Anbil Updates – October 2025 

காந்தியடிகள் பிறந்தநாளும், பெருதலைவர் காமராசர் நினைவும் 

 02, அக்டோபர் 2025 : தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, “அகிம்சை, சகோதரத்துவம் போன்ற உயரிய நெறிகளை தன் வாழ்வியல் வழியாக உலகுக்கு எடுத்துக்காட்டியவர் காந்தி. நாட்டின் விடுதலைக்கு அடித்தளம் அமைத்தவர். அவரின் பாதையில் சகோதரத்துவத்தை போற்றிப் பேணுவோம்” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

மேலும், “தமிழகக் கல்வி வளர்ச்சிக்கான அடித்தளங்களை அமைத்து, மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்தவர் பெருந்தலைவர் காமராசர். அவரின் தொண்டு என்றும் நினைவுகூரத்தக்கது. அவரின் நினைவை என்றென்றும் போற்றுவோம்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

RTE  நிதி விடுவிப்பு – தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறை தொடக்கம்

சென்னை, 2 அக்டோபர் 2025: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 ஐ முடக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டதற்கு எதிராக, மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரைச் சென்று வாதாடியது. அதன் விளைவாக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (SSA) கீழ் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை (RTE) செயல்படுத்துவதற்கான நிதியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

அதன்படி, 2024-25ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் RTE நிதிப் பங்கீடு ரூ.362.80 கோடி மற்றும் 2025-26ஆம் ஆண்டுக்கான முதல் தவணையாக ரூ.175.59 கோடி என மொத்தம் ரூ.538.39 கோடி நிதி தமிழகத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2025-2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கியுள்ளன.
“கல்வியை பறிக்க எத்தனை தடைகள் வந்தாலும், நம் திராவிட மாடல் அரசு முறியடிக்கும்!” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் திறனறித் தேர்வுக்கான வழிகாட்டி கையேடு : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டார்.

சென்னை, 04 அக்டோபர் 2025: தமிழக அரசின் சார்பில் பிளஸ் 1 மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்காக நடைபெறும் முதல்வர் திறனறித் தேர்வுக்கான வழிகாட்டி கையேடுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் திறனைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 1 படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்க முடியும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என மொத்தம் 1,000 பேருக்கு, ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ.1,000 வீதம் — 10 மாதங்களுக்கு ரூ.10,000 என இளநிலைப் பட்டப் படிப்பு வரை உதவித் தொகை வழங்கப்படும்.

இந்தத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், சென்னை வேளச்சேரி அரிமாசங்கம் வழிகாட்டி கையேடுகளைத் தயாரித்துள்ளது. இதில் 54 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையேடுகளை வழங்கினார் அமைச்சர். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ரவி முத்துகிருஷ்ணன், பி.வி.பிரகாஷ்குமார், பி.வெங்கடரமணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர், 04 அக்டோபர் 2025: திருவெறும்பூர் தொகுதி துவாக்குடி நகரத்தில்  நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமினைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டார்.

முகாமில் மருத்துவப் பணியாளர்களுடன் கலந்துரையாடிய அவர், பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் குறித்த அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். பின்னர், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.  முகாம் மூலம் பலர் மருத்துவ ஆலோசனையும், பரிசோதனைகளும் மேற்கொண்டனர். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

மணப்பாறையில் தொழிற்பயிற்சி மாணவர்களை சந்தித்து வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மணப்பாறை, 04 அக்டோபர் 2025: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் கீழ், மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டியில் புதிதாக செயல்பட துவங்கிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

மாணவர்களுடன் உரையாடிய அமைச்சர், தொழில்துறை திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், அறிவுசார் மையத்தில் பயின்று அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு  பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை பரிசளித்து, அவர்கள் சிறப்பாக அரசு பணி மேற்கொள்ள வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே. சரவணன், மாநிலங்களவை உறுப்பினர் திருமதி ராஜாத்தி (எ) கவிஞர் சல்மா, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல்சமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கங்காதாரணி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து ஏரி நீரேற்றத் திட்டத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மணப்பாறை, 04 அக்டோபர் 2025: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில், பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து ஏரிக்கு, காவேரி நதியில் இருந்து வெள்ள காலங்களில் கிடைக்கும் உபரிநீரை நீரேற்றம் மூலம் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவர். மொத்தம் 2,834 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன. இந்நிலையில், அணையின் தற்போதைய நிலை மற்றும் திட்டத்தின் முன்னேற்றத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் திருமதி ராஜாத்தி (எ) கவிஞர் சல்மா, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல்சமது, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவெறும்பூரில் அன்பில் அறக்கட்டளையின் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர், 05 அக்டோபர் 2025: திருவெறும்பூர் தொகுதி கூத்தப்பார் பேரூர் மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இலவச மருத்துவ முகாமை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

பெருந்தலைவர் காமராசர் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமில் பல்வேறு மருத்துவ பிரிவுகளின் நிபுணர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். முகாமைத் தொடங்கி வைத்த அமைச்சர், “இந்த  வாய்ப்பை திருவெறும்பூர் மக்களெல்லாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

மணப்பாறையில் ஒருங்கிணைந்த அவசரகால தாய்-சேய் நல மையத்தைப் பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மணப்பாறை, 05 அக்டோபர் 2025: மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மணப்பாறையில் திறந்து வைத்த ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு தாய்-சேய் நல சேவைகள் மையத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டார்.

அவர், மையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, வழங்கப்படும் சேவைகளின் தரம் மற்றும் பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த மையம் வழியாக மகப்பேறு  சேவைகள் விரைவாகவும் சிறப்பாகவும் வழங்கப்படுவது, மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

PSR அறக்கட்டளையின் 10 ஆம் ஆண்டு விழா: நற்பணிகள் தொடர வாழ்த்தினார்  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

திருச்சி,05, அக்டோபர் 2025 :  நாட்டு நலப்பணித் திட்ட முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டு, இன்றளவும் பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வரும் PSR  அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், 1300 குழந்தைகள் கலந்து கொண்ட நிலையில் 14ஆம் ஆண்டு சிறார் தீபாவளி விழாவும், PSR  அறக்கட்டளையின் 10ஆம் ஆண்டு விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, சமூக நலத்துறையில் முக்கிய பங்களிப்பு செய்து வரும் சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை அனைத்து தரப்பினருக்கும் வழங்கி வரும் PSR  அறக்கட்டளையின் நற்பணிகள் தொடர வேண்டுமென அவர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், எக்ஸல் குரூப் ஆஃப் கம்பெனியின் Rtn. AKS Er. முருகானந்தம், திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திரு. பி. ராகுல்காந்தி, குழந்தைகள் நலக் குழு தலைவர் திரு. பி. மோக, மற்றும் நேஷனல் கல்லூரி துணை முதல்வர் திரு. பிரசன்னா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினர்.

மறைந்த தோழர் த. தங்கமணி அவர்களின் படத்திறப்பு விழாவில்  மரியாதை செலுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மணப்பாறை:,05, அக்டோபர் 2025 :  மணப்பாறை நகர்மன்ற உறுப்பினராகப் பணியாற்றிய மறைந்த தோழர் திரு. த. தங்கமணி அவர்களின் படத்திறப்பு விழா மிகுந்த மரியாதையுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு  அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார். தோழர் தங்கமணி அவர்கள் செய்த சமூகப் பணிகளும் இயக்கப் பணிகளும் என்றும் மக்களிடையே நினைவாக இருக்கும் என்றும், அவர் பெயர் சமூக சேவையின் அடையாளமாகச் சொல்லப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புகழாரம் சூட்டினார்.

திருச்சியில் நியாயவிலைக் கடை மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மையங்களை திறந்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி, 6 அக்டோபர் 2025: திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடங்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு  அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். இந்த நிகழ்வில்,

கல்லுக்குழி இலுப்பூர் சாலையில் ரூ.17 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம், சுப்பிரமணியபுரம் ஏரிக்கரை சாலையில் ரூ.16 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி மையம், காஜாபேட்டை புதுத்தெருவில் ரூ.16 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம், ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். இந்நிகழ்வில் திருச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. இனிகோ இருதயராஜ் அவர்கள் உடன் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார்.

சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கான நுழைநிலைப் பயிற்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி, 6 அக்டோபர் 2025:  புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைநிலைப் பயிற்சி திருச்சியில் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்தப் பயிற்சியை பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) இணைந்து நடத்தியது.

பயிற்சியின் தொடக்க நிகழ்வில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியைத் தொடங்கி வைத்து, புதிதாக பணியில் இணைந்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அவர் தனது உரையில், மாணவர்களின் கற்றல் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆசிரியர்கள் புதுமையான கற்பித்தல் முறைகளில் ஈடுபட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

திருவெறும்பூரில் புதிய வகுப்பறை கட்டடம் மற்றும் ஆய்வகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி, 6 அக்டோபர் 2025: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.1 கோடியே 53 இலட்சம் மதிப்பில் திருவெறும்பூர் சோழமாதேவி ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கட்டடமும் ஆய்வகமும்  திறந்து வைக்கப்பட்டது.

இந்தக் கட்டடத்தினை தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்து, புதிய வசதிகளைப் பார்வையிட்டார். பின்னர் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வியில் சிறந்து விளங்க அவர்களை உற்சாகப்படுத்தினார்.

காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி, 6 அக்டோபர் 2025: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ரூ.1 கோடியே 4 இலட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டடம் மற்றும் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளன.

இந்தக் கட்டடங்களை தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு  அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக அமைக்கப்பட்ட இக்கட்டடங்களையும், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வசதிகளையும் அமைச்சர் பார்வையிட்டார். மேலும், காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி வளாகத்தையும் ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுமாறு அவர்களை ஊக்குவித்தார்.

திருவெறும்பூர் தொகுதியில் புதிய பொதுக் கட்டமைப்புகள் – மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது

திருச்சி, 6 அக்டோபர் 2025:  நாடாளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் நலனுக்காக பல்வேறு பொதுக் கட்டமைப்புகளை மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

நவல்பட்டு போலீஸ் குடியிருப்பு பகுதியில் ரூ.17 இலட்சம் மதிப்பில் சீரணி அரங்கம், துவாக்குடி நகராட்சி 16வது வார்டில் ரூ.4.25 இலட்சம் மதிப்பில் உயர் மின் கோபுர விளக்கு, துவாக்குடி அரசு கல்லூரி அருகில் ரூ.7.50 இலட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை, துவாக்குடி 8வது வார்டில் ரூ.1.25 இலட்சம் மதிப்பில் உயர் மின் கோபுர விளக்கு, காட்டூர் பர்மா குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்காக ரூ.18.40 இலட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டிடம். இந்தப் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பொதுமக்கள் இக்கட்டமைப்புகளை அன்றாட வாழ்க்கையின் பயன்பாட்டிற்க்காக அர்ப்பணிக்கப்பட்டது.

பனையக்குறிச்சி மற்றும் மேலகல்கண்டார்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,07, அக்டோபர் 2025 : திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பனையக்குறிச்சி ஊராட்சியில், பொதுமக்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாகக் கேட்டு தீர்க்கும் நோக்கில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஏ.ஆர்.கே. நகரில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் தொடங்கி வைத்தார். இந்த முகாமின் மூலம் 1 முதல் 5ஆம் வார்டு வரை வசிக்கும் மக்கள் தங்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை சமர்ப்பித்து பயனடைந்தனர்.

மேலும் திருவெறும்பூர் தொகுதி மேலகல்கண்டார்கோட்டை 44வது வார்டு மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம், ARN திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்து, மக்களின் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறும், உங்கள் இருப்பிடங்களுக்கே வந்துள்ள அரசுத் துறைகளின் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டார்.

திருச்சியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,07, அக்டோபர் 2025 : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழக முழுவதும் முதலமைச்சர் கோப்பை (CM Trophy) போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த தொடரின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான கைப்பந்து  போட்டி திருச்சி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியை தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு  அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். பின்னர், அன்பில் அறக்கட்டளை சார்பாக போட்டியில் பணியாற்றும் நடுவர்களுக்கு உடைகள் வழங்கி அவர்களை ஊக்குவித்தார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,07, அக்டோபர் 2025 : திருச்சி கிழக்குச் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 63வது வார்டில் வசிக்கும் மக்களுக்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து, மக்களுடன் மற்றும் அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.

கலைஞர் கருணாநிதி நகர், மங்கம்மா சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் இம்முகாமின் மூலம் பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் தேவைகளை நேரடியாகத் தெரிவித்தனர். மக்கள் நலனுக்காக அரசு வழங்கி வரும் பல்வேறு அரசுத் துறை சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டார்.

அரசுப் பள்ளி மேம்பாட்டிற்கான “CARE 4 SCHOOL” முன்னெடுப்பை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,07, அக்டோபர் 2025 :  அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டில் பங்கெடுக்கும் நோக்கில் ரோட்டரி சங்கம் சார்பாக புதிய சமூகப் பொறுப்பு முயற்சியாக “CARE 4 SCHOOL” எனும் முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இம்முயற்சியின் செயல்பாட்டினையும் அதற்கான “ROTARY NSNOP” இணையதளத்தினையும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு  அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார். Namma School Namma Ooru Palli திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பங்களித்து வரும் ரோட்டரி சங்க உறுப்பினர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

தொழிலாளர் நலத்திற்கான பணித்திறனாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,07, அக்டோபர் 2025 : தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி பெரு மண்டல அலுவலர்களின் பணித்திறனாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.  கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. சி.வி. கணேசன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு  அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், திராவிட மாடல் அரசு தொழிலாளர்களின் நலனுக்காக எடுத்துவரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் , அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களை ஊக்குவித்தனர்.

மாணவர் சேர்க்கையில் சிறப்புப் பெற்ற 179 அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை,07, அக்டோபர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக் கல்வித்துறையின் 2025-2026ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் ஒன்றாக, அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளம்பரங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகப்படுத்தி, கடந்த ஆண்டைவிட குறைந்தது 50 மாணவர்களைக் கூடுதலாகச் சேர்க்கும் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில், நடப்புக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ள 13 தொடக்கப் பள்ளிகள், 13 நடுநிலைப் பள்ளிகள், 17 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 136 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 179 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 167 பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கி, வாழ்த்தினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை செயல் அலுவலர் பி. சந்தரமோகன், இயக்குநர் எஸ். கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பூ. நரேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரியாதை

09,அக்டோபர் 2025 : ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது மரியாதையைத் தெரிவித்தார்.

அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அவரின் தியாகத்தையும் போராட்டத்தையும் வணங்குவோம். அவரது சமத்துவ நெறியை பின்பற்ற உறுதியேற்போம். இமானுவேல் சேகரனார் புகழ் ஓங்குக!” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமத்துவம், சமூக நீதி, மனிதநேயம் ஆகிய கொள்கைகளை தனது வாழ்நாளின் வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்ட தியாகியின் நினைவில், அமைச்சர் தனது மரியாதையைப் பதிவு செய்துள்ளார்.

முரசொலி செல்வம் நினைவுநாளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரியாதை

10. அக்டோபர் 2025 : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவும், நம் கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உற்ற வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் முரசொலி செல்வம் அவர்கள் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

முரசொலி செல்வம் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நெருக்கடிகள் எதற்கும் அஞ்சாத நெஞ்சுரத்தோடு, திராவிடப் பற்றுள்ள இளையவர்களை அரவணைத்து ஊக்குவித்த கொள்கைச் சிங்கம் முரசொலி செல்வம் அவர்களின் புகழ் ஓங்குக!” என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிட இயக்கத்தின் உறுதியான தூணாக விளங்கிய முரசொலி செல்வம் அவர்களின் தியாகத்தையும் தொண்டையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மரியாதையுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

லண்டனில் ஒலித்த திராவிட மாடல் – மாணவர்களின் கனவுகளைச் சாத்தியமாக்கிய அரசு


லண்டன்,10,அக்டோபர் 2025 :  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டம் மூலம் லண்டனில் உயர் கல்வி பயின்று வரும் மாணவர்களை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் சந்தித்து உரையாடினார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், ஒருங்கிணைந்த பிரிட்டன் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த “காஃபி வித் அன்பில்” நிகழ்வில் கலந்து கொண்டு, அங்கு பயிலும் மாணவர்களோடு அன்போடு பேசினார் அமைச்சர். இந்நிகழ்வை மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் “காஃபி வித் திராவிட மாடல் மாணவர்கள்” என அழைத்தனர். அரசின் திட்டங்களால் தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்ட மாணவர்கள், தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

அதில் மாணவி குருஷியா ஜெயராமன் கூறியதாவது: “தஞ்சாவூரைச் சேர்ந்த நடுத்தரக் குடும்ப மாணவியாக இருந்த நான், லண்டனில் நிற்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. இங்கே படிக்க ரூ.36 லட்சம் தேவைப்பட்டது. வறுமை எனக்கு தடையாக இருந்தது. ஆனால், தமிழக அரசு தான் எனக்கு வழிகாட்டியாக இருந்தது. வருங்காலத்தில் என்னைப்போல் 10 மாணவர்களுக்கு உதவ ஆசைபடுகிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதேபோல், சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவரும் அரசின் கல்வி உதவித்திட்டங்கள் குறித்து நன்றியுடன் பகிர்ந்து கொண்டார்.

மாணவர்களின் அனுபவங்களை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “மாணவர்களோடு இணைந்து, மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் குரல் ஒலித்த காம்பிரிட்ஜ் யூனியன் அரங்கில் விஜயம்


கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி , 11 அக்டோபர் 2025 :  மாணவர்களுக்கான ஜனநாயக விவாத அரங்காக திகழும் கேம்பிரிட்ஜ் யூனியன் டிபேட்டிங் சேம்பர்-ஐ பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உலகம் முழுவதிலுமிருந்து சிறந்த சிந்தனையாளர்கள், தலைவர்கள் உரையாற்றிய வரலாற்று சிறப்புமிக்க இந்த அரங்கம், கடந்த 150 ஆண்டுகளாக ஜனநாயகத்தின் பெருமைமிக்க பாரம்பரியத்தை தொடர்ந்து பேணிக் கொண்டிருக்கிறது. இன்றும் மாணவர்களுக்கு கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை ஊக்குவிக்கும் இந்த அரங்கம், ஜனநாயகத்தின் உயிருள்ள வடிவமாக திகழ்கிறது என்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘பொருநை நாகரிகம்’ – தமிழகக் கல்வி சாதனைகள் சர்வதேச அரங்கில்


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ,11, அக்டோபர் 2025 :  மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், பிரிட்டனின் புகழ்பெற்ற காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை பாட்வையிட்டபோது , “பொருநை – நதி நாகரிகம்” நூலை பேராசிரியர் ஐயந்தி மரியா ட்ஸிம்ப்ளி (Co-Director, Cambridge Language Sciences) அவர்களுக்கு வழங்கினார்.

அதே நேரத்தில்,பேராசிரியர் ஷைலஜா பென்னல் (Deputy Head, Dept. of Land Economy & Director, Centre of South Asian Studies) அவர்களுக்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய சாதனைகளைப் பதிவு செய்த “234/77 Study Tour”, “State Education Policy 2025” உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டன.

இந்நூல்கள் மற்றும் அறிக்கைகள் காம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் சேர்க்கப்படுவது, தமிழகத்தின் கல்வித் துறைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். இவ்விழாவில் இரு பேராசிரியர்களும், தமிழகத்தின் திராவிட மாடல் அரசுடன் கல்வி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஆவலாக இருப்பதாக தெரிவித்தனர்.

தென் ஆசிய ஆய்வுக்கழக நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி – தென் ஆசிய வரலாற்றை ஆராய்ந்த சிறப்பான அனுபவம்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், 12, அக்டோபர் 2025 : பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள தென் ஆசிய ஆய்வுக் கழக நூலகத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டார்.

இவ்விழாவின் போது நூலகக் கியூரேட்டர் டாக்டர் கேவின் கிரீன்பாங்க் அவர்கள், தென் ஆசியாவின் அரசியல், பண்பாட்டு மற்றும் அறிவுசார் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நூலகத்தின் அரிய ஆவணங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

நூலகத்தின் சிறப்பான தொகுப்புகள், தென் ஆசிய பிராந்தியத்தின் அரசியல், பண்பாடு மற்றும் சிந்தனையின் பரிணாமத்தை உலகளவில் வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார். “தென் ஆசியா பற்றிய உலகளாவிய புரிதலை ஆழப்படுத்தும் இந்த அறிவுக் களஞ்சியத்தைப் பார்வையிட்டது மறக்க முடியாத அனுபவம்,” என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.

அம்பேத்கர் இல்லத்தில் அறிவுக்கும் சமத்துவத்திற்கும் வணக்கம் – லண்டனில் அமைச்சர் அன்பில் மகேஸ்

லண்டன்,13, அக்டோபர் 2025 :  லண்டன் பொருளியல் பள்ளியில் (London School of Economics) கல்வி பயின்றபோது, பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தங்கியிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லத்தை, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டார்.

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய மகத்தான சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், கல்வியையே சமூக மாற்றத்தின் ஆயுதமாகக் கருதி இவ்விடத்தில் தங்கி பயின்றது குறிப்பிடத்தக்கது.

அந்த இல்லத்தை மாணவருக்குரிய மனநிலையுடன் பார்வையிட்டதில், “அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கல்வியால் சமூக நீதி எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை நேரில் உணர்ந்த உணர்வு இது,” என பெருமிதத்துடன் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

ஆக்ஸ்போர்டில் ஒலித்த திராவிடக் கல்வி முறை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை


லண்டன்,14, அக்டோபர் 2025 : ஆக்ஸ்போர்டின் அரங்குகளில் பெரியாரின் சிந்தனைகள் இன்னும் தலைமுறைகளுக்கு ஊக்கமாக ஒலிக்கின்றன. சமத்துவத்திற்கான அவரது குரல் கண்டங்களைத் தாண்டி முழங்கிக்கொண்டிருப்பதை நினைவுகூர்ந்தார் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

ஆக்ஸ்போர்ட் யூனியனில் நடைபெற்ற “Fireside Chat” நிகழ்வில், தமிழ்நாட்டின் கதையை “திராவிட முறை” மற்றும் “கல்வி” என்ற வழியே பகிர்ந்தார். தமிழ்நாடு முதல்வர் காலை உணவு திட்டம் முதல் புதுமைப்பெண் திட்டம் வரை, வகுப்பறைகளில் சமத்துவம், மரியாதை மற்றும் சமூகநீதியை நிலைநாட்டியதன் மூலம் எவ்வாறு அணுகுமுறை சாதனையாக மாறியுள்ளது என்பதை அவர் விளக்கினார்.

சுமார் 200 ஆண்டுகளாக சிந்தனையாளர்களும் சமூகப் புதுப்பிப்பாளர்களும் தங்களது எண்ணங்களைப் பரிசோதித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ஸ்போர்ட் யூனியன் விவாத அரங்கினையும் அமைச்சர் பார்வையிட்டார். அங்குள்ள விவாதங்கள் இன்றுவரையும் ஊக்கமளித்துக்கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் ஆன்மாவை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஆக்ஸ்போர்ட் இந்தியா மையத்தின் மாணவர்களுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி தெரிவித்தார். நிலைத்த வளர்ச்சி குறித்து மாணவர்களுடன் விவாதித்ததோடு, அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை பெருமையாகப் பகிர்ந்தார்.

“என் பள்ளி – என் பெருமை” கலைப்போட்டியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை,16, அக்டோபர் 2025 : பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் – கல்வி வளர்ச்சி நாளையொட்டி, மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில் “என் பள்ளி – என் பெருமை” என்ற தலைப்பில் கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன.

சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், பள்ளி மாணவச் செல்வங்கள் உட்பட 9,000-க்கும் அதிகமானோர் உற்சாகமாக பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்கள் உருவாக்கிய படைப்புகளில் இருந்து சிறப்பாகத் தேர்வான 70 பேருக்கு, இன்று நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், அமைச்சர் சாமிநாதன் அவர்களுடன் இணைந்து பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

இந்த நிகழ்வு, கல்வி வளர்ச்சிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல் வெளிப்பாட்டுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்களின் கல்வி முன்னேற்றம் நோக்கில் – மாநில அளவிலான கற்றல் திறன் ஆய்வறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை, 17 அக்டோபர் 2025 : தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை மதிப்பிடும் நோக்கில், மாநில திட்டக் குழுவினால் State Level Achievement Survey (SLAS) நடத்தப்பட்டது. இதற்கான ஆய்வறிக்கை 2025 மே 10ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் வழங்கப்பட்டது.

அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, “மாவட்டம் தோறும் தலைமையாசிரியர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்” என்ற முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தலைமையாசிரியர்களைச் சந்தித்து கலந்துரையாடும் பணிகளை மேற்கொண்டார்.

மாநில திட்டக் குழுவின் ஆய்வறிக்கைக்கான , ஜூன் 25ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் முதல் கலந்தாய்வுக் கூட்டத்தைத் தொடங்கி, மூன்று மாதங்களில் 38 மாவட்டங்களிலும் நேரடியாகச் சென்று தலைமையாசிரியர்களுடன் ஆய்வு நடத்தி, பெறப்பட்ட மதிப்பாய்வு அறிக்கையை இன்றைய தினம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்.

“வரவிருக்கும் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான முதல் முயற்சியாக இக்கூட்டங்களை நடத்தி, தலைமையாசிரியர்களுக்கு ஊக்கமளித்துள்ளோம். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக தங்களின் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று தெரிவித்தார் அமைச்சர்.

மேலும், “எங்கள் கல்வி முன்னேற்றப் பயணத்திற்கு ஆலோசனை வழங்கி, ஊக்கமளித்த மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துறையின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் சிறுதாவூர் பள்ளி விவாதம்: ரூ.2.22 கோடியில் புதிய கட்டிடம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்

சென்னை, 17 அக்டோபர் 2025 : தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசாங்கம் முன்வருமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதிலளித்தபோது, நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் 8 வகுப்பறைகள், மாணவர்–மாணவியர் கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட கட்டிடப் பணிகளுக்காக ரூ.2.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இப்பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து எஸ். எஸ். பாலாஜி அவர்கள், சிறுதாவூர் அரசு பெண் மேல்நிலைப் பள்ளியில் தனி விளையாட்டு மைதானம் இல்லாததை சுட்டிக்காட்டி, அருகிலுள்ள பள்ளி மைதானத்தில் ஒரு பகுதியை மாணவிகளுக்காக ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “விளையாட்டு கல்வியின் ஒரு அங்கம். அதற்கான தேவைகளை உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என உறுதியளித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: “தமிழ்நாடு அரசின் நோக்கம் பள்ளிகளில் கண்ணியமான கல்வி சூழலை உருவாக்குவதே. சில நேரங்களில் சிறிய கட்டடமே பெரிய எதிர்காலத்தை திறக்கும். Tamil is for our identity; English is for opportunity — இந்த கொள்கையுடன் தமிழ்நாடு கல்வியில் முன்னேறி வருகிறது,” என்றார். இவ்வாறு சிறுதாவூர் பள்ளி தொடர்பான முக்கியமான விவாதம் சட்டப்பேரவையில் இடம்பெற்றது.

திருச்சியில் 125 பயனாளர்களுக்கு காய்கறி, பழ விற்பனை வண்டிகள் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,18,  அக்டோபர் 2025:  தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 125 பயனாளர்களுக்கு நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, பயனாளர்களுக்கு வண்டிகளை வழங்கினார். இந்த திட்டம், சிறு தொழில்முனைவோரை ஊக்குவித்து, தன்னிறைவு வாழ்க்கையை உருவாக்குவதோடு, பொதுமக்களுக்கு புதிய காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக கிடைக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தோட்டக்கலை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆக்ஸ்ஃபோர்டு யூனியன் மற்றும் அதன் தலைவரின் அன்பான பாராட்டுச் சொற்களுக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை,19, அக்டோபர் 2025:  பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் Oxford Union அமைப்பின் அழைப்பின்பேரில் கல்வியில் திராவிட மாதிரி (Dravidian Model) குறித்து உரையாற்றிய மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், அந்த அனுபவத்தைப் பற்றி நன்றியுடன் பதிவு செய்துள்ளார்.

“உண்மையிலேயே பெருமையாக இருந்தது. கல்வி துறையில் திராவிட மாதிரியின் பயணத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும், அறிவார்ந்த மாணவர்களுடன் ஆழமான கலந்துரையாடலில் ஈடுபடுவதும் மிகுந்த ஊக்கத்தை அளித்தது,” என அமைச்சர் குறிப்பிட்டார். ஆக்ஸ்ஃபோர்டு யூனியன் மற்றும் அதன் தலைவரின் அன்பான பாராட்டுச் சொற்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றியையும் தெரிவித்தார்.

மதுரையில் ‘மேடைப்பேச்சு – ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி’ பன்னாட்டுப் பயிலரங்கத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மதுரை,22, அக்டோபர் 2025:  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மற்றும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த ‘மேடைப்பேச்சு – ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி’ பன்னாட்டுப் பயிலரங்கத்தை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கிவைத்தார்.

மாணவர்களிடையே தமிழுணர்வை வளர்க்கும் நோக்கில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி அமைச்சர் கௌரவித்தார். இந்நிகழ்வில் ‘பேச்சை ஆண்டு பேச்சாளர்’ ஆக கலந்து கொண்ட இளைஞர்களுக்கு அமைச்சர் வாழ்த்துகள் தெரிவித்தார். இந்நிகழ்வில் பிரபல பேச்சாளர் சுகி சிவம் மற்றும் பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

திருவெறும்பூரில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமினைப் பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,22 அக்டோபர் 2025:  திருவெறும்பூர் தொகுதியிலுள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எழில் நகர் பகுதியில் அமைந்துள்ள பெல் ஓய்வுபெற்றோர் சங்க அரங்கம் (REA HALL) வளாகத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமினைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டார்.

இம்முகாம், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தீர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளதென தெரிவித்த அமைச்சர், 9, 10, 11 மற்றும் 12ஆம் வார்டுகளில் வசிக்கும் மக்கள் இம்முகாமினைப் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் உள்ளூராட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருவெறும்பூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி, 23, அக்டோபர் 2025: திருவெறும்பூர் தொகுதியிலுள்ள வாழவந்தான்கோட்டை ஊராட்சி சமுதாயக்கூடத்தில் 3, 4, 11, 12 ஆகிய வார்டுகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது.

இம்முகாமினைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டு, நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளுக்கான ஆணைகளை பயனாளிகளிடம் நேரடியாக வழங்கினார். மக்களின் தேவைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதலின்படி மாநிலம் முழுவதும் இம்முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் திரு. பொன்னுசாமி மரணத்தையொட்டி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல் தெரிவித்தார்

23, அக்டோபர் 2025 :  நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளரும் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திரு. பொன்னுசாமி அவர்களின் மறைவையொட்டி, கழக இளைஞரணி செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அவரது திருவுடலுக்கு மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கும் உடன்பிறப்புகளுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

இதையொட்டி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, திரு. பொன்னுசாமி அவர்களின் மக்கள் பணியையும், கழகப் பணியையும் போற்றி பின்பற்றுவோம் என கூறி, அவரின் புகழ் வாழ்க என மரியாதை அஞ்சலி  தெரிவித்தார்.

நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கான சந்தனக்கட்டைகள் வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை,24,அக்டோபர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு ஆண்டுதோறும் 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்கி வருகிறது.

அவ்வகையில், இவ்வாண்டிற்கான சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் திரு. செய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப், நாகூர் தர்கா தலைவர் மற்றும் பரம்பரை அறங்காவலர் திரு. காஜி செய்யது முகமது கலிபா சாஹிப் காதிரி ஆகியோரிடம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ. முகம்மது ஷா நவாஸ், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் (கூடுதல் பொறுப்பு) திருமதி லட்சுமி பிரியா, இ.ஆ.ப., சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் திருமதி எம். ஆசியா மரியம், இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சிறப்புச் செயலாளர் திரு. அனுராக் மிஷ்ரா, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) திரு. ஸ்ரீனிவாஸ் ரா. ரெட்டி, இ.வ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை,24, அக்டோபர் 2025 : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ‘திசைதோறும் திராவிடம்’ எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ எனும் நூல் ‘A Sun From the South’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நூலினை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்.

கே.எஸ்.எல். மீடியாவுடன் இணைந்து கூட்டு வெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், நூலாக்கத்திற்காக உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மரு.பி. சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, (பொறுப்பு) மரு. மா. ஆர்த்தி மற்றும் இந்து தமிழ்த்திசை துணை ஆசிரியர் எ.வள்ளியப்பன், புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் ஆர். விஜயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிய இளைஞர் விளையாட்டில் தங்கம் வென்ற கண்ணகி நகர் அரசுப் பள்ளி மாணவிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்து

சென்னை,25, அக்டோபர் 2025 : கண்ணகி நகர் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி கார்த்திகா, இந்திய மகளிர் கபடி அணியின் துணைத் தலைவியாகப் பொறுப்பேற்று, ஆசிய இளைஞர் விளையாட்டுத் தொடரில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த நமது அரசுப் பள்ளி மாணவி கார்த்திகாவிற்கும், அவரது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருக்கும், இந்திய அணியினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அரசுப் பள்ளி மாணவர்களின் ஆளுமைத் திறன் மேம்பாட்டிற்காக HRATN சங்கத்தினை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை,25, அக்டோபர் 2025 : சென்னை ஐஐடிஎம் (IIT Madras) வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், HRATN (Human Resources Association Tamilnadu) சங்கத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அரசுப் பள்ளி மாணவர்களின் ஆளுமைத் திறன் மேம்பாட்டிற்காக பயிற்சி அளிக்க முன்வந்துள்ள இச்சங்கத்தின் முயற்சியை அமைச்சர் பாராட்டி, அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.

சென்னை ஒட்டியம்பாக்கத்தில் விளையாட்டு அரங்கம் திறந்துவைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை,25, அக்டோபர் 2025 : சென்னை ஒட்டியம்பாக்கத்தில் அமைந்துள்ள எம். எஸ். தோனி பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து, விளையாட்டினால் உருவாகும் உடல்-மன நல நன்மைகள் குறித்து உரையாற்றினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இந்நிகழ்வில், ஆசிய இளையோர் விளையாட்டுத் தொடரில் சாதனை புரிந்த கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோரின் வெற்றியைப் பற்றிய பெருமகிழ்ச்சியை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை இயக்குநர் செசில் சுந்தர், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தல தோனியின் கையெழுத்துடன் கிரிக்கெட் பேட் பரிசு

சென்னை, 25 , அக்டோபர் 2025 : எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியின் இயக்குநர் திரு.விநீத் சந்திரசேகர் அவர்கள், திடீர் அதிர்ச்சியூட்டும் பரிசாக, தல மஹேந்திர சிங் தோனி அவர்களால் கையெழுத்திடப்பட்ட கிரிக்கெட் பேட்டை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு பரிசளித்தார் . இந்த சிறப்பான பரிசுக்கு மனமார்ந்த நன்றி தல – எம்.எஸ். தோனி என தனது எக்ஸ் பக்கதில் நன்றி தெரிவித்துள்ளார்.

திருவெறும்பூரில் அன்பில் அறக்கட்டளை – அப்பல்லோ மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் தொடக்கம்

திருச்சி,26 , அக்டோபர் 2025 : திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாமை திருவெறும்பூர் வேங்கூர் நாக திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த முகாம் வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிருஷ்ணசமுத்திரம், திருநெடுங்குளம், வாழவந்தான்கோட்டை, கிளியூர், பத்தாளப்பேட்டை, பனையகுறிச்சி, குவளக்குடி, முல்லைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிசோதனை, ரத்த அழுத்தம் சரிபார்த்தல், ECG, நுரையீரல் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு பொது மருத்துவர் ஆலோசனையும் அளிக்கப்பட்டது.

அன்பில் அறக்கட்டளை சார்பாக முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி, மருத்துவர்கள் டாக்டர் சுரேஷ், டாக்டர் தமிழரசன், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருவெறும்பூரில் குவளை வாய்க்காலில் தூர்வாரும் பணிகளளை மேற்பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,26 , அக்டோபர் 2025 : திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய பாசனத்திற்குப் பயன்படும் குவளை வாய்க்காலில், பருவமழைக்காலத்தை முன்னிட்டு சீரான நீர்வரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், பணிகளை விரைவாகவும் தரமான முறையிலும் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

திருவெறும்பூர் தொகுதியில் புதிய நியாய விலைக்கடை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்

திருச்சி, 26, அக்டோபர் 2025 : திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியின் கீழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட திருநகரில் வசிக்கும் மக்களுக்காக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025-2026-ம் ஆண்டின் நிதியில் இருந்து ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நியாய விலைக்கடையை இன்று மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்து, அதன் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். இதன் மூலம் திருநகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி தெற்கு மாவட்டக் கழக “என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி” ஆலோசனைக் கூட்டம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 

திருச்சி, 27 அக்டோபர் 2025 : திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் “என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி” ஆலோசனைக் கூட்டம் 30.10.2025 (வியாழக்கிழமை) மாலை 04.00 மணிக்கு, திருச்சி கூட்டம் “கலைஞர் அறிவாலயத்தில்” நடைபெற உள்ளது.இக்கூட்டம் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் கழகத்தின் முதன்மைச் செயலாளர், மண்டல பொறுப்பாளர், அமைச்சர் கே. என். நேரு அவர்கள் சிறப்பாக பங்கேற்று, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார்.

மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர்கழகச் செயலாளர்கள், மாநகர, நகர, பேரூர் வட்டச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

தஞ்சையில் மாநில அளவிலான 66வது குடியரசு தின தடகளப் போட்டிகள் தொடக்கம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

தஞ்சாவூர், 29, அக்டோபர் 2025  : மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான 66வது குடியரசு தின தடகளப் போட்டிகள் இன்று தஞ்சையில் தொடங்கின.

மொத்தம் 6,388 பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் இப்போட்டிகளின் தொடக்க விழாவில், மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றார்.

நிகழ்வில், 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பு செய்து வணக்கம் தெரிவித்தனர். விழாவில்  மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டிற்காக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகளை சுட்டிக்காட்டி, அவற்றின் மூலம் வீரர்கள் அடுத்தடுத்த உயரங்களை அடைய வேண்டும் என வாழ்த்தி ஊக்கமளித்தார்.

துவாக்குடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு

திருச்சி, 29, அக்டோபர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மக்கள் நலனைக் குறிக்கோளாகக் கொண்ட சீரிய திட்டமான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி நகராட்சியின் 3 மற்றும் 8ஆம் வார்டுகளில் வசிக்கும் மக்களுக்காக நடைபெறுகிறது.

இம்முகாமை மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு, மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் உடனடி தீர்வு எட்டப்பட்டவைகளின் ஆணைகளை பயனாளிகளிடம் நேரடியாக வழங்கினார். மக்களின் பிரச்சனைகள் துரிதமாக தீர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் நடைபெறும் இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்..

திருச்சியில் மாவட்ட அளவிலான “கலைத் திருவிழா” போட்டிகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு ஊக்குவிப்பு

திருச்சி, 29, அக்டோபர் 2025 : தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவச் செல்வங்களின் கலைத்திறமைகளை வெளிக்கொண்டு வர மாநிலம் முழுவதும் “கலைத் திருவிழா” போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான கலைத் திருவிழா தொடங்கி, மாவட்ட அளவிலான போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 3,927 மாணவச் செல்வங்கள் பங்கேற்கும் இப்போட்டிகள் காஜாமியான் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளை மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு, மாணவச் செல்வங்களைப் பாராட்டி ஊக்கமளித்தார். மாணவர்களின் திறமைகள் வெளிப்படும் மேடையாக “கலைத் திருவிழா” திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 118-வது பிறந்தநாள் – மரியாதை செலுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மதுரை, 30, அக்டோபர் 2025: இந்திய விடுதலைப் போராட்டத்தில் அச்சமின்றி பங்கேற்று, சமூகநீதியும் சமத்துவமும் நிறைந்த சமூகத்தை உருவாக்க பாடுபட்ட அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 118-வது பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தொடர்ந்து, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். சமத்துவம், தேசபக்தி, தியாகம் ஆகியவற்றின் அடையாளமாக விளங்கிய அவரின் வழிமுறைகள் என்றும் வழிகாட்டியாக திகழ்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மருது சகோதரர்களுக்கு மரியாதை – மதுரையில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மதுரை,30, அக்டோபர் 2025 : அந்நிய ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு எதிராக வீரத் தாகப் போரிட்ட மருது சகோதரர்களின் தியாகச் செயல்களை நினைவுகூரும் விதமாக மதுரை தெப்பக்குளம் பகுதியில்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில், மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த மருது சகோதரர்கள், தமிழர் வீரத்திற்கும் தேசபக்திக்கும் நிலையான சின்னமாக திகழ்கிறார்கள் என அமைச்சர் குறிப்பிடினார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அய்யா பசும்பொன் தேவருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரியாதை

திருச்சி , 30 , அக்டோபர் 2025 : திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர், கழக நிர்வாகிகள், இளைஞரணி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனைக் கூட்டம் – திருச்சி தெற்கு மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது

திருச்சி,30 , அக்டோபர் 2025 : கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் பங்கேற்பில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ முன்னெடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர் மற்றும் அமைச்சர் மாண்புமிகு கே. என். நேரு அவர்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தலைமைக் கழகம் வழங்கியுள்ள செயல்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி, ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினர். மாவட்டக் கழகத் தலைவர், தொகுதி பொறுப்பாளர்கள், பெண்கள் அணி, இளைஞரணி மற்றும் பிற பிரிவு நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி மட்டத்தில் வெற்றியை உறுதி செய்யும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்கள்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டச் சிறப்பு முகாம் – திருச்சி கிழக்கு தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது

திருச்சி,31, அக்டோபர் 2025 : மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாநகர வார்டு 21-ல் பொதுமக்களுக்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. இனிகோ இருதயராஜ் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு முகாமில் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கி மகிழ்ந்தனர். பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கீழமுல்லைக்குடி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் – மக்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்

திருச்சி,31, அக்டோபர் 2025 :  திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழமுல்லைக்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற்றது. மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களின் குறைகளை நேரடியாக அறிந்து உடனடியாக தீர்வு காணும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, அந்த ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் இம்முகாமின் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை முன்வைத்து பலனடையுமாறு கேட்டுக்கொண்டார்.

திருச்சியில் CII ஏற்பாட்டில் ‘EMERGENCE – Shape Trichy’s Future’ தொழில் முனைவு கருத்தரங்கை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,31, அக்டோபர் 2025 : Confederation of Indian Industry (CII) – இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில், திருச்சியில் இரண்டாவது முறையாக ‘EMERGENCE – Shape Trichy’s Future’ எனும் தொழில் முனைவு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இந்நிகழ்வை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.

தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் இணைந்து நகரத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என அமைச்சர் குறிப்பிடுகையில், இதன் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமினை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். கருத்தரங்கில் திருச்சி மண்டல CII தலைவர் அஜய் ஜெயராஜ் தலைமை வகித்தார். கல்விக்குழு ஒருங்கிணைப்பாளரும், இந்திரகாந்தி கல்லூரி தலைமை செயல் அதிகாரியுமான சந்திசேகரன் முன்னிலை வகித்தனர்.  தொழில்முனைவோர், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு திருச்சியின் தொழில் வளர்ச்சி குறித்து பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பில் பெருந்தலைவர் காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மையப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,31, அக்டோபர் 2025 :  திருச்சி மாநகரில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளின் முன்னேற்றத்தினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகளின் தரம், கட்டுமான முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளிடமிருந்து அமைச்சர் விரிவாக தகவல் பெற்றார்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்குத் துணைபுரியும் வகையில் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், பணிகள் விரைவில் நிறைவடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

திருவெறும்பூர் தொகுதி பெரிய சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி, 31, அக்டோபர் 2025 :  திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரிய சூரியூர், ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. அப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் வேண்டுகோளை ஏற்று, அங்கு நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளின் முன்னேற்றத்தினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மைதானத்தின் கட்டுமானத் தரம், பார்வையாளர் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பணிகள் விரைவில் நிறைவு பெற வேண்டுமென உத்தரவிட்டார்.

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,31, அக்டோபர் 2025 :  திருச்சி மாவட்டத்தில் விளையாட்டு வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், ஒலிம்பிக் அகாடமி அமைக்கும் பணி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எலந்தைப்பட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் இப்பணிகளின் முன்னேற்றத்தினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விளையாட்டு வீரர்களின் திறன் மேம்பாடு, பயிற்சி வசதிகள், மற்றும் உடற்கல்வி முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு, பணிகளை தரமாகவும் துரிதமாகவும் நிறைவு செய்ய அறிவுறுத்தினார்.

‘அன்புச் சோலை’ திட்டம் அமலுக்கு தயாராகிறது – திருச்சியில் பணிகளைப் பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி,31, அக்டோபர் 2025 : மூத்த குடிமக்களுக்கான பகல்நேர பராமரிப்பு, மருத்துவ சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை ஒருங்கிணைக்கும் ‘அன்புச் சோலை’ திட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி மாநகரிலுள்ள பொன்மலைப்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள மையத்தினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மூத்த குடிமக்கள் நலனுக்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பாராட்டுக் கூறியதுடன், மையத்தின் வசதிகள் மற்றும் சேவைகள் அனைத்தும் மக்களின் பயன்பாட்டிற்கு சீராக அமைய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top