7.5% உள் ஒதுக்கீடு – சமூகநீதிப் பாதையில் தமிழ்நாடு!

தமிழ்நாட்டின் சமூகநீதிப் போராட்டம் நீதிக் கட்சிக் காலத்தில் தொடங்கி… தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர தொடர்ந்து… தற்போது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது 7.5% உள் ஒதுக்கீட்டில்

எல்லார்க்கும் எல்லாம் என்ற சமூகநீதிக் கோட்பாட்டைக்கொண்ட திராவிடத் தலைவர்கள், மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதில் முன்களத்தில் நின்றனர்… நிற்கின்றனர்.

கலைஞர் தமிழ்நாட்டில் ஏற்றிய சமூகநீதிப் புரட்சிக்கான தீப்பந்தத்தை, தன் கையில் ஏந்தி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீட்டினை உறுதிசெய்து வென்று காட்டியிருக்கிறார் நம் முதலமைச்சர்.

7.5% இட ஒதுக்கீட்டின்  தேவை!

பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் மிகக் குறைவாகவே இருந்தது. இது அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்கல்வி கிடைப்பதில் பெரும் தடையாக இருந்தது. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம், அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதற்கு தடையாக உள்ள காரணிகளை ஆய்வு செய்து, அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்த உரிய பரிந்துரைகளை வழங்கியது.

தொழிற்கல்வி படிப்புகளுக்கும்

நீதிபதி த.முருகேசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் 7.5% இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய, தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டு, “தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம்” இயற்றியது. 

இது மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஏற்கனவே வழங்கப்பட்ட 7.5% உள் ஒதுக்கீட்டைப் போன்றே, ஏனைய தொழிற்கல்வி படிப்புகளுக்கும் விரிவாக்கம் செய்தது. அந்த ஆண்டுச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. 

கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க்கும்

7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்பதாக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தக் கல்விச் செலவில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம்  உள்ளிட்ட அனைத்தும் அடங்கும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த நிதியுதவி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொருளாதாரச் சுமையின்றி தொழிற்கல்வி பயில பெரும் ஊக்கமாக அமைந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

7.5% உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இருப்பினும், நீண்ட வாதங்களுக்குப் பிறகு, உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. 

மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும், அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கிய 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் என்றும் உத்தரவிட்டனர் நீதிபதிகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு,  திராவிட மாடல் அரசின் சமூகநீதிப் போராட்டத்திற்கு  நீதிமன்றம் வழங்கிய மிகப்பெரிய அங்கீகாரம்.

பள்ளிக் கல்வித் துறை விருதுகள்

சமூக நீதிக்கான அரசு

நீதிமன்றத்தின் தீர்ப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சமூக நீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் மூன்றாவது வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “இந்த அரசு பொறுப்பேற்ற 10 மாத காலத்தில் சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தில் கிடைத்த மூன்றாவது வெற்றி இது. சமூக நீதியை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நிலைநாட்டி, நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை திராவிட மாடல் அரசு  தொடர்ந்து செய்திடும்” என தெரிவித்தார். 

உயர்கல்வி நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு புரட்சி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவது, கல்வி வாய்ப்புகளை பரவலாக்குவதோடு, சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரை உயர்கல்வி நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு புரட்சிகரமான நடவடிக்கை. இது  சமத்துவச் சமூக நீதி சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஏணிப்படி. இந்த இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளை நனவாக்குவதோடு, நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

1 thought on “7.5% உள் ஒதுக்கீடு – சமூகநீதிப் பாதையில் தமிழ்நாடு!”

  1. Pingback: வெளிச்சத்தின் மகள் : சாவித்திரிபாய் புலே - Anbil Mahesh Forever

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top