10-ம் வகுப்பு +1 பொதுத் தேர்வு முடிவுகளை இன்று (16.05.25) வெளியிட்டார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 10 மற்றும் +1 தேர்வுகளை எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி சதவிகிதம், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் குறித்த சாதனைகளைத் தொகுப்பாக இங்கே பார்ப்போம்!
10, +1 பொதுத் தேர்வு முடிவுகள்!
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15- வரை நடைபெற்றது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 12,480 பள்ளிகளைச் சேர்ந்த 9,13,036 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 8,17,261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி சதவிகிதம் 93.80%.

+1 பொதுத்தேர்வை 7,558 பள்ளிகளைச் சேர்ந்த 8,07,098 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 7,43,232 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி சதவிகிதம் 92.09%.
To read about 12th result: Click here

அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம்!
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 4,917 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 1,867 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளன.

+1 பொதுத் தேர்வில் 282 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளில் படித்த 87.34% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொதுத் தேர்வு: 100/100 பெற்ற மாணவர்கள்!
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 8 மாணவர்களும், ஆங்கில பாடத்தில் 346 மாணவர்களும், கணித பாடத்தில் 1,996 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 10,838 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 10,256 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

+1 பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 41 மாணவர்களும், ஆங்கிலப் பாடத்தில் 39 மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 390 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 593 மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 91 மாணவர்களும், கணிதப் பாடத்தில் 1,338 மாணவர்களும்தாவரவியல் பாடத்தில் 4 மாணவர்களும், விலங்கியல் பாடத்தில் 2 மாணவர்களும், கணினி அறிவியல் பாடத்தில் 3,535 மாணவர்களும், வரலாறு பாடத்தில் 35 மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 806 மாணவர்களும் கணக்குப் பதிவியல் பாடத்தில் 111 மாணவர்களும், பொருளியல் பாடத்தில் 254 மாணவர்களும், கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 761 மாணவர்களும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 117 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்திருக்கின்றனர்.

எல்லார்க்கும் எல்லாம்!
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 12,290 மாற்றுத் திறனாளி மாணவர்களில், 11,409 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய 237 சிறைவாசிகளில், 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 23,769 தனித்தேர்வர்களில், 9,616 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

+1 பொதுத் தேர்வு எழுதிய 9,205 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 8,460 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 125 சிறைவாசிகளில் 113 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 4,326 தனித்தேர்வர்களில் 950 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொதுத் தேர்வில் டாப் 5 மாவட்டங்கள்!
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் அதிகத் தேர்ச்சி சதவிகிதம் பெற்ற டாப் 5 மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டம் 97.49% பெற்று முதலிடத்தில் உள்ளது. விருதுநகர் மாவட்டம் 95.57% பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. கன்னியாகுமரி (95.47%), திருச்சி (95.42%), தூத்துக்குடி (95.40%) மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

+1 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் அதிகத் தேர்ச்சி சதவிகிதம் பெற்ற டாப் 5 மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் 96.94% பெற்று முதலிடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டம் (95.37%) இரண்டாவது இடத்திலும், நாகப்பட்டினம் (93.07%), விருதுநகர் (92.07%), சிவகங்கை (91.97%) மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

கல்வி சிறந்த தமிழ்நாடு!
10-ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் 2022 -ல் 90.07%, 2023-ல் 91.39%, 2024 – 91.55%, 2025 -ல் 93.80% – ஆக உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் 2.25% அதிகம்!

+1 மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் 2022 -ல் 90.07%, 2023-ல் 90.93%, 2024 -ல் 91.17%, 2025 -ல் 92.09% – ஆக உள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களால் கல்வியில் புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர் மாணவர்கள்.
கைகொடுக்கும் உயர்கல்வி!

10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “கற்றல் – கற்பித்தல் இரண்டிற்குமான முடிவுகள் என்பதை மனதில் நிறுத்தி மகிழ்ச்சியோடு, தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுங்கள். தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வாழ்த்துகள்” என்றார்.

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr