
தமிழ் மொழியின் பெருமையையும், திருக்குறளின் உலகளாவிய மகத்துவத்தையும் பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜூலை 11, 2025-ல் தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘உலகப் பொதுமறை திருக்குறள் (THIRUKKURAL -Treasure Of Universal Wisdom)’ என்னும் செம்பதிப்பு நூலினை வெளியிட்டார். இது திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மணி மகுடம்.

கூட்டு முயற்சியின் மகத்தான படைப்பு!
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை நிறுவனம் இணைந்து, முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ், கூட்டு வெளியீடாக இந்தத் திருக்குறள் நூலினை வெளியிட்டிருக்கிறார்கள். வான்புகழ் கொண்ட வள்ளுவருக்கும் அவர் இயற்றிய உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கும் செம்மொழி தமிழுக்கும் சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் ஒரு சிறப்பான முயற்சியாக இந்த நூல் வெளியீடு அமைந்துள்ளது.
தமிழண்ணல் எழுதிய நுண்பொருள் விளக்கவுரைவும் மணியம் செல்வம் ஓவியங்களும்


இந்த ‘உலகப் பொதுமறை திருக்குறள்’ நூல், திருக்குறளை எளிமையாகவும், முழுமையாகவும் புரிந்துகொள்ள உதவும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. திருக்குறள் அடிகளை எளிதாகப் படிப்பதற்கும், உச்சரிப்பதற்கும் ஏற்ற வகையில் சீர்கள் பிரித்து, உயர்தரமான தாளில் அச்சாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மிகச் சிறப்பானதாக திருக்குறளின் ஆழமான கருத்துக்களை, தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களின் நுட்பமான விளக்கவுரை மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஒவ்வொரு அதிகாரத்திற்கும் புகழ்பெற்ற ஓவியர் மணியம் செல்வம் அவர்களின் அழகிய ஓவியங்கள் சேர்க்கப்பட்டு, வாசகர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு, திருக்குறள் கருத்துக்களை மேலும் எளிதாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
பி.எஸ்.சுந்தரம் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு
உலகெங்கிலும் உள்ள தமிழ் மொழி ஆர்வலர்கள், வெளிநாட்டினர் எனப் பலரும் திருக்குறளைப் புரிந்துகொள்ளும் வகையில், பி.எஸ்.சுந்தரம் அவர்களின் துல்லியமான ஆங்கில மொழிபெயர்ப்புடன் இந்நூல் வெளியாகியிருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிப் பதிப்பாக இந்நூல் வெளியாகியிருப்பதால் மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
முக்கியப் பிரமுகர்களின் பங்கேற்பு
ஜூலை 11, 2025-ல் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நூலினை வெளியிட, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு நிகழ்வில். மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மரு.பி.சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மரு.மா.ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் எஸ். கண்ணப்பன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
தமிழ் மொழியின் தொன்மையையும், திருக்குறளின் உலகளாவிய தனித்தன்மையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் மாபெரும் முயற்சியாக, இந்நூல் வெளியீடு அமைந்துள்ளது. திராவிட மாடல் அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்காக மேற்கொண்டுவரும் பல சிறப்பான முன்னெடுப்புகளின் மணிமகுடமாக உலகப் பொதுமறை திருக்குறள் (THIRUKKURAL -Treasure Of Universal Wisdom) நூல் வெளியீடு அமைந்துள்ளது!
Recent Tamil Nadu Government school teachers appointment

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr