன் திட்டம் – மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளை நனவாக்கும் முதலமைச்சரின் மகத்தான முயற்சி

08,நவம்பர் 2025 :  பொருளாதாரத் தடைகள் எந்த மாணவரின் உயர் கல்விக் கனவையும் தடுக்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன், மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்தியது. மாணவர்களை முன்னேற்றினால் குடும்பங்கள் முன்னேறும்; குடும்பங்கள் முன்னேறினால் மாநிலம் முன்னேறும்; மாநிலங்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனை.

இந்த சிந்தனையின் அடிப்படையிலேயே உருவான தமிழ்ப்புதல்வன் திட்டம் பல மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, தேனி மாவட்ட மாணவன் காளீஸ்வரன்,  ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்வில் தாம் பெற்ற பயனை விளக்கும் காணொளியை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.“தமிழ்ப்புதல்வர்கள் வெல்லட்டும்! வரலாறு நம் பேர் சொல்லட்டும்!” என்று பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டின் மாணவர்களை உயர்கல்வி நோக்கி அழைத்துச் செல்லும் இந்த திட்டம், சமூக முன்னேற்றத்தின் புதிய கதவைத் திறந்திருக்கிறது.

நாகூர் தர்கா 469-வது கந்தூரி விழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்   அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 

நாகப்பட்டினம், 08 , நவம்பர் 2025 : புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 469-வது கந்தூரி விழா வரும் நவம்பர் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தரும் நிலையில், நடைபெற்று வரும் முன்னேற்பாடுகளைப் பார்வையிட மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர் ஆவடி நாசர் அவர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

விழா காலத்தில் பக்தர்கள் தடையின்றி பங்கேற்க உறுதி செய்வதற்காக அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள், வாகன நிறுத்த வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்தாலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, நாகூர் கடற்கரையில் புதிதாக கட்டப்பட்டுவரும் பூங்கா பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் நாகப்பட்டினம் மாவட்டச் செயலர் என். கௌதமன், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பி. ஆகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் டாடா நகர் அரசு பள்ளி நடுநிலைப் பள்ளியாக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடக்கம்

நாகப்பட்டினம், 08 , நவம்பர் 2025 : நாகப்பட்டினம் நகரின் 35-வது வார்டு, டாடா நகரில் செயல்பட்டு வந்த நகராட்சி தொடக்கப் பள்ளி, தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய நிலையை அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும் விதமாக, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அரசாணையை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்.

பின்னர், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி அவர்களை வரவேற்றார். நிகழ்வில் நாகப்பட்டினம் மாவட்டச் செயலர் என். கௌதமன், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பி. ஆகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாகை சட்டமன்றத் தொகுதியில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நாகப்பட்டினம், 08 , நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாகை சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் 2023–2024 தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சேஷமூலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறைகள், இடையத்தாங்குடியில் பயணியர் நிழலகம், வடகரை ஊராட்சியில் நியாய விலைக்கடைக்கான புதிய கட்டிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அம்பல் ஊராட்சி, கோட்டூர் ஊராட்சி மற்றும் திருக்கண்ணபுரத்தில் அங்கன்வாடி மையங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் அம்பல் ஊராட்சி பொறக்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறைகள், அனைத்துக்கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கோட்டூர் ஊராட்சி செயலகக் கட்டிடம் ஆகியவை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன. நிகழ்வில் நாகப்பட்டினம் மாவட்டச் செயலர் என். கௌதமன், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பி. ஆகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டத்தில் புதிய சுகாதார நிலையம் மற்றும் பட்டா வழங்குதல் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைப்பு

நாகப்பட்டினம், 08 , நவம்பர் 2025 : நாகப்பட்டினம் நகர 36-வது வார்டில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகர்புற துணை சுகாதார நிலையத்தை மக்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

இதேபோல், வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறை பகுதியில் வசிக்கும் மக்கள் நீண்ட காலமாக வீட்டுமனைப் பட்டா கோரிக்கை வைத்திருந்தனர். மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், மொத்தம் 654 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். “குடியிருக்கும் இடத்திற்கான பட்டா என்பது மக்களின் உரிமை” என்பதை வலியுறுத்தி அவர் உரையாற்றினார்.

வேதாரண்யம் தொகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தேத்தாகுடி வடக்கு ஊராட்சியின் தம்பிகவுண்டர்காடு பகுதியில் புதிய அங்கன்வாடி மையம், கல்லுளிக்காடு பகுதியில் புதிய உணவு தானிய சேமிப்புக்கிடங்கு, கத்திரிபுலம் ஊராட்சி கோவில்குத்தகை பகுதியில் உணவு தானிய சேமிப்புக்கிடங்கு, செட்டிப்புலம் ஊராட்சி தியாகராஜபுரம் தெற்கில் புதிய அங்கன்வாடி மையம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார். நிகழ்வில் நாகப்பட்டினம் மாவட்டச் செயலர் என். கௌதமன், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பி. ஆகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காலை உணவுத் திட்டத்தின் பெருமையை எடுத்துக்கூறும் காணொளியை பகிர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

09, நவம்பர் 2025 : “பள்ளிக் குழந்தைகளின் வயிறு நிறைந்தால்தான் செவிகள் திறக்கும்; எந்தத் தாயும் தனது பிள்ளை பசியுடன் பள்ளிக்குச் செல்கிறான் என்ற கவலையில் இருக்கக் கூடாது” என்ற உயர்ந்த நோக்குடன் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ‘தமிழ்நாட்டின் தாயுமானவர்’ மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள்.

இந்தத் திட்டம் தாய்மார்களின் நிம்மதியையும், குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், ஆசிரியர்களின் மகிழ்ச்சியையும் உயர்த்தியுள்ளது. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” எனும் தமிழரின் மரபை மீண்டும் வாழவைத்த இந்த திட்டத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், தென்காசி தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் சமையல் பணிபுரியும் முத்துமாரி ரவி அவர்கள் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பகிர்ந்த அனுபவக் காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். இந்த காணொளி காலை உணவுத் திட்டம் தரும் மனிதநேய அருமையை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

நாகை பகுதியில் புதிய நிழலகம் திறப்பு, மீன்பிடித் துறைமுகம் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நாகப்பட்டினம், 09, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாகை மேலக்கோட்டை வாசல் பகுதியில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.10.86 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேருந்து பயணிகளுக்கான புதிய நிழலகத்தை இன்று திறந்து வைத்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

சாமந்தான்பேட்டை மீனவ மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.32.5 கோடி மதிப்பீட்டில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

அதேபோல, நாகை நகராட்சியின் ரூ.33.5 லட்சம் மதிப்பீட்டில் சாமந்தான்பேட்டை குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிகால், சிமெண்ட் சாலை மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் நாகப்பட்டினம் மாவட்டச் செயலர் என். கௌதமன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பி. ஆகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்ட தொழில் வளர்ச்சிக்கான கோரிக்கைகள் குறித்து இந்திய வர்த்தக சங்கத்துடன் ஆலோசனை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நாகப்பட்டினம், 09, நவம்பர் 2025 : நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனை நடத்தினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

நாகை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை முன்னெடுத்து வர அரசு மேற்கொண்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அவர் விளக்கமளித்தார். மேலும், தொழில் தொடர்பான தேவைகள், சவால்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய மனுக்களை பிரதிநிதிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

அந்த கோரிக்கைகள் அனைத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதியளித்தார்.

திருச்சியில் அமைச்சர் கே.நேரு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சந்தித்து வாழ்த்தினார்

திருச்சி, 09, நவம்பர் 2025 : கழகின் முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சரான மாண்புமிகு கே.நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி, திருச்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் சென்று சந்தித்தார்.

கே.நேரு அவர்கள் கழக வளர்ச்சிக்காக அவர் செலுத்தும் உழைப்பு, பொதுப்பணிகளில் வெளிப்படுத்தி வரும் அர்ப்பணிப்பு, மற்றும் மக்கள் நலனுக்காக தொடர்ந்து மேற்கொள்ளும் சேவைகளை நினைவுகூர்ந்து, அவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 11-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – திருச்சி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருச்சி, 09, நவம்பர் 2025 : எதேச்சதிகாரப் போக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் SIR கொண்டு வந்துள்ளதை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வரும் நவம்பர் 11, 2025 அன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் மாவட்டத்திற்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில்,

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெருந்திரளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழர்களை அவதூறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பது, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்கும் நோக்கில் திருச்சி தெற்கு மாவட்டத்தின் 3 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களை பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து கருத்துகளை பகிர்ந்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்பு

திருச்சி, 09, நவம்பர் 2025 : திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மலர்தொகுப்புடன் அன்புடன் வரவேற்றார்.

புதுமைப்பெண் திட்டம் மூலம் பெண் மாணவிகளின் கல்விப் புரட்சியை வலியுறுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ்

10, நவம்பர் 2025 : திராவிட மாடல் அரசு தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களில் முதன்மையானதாக விளங்குவது புதுமைப்பெண் திட்டம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி கற்று, உயர் கல்வியில் சேர்க்கை பெறும் பெண் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகையை வழங்கி வரும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இந்த திட்டம், மாணவிகளின் கல்விப் பயணத்திற்கும், எதிர்கால நம்பிக்கைக்கும் பெரும் துணையாக உள்ளது.

பெண் குழந்தைகள் கல்வி பெறுவது ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, முழு தலைமுறையையும் முன்னேற்றும் சக்தியாகும் என்பதை வலியுறுத்தும் வகையில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில், கோயம்புத்தூர் பொறியியல் மாணவி ஒருவர் புதுமைப்பெண் திட்டத்தின் பயனை உணர்வுபூர்வமாக விளக்கும் காணொளியை பகிர்ந்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

இந்த காணொளி, பெண் மாணவிகள் கல்வியால் துயரங்களையும் தடைகளையும் தாண்டி வெற்றி பெறும் திறனை வெளிப்படுத்துவதோடு, முன்னேற்றமான தமிழ்நாட்டை உருவாக்கும் திராவிட மாடல் அரசின் கல்விக் கொள்கையை மேலும் வலுப்படுத்துகிறது.

மாநிலம் முழுவதும் 25 “அன்புச் சோலை” மையங்களை திருச்சியில் காணொளிக் காட்சி மூலம் தொடங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

திருச்சி, 10, நவம்பர் 2025 : மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள “அன்புச்சோலை” திட்டத்தின் புதிய மையத்தை திருச்சி பொன்மலையில் இன்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

ஒரு மாநகராட்சியில் இரண்டு மையங்கள் என்ற அடிப்படையில், திருச்சி உட்பட மொத்தம் 10 மாநகராட்சிகளில் 20 மையங்கள், பெருநகர் சென்னை மாநகராட்சியில் 3 மையங்கள் மற்றும் தொழில் மாவட்டங்களான இராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா ஒரு மையம் என மொத்தம் 25 “அன்புச் சோலை” மையங்களையும் முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக ஒரே நேரத்தில் துவக்கிவைத்தார்.

மூத்த குடிமக்களுக்கு தேவையான பராமரிப்பு, உடல்–மனம் நல ஆதரவு மற்றும் சமூக இணைவு ஏற்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் துவக்க விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முதன்மை கல்வி நிறுவனங்களில் உயர்வடைந்த அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் – மாணவியின் அனுபவக் காணொளியை பகிர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ்

11, நவம்பர் 2025 : மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட சிறப்பு பயிற்சிகள் மற்றும் முன்னேற்ற திட்டங்களின் பலனாக இதுவரை 2100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாட்டின் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை வருங்காலங்களில் மேலும் உயர வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் உறுதியாக பயிற்சி வழங்கி வருகிறார்கள். மாணவர்களும் கற்றலை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர். “கல்வித் தடைகளை உடைத்து நம்பிக்கையை விதைப்போம்; கனவை நனவாக்குவோம்” என்ற நோக்கத்துடன் செயல்படும் திராவிட மாடல் அரசின் கல்விக் கொள்கையின் வெற்றியை இது தெளிவுபடுத்துகிறது.

இதனை வலியுறுத்தும் வகையில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், அரசு மாதிரிப்பள்ளியில் கல்வி கற்று தற்போது Fashion Technology துறையில் படித்து வரும் மாணவி கவிபாரதி தனது கல்விப் பயண அனுபவத்தை விவரிக்கும் உணர்வுப்பூர்வமான காணொலியை, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். இந்த காணொலி, அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் திராவிட மாடல் அரசின் கல்வி மாற்றப் பயணத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

தேசிய கல்வி நாளை முன்னிட்டு மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்திற்கு மரியாதை செலுத்தும் பதிவினை பகிர்ந்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

11, நவம்பர் 2025 : நாட்டின் விடுதலைக்காக அமைதி வழியில் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினம் இன்று தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் சமமான கல்வியை நோக்கமாகக் கொண்ட இந்த மாபெரும் தலைவர், நாட்டின் கல்விக் கொள்கையை வலுவான அடித்தளத்தில் அமைத்தவராக போற்றப்படுகிறார்.

இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்காக தொலைநோக்குப் பார்வையுடன் வடிவமைக்கப்பட்ட அவரின் கல்வித் திட்டங்கள், இன்றளவும் எண்ணற்ற அறிஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவுகூர்ந்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

தேசிய கல்வி நாளை முன்னிட்டு, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், “அனைவருக்கும் சமமான கல்வி” என்ற உயரிய சிந்தனையை முன்னிறுத்திய மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தையும் கல்வி பங்களிப்புகளையும் மதிப்புடன் கொண்டாடுவோம் எனக் கூறி மரியாதை செலுத்தினார்.

பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பழனி, 11, நவம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துகளுடன் நடைபெற்ற பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில், மாண்புமிகு அமைச்சர் சக்கரப்பானி அவர்களுடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்றார்.

முன்னாள் மாணவர் அமைப்பு ஒருங்கிணைத்த இந்த சிறப்பு விழாவில், அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியும், விழா மலர் வெளியீடும் நடைபெற்றன. கல்வி துறையில் நூற்றாண்டு காலமாக சேவை செய்து, பல திறமையான ஆளுமைகளை உருவாக்கிய இந்தப் பள்ளியைப் பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “கல்விச் சேவையில் நூற்றாண்டை கடந்த இப்பள்ளியை கொண்டாடும் விழா, தேசிய கல்வி நாளில் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது”

என்று தனது வாழ்த்துரையில் தெரிவித்தார். பள்ளியின் வரலாற்றுப் பயணத்தையும் வளர்ச்சியையும் நினைவுகூர்ந்த இந்த விழா, கல்விக்கான திராவிட மாடல் அரசின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியது.

புதுமைப்பெண் திட்டம் சமூக முன்னேற்றத்தின் அடையாளம் — மாணவி முத்துமாரி அனுபவக்காணொளியை பகிர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ்

12, நவம்பர் 2025 : பெண் குழந்தையை கல்வியில் இருந்து விலக்கி ‘அடுப்பறை போதுமானது’ என்ற பழமைவாத கருத்துக்களின் வேர் அறுக்கப்பட்டு, உயர்விற்குப் படிப்படியாக வழிகாட்டும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது. பெண்கள் இடைநிற்றல் இல்லாமல் உயர் கல்வி தொடர வேண்டும் என்பதற்காக மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

இந்த திட்டத்தின் தாக்கத்தால், தமிழ்நாட்டில் மாணவிகளின் உயர் கல்விச் சேர்க்கை விகிதம் 34% ஆக உயர்ந்து, மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. கல்வியில் முன்னேற்றத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் இந்த முயற்சி, எண்ணற்ற குடும்பங்களுக்கு நம்பிக்கையின் ஒளியாக மாறியுள்ளது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில், ‘உயர்வுக்குப் படி’ திட்டத்தின் துணையால் புதுமைப்பெண் திட்டத்தில் பயன் பெற்ற தென்காசி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி முத்துமாரியின் அனுபவத்தை பகிரும் காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

பெங்களூரு கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் ELTAI 19வது சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்

பெங்களூர், 12, நவம்பர் 2025 : ஆங்கில ஆசிரியர்கள் சங்கமான ELTAI ஏற்பாடு செய்த 19வது வருடாந்திர சர்வதேச மாநாடு பெங்களூரு கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இந்தாண்டின் மாநாட்டு கருப்பொருளான “Lessons Taught, Lessons Learnt: Teacher and Learner Narratives” என்பது காலத்திற்கேற்ற முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஆங்கிலத்தை மனப்பாடம் செய்ய வேண்டிய ஒரு பாடமாக அல்லாது, உலகத்துடன் இணைக்கும் ஒரு பாலமாக பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆர்வத்தைத் தூண்டும், படைப்பாற்றலை வளர்க்கும், தொடர்புகளை உருவாக்கும் புதியகட்ட கல்வி முறைகளை உருவாக்க இத்தகைய மாநாடுகள் ஊக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், “நம்மை உருவாக்கிய அடையாள மொழியான தாய்மொழியின் பெருமையும் சக்தியையும் என்றும் மறக்கக்கூடாது” என்றார். மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைத்த ELTAI அமைப்பின் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இந்த நிகழ்வு ELTAI2025 மாநாட்டின் முக்கியத்துவத்தையும் கல்வியின் புதிய வாய்ப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக இடம்பெற்றது.

மாணவர்களின் வெற்றி பாதையை சித்திரிக்கும் திராவிட மாடல் அரசு — அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு

13, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டின் மாணவர்களும் இளைஞர்களும் அனைத்து துறைகளிலும் வெற்றி வாகை சூடும் வகையில் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

ஒருபுறம், நம் மாநில மாணவர்கள் சர்வதேச உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று உலகளவில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், தமிழ்நாட்டின் இளைஞர்கள் சர்வதேச விளையாட்டு அரங்குகளில் திகழ்ந்து வெற்றிப் பதக்கங்களை தொடர்ந்து குவித்து வருகின்றனர்.

“கல்விதான் மாணவர்களின் சொத்து; மாணவர்கள்தான் திராவிட மாடல் அரசின் சொத்து” என்று மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறிய கருத்தை நினைவுகூர்ந்து, கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற மும்முறை தாண்டுதல் வீரர் பிரவீன் சித்திரவேல் அவர்கள் தாம் பெற்ற பயனை விளக்கும் காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என, மாநிலப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.

திராவிட மாடல் அரசின் திட்டங்கள், உலகளாவிய மேடைகளில் சாதனை புரியும் திறமைசாலி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான உறுதியான தளமாக மாறி வருவதையும் இந்த பதிவு வலியுறுத்துகிறது.

பெங்களூருவிலுள்ள தேசிய நெசவு தொழில்நுட்பக் கழகத்தில்  நிப்ட்(NIFT)  தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 

பெங்களூர்,13, நவம்பர் 2025 : பெங்களூருவிலுள்ள நாட்டின் இரண்டாவது சிறந்த தேசிய நெசவு தொழில்நுட்பக் கழகமான நிப்ட் (NIFT) வளாகத்தைப் பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தமிழக அரசு பள்ளிகளில் பயின்று, தற்போது நிப்ட்(NIFT)  பெங்களூரு மற்றும் ஆர்ஐஇ  (RIE) மைசூரு போன்ற சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து கல்வி பயிலும் 2025ஆம் ஆண்டு வகுப்பு சேர்ந்த 29 மாணவ–மாணவிகளை சந்தித்து உரையாடினார். அவர்களின் உயர்கல்வி பயணம் சிறக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த சந்திப்பில், மாணவர்கள் அனைவரும் தங்கள் கல்விப் பயணத்தில் துணிவும் புதிய சிந்தனையும் கொண்டு முன்னேற வேண்டும் என ஊக்குவித்ததோடு, தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார். மாணவர்களின் கல்வியை மேலும் வலுப்படுத்துவதற்காக மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. 

குழந்தைகளின் தூய மனத்தைப் போற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி – எக்ஸ் பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்துப் பதிவு

14, நவம்பர் 2025 : குழந்தைகள் மனதில் எந்தவிதக் களங்கமும் இல்லாத தூய மனப்பான்மையுடன் இவ்வுலகை ரசிப்பவர்களாகவும், யாரையும் குறித்து தீர்ப்பளிக்காதவர்களாகவும், தங்களது வாழ்க்கையை அழகாகக் கனவு காண்பவர்களாகவும் உள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், குழந்தைகளின் இயல்பான நுண்ணுணர்வு, எண்ணங்களின் தூய்மை, கனவுகளின் பெருமையை போற்றி, அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மகிழ்ச்சியான குழந்தைகள் தின  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

யுபிஎஸ்சி தேர்வில் இருமடங்காக வெற்றி — ‘நான் முதல்வன்’ திட்டத்தின் சாதனைகளை வெளிப்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 

14, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பயனாக, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தமிழ்நாட்டு இளைஞர்கள் யுபிஎஸ்சி தேர்வில் இரு மடங்கு அதிகமாக தேர்ச்சி பெற்று சிறப்பான சாதனையைப் படைத்துள்ளனர். அரசுப் பணியில் சேர்வதற்கான வாய்ப்புகளை மட்டுமல்லாது, உயர்கல்வி பயிலும் போதே வேலைவாய்ப்புக்கான பாதையை அமைத்து தருகின்றது இந்த திட்டம்.

ஆதரவற்ற சூழலில் வாழ்ந்த மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி ஷாலினிக்கு, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் கிடைத்த Digital Construction திறன் பயிற்சி மிகப்பெரிய தன்னம்பிக்கையும் தைரியமும் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வியால் தன்னை முன்னேற்றிக்கொள்ளும் எண்ணற்ற ஷாலினிகளின் வாழ்க்கைக்கு திசைகாட்டும் ஒளிவிளக்காக திராவிட மாடல் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் திகழ்கிறது. இந்தக் குறிப்பிடத்தக்க வெற்றி கதைகளை எடுத்துரைக்கும் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்வின் காணொளியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

காரைக்குடியில் குழந்தைகள் தின மாநில விழா, மிதிவண்டி வழங்கல், துறை ஆய்வுக்கூட்டம் மற்றும் இராம.சுப்பையா நினைவுவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இணைந்து வரவேற்பு, ஒத்துழைப்பு

சிவகங்கை , 14, நவம்பர் 2025 : காரைக்குடியில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த குழந்தைகள் தின விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை அன்புடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வரவேற்றார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர், மாநிலம் முழுவதும் 5,34,000 மாணவ–மாணவிகளுக்கு ரூ.241 கோடி மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கும் மாநில விழாவை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 11,449 மாணவ–மாணவிகளுக்கு நேரில் மிதிவண்டிகளை வழங்கினார். மேலும், மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.

பின்னர், துணை முதலமைச்சர் தலைமையில் சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் காரைக்குடி திருமதி லஷ்மி அம்மாள் வளர் தமிழ் நூலக அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் இணைந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வாக, திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் திரு. சுப. வீரபாண்டியன், திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி. முத்துராமன் ஆகியோரின் தந்தையார், தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் திரு. இராம. சுப்பையா அவர்களின் 118வது பிறந்தநாள் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் புகழுரை ஆற்றி, அய்யாவின் உருவச் சிலையை திறந்து வைத்தார்.

“தலைவர் தொண்டரைப் போல உழைப்பார்; தொண்டர் தலைவரைப் போல வழிகாட்டுவர் – இதை இராம. சுப்பையா போன்றோரின் வரலாறு நினைவூட்டுகிறது. கழக முன்னோடிகளை என்றும் போற்றுவோம்” என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அஞ்சலி நவிலினார்.

இந்த நிகழ்வுகளில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுடன் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, மாங்குடி, முத்துராஜ் உள்ளிட்டோர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ்., பிற்படுத்தப்பட்டோர் – மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை செயலாளர் சரவணவேல்ராஜா ஐ.ஏ.எஸ்., மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஐ.ஏ.எஸ்., மாணவர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் கழக முன்னணியினர் பலரும் கலந்து கொண்டனர்.

சிறுகதை மன்னன் எஸ்.எஸ். தென்னரசு அவர்களின் புதுப்பிக்கப்பட்ட சிலையை திறந்து வைத்து வணங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கை,15, நவம்பர் 2025 : தமிழக கழக முன்னாள் அமைப்புச் செயலாளர் மற்றும் சிறுகதை மன்னன் எனப் போற்றப்பட்ட திரு. எஸ்.எஸ். தென்னரசு அவர்களின் புதுப்பிக்கப்பட்ட சிலையை, கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களுடன் இணைந்து திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருங்காகோட்டை கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அந்தப் பகுதியில் முகவணை கட்டிக்கொடுத்தது திரு. தென்னரசு அவர்கள். அவர்மீது கொண்ட அன்பும் நன்றியும் பொங்கிய கிராம மக்கள், அவருக்கு நினைவாக சிலை அமைத்து போற்றி வருகின்றனர்.

இந்த அன்பும் நன்றியும் கலந்த விழாவில் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர் எஸ். ரகுபதி ஆகியோருடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

சிங்கம்புணரியில் அண்ணா–கலைஞர் சிலைகள் திறப்பு மற்றும் நலத்திட்ட வழங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

சிவகங்கை, 15, நவம்பர் 2025 : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இன்று நடைபெற்ற சிறப்புவிழாவில், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் நலனுக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டுசென்றார். விழாவின் ஆரம்பத்தில், பேரறிஞர் அண்ணா மன்றத்தினால் அமைக்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் முழுஉருவச்சிலை, முன்னாள் அமைச்சர் திரு. செ. மாதவன் அவர்களின் சிலை மற்றும் கழக முன்னோடி மறைந்த திரு. சொக்கலிங்கம் அவர்களின் திருஉருவப்படம் ஆகியவற்றை பொதுமக்களுடன் இணைந்து திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய துணை முதலமைச்சர், கழகத்தின் அசைக்கமுடியாத கொள்கை வலிமை, மக்கள் சார்ந்த தலைமை மற்றும் அமைப்பு உறுதியின் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழக அணி 200-க்கும் அதிகமான இடங்களை வெற்றி பெறுவது உறுதி என வலியுறுத்தினார்.

அதேநேரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட வழங்கும் விழாவில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளை அவர் பார்வையிட்டார். பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கர மோட்டார் வண்டிகள், செவித்திறன் கருவிகள், கைபேசிகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி பயனாளிகளை வாழ்த்தினார். இவ்விழாவில் சுமார் 8,500 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.89 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், ரூ.18 கோடி மதிப்புடைய 23 முடிவுற்ற திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. அதோடு மானாமதுரை தொகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்படும் புதிய மினி ஸ்டேடியத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நலத்திட்டங்களைப் பெற்ற மகளிர், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் துணை முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

இந்த நிகழ்வுகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். இரகுபதி, ஆ. தமிழரசி, ரவிக்குமார் ஆகியோர், அரசு அலுவலர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது வாக்காளர் பெயர் உறுதிப்படுத்தல் நடவடிக்கை மூலம்  விழிப்புணர்வை வலியுறுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ்

திருவெறும்பூர், 16, நவம்பர் 2025 : SIR (Special Intensive Revision) திட்டத்தின் ஒரு பகுதியாக, அமைச்சரும் திருச்சி கிழக்கு MLA-வுமான மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது இல்லத்தில் வருகை தந்த வாக்காளர் பதிவு அலுவலரிடம் (BLO) தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தார்.

இதன் மூலம், திருவெறும்பூர் தொகுதி பாக எண்: 147 வாக்காளர் பட்டியலில் தனது பெயர் சரியாக இடம்பெற்றிருப்பதை அவர் உறுதிப்படுத்திக் கொண்டார். பொது மக்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இணைப்பு, திருத்தம், நீக்கம் போன்ற பணிகளை காலத்தில் நிறைவு செய்து கொள்வது அவசியம் எனவும், இது ஒரு ஜனநாயக கடமையாக கருதப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி லீக் – சீசன் 2: திருச்சியில் வெற்றிகரமாக நிறைவு

திருச்சி, 16, நவம்பர் 2025 : தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி லீக் – சீசன் 2 திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியை திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேரில் பார்வையிட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார். மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட விளையாட்டு போட்டிகள் பெரும் ஊக்கமளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு: அரசு பள்ளி மாணவிகளின் சாதனையை உலகுக்கு எடுத்துக்காட்டும் திராவிட மாடல் அரசு

17, நவம்பர் 2025 : சேலம் கல்வராயன் மலையிலுள்ள வேலம்பட்டு குக்கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் கல்வி கற்று, JEE நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்ற சிறப்புச் சாதனை படைத்துள்ளார். தற்போது அவர் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (NIT Trichy) Production Engineering துறையில் பயின்று வருகிறார்.

தமிழ்நாட்டு மாணவர்கள் இந்திய மற்றும் சர்வதேச உயர்கல்வி நிறுவனங்களில் முன்னிலை வகிக்க வேண்டும் என்பதற்காக, சிறப்பு பயிற்சி, கல்வி உதவித்தொகை, உபகரணங்கள், பயணக் கட்டணம், கல்லூரிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்திலும் முழு ஆதரவு வழங்கி வருகிறது மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

நாட்டின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மாணவர்கள் நுழைந்து உலகிற்கு அறிவுச் சுடராய் விளங்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, “சிறகுகள் விரிப்பதெல்லாம் வானத்தை ஆள்வதற்கே!” என்ற செய்தியுடன் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்வின் காணொளியை பகிர்ந்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு முனைவர் பட்டம்: கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்த அரிய ஆய்வு!

திருச்சி, 17, நவம்பர் 2025 : தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருச்சி தேசியக் கல்லூரி உடற்கல்வியியல் துறையில் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்து வாய்மொழித் தேர்வை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

2021ஆம் ஆண்டுமுதல் ‘இயந்திரக் கற்றல் வழியாக பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உடலியக்கச் செயல்பாடு’ என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்ட அவர், கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வாய்மொழித் தேர்வில் பங்கேற்று தனது ஆய்வின் முக்கியத்துவத்தை விளக்கினார். ஆய்வறிக்கையை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் புறத் தேர்வாளர் எஸ். திருமலைக்குமார் பெற்றுக்கொண்டார்.

தேசியக் கல்லூரி துணை முதல்வரும் உடற்கல்வியியல் துறை இயக்குநருமான து. பிரசன்ன பாலாஜியின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு உடற்கல்வி மற்றும் உடலியக்கச் செயல்பாடுகள் எவ்வாறு பங்களிக்கின்றன, கணினிசார் நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பம் கற்றல் திறன் மேம்பாட்டில் எவ்வாறு துணை செய்யிறது என்பதைக் குறிப்பாக பகுப்பாய்வு செய்துள்ளார். பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் ஒப்புதலுக்குப் பின்னர் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

“உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்று தொடர்ந்து படியுங்கள்… கற்றலுக்கு முடிவே கிடையாது என்று எங்கள் திராவிடத் தலைமையாசிரியர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறிய அறிவுரை எனக்கும் பொருந்தும்,” என்றும் “எனக்குக் கிடைக்கும் எந்த பெருமைக்கும் காரணம் என் தலைமையாசிரியர் முதலமைச்சர் அவர்கள்தான்” என்றும் நன்றியைத் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். தந்தையின் இடத்தில் இருந்து உச்சி முகரும் எம் தலைமையாசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் முதல்வன் திட்டம்: இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திராவிட மாடல் அரசின் முன்னணி முயற்சி

18, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டம் மூலம், தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரும் தங்களின் இலக்கை அடைவதற்கான பாதையில் தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகின்றனர். கனவுகளைச் சுமக்கும் இளைஞர்களை தயக்கங்களை உடைத்து வெற்றிப் பட்டமரங்களில் ஏற்றும் பணியில் திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

“நம்பிக்கைகொண்ட மனங்களுக்கு நான்கு திசைகளும் ‘கிழக்கு’தான்!” என்ற உற்சாகப்போக்கு மிக்க செய்தியுடன், கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வின் காணொலியை பகிர்ந்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

கோயம்புத்தூர் சி.பி.எம் கல்லூரி மாணவர் தினேஸ்வர், நான் முதல்வன் திட்டத்தின் வழியாக பெற்ற பயன்களைப் பகிர்ந்த காணொளி, மாணவர்களின் திறன் மேம்பாடு, இலட்சிய நோக்கத்திற்கான வழிகாட்டுதல், உயர்கல்வி வாய்ப்புகள் என பல்வேறு துறைகளில் திட்டம் கொண்டு வரும் மாற்றத்தைக் காட்டுகிறது.

தமிழக இளைஞர்கள் தங்களது கனவுகளை நனவாக்கி முன்னேற நம்பிக்கை ஊட்டும் இந்தத் திட்டம், கல்வித் துறையில் மாநிலத்தின் முன்னணித் தரத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி: தஞ்சாவூரில் வெற்றி கோப்பையை வரவேற்று அறிமுகம் செய்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 

தஞ்சாவூர், 18, நவம்பர் 2025 : தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான வெற்றி கோப்பையை வரவேற்று அறிமுகம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் கோவி. செழியன் அவர்களுடன் இணைந்து கோப்பையினை அறிமுகப்படுத்தினர்.

நிகழ்வில் துறைச் செயலாளர் சந்திரசேகர், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இளையோர் விளையாட்டு முன்னேற்றத்தையும் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.

வல்லம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு: மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தஞ்சாவூர், 18, நவம்பர் 2025 :  தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவச் செல்வங்களை நேரில் சந்தித்து அவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்த அவர், பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறைகள் தொடர்பான கட்டுமானப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். மாணவர் நலனும் பள்ளி வசதிகளின் மேம்பாடும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இந்த ஆய்வு வலியுறுத்தியது.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தில் மரியாதை செலுத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி, 18, நவம்பர் 2025 : அந்நிய சுரண்டலுக்கு எதிராக கப்பல் நிறுவனம் நடத்தி போராடிய செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, திருச்சியில் அமைந்துள்ள அய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளை நினைவு கூர்ந்து, இந்நாளில் அமைச்சர் அஞ்சலி செலுத்தினார். தேசிய உணர்வையும் தன்னம்பிக்கையையும் முன்னெடுத்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் வீரப்பணியை நம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் வகையில் நிகழ்வு நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் மாநில இளைஞரணிச் செயலாளர் சினேகன் அவர்களின் தந்தை திருவுருவப் படம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தஞ்சாவூர், 18, நவம்பர் 2025 : மக்கள் நீதி மய்யத்தின் மாநில இளைஞரணிச் செயலாளர் கவிஞர் திரு. சினேகன் அவர்களின் தந்தையார் மறைந்த திரு. ம. சிவசங்கு அவர்களின் திருவுருவப் படம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கமலஹாசன் அவர்கள் திருவுருவப் படத்தை திறந்துவைத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான திரு. அமீர் அவர்களுடன் இணைந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த சிவசங்கு அவர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, குடும்பத்தாருக்கும் சமூகத்தாருக்கும் பெரும் உணர்ச்சி பொங்கலாக அமைந்தது.

உசிலம்பட்டியில் சாரண இயக்கப் பொன்விழாவில் அமைச்சர்கள் இணைந்து பங்கேற்பு

மதுரை, 18, நவம்பர் 2025 : உசிலம்பட்டியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்ற நிலையில், அங்கு அமைந்திருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் திரு. மூக்கையா தேவர் ஆகியோரின் சிலைகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பி. மூர்த்தி அவர்களுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். இந்நிகழ்வில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன், நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், உசிலம்பட்டி பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் பொன் விழா நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் பி. மூர்த்தி அவர்களுடன் இணைந்து மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார். பொன்விழா மலரினை வெளியிட்ட அவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் சாரண இயக்கம் நிகழ்த்திவரும் சிறப்பான சாதனைகளைப் பட்டியலிட்டு உரையாற்றினார்.

முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் முனைவர் பட்டச் சான்றிதழை சமர்ப்பித்து வாழ்த்து பெற்றார்  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை,19, நவம்பர் : தனது அரசியல் ஆசானும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் தனது முனைவர் பட்டத்திற்கான தற்காலிகச் சான்றிதழை (Provisional Certificate) வழங்கி வாழ்த்துகள் பெற்றார் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். அமைச்சரின் கல்விச்சாதனையை பாராட்டிய முதல்வரும் துணை முதல்வரும், எதிர்காலத்தில் மேலும் உயர்ந்த நிலைகளை அடைய அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அறிவியல் உணர்வு வளர்க்கும் புதிய முயற்சி – சிறார் அறிவியல் பூங்கா திறந்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை, 19, நவம்பர் 2025 : குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற திராவிட இயக்கத்தின் நோக்கத்தை முன்னெடுத்து, அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “சிறார் அறிவியல் பூங்கா” திறக்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2024–25 ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் “அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா அமைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ. 80.24 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள Children’s Science Park-ஐ மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்  திறந்து வைத்தார்.

தொடர்ந்து கூட்டரங்கில், பொதுநூலகத் துறை சார்பில் நடைபெற்ற நூலக வார விழாவில் டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது உட்பட மூன்று விதமான விருதுகள் 80 நபர்களுக்கும், சிறந்த நூலகங்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன. விருதளிக்கப்பட்ட அனைவருக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ‘Digi Arivu’ திட்டத்துக்கு சாம்சங் – ரூ.4 கோடி முதலீடு அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு

சென்னை,19, நவம்பர் 2025 : காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள 10 அரசுப்பள்ளிகளில், சாம்சங் நிறுவனம் தனது சமூக பொறுப்புத் திட்டமான “Digi Arivu – Empowering Students through Tech” முயற்சியின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) பரிமாற்ற நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து விளக்கினார். அத்துடன், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெறும் இந்த முக்கியமான பங்களிப்பிற்காக சாம்சங் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார்.

மாதிரிப்பள்ளி மாணவர்களின் உயர் கல்விச் சாதனைகளை முன்னிறுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி


19, நவம்பர் 2025 :  உலகத் தரத்திலான கல்விக் கட்டமைப்பை தமிழ்நாட்டில் உருவாக்கி, எதிர்காலத் தலைமுறைக்கு உயர்ந்த லட்சியங்கள் மற்றும் கனவுகளை விதைத்து அவற்றை நனவாக்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். அரசு மாதிரிப்பள்ளிகள் வழியாக இந்த வாய்ப்புகள் விரிந்து, பல மாணவர்களின் கல்விப் பயணம் புதிய உயரங்களை எட்டுகிறது.

ஒருகாலத்தில் அரசுப் பேருந்தில் ஏறிப் பக்கத்து ஊர்களுக்குப் படிக்கச் சென்ற நம் பிள்ளைகள், இன்று விமானங்களில் பறந்து வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களிலும், நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கைப் பெறுவது, திராவிட மாடல் அரசின் கல்விச் சீர்திருத்தங்களின் விளைவாகும்.

மாணவர்களின் அறிவு, திறன், ஆற்றல் வெளிப்பட அரசு துணை நிற்கும் எனும் நம்பிக்கையில் ஒளிர்கிறது திராவிட மாடல் அரசு. “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாதிரிப்பள்ளியில் படித்து உத்தரப்பிரதேசத்தின் ராஜீவ் காந்தி நேஷனல் ஏவியேஷன் யூனிவர்சிட்டியில் BMS Aviation படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவன் ஹரிஷ் அவர்களின் சாதனைக் காணொளியைப் பகிர்ந்துள்ளார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

திருவெறும்பூரில் 1,632 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர், 19, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவெறும்பூர் தொகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

அந்த வகையில், 13 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 1,632 மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ. 78.5 லட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. மிதிவண்டிகளைப் பெற்ற மாணவர்கள் கல்விப் பயணத்தில் மேலும் முன்னேற வாழ்த்துகளைத் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

அர்ஜூனா விருது வென்ற ஜெர்லின் அனிகாவுக்கு திராவிட மாடல் அரசின் பெருமைமிகு பாராட்டினை தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

20, நவம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் செயல்படும் திராவிட மாடல் அரசும், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றுள்ள விளையாட்டுத் துறையும், தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களை அவர்கள் விரும்பும் விளையாட்டு துறைகளில் சர்வதேச மட்டத்தில் சாதனை படைக்கும் வகையில் பல்வேறு ஊக்கத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாற்றுத்திறன் மாணவி ஜெர்லின் அனிகா, ஒலிம்பிக் உட்பட பல்வேறு சர்வதேச பாட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல பதக்கங்களை வென்று நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளார். நாட்டின் உயரிய விளையாட்டு விருதான அர்ஜூனா விருதை பெற்ற அவர், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய திறமையாளர்களின் சாதனைகள் மேலும் விரிவடையவும், எண்ணற்ற இளைஞர்கள் தங்கள் இலக்குகளை எட்டவும், ஊக்கத்தொகை மற்றும் உதவித் தொகை வழங்கி தன்னலமற்ற ஆதரவு அளித்து வருகிறது நம் திராவிட மாடல் அரசு. “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சி தொடர்பான காணொளியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்து, ஜெர்லின் அனிகாவின் வெற்றியை பெருமையுடன் பாராட்டியுள்ளார்.

நீதிக்கட்சி உதயமான நாள் – திராவிடக் கருத்தியலின் பாதையில் தொடருவோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிமொழி

20, நவம்பர் 2025 :  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் செயல்படும் திராவிட மாடல் அரசு உருவாகக் காரணமான அடித்தளச் சிந்தனை — நீதிக்கட்சி உதயமான நாளை நினைவுகூரும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்பு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஆரிய மேலாதிக்கம் வலுவாக இருந்த காலகட்டத்தில், சாதாரண மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தர நீண்ட போராட்டம் நடத்திய நீதிக்கட்சி தலைவர்களின் தியாகப் பயணத்தை குறிப்பிட்டு, அவர்கள் தொடங்கிய சமத்துவப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து, திராவிடக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவோம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

நீதிக்கட்சி உதயநாளை ஒட்டி பதிவிட்ட இச்செய்தியில், சமூக நீதி, வாய்ப்புச் சமத்துவம், மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட நம் திராவிட அரசியல் பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சுரானா பள்ளிக் குழுமத்தின் 43வது ஆண்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்பு பங்கேற்பு

சென்னை, 20, நவம்பர் 2025 : சுரானா பள்ளிக் குழுமத்தின் 43வது ஆண்டு விழா சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அவர்கள், டிஜிட்டல் யுகத்தில் மாணவர்கள் விவேகப்பூர்வமாகவும் நியாயவாத சிந்தனையுடனும் செயல்பட வேண்டியது முக்கியம் என வலியுறுத்தினார். இதையடுத்து, பள்ளி உருவாக்கிய AI Teacher Avatar தொழில்நுட்பத்தைக் அமைச்சர் அவர்கள் திறந்து வைத்ததுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியாக நிறுவப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரத்தையும் அறிமுகப்படுத்தினார்.

முனைவர் பட்டம் பெற்றதற்காக அன்புமிகு மாணவர்கள் குழுமியிருந்த காமராசர் அரங்கில் மதிப்பிற்குரிய தி இந்து பத்திரிக்கை இயக்குனர் ராம்  அவர்கள், தனது வாழ்த்துகளைத் தெரிவித்து நெகிழ வைத்தார். அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

‘திராவிடம் 2.O ஏன்? எதற்கு?’ நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

சென்னை,20, நவம்பர் 2025 : ஊடகவியலாளர் சகோதரர் ‘தமிழ் கேள்வி’ செந்தில்வேல் அவர்கள் எழுதிய ‘திராவிடம் 2.O ஏன்? எதற்கு?’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் கழக இளைஞரணி செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நூலை வெளியிட, அதை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

விழாவில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “கலைஞர் 2.O ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கையில், ‘திராவிடம் 2.O’ நூலை தலைவர் 2.O அவர்கள் வெளியிடுகிறார். இந்நூலை நாம் அனைவரும் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நே. சிற்றரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

‘நான் முதல்வன்’ திட்டம் இளைஞர்களை உலகளவில் திகழச் செய்கிறது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

21, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு இளைஞர்களை தலைநிமிரச் செய்ய உருவாக்கிய முக்கிய முயற்சிகளில் ஒன்றான ‘நான் முதல்வன்’ திட்டம், அரசுக் கல்லூரிகளில் பயிலும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிர்காலத்திற்கான வலுவான பாதையை அமைத்து வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறைகளில் பன்னாட்டு நிறுவனங்களில்கூட தடம் பதிக்க வழிகாட்டுகின்றன. மதுரையைச் சேர்ந்த மாணவி ஆதித்யா, ‘நான் முதல்வன்’ திட்டம் தனக்கு தந்த தன்னம்பிக்கை அனுபவத்தை கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

அதைப் பதிவு செய்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “தயக்கத்தை உடைத்து தன்னம்பிக்கையை விதைக்கும் திராவிடமாடல் அரசின் திட்டங்களால் தமிழ்நாடு உயர்ந்து, உலக அரங்கில் மிளிரும்” என குறிப்பிட்டு பெருமை பாராட்டியுள்ளார்..

மாநில அளவிலான 41-வது பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவண்ணாமலை, 21, நவம்பர் 2025 : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாநில அளவில் நடைபெறும் 41-வது பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கே. பிச்சாண்டி அவர்கள் இணைந்து பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தனர். பின்னர், போட்டியில் திறன் வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கு கோப்பைகள் வழங்கி கெளரவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. மாணவர்களிடம் உரையாற்றிய அவர், “வகுப்பறை கல்வியைப் போலவே விளையாட்டுக் கல்வியையும் மாணவர்கள் விருப்பத்தோடு கற்க வேண்டும். உங்கள் ஒவ்வொருவரின் வெற்றி என்பது நாட்டிற்கான வெற்றி,” எனத் தெரிவித்தார்.

வேளானந்தல் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக உயர்வு – அரசாணை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவண்ணாமலை, 21, நவம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவண்ணாமலை மாவட்டம் வேளானந்தல் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு விழாவில் பள்ளியின் தர உயர்வு குறித்த அரசாணையை வழங்கினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

இந்த நிகழ்வில் மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கே. பிச்சாண்டி அவர்கள் மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் இணைந்து அரசாணையை வழங்கினர். மேலும், 11-ஆம் வகுப்பில் புதிதாக சேர்க்கை பெற்றுள்ள மாணவச் செல்வங்களுக்கு தனது அன்பு வாழ்த்துக்களையும் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, 21, நவம்பர் 2025 : மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், லேடி வில்லிங்டன் பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, தனது சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாணவர்களுக்கு 2025–26 கல்வியாண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

மொத்தம் 771 மாணவச் செல்வங்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்ட இவ்விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மற்றும் போக்குவரத்து, மின்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்களின் கல்வி பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் செயல்படும் இத்தகைய நலத்திட்டங்கள், மாநிலத்தின் கல்வி முன்னேற்றத்தை வலுப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை, 21, நவம்பர் 2025 : மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வைச் சார்ந்த ஆலோசனைக் கூட்டம் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர். கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆசிரியர்களின் பணி பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யாது. சட்ட விதிமுறைகளின்படி தொடர்ந்து போராடுவோம்,” என உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து, ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்த கருத்துக்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்கு எடுத்துச்சென்று ஆலோசனைகளையும் பெற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் பயன்களை வெளிப்படுத்திய மாணவன் கிரி – கல்வி வெற்றிக்கான தூணாக விளங்கும் தமிழக அரசு

22, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்து வரும் ‘நான் முதல்வன்’ திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கும் முன்னோடியான முயற்சியாக திகழ்கிறது. JEE, CLAT போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் எந்தத் தயக்கமும் இன்றி கலந்துகொண்டு வெற்றி பெற, இந்தத் திட்டம் மாணவர்களுக்கு தேவையான பயிற்சியும் ஊக்கமும் வழங்கி வருகிறது.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து, உலகின் வருங்காலத்தை வடிவமைக்கும் திறனாளிகளாக மாற்றும் பணியை திராவிட மாடல் அரசு தொடர்ந்து செய்து வருகிறது. “சென்றிடுவீர் எட்டுத்திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற பாரதியின் கனவு, தமிழக இளைஞர்களின் சாதனைகளால் அழகாக நிறைவேறி வருகிறது.

இந்தப் பின்னணியில், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவரான கிரி, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், ‘நான் முதல்வன்’ திட்டத்தால் பெற்ற தனது பயன்களை உணர்வுபூர்வமாக பகிர்ந்த கணொலி, அனைவரது உள்ளத்தையும் நெகிழச் செய்தது. மாணவரின் அந்த பகிர்வை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திட்டத்தின் நன்மைகள் மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தை பெருமையாகக் குறிப்பிட்டார். தமிழக மாணவர்கள் தொடர்ந்து படைக்கும் இந்த உயர்வுகள், நாளை நம்பிக்கையுடன் நமது பக்கத்தில் நின்றிருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்துகின்றன!

கனவுகளை கல்லூரி வாசலில் சேர்த்த ‘நான் முதல்வன்’ – கிருத்திகாவின் வெற்றி பயணத்தை பகிர்ந்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 

23, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய உறுதியான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கில், 2022 ஜூன் 25 அன்று ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவுத் திட்டத்தை உருவாக்கினார். உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு இல்லாமல் பல்வேறு காரணங்களால் தளர்ந்து நின்றிருந்த மாணவர்களை மீண்டும் எழுப்பி, தகுந்த வழிகாட்டுதலுடன் கல்லூரி நுழைவாயிலுக்கு கொண்டு சேர்ப்பதில் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தரமான கல்வியையும், திறன் பயிற்சிகளையும் வழங்கி, மாணவர்களை தங்கள் கனவுகளை நோக்கி முன்னேறச் செய்யும் திராவிட மாடல் அரசு, பலரின் வாழ்க்கையில் புதிய துவக்கங்களை உருவாக்கி வருகிறது. அப்படி ‘நான் முதல்வன்’ கண்டெடுத்த ஒரு நல்முத்து – தங்கை கிருத்திகா. “நம்பிக்கை வேண்டும்… நம் வாழ்வில் லட்சியம் வெல்லும் ஒரு நாளில்!” என்ற எண்ணத்துடன், இன்று சமூகப் பணி முதுநிலை படித்து வருகிறாள்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் தனது பயணத்தை விளக்கும் கிருத்திகாவின் உணர்ச்சி பூர்வமான காணொலியை, மாணவர்களுக்கு ஊக்கமாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்து உள்ளார். கனவுகளைக் கைவிடாமல் முன்னேறினால், கல்லூரி வாசல் தானாக திறக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தும் வெற்றி கதை இது.

முத்தமிழறிஞர் கலைஞரின் மனசாட்சியாக விளங்கிய முரசொலி மாறனை நினைவுகூர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

23, நவம்பர் 2025 : திராவிட இயக்க முன்னோடியாகவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாகவும் போற்றப்படும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு. முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அரசியல் நேர்மை, எளிமை, துறுதிப்பான தலைமைத்துவம் என பல்வேறு பண்புகளை தன்னகத்தே தாங்கிய முரசொலி மாறன் அவர்கள், திராவிட இயக்க வளர்ச்சிக்காக செய்த பங்களிப்புகளை நினைவு கூரும் நிகழ்வாக இது அமைந்தது. கட்சி நிர்வாகி­கள், மாணவணி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

காவேரியில் 60,000 நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு – உள்நாட்டு மீன்வள வளர்ச்சிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னெடுப்பு

திருச்சி, 23, நவம்பர் 2025 : உள்நாட்டு மீன்வளத்தை மேம்படுத்தவும், நாட்டின் சொந்த மீன் இனங்களை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் திருச்சி காவேரி ஆற்றில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த முயற்சியை முன்னின்று செயல்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், காவேரி ஆற்றில் 60,000 எண்ணிக்கையிலான மீன்குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்து, சுற்றுச்சூழல் சமநிலைக்கும், மீனவர் சமூகத்தின் வாழ்வாதார வளத்திற்கும் வலுசேர்த்தார். உள்நாட்டு மீன் இனங்களைப் பாதுகாக்கும் இந்த நடவடிக்கை, எதிர்கால மீன்வள வளத்தை அதிகரிக்கும் முக்கியமான படியாக கருதப்படுகிறது.

கேரம் விளையாட்டில் தமிழகம் தலையை உயர்த்திய உலக சாதனையாளர் காசிமாவை கௌரவித்த தமிழக அரசு – வீராங்கனைக்கு 1 கோடி ரூபாய் பரிசு

24, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிகழ்த்தி வரும் சாதனைகளின் சான்றாக, கேரம் விளையாட்டில் உலகநிலையை வென்று தமிழகம் தலையை உயர்த்திய வீராங்கனை தங்கை காசிமா திகழ்கிறார்.

உலக சாம்பியனாக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கிய உற்சாகமும் ஆதரவும் முக்கிய பங்காற்றியது. சாதனைகளை நோக்கிப் பாயும் இளைஞர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களை உலக அரங்கில் அறிமுகப்படுத்தும் கலங்கரை விளக்கமாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.

காசிமா உலக அளவில் சாதனை படைத்ததை பாராட்டும் விதமாக, அவரது முயற்சியையும் உழைப்பையும் மதித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கி கௌரவித்தது, அவரது குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. “திராவிட மாடல் அரசின் மக்கள் நலச் சாதனைகள் தொடரட்டும்! விளையாட்டிலும் மற்ற துறைகளிலும் நம் இளைஞர்கள் தொடர்ந்தும் வெற்றிகளைப் பெறட்டும்!” என, கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியின் காணொலியை பகிர்ந்து வாழ்த்துத் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

தமிழ்நாட்டு மாநில கல்விக் கொள்கை முன்னேற்றப் பாதையில் – உயர்மட்ட வல்லுநர் குழுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது

சென்னை, 24, நவம்பர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தைப் புதுப்பிக்கும் பணிகள் வேகமெடுத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, மாநில கல்விக் கொள்கை அமலாக்கத்திற்கான உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் புதிய கலைத்திட்ட வடிவமைப்புக் குழு கூட்டம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள், கல்வி நிபுணர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்ளும், சுமையற்ற, காலத்திற்கேற்ற, திறன் மேம்பாட்டை உறுதி செய்யும் புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விரிவான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. தமிழ்நாட்டின் கல்வி தரத்தைக் கூடுதல் உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தச் செயல்பாடுகள், மாநில கல்விக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்தும் முக்கியமான படியாக அமைந்துள்ளது.

“சிறுபான்மையினர் போற்றும் இளம் தலைவர்” – உதயநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை, 24, நவம்பர் 2025 : கழக இளைஞரணி செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இராயப்பேட்டை புதுக்கல்லூரி கலையரங்கத்தில் தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு சார்பில் “சிறுபான்மையினர் போற்றும் இளம் தலைவர்” என்ற தலைப்பில் சிறப்பு விழா சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இவ்விழாவில், பிறந்தநாள் பாடல் வெளியிடப்பட்டதுடன், சிறுபான்மையினர் சமூகத்திற்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. சிறுபான்மையினர் நலனுக்காகவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்கள் செய்து வரும் பணிகள் குறித்து விரிவாக உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், சமூக நலனில் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்யும் அரசின் அர்ப்பணிப்பையும் இவ்விழாவில் வலியுறுத்தினார். சிறுபான்மையினரின் முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தும் நிகழ்வாக இவ்விழா அமைந்தது.

புதுமைப் பெண் திட்டம் மாற்றிய வாழ்வு – சிறந்த தமிழ்நாட்டின் முன்னுதாரணமாக  மாணவி ஜமீலாபீ – வின் காணொலியை பகிர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ்

25, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்திய புதுமைப் பெண் திட்டம், உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கி, அவர்களின் வாழ்க்கையில் பொருளாதார நம்பிக்கையையும் கல்வி முன்னேற்றத்தையும் உருவாக்கி வருகிறது.

இந்தத் திட்டம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் தங்கை ம. ஜமீலாபீ.  புதுமைப் பெண் திட்டம் வழங்கும் உறுதியான நம்பிக்கையால், இன்று பல பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை தைரியமாக கல்லூரிக்கு அனுப்பி, அவர்களின் கல்விக் கனவுகளை நிறைவேற்றுகின்றனர்.

குடும்பத்தின் பொருளாதாரச் சுமைகளை குறைக்கவும், தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்யவும் மாணவிகள் தன்னம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கனவைத் தொடர்ந்து, திராவிட மாடல் முதலமைச்சர் அவர்கள் பெண்களின் படிப்புக் காலத்திலேயே பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்க புதுமைப் பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அவர்களிடையே வலுவான நம்பிக்கையை விதைத்துள்ளார்.

இந்த மாற்றத்தை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக் காணொலியை,  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்து பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் முன்னிட்டு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திரு. எஸ். ஜோயல் அவர்கள் எழுதிய புதிய பாடல் வெளியீடு – அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்ப்பு

சென்னை, 25, நவம்பர் 2025 : கழக இளைஞரணி செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திரு. எஸ். ஜோயல் அவர்கள் எழுதிய “வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்!” என்ற பாடல் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது.

இப்பாடலை பாடகர் திரு. மனோ அவர்கள் பாட, இசையமைப்பாளர் திரு. பி. மாரி சக்தி அவர்கள் இசையமைத்திருந்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், பாடல் வெளியிட்டு, கலைஞர்களுக்கு தனது அன்பும் நன்றியும் தெரிவித்தார்.

மேலும், “கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக இளைஞரணி செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வரலாறு படைக்க நாம் அனைவரும் துணை நிற்போம்” என உறுதியேற்றினார்.

ABP Southern Rising Summit 2025 : ‘Putting Education First’ அமர்வில் தமிழ்நாட்டின் கல்வி நோக்கங்கள் வலியுறுத்தின்னார் அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை, 25, நவம்பர் 2025 : ABP Southern Rising Summit 2025 நிகழ்வில் கலந்து கொண்டு, ‘Putting Education First: What is Next for Tamil Nadu’ எனும் தலைப்பிலான அமர்வில் உரையாற்றினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திராவிட மாடலின் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்து வரும் கல்வித் திட்டங்கள், தமிழ்நாட்டின் இரண்டுமொழிக் கொள்கையின் அவசியம், மேலும் வரவிருக்கும் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 உருவாகிக் கொண்டிருக்கும் நோக்கம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

இந்த விவாதம், கல்வியை அனைவருக்கும் சமமாக கொண்டுசெல்லும், சமத்துவத்தை வலுப்படுத்தும், ஒவ்வொரு மாணவரும் எதிர்காலத்திற்குத் தயாராக உருவாகும் ஒரு கல்வி அமைப்பை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்கான உறுதியை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பசியற்ற பள்ளிக்கூடம் – எதிர்காலத்திற்கு திராவிட மாடலின் வலுவான அஸ்திவாரம்

26, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அன்னை மனத்தோடு செயல்படுத்தி வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், ஆயிரம் கனவுகளுடன் பள்ளிக்கு வரும் மழலை மாணவர்கள் இனி ஒருநாளும் பசியோடு பாடம் கேட்க வேண்டாத சூழலை உருவாக்கியுள்ளது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு, தினமும் காலையில் சுடச்சுட, சுவையான, சத்தான உணவு அன்போடு வழங்கப்படுகிறது. வயிற்றுக்கு உணவும், வாழ்க்கைக்கு கல்வியும் என இரண்டையும் இணைத்து, பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வலுவான அஸ்திவாரம் அமைத்து வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

“வயிறார உண்டு, மனதாரக் கல்வி கற்று, ஆரோக்கியமும் அறிவும் நிறைந்த மாணவச் சமுதாயம் உருவாகட்டும்!” எனப் பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், தனது மகள் படிக்கும் பள்ளியிலேயே முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சமையற்கலைஞராக பணிபுரியும் தாயின் கணொலியையும் பகிர்ந்தார்.

பாரத சாரண–சாரணியர் இயக்கத்தின் உயரிய “வெள்ளி யானை” விருது தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு

லக்னோ,26, நவம்பர் 2025 : பாரத சாரண–சாரணியர் இயக்கத்தின் உயரிய “வெள்ளி யானை” விருது தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு பாரத சாரண–சாரணியர் இயக்கத்தின் உயரிய அங்கீகாரமான “வெள்ளி யானை” (Silver Elephant Award) விருதினைப், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பெற்றுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற 19th National Jamboree நிகழ்வில், மாண்புமிகு உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல் அவர்கள் இந்த உயரிய விருதை வழங்கி கெளரவித்தார்.

விருதைப் பெற்றதைத் தொடர்ந்து, “எனக்கு வழிகாட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கே இந்த பெருமை சாரும். மேலும், எங்களின் அனைத்து சாதனைகளுக்கும் ஊக்கம் அளித்து ஆலோசனை வழங்கி வருபவர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்; அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்தார் அமைச்சர்.

பாரத சாரண–சாரணியர் இயக்கத்தின் வைரவிழா, மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரள் பேரணி ஆகியவற்றை திருச்சியில் இந்தியா முழுவதும் வியக்கும்படி சிறப்பாக நடத்தி முடித்த தமிழ்நாடு சாரணர்களின் பங்களிப்பின் விளைச்சலாகவே இந்த விருது அமைந்துள்ளது என்றும்,  “இந்த விருதை நமது சாரணர்களின் உழைப்பிற்கே அர்ப்பணிக்கிறேன். Silver Elephant விருது தந்துள்ள உற்சாகத்தோடு, நமது மாணவர்களின் நலனுக்காக இன்னும் அதிக உறுதியுடன் உழைக்க ஊக்கம் பெறுகிறேன்” எனவும் கூறினார்.

தமிழ்ப் புதல்வன் திட்டம்: மாணவர் மணிகண்டனின் கல்விப் பயணத்திற்கு திராவிட மாடல் அரசின் உறுதியான துணை

27, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் மாணவச் சமூகத்துக்கு உயர்கல்வி அடைய வாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்திய மகத்தான திட்டமே தமிழ்ப் புதல்வன் திட்டம். பெற்றோரை இழந்து, ஆசிரியர்களின் அரவணைப்பில் கல்வி கற்று வந்த அரசுப் பள்ளி மாணவர் மணிகண்டன், தற்போது திருச்சி அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பயின்று வருகிறார்.

திராவிட மாடல் அரசு அவருக்கு மாதந்தோறும் வழங்கி வரும் ரூ.1,000 உதவித்தொகை, அவரது கல்வியைத் தொடர முக்கிய ஊக்கமாக இருப்பதோடு, குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை குறைக்கவும் உதவி செய்கிறது. தன் தந்தையின் இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சரைத் தன்னுடைய ஆதரவாளராகக் கருதும் எண்ணற்ற மணிகண்டன்கள் நலனுக்காகவே செயல்படுகிறது நமது திராவிட மாடல் அரசு. இந்த உணர்வுப்பூர்வமான ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ காணொலியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்து பெருமை பாராட்டியுள்ளார்.

அமைச்சரின்  சிறப்பு நேர்முக உதவியாளர் அருள்முருகன் அவர்களின் தந்தையார் மறைவுக்கு மரியாதை செலுத்தினார் அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை, 27, நவம்பர் 2025 : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் சிறப்பு நேர்முக உதவியாளர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் திரு. நா. அருள்முருகன் அவர்களின் தந்தையார் திரு. பெ. நாராயணசாமி அவர்கள் மறைவையொட்டி, அவரது இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மறைந்தவரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினர் இந்த துயரத்தை உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டி இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

“நான் முதல்வன்” திட்டம் இளைஞர்களின் கனவுகளுக்குப் பாதை அமைக்கிறது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

28, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான “நான் முதல்வன்” திட்டம், மாணவர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதோடு வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதலையும் அளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கான வாயில்களைத் திறந்து வருகிறது.

திராவிட மாடல் அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா உள்ளிட்ட தனித்திறன் போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்கள், தொழில்முனைவோராக உயர்ந்து சாதனை படைத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் துகில் நுட்பியல் மாணவர் கோபிநாத், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில் பெற்ற அனுபவங்களை காணொலியாக பகிர்ந்துள்ளார்.

இந்த அனுபவக் காணொலியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்து, “இளம் தலைமுறைக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அளித்து, அவர்களின் கனவுகள் வெல்லும் வகையில் பாதை வகுத்துத் தருவது திராவிட மாடல் அரசே” என்று தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின்  பிறந்தநாள் முன்னிட்டு 48 நிகழ்ச்சிகள் – முதல் நிகழ்ச்சியாக முன்களப் பணியாளர்களுக்கு சீருடை, உணவு வழங்கல் திருச்சி (தெ) மாவட்ட கழக சார்பில்

திருச்சி, 28, நவம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக 48 சமூகநல நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முதல் நிகழ்ச்சியின் தொடக்கமாக, கழக முதன்மைச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான திரு. கே.என். நேரு அவர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று, திருச்சி மாநகராட்சியைச் சேர்ந்த 234 முன்களப் பணியாளர்களுக்கு சீருடை மற்றும் உணவு வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த திருச்சி கிழக்கு மாநகரக் கழகத்தைச் சேர்ந்த துணை மேயர் திருமதி. திவ்யா மற்றும் மண்டல தலைவர் திருமதி. ஜெயநிர்மலா ஆகியோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் – திருச்சியில் எழுச்சியான ஏற்பாடு

திருவெறும்பூர், 28, நவம்பர் 2025 : கழக இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு திமுக திருவெறும்பூர் பகுதி கழகம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கழகத் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. திருச்சி சிவா அவர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு புகழுரையாற்றினர்.

மேலும், இப்பொதுக்கூட்டத்தை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த பகுதி கழகச் செயலாளர் திரு. சிவக்குமார் அவர்களுக்கும், சிறப்பான உரையாற்றிய தலைமை கழக இளம் பேச்சாளர் தம்பி திரு. காட்டூர் இனியன் அமுதன் அவர்களுக்கும், மாவட்டக் கழகத்தின் சார்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா

திருச்சி, 29, நவம்பர் 2025 : கழக இளைஞரணி செயலாளரும் மாண்புமிகு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகர இளைஞர் அணிகள் சார்பாக, மூத்த முன்னோடிகள் 48 பேருக்கு பொற்கிழிகள் வழங்கும் விழா ஒருங்கிணைக்கப்பட்டது.

இவ்விழாவில் கழகத் துணைப் பொதுச்செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான திரு. சாமிநாதன் அவர்களுடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இணைந்து பொற்கிழிகளை வழங்கினர். தொடர்ந்து, “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” என்ற நூலை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.

இந்நிகழ்வை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த மாவட்ட அமைப்பாளர் திரு. வெங்கடேஷ்குமார் மற்றும் மாநகர அமைப்பாளர் திரு. முத்துதீபக் ஆகியோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகர சுற்றுச்சூழல் அணிகளின் சார்பாக பாலக்கரை பொன்னையா மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்ட விழாவில் கலந்துகொண்டு 100 மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

மாவட்ட அமைப்பாளர் திரு.P.கிருஷ்ணகோபால், மாநகர் அமைப்பாளர் திரு.கலைவாணி N.ரமேஷ் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதன் வாயிலாக  அவர்களுக்கு தனது நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

மலைக் கிராம மாணவரின் CLAT வெற்றி – திராவிட மாடல் அரசின் கல்வி சாதனையை பகிர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

29, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும் கல்வித் திட்டங்கள், அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை எந்தத் தடையுமின்றி உறுதி செய்து வருகின்றன. இதுவரை நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே எளிதாகக் கிடைத்துவந்த இந்தியாவின் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பு, இன்று மலைக் கிராமங்களில் வாழும் மாணவர்களுக்கும் எட்டக்கூடியதாகியுள்ளது.

அந்த வகையில், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயின்று, அங்கு பெற்ற தரமான பயிற்சியின் மூலம் மாணவர் அஜய், தேசிய அளவிலான CLAT நுழைவுத் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். தற்போது அவர் திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்று வருகிறார்.

இந்த மாணவரின் அனுபவங்களை வெளிப்படுத்தும் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியின் காணொலியை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர்  திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “இவரின் வெற்றியே திராவிட மாடல் அரசின் வெற்றி. எளியோர்களின் கனவுகளை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டின் கல்விச் சூரியனாக ஒளிர்கிறது” என்று தெரிவித்தார்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு “கொடுக்கப் பிறந்த கரம் – உதயம் திராவிட வரம்” நலத்திட்ட விழா

சென்னை, 29, நவம்பர் 2025 : கழக இளைஞரணி செயலாளரும் மாண்புமிகு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்டக் கழக இளைஞரணி சார்பில் துறைமுகம் தொகுதியில் “கொடுக்கப் பிறந்த கரம் – உதயம் திராவிட வரம்” என்ற தலைப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பகுதி இளைஞரணி அமைப்பாளர் திரு. பி. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. அ. ராஜா, மாவட்டச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான திரு. பி.கே. சேகர்பாபு, நடிகர் வைகைப்புயல் வடிவேலு ஆகியோருடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் தையல் பயிற்சி பெற்ற 184 மகளிருக்கு தையல் எந்திரங்கள், Tally பயிற்சி பெற்ற 291 மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினிகள், மேலும் கழக மகளிர் 500 பேருக்கு சுழல் நிதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

“நான் முதல்வன்” திட்டம் இளைஞர்களின் கனவுகளுக்கு புத்துயிர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 

30, நவம்பர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்ட “நான் முதல்வன்” திட்டம், தமிழ்நாட்டின் எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கேற்ற திறன் பயிற்சிகளை வழங்கி, அவர்களின் கனவுகளுக்கு புத்துயிர் அளித்து வருகிறது.

தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப, கல்லூரியில் பயிலும் காலத்திலேயே மாணவ–மாணவியர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ள இளைஞர்களிடையே நிலவிய தயக்கத்தை உடைத்து, வாழ்க்கையின் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பாங்கையும், தங்களின் திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் துணிச்சலையும் “நான் முதல்வன்” திட்டம் உருவாக்கியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தாம் பெற்ற முன்னேற்றத்தை விளக்கும் வகையில், கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரி மாணவி நிவேதா பங்கேற்ற “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியின் அனுபவக் காணொலியை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “கல்வியை ஆயுதமாகவும், தன்னம்பிக்கையை மூலதனமாகவும் கொண்டு இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்தை வளமாக்க ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருவெறும்பூரில் அன்பில் அறக்கட்டளை–அப்போலோ இணைந்து மருத்துவ முகாம் தொடக்கம்

திருவெறும்பூர், 30, நவம்பர் 2025 :  திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் கீழ அம்பிகாபுரம் செல்வம் மகாலில், அன்பில் அறக்கட்டளை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட இம்முகாமினை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, முகாமில் பங்கேற்றவர்களுக்கு முதலுதவி பெட்டகங்களை அமைச்சர் வழங்கி, பொதுமக்களின் நலனில் அன்பில் அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

தேசிய நூலக வார நிறைவு விழா – திருச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

திருச்சி, 30, நவம்பர் 2025 : திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலக வார நிறைவு விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “நூலகக் கட்டிடங்கள் என்பது புத்தகங்களின் மையமாக மட்டுமல்ல; பல்வேறு சிந்தனைகளின் ஊற்றாகவும் விளங்குகின்றன” எனக் குறிப்பிட்டார்.

நூலக வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், சிறந்த நூலக சேவை விருது, கல்வியாளர் விருது மற்றும் தன்னார்வலர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் ஆகியவற்றை அமைச்சர் வழங்கி கௌரவித்தார். முன்னதாக, அரசுப் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் மற்றும் கண்காட்சியினையும் அமைச்சர் பார்வையிட்டு, மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

டிட்வா புயல் பாதிப்பு – நாகப்பட்டினத்தில் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நாகப்பட்டினம், 30, நவம்பர் 2025 : டிட்வா புயலின் காரணமாக நாகப்பட்டினம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் தலைமையில் நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மழையின் காரணமாக சில பகுதிகளில் தூய்மையான குடிநீர் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மேலும் சேதமடைந்த பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கட்டுப்பாட்டு மையத்தின் அவசரகால உதவி எண்களுக்கு வரும் அழைப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அறிவுறுத்தினார். புயல் பாதிப்புகளை விரைந்து சரிசெய்து, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.


நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கம்

நாகப்பட்டினம், 30, நவம்பர் 2025 : நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தொடங்கி வைத்தார்.

469ஆவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வரும் இப்பெருமைமிகு கந்தூரி விழாவில் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி தெரிவித்த அமைச்சர், இந்த விழா மத நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழ்வதாகக் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டின் பண்பாட்டு பாரம்பரியத்தையும் சமய நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் இவ்விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top