சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், மாநில கல்விக் கொள்கை – 2025 வெளியீட்டு விழா, மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில், நடப்பு கல்வியாண்டில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 910 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.
மாநில கல்விக் கொள்கை : கல்வி புரட்சியின் தொடர்ச்சி


விழா தொடக்க உரையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்கள் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது,” என்று பெருமிதம் தெரிவித்தார். 2021-22ல் வெறும் 75 மாணவர்களாக இருந்த சேர்க்கை, இவ்வாண்டு 910 மாணவர்களாக உயர்ந்துள்ளது.
மாநில கல்விக் கொள்கை, 15 கல்வியாளர்களின் ஆலோசனையோடு, மாணவர்கள் – பெற்றோர் – ஆசிரியர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் உறுதியும் கல்வி பாதுகாப்பும்

அவர் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ கடுமையாக விமர்சித்து, “உனக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று கட்டுப்படுத்தும் NEP எங்களுக்கு வேண்டாம்; உன்னை உயர்த்தும், உலகம் காத்திருக்கிறது என ஊக்குவிக்கும் மாநில கல்விக் கொள்கை போதும்!” என்று அறிவித்தார்.
சொல்லும் செயலும்
கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள் எனப் போற்றுபவர் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். சொல்லால் மட்டுமல்ல செயலாலும் அதனைத் திராவிட மாடல் அரசின் முதன்மை இலக்காக வளர்த்தெடுத்து சாதித்து வருகிறார் நம் மாண்புமிகு முதலமைச்சர் என புகழாரம் சூட்டினார்.
அறிவுத் திருவிழா

அவரைத் தொடர்ந்து பேசிய மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், இந்தியாவுக்கே வழிகாட்டும் விதமாக எண்ணற்ற சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை. நம்முடைய அரசுப் பள்ளிகளில் படித்து முதன்மை உயர்க்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள நம் மாணவர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும் தெரிவித்தார். அவர்களைப் பாராட்டும் இந்த நிகழ்வு சாதாரணமான விழா அல்ல. நம் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் `அறிவுத் திருவிழா’ என புகழாரம் சூட்டினார்.
வாழும் பெரியார்!

பாதி நேரம் கல்வி மீதி நேரம் குலத்தொழில் என நம்மை அழிக்க வந்த குலக் கல்வித் திட்டத்தை அடித்து விரட்டியவர் தந்தை பெரியார். இன்று தேசிய கல்விக் கொள்கை-2020 என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை கல்வியிலிருந்து இருந்து வெளியேற்ற முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு. அவர்களின் காவிக் கொள்கையை தமிழ்நாட்டில் நுழைய விடமாட்டோம் என வாழும் பெரியாராக போர்முரசு கொட்டியவர் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் என்றார்.
மாநில கல்விக் கொள்கை: உண்மையான அங்குசம்!
இதே அண்ணா நூலக அரங்கில், நண்பர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை’ புத்தக வெளியீட்டு விழாவில், மதம் பிடித்த யானைகளை அடக்குவதற்காக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஓர் அங்குசத்தைப் பரிசளித்தார். அது ஒரு அடையாளம்தான், அதன் பொருள் என்ன என்பதை இன்று, பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை வெளியீட்டு விழாவில் அனைவருக்கும் தெளிவுபடுத்திவிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்கைதான் அந்த உண்மையான அங்குசம்!
மாணவர்களுக்கு முதலமைச்சரின் வாழ்த்து

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உரையில், “பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் பார்த்தாலே எனக்கு ஒரு புதிய Energy வந்துவிடும்! பிள்ளைகள் படித்து பெரியவர்களாவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது தாயின் உணர்வு. முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களை பாராட்டி பரிசளிக்கும் இந்த விழா திராவிட மாடல் அரசின் தாய்மை உணர்வுதான்!
கெத்தா ஜெயிச்சு வாங்க!

நாட்டின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்தான் நீங்கள் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் Real Heroகள்!” கெத்தாக ஜெயித்து வாருங்கள். உங்களைத் தோள்களில் ஏற்றிக்கொண்டாட நாங்கள் தயாராக இருக்கிறோம்! என்று மாணவர்களை ஊக்குவித்தார்.
அரசுப் பள்ளிகள் இன்று வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம் என்று வலியுறுத்தி, இந்த ஆண்டில் 27 மாணவர்கள் IIT-க்களில் சேர்வது வரலாற்று முன்னேற்றம் என தெரிவித்தார்.
பள்ளிகள் எல்லோருக்குமானது! அங்கு யாருக்கும் தடை இல்லை! தடுக்கப்படவும் விடமாட்டோம்! யாரும் புறக்கணிக்கப்படக் கூடாது! கல்வி பாகுபாட்டை நீக்குவோம்! நீங்கள் விரும்புகின்ற கல்வியைப் பெறுவதற்கான வாசலை, நம்முடைய கல்விக் கொள்கை திறந்து வைக்கும்! கல்விச் சமத்துவத்தை உருவாக்குவோம்! அறிவுக் கல்வியை அறிமுகம் செய்வோம்! முக்கியமாக அது பகுத்தறிவுக் கல்வியாக இருக்கும்! அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்குச் சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதிக்க மாட்டோம்!
நம்முடைய மாணவர்கள் உலகளவில் போட்டி போட்டு, வெற்றி பெற இந்த மாநிலக் கல்விக் கொள்கை துணையாக இருக்கும்! மொத்தத்தில், கல்வியில் முன்னணி மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றுவோம்!
மேலும் படிக்க : மாநில கல்விக் கொள்கை-2025 குறித்த கேள்விகளும் பதில்களும்!
மாநில கல்விக் கொள்கை யின் முக்கிய அம்சங்கள்
- படித்து மனப்பாடம் செய்வதைவிடச் சிந்தித்து கேள்வி கேட்கும் மாணவர்களை உருவாக்கும்
- எதிர்காலத் தேவைக்கான ஆற்றலை வழங்கும்
- தொழில்நுட்ப மனம் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்கும்
- படிப்பவர்களாக மட்டுமல்ல படைப்பாளர்களா மாணவர்களை உருவாக்கும்
- கல்வியோடு உடற்பயிற்சியும் இணைக்கப்படும்.
- தாய்மொழி தமிழ் நம் அடையாளமாக இருக்கும்.
- தமிழும் ஆங்கிலமும் ஆகிய இருமொழிக் கொள்கைதான் உறுதியான கொள்கையாக இருக்கும்.
- ஒவ்வொரு ஒன்றியத்தில் மாதிரிப் பள்ளிகள், உண்டு உறைவிடப் பள்ளிகள்
- கல்வித் தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை என்ற நிலையை உருவாக்கும்.
- மதிப்பெண்கள் என இல்லாமல் மதிப்பீடுகள் நோக்கிய பயணமாகத் தேர்வுகள் அமையும்.
- பசுமைப் பள்ளிகள், ஸ்மார்ட் பள்ளிகள் அமைக்கப்படும்.
- நான் முதல்வன் திட்டம் வேலைக்கு மட்டமல்லாமல் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாகவும் அமையும்.
திராவிட மாடல் அரசின் இலக்கு
மாநிலக் கல்விக் கொள்கை – 2025, தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றில் ஒரு மாறுதலின் மைல்கல். இது, கல்விச் சமத்துவம், அறிவியல் மனப்பான்மை, சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட, எதிர்கால தமிழ்நாட்டின் Blueprint.
“அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தரக் கல்வி” என்பதே மாநில கல்விக் கொள்கையின் அடிப்படை. மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதே நம் திராவிட மாடல் அரசின் இலக்கு.

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr