திராவிட மாடல் அரசு ஆசிரியர்களுக்குப் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்ற 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்குச் சென்னையில் பணி நியமன ஆணை கள் வழங்கப்பட்டன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கான திறன் மற்றும் TN SPARK திட்டங்களும் துணை முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டன.

முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தி
முதலமைச்சர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வரும் நிலையில், 2,457 இடைநிலை ஆசிரியர்களையும் அவர்களது குடும்பங்களையும் காக்கவைக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினைக் கொண்டு நிகழ்ச்சியை நடத்தும்படி கூறினார். கடமை தவறாத முதலமைச்சரின் தலைமைக்கு வியந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதலமைச்சர் விடுத்த வாழ்த்துச் செய்தியை வாசித்தார்.

அதில், “பள்ளிகள் சமூகத்தின் அறிவு நாற்றங்கால்கள். எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆகச் சிறந்த பணி ஆசிரியர் பணி. ஆசிரியர்கள் முன்மாதிரியாகத் திகழ்ந்து மாணவர்களின் இலக்குகளுக்கும் கனவுகளுக்கும் வழிகாட்டுகின்றனர்.
79,723 இடைநிலை ஆசிரியர்களுக்குக் கைக்கணினிகள், 14,019 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமனம், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்வு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை, பன்முக வளர்ச்சி வெளிப்படுத்தும் ஆசிரியர்களுக்குப் பேராசிரியர் அன்பழகனார் விருது எனப் பல திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் ஆசிரியர்கள் மீது கொண்டிருந்த அன்பை ஆசிரியர் சமூகம் என்றும் மறக்காது. அதே வழியில் நம் திராவிட மாடல் அரசும் ஆசிரியர்கள் நலம் பேணுகிறது. அதன் ஒரு பகுதியாக, 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. கனவுகளை நோக்கிப் பயணிக்க உள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்” என்று முதலமைச்சர் வாழ்த்தினார்.
Tamil Nadu HM meet
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பாராட்டு
பணி நியமன ஆணைகளைப் பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “பள்ளிகளில் அறம் சார்ந்த பாடங்களை நடத்துங்கள். திராவிட மாடல் அரசு அறிவியலை முன்னிறுத்தி இயங்குவதற்குக் காரணம் ஆசிரியர்களே. அன்பையும் பண்பையும் ஊட்டி மாணவர்களுக்குத் திசைகாட்டிகளாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். அறிவு சார்ந்த சமுதாயத்தில் அறிவாயுதங்களாக ஆசிரியர்களே திகழ்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக, பணி நியமன ஆணைகள் பெறும் ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள். மாணவர் நலனையும் ஆசிரியர் நலனையும் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இரு கண்களெனப் போற்றுகிறது. பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடரும். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மீண்டும் தொடரும்” என்றார்.


பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “ஆசிரியர்களுக்கும் திராவிடத்திற்கும் நெருங்கிய பந்தம் உண்டு. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். 1929-ல் சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார், பெண்களை அதிகளவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினார். அவர் விருப்பத்திற்கேற்ப, தொடக்கப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளித்தவர் கலைஞர். கலைஞர் வழியில் முதலமைச்சரும் ஆசிரியர்கள் மீது அன்போடும் மரியாதையோடும் இருக்கிறார்.

மாணவர்களுக்கு அகரம் சொல்லிக்கொடுத்து ரோபோடிக்ஸ், AI போன்ற பெரிய படிப்புகளுக்கு அடித்தளமிடுவது தொடக்கக் கல்வி ஆசிரியர்களே. மாணவர்களுக்குக் கல்வி மட்டுமல்லாமல் உலகையும் கற்றுத் தருகிறார்கள். பள்ளிக் கல்வித் துறை வரலாற்றிலேயே முதன்முறையாக, மலைப் பகுதிகளில் 100% இடைநிலை ஆசிரியர்களைப் பணியமர்த்தி திராவிட மாடல் அரசு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பணிக்காலம் என முதலமைச்சர் பலமுறை பாராட்டியுள்ளார். இதனை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் நம் அமைச்சர்” என்றார்.
கலைஞரின் பேனா மற்றும் பணி நியமன ஆணைகள்
“கல்வி எனும் தேருக்குத் தொடக்கக் கல்வி ஆசிரியர்களே அச்சாணி. இதனாலேயே கலைஞர் ஆசிரியர்களின் முன்னேற்றத்திற்கு ஏராளமான திட்டங்களைத் தந்தார். கலைஞரின் பேனாதான் ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தந்தது. ஒரே கையெழுத்தின் மூலம் 50,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்தவர் கலைஞர்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளுக்குப் பிறகு, துணை முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக்கொண்டு குழுவாகப் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.
திறன் மற்றும் TN SPARK திட்டங்கள்
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், கோடிங், செயற்கை நுண்ணறிவு (AI), ஆன்லைன் டூல்ஸ் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள, இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டங்களாக திறன் மற்றும் TN SPARK திட்டங்களைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

- திறன் இயக்கம் (THIRAN – Targeted Help for Improving Remediation & Academic Nurturing): அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மொழிப் பாடத் திறன் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்த ரூ.19 கோடி மதிப்பீட்டில் ‘திறன் இயக்கம்’ புத்தகத்தை வெளியிட்டார்.
- TN SPARK (Tamil Nadu School Programme for Artificial Intelligence, Robotics and Knowledge of Online Tools): வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப 6 முதல் 9 வகுப்பு மாணவர்களைத் தயார் செய்யக் கணினி சார் அடிப்படை அறிவியலையும், செயற்கை நுண்ணறிவுத் திறன் மற்றும் அதனைப் பயன்படுத்தும் நுட்ப அறிவியலையும் கற்பிக்கும் வண்ணம் TN SPARK திட்டப் புத்தகத்தை வெளியிட்டுத் தொடங்கிவைத்தார்.
வாழ்வின் புதிய பாதைகள்
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இது வெறும் பணி நியமன ஆணை மட்டுமல்ல, தலை நிமிரச் செய்யும் வாழ்வின் புதிய பாதை எனும் மகிழ்ச்சி பணி நியமன ஆணைபெற்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் வெளிப்பட்டது. தன்னிறைவோடு தங்களுக்குப் பணி ஆணை வழங்கப்பட்ட பள்ளிகளுக்குள் கல்விச் சேவை ஆற்ற அடியெடுத்து வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு நம் வாழ்த்துகள்.
இந்த நிகழ்வு குறித்த உங்கள் கருத்து என்ன?










Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr
Pingback: அரசுப் பள்ளிகளில் 4 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கை